3/31/2009

கிழக்கு முதலமைச்சரின் விவசாய அபிவிருத்தி நடவடிக்கை இணைப்பாளராக சுபையிர்

கிழக்கு மாகாணத்தின் விவசாய அபிவிருத்தி நடவடிக்கைகளுக்கான முதலமைச்சரின் ஒருங்கிணைப்பாளராக மாகாண சபை உறுப்பினர் எம். எஸ். சுபையிர் புதிதாக நியமிக்கப்பட்டுள்ளார்.
கிழக்கு மாகாண முதலமைச்சர் சிவனேசதுரை சந்திரகாந்தன் இந்த நியமனத்தை வழங்கியுள்ளார்.
விவசாய அபிவிருத்தித்துறையில் பின்தங்கிய நிலையில் காணப்படும் கிழக்கு மாகாணத்தில் திட்டமிட்ட மூலோபாய அடிப்படையில் விவசாய மேம்பாட்டு நடவடிக்கைகளை முன்னெடுத்துச் செல்லும் நோக்கத்துடன் இந்த நியமனம் வழங்கப்பட்டுள்ளது.
முதலமைச்சரின் பணிப்புரைகளுக்கு அமைவாக கிழக்கில் விவசாய நடவடிக்கைகளில் எதிர்நோக்கப்படும் பிரச்சினைகளை அடையாளம் கண்டு விவசாயிகளுக்குத் தேவையான உதவிகள் பெற்றுக் கொடுக்கப்படவுள்ளன.
மட்டக்களப்பு, அம்பாறை மற்றும் திருகோணமலை மாவட்டங்களில் மீள்குடியேற்றப்பகுதிகளில் ஏனைய பிரதேசங்களிலும் கைவிடப்பட்ட நிலையில் உள்ள விவசாய நிலங்களில் மீண்டும் செய்கைகளை ஆரம்பிப்பதில் தீவிர கவனம் செலுத்தப்படவுள்ளதாக விவசாய அபிவிருத்தி நடவடிக்கைகளுக்கான ஒருங்கிணைப்பாளரும், மாகாண சபை உறுப்பினருமான சுபையிர் தெரிவித்தார்.


»»  (மேலும்)

கிழக்கின் விடிவெள்ளி ராஜன் சத்தியமூர்த்தி 5 - வது நினைவு தினம்.


2004 ஆம் ஆண்டு இதே மார்ச் மாதம்தான் கிழக்கு மாகாணத்தின் தனித்துவக் குரல்கள் ஓங்கி ஒலித்த மாதமாகும். சுமார் 6 ஆயிரம் போராளிகள் ஆயுத வன்முறையைக் கைவிட்டு ஜனநாயகப் பாதையில் பயணிக்க வரலாறு அவர்களை நிர்ப்பந்தித்தது. இந்த தனித்துவக் குரல்களை ப+ண்டோடு அழித்துவிட் பாசிசப் புலிகள் தங்கள் கொலைவெறியை கட்டவிழ்த்து விட்டனர். தமிழ்த்தேசியமா? கிழக்கின் தனித்துவமா? என்ற கன்னை பிரிந்து தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வேட்பாளர்கள் நின்ற போது எங்கள் ராஜன் சத்தியமூர்த்தி கிழக்கின் தனித்துவத்திற்காக நிமிர்ந்து நின்று தன்னுயிரை ஈந்தார். கிழக்கு மாகாண மக்களின் தனித்துவ அரசியலுக்காக உறுதுணையாக நின்ற சத்தியமூர்த்தி அவர்கள் சிந்திய உதிரத்தில் இருந்துதான் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் என்கின்ற தனித்துவக் கட்சி உதயமானது. சுமார் 5 வருட காலத்தினுள் இலங்கை அரசியலில் அனைவரது கவனத்தையும் ஈர்த்த புதிய வரலாற்றை ரி.எம்.வி.பி. படைக்க சத்தியமூர்த்தி போன்றவர்களின் தொடர்ச்சியாக வந்த சிந்தனையே காரணமாகும். ராஜன் சத்தியமூர்த்தி அவர்களை புலிகள் கொலைசெய்ததின் ஊடாக எதை சாதிக்க நினைத்தார்களோ அது கிழக்கு மண்ணில் வேகவில்லை. அவரைக் கொன்றது மட்டுமன்றி புதைக்கப்பட்ட அவரது உடலை தோண்டி எடுத்து சன்னதமாடினர் புலிகள். பிணந்தின்னிப் பிரபாகரனின் அந்த வெறியாட்டம் இன்னும் வெகுநாளைக்கு இல்லையென்பதை சத்தியமூர்த்தி அவர்களின் 5 ஆவது நினைவு தினமாகிய இன்ற உலகிற்கு கூறட்டும். ராஜன் சத்தியமூர்த்தி அவர்களை இழந்த அவரது குடும்பம் புலிகளின் கொலைக்கரத்தில் இருந்து தப்பிக்க மாதக்கணக்கில் வீடுவாசல்களை விட்டு காடுமேடுகளில் தலைமறைவு வாழ்க்கை வாழ நேரிட்டது. காடு மேடு மட்டும் அல்ல கடல்கடந்தும் கூட அவர்களது அலைச்சல்கள் தொடர்ந்தது. ஆனால் வரலாறு விழித்துக்கொண்டபோது மட்டக்களப்பு மக்கள் அன்னாரது கனவை நனவாக்கியுள்ளனர். கிழக்கின் தனித்துவத்தின் அடையாளமாக தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் களமிறங்கிய போது அன்னாரது மகளான சிவகீதா அவர்களை மட்டக்களப்பு மாநகர மேயராக்கி மகிழ்ந்தனர்; மக்கள். தமிழ் முஸ்லிம் உறவின் நாயகனாகச் செயற்பட்ட ராஜன் சத்தியமூர்த்தி அவர்களை இன்று இனமத வேறுபாடுகளைக் கடந்து கிழக்கு மாகாண மக்கள் நினைவு கூருகின்றார்கள்.


»»  (மேலும்)

புலிகளின் பௌத்த மதத்திற்கு எதிரான தாக்குதல்கள்


-எஸ்.எம்.எம் பஷீர் -
“ஆற்றல் இலாதான் பிடித்த படை இன்னா்

நாற்றம் இலாத மலரின் அழகு இன்னா்

தேற்றம் இலாதான் துணிவு இன்னா்

ஆங்கு இன்னாமாற்றம் அறியான் உரை”

கபில தேவர் (இன்னா நாற்பது)மதரீதியான தாக்குதல்களில் பௌத்த மதபீடங்கள், மத குருமார்கள்மீதான தாக்குதல்களில் அநுராதபுர, அரந்தலாவ என்பன புலிகளின் பௌத்த மதத்திற்கு எதிரான வெளிப்பாடு மட்டுமல்ல எதிர்விளைவினை எதிர்பார்த்துச் செய்யப்பட்ட குரூரத் தாக்குதல்களாகும். மறுபுறம் இராணுவ வியூகத்தின் அடிப்படையில் செய்யப்பட்டன. உதாரணமாக கண்டி தலதாமாளிகையின் தாக்குதல் இடம்பெற்றபோது புலம்பெயர்வாழ் தமிழ் ஜனநாயகவாதிகள், ஊடகவியலாளர்கள், தமிழ் மனித உரிமைவாதிகள் மௌனம் காத்தனர். ஐக்கிய ராஜ்யத்திலுள்ள தமிழர் மனித உரிமை மற்று சமூகநலன் ஸ்தாபனமொன்றுடன் தொடர்புடகொண்டு ஏன் இதனைக் கண்டிக்கவில்லை எனக் கேட்டபொழுது என்ன ஆதாரம், எப்படிச்சொல்வது புலிகள் செய்ததென்று எங்களுக்கு யாரென்று தெரியாமல் கண்டிக்கமுடியாது. என்று வழக்கமான பல்லவிதான் என்றாலும் இறுதியில் ஒரு கண்டனம் வெளியிடப்பட்டது. அதிலும் வழக்கம்போலவே இனந்தெரியாதோர் செய்த செயலாகவும் இலங்கையின் அரசியல் சூழ்நிலைகள்தான் இவ்வாறான தாக்குதல்களுக்கு காரணமெனவும் ஒருவாறு நியாயப்படுத்துகின்ற கண்டனமாக வெளியிடப்பட்டது. முஸ்லிம்கள்மீதான தாக்குதல்கள், வெளியேற்றங்கள் 1990 லிருந்து 2006 வரை இந்த புலம்பெயர் தமிழர் ஜனநாயக ஊடக கனவான்களின் கண்களிற்குப்படவோ மனசைதொடவோ இல்லை புலப்படவோ தொடவோ இல்லை. இது எதுவரையென்றால் முஸ்லிம்கள்மீதான அண்மைய அக்குறஸ்ஸ தாக்குதல்வரை எந்தவொரு புலம்பெயர் புலி ஆதரவு தமிழர் ஸ்தாபனங்களும் கண்டுகொள்ளவில்லை. உலகமெல்லாம் வலம்வரும் வீரமும், விவேகமும் கொண்ட தமிழர்களாக தங்களைக் கருதுபவர்கள் புலிகளின் மதரீதியான திட்டமிட்ட தாக்குதல்கள் குறித்து தங்கள் நிலைப்பாட்டினை எவ்வாறு வெளிக்காட்டி வந்திருக்கின்றார்கள் என்பது வரலாறு பதிவுசெய்துகொண்டே வருகின்றது உள்ளுரப் பெருமிதம்கொண்டு அத்தகையத் தாக்குதல்களை தமிழர்கிளி;;ன் வீரமாய் ஆராதிப்பதும் மறுபுறம் நாக்கூசாது ”உது சிங்களக் காடையன்கள் கiதிகளைக் கொண்டு செய்விச்சதல்லோ” என்றோ அல்லது இனம்புரியாத நபர்களன்றோ நேர்மைத் திறனின்றி வஞ்சனையுடன் கூறுமிவர்கள்தான் இன்று புலம்பெயர் உலகின் பெரும்பான்மை மக்கள். இந்தத் தமிழர்களை நிட்சயமாக நாமக்கல் ராமலிங்கம் “தமிழனென்று சொல்லடா தலைநிமிர்ந்து நில்லடா” என்று சொல்லியிருக்கமாட்டார். உலகில் வாழ்ந்த சமூகங்களில் இவர்களின் இடம் என்ன என்பதனை வரலாறு தீர்மானிக்கும். புலிகள் மதரீதியான தாக்குதல்களில் சிங்களக் கிறிஸ்தவர்கள் அவர்;களின் மத தேவாலயங்கள்மீதும் தாக்குதல் நடத்துவதனை சர்வதேச நலன்களுக்காகவும், தங்களை ஆதரிக்கின்ற தமிழ் கிறிஸ்தவர்களினை சங்கடத்தில் ஆழ்த்தாமலும் தவிர்த்தே வந்திருக்கின்றனா. தமிழரின வீரத்திற்கு தமிழ் இலக்கியங்களிலே முல்லைக்குத் தேரீந்த பாரி மன்னன். புறாவுக்கு சதையீந்த சிபிச்சக்கரவர்த்தி (தமிழ் மன்னனென்று நினைக்கின்றோம) பசுவிற்காக தன்மகனை தேர்காலிலிட்ட மனுநீதிகண்ட சோழன், இமயமலையிலும், யாவா, சமுத்திராவிலும் புலிக்கொடி ஏற்றிப் புகழ்பூத்த தமிழன் இன்று தென் இந்தியாவிலும் சரி இலங்கையிலம் சரி இல்லை புலிவால் பிடித்த தமழர்கள்தான் இன்று அதிகம் இருக்கின்றார்கள். ஒரு உதாரணமாக கொழும்பிலே புலிகள் இலங்கையின் மத்திய வங்கியில் குண்டுவைத்த பொழுது 53 பேர் கொல்லப்பட்டும் 1.500 பேர்வரை காயமடைந்தபோது எந்தவொரு தமிழ் புலிச்சார்பு மனித உரிமைவாதியும் உடல் சிலிர்த்துக்கொள்ளவில்லை. எனெனில் புலி ஆதரவு புலம்பெயர் லண்டன் பத்திரிகை ஒன்று இந்தப் பயங்கரவாதச் செயலை அப்பாவி மக்களின் படுகொலையை இவ்வாறு தனது முதல்பக்கச் செய்தியாய் எழுதியது. ஆந்தச் செய்தியில் கொல்லப்பட்டவர் தொகை 200 என மிகைப்படுத்திக் கூறியிருந்தது.
“குலுங்கியது கொழும்பு,

கலங்கியது சிங்கள அரசு,

துலங்கியது தமிழர் வீரம்

மலங்க விழிக்கும் மல்வத்தை தேரர்.”
இந்தப் பயங்கரவாதச் செயலை தமிழர்வீரமாக போற்றிய அதேவேளை சிங்கள பௌத்த மதகுருவை அச்சமூட்டியதாக புளகாங்கிதமடைகின்ற புலியின் மதத்துவேச அரசியலும் இங்கு புலப்படாமலும் இல்லை. அரந்தலாவையில் 02.06.1987 ல் புத்த பிக்குகளையும் மெதாகிரியையில் பௌத்த விகாரையைச் சுற்றி வளைத்து (8) சிவிலியன்ளளைச் சுட்டதும் (18.05.2000) ம் ஆண்டில் மட்டக்களப்பு மங்களராம விகாரையில் விசாக் பண்டிகையில் குண்டுவைத்துக் கொன்றதும் (இதில் அதிகம் கொல்லப்பட்டவர்கள் தமிழ் மக்களே) 25 மே மாதம் 1995 ல் பொல்லனறுவையிலுள்ள கல்லொறுவை கிராமத்தில் திம்புளாகல பௌத்த குருவையும 42 சிவிலியன்களையும் கொன்ற பொழுது சர்வதேச மன்னிப்புச் சபை புலிகளைக் கண்டித்தும் புலிகளின் பேச்சாளர் திலகர் அவர்களின் சட்ட நிபுணர்கள் சர்வதேசச் சட்டங்களை எல்லாம் கிண்டிக்கிளறி; பிக்கு ஒரு யுத்த முனைப்பாளர் திட்டமிட்ட அரச குடியேற்றத்திற்கு ஆதரவாக செயற்பட்டவர் எனவே அவர் பொதுசனமல்ல போன்ற மகாராணி சட்டத்தரணி வழிவந்த புத்திரர்கள் நியாயவாதம் புரிந்தனர். இந்தக் கொலையில் 12 பெண்களும் 12 சிறுவர்களும் கொல்லப்பட்டனர். இவர்கள்தான் பிரபாகரனைகடவுளின் அவதாரம், நவீன தமிழர் புறநானூற்றின் மறவர் திலகம், என்று பரணி பாடுபவர்கள். இவர்களில் பலர் உலக மனித உரிமை நிறுவனங்களுடனும், சுய நிர்ணய உரிமைதேடும் புலம்பெயர் மாற்று சமூகங்களுடனும். உறவினைப்பேணி முஸ்லிம், பௌத்த மதங்களுக்கெதிரான தாக்குதல்களை கண்டுகொள்ளாமல் இருந்தவர்கள். சிலவேளை நியாயப்படுத்தியவர்கள். கிறிஸ்தவ ஆதரவு புலிகளுக்கு சர்வதேசரீதியில் இருந்ததை சில சம்பவங்கள் உறுதிப்படுத்துகின்றன. உதாரணமாக அவுஸ்திரேலிய தேவாலங்களை ஒன்றிணைக்கும் உலக மிஷன் ஆலோசகரான வணக்கத்திற்குரிய வில்லியம்ஸ் வடகிழக்கிற்கு சென்று மூன்று வாரங்களைக் களித்திருந்தாh அங்கு கிறிஸ்தவ ஆலயங்களின் தலைவர்களையும், சாமானிய மக்களையும் சந்தித்திருந்தார். தான் இரண்டு இளைஞர்களை சந்தித்தாகவும் அதில் 21 வயதான புலிகளின் பிரதேசக் கமாண்டரும், அவரது மெய்ப்பாதுகாவலரான 14 வயதுச் சிறுவனும். இவர் அவுஸ்திரேலிய ஒலிபரப்புச் சேவைக்கு நிகழ்ச்சி வழங்கியிருந்தார் இவர் சிறுவர் போராளிபற்றியும் அவர்கள் சயனைட் வில்லைகள் அணிந்திருந்ததுபற்றியும் குறைகாணவில்லை. அவ்வாறே. முன்னாள் பாதுகாப்பு அமைச்சர் ரஞ்சன் விஜேரத்னா அவர்களை தற்கொலைக்குண்டுவைத்து வரதன் என்பவரால் படுகொலைசெய்த நிகழ்வுகுறித்து லண்டனிலுள்ள புலிசார் ஆங்கிலப் பத்திரிகை ஒன்று புனிதமான வணக்கஸ்தலமான மடுவில் இராணுவத் தாக்குதல்களை நடாத்துமாறு அவர் பிரகடனப்படுத்தி இரண்டு நாட்களின் பின்னரே இத்தாக்குதல் நடாத்தப்பட்டதாக ஒரு பூடகமான நியாயப்படுத்தலை வெளிப்படுத்தியிருந்தனர். 1998 யூனில் இலங்கை விமானப் படையினர் கிபீர் விமானக் கண்டுவீச்சில் 2 கிறிஸ்தவப் பாதிரிகளையும் 25 சிவிலியன்களையும் கொன்றமைக்காக றிபோன் பிஷப் (Bishop Ripon ) அன்றைய ஜனாதிபதி சந்திரிகாவிற்கு கண்டனக் கடிதம் எழுதினார். எந்த வெளிநாட்டு விஷப்புகளும் புலிகளின் மதக்கொலைகளை கண்டிக்க முன்வரவில்லை கண்டி தலதாமாளிகைமீதான தாக்குதல்; லண்டனிலுள்ள புலிகளின் ஆங்கிலப் பத்திரிகையான தமிழ் கார்டியனில் அப்போதைய ஆசிரியர் தனது கட்டுரையில் ”பெப்ருவரி 4 ந் திகதிக்கு முன்பாக பரந்தன், கிளிநொச்சி முகாம்களை வெற்றிகரமாக அழித்தொழித்து தங்களது தலைவர் தலைமை தாங்கிய நிகழ்வில் புலிக்கொடி எற்றுவார்கள் என்ற புலிகளின் சொந்த சுதந்திரத் திட்டங்களைப்பற்றி ஜெனரல் ரத்வத்தை அறிந்திருக்கமாட்டார். இத்தாக்குதல் கொழும்பு அரசினை கலக்கி தெற்கிலே ஆயிரக்கணக்கான படையினரை குவிப்பதன்மூலம் கிடைக்கும் இடைவெளியில் கிளிநொச்சி, பரந்தன், ஆனையிறவு போன்ற முக்கிய முகாம்களில் பாரிய தாக்குதல்களை மேற்கொள்ள மேற்கொண்ட திட்டமாகும். இது மதரீதியான தாக்குதல் அல்ல இராணுவரீதியான தாக்குதல் என்பதாக நியாயப்படுத்த முற்பட்டிருந்தார்.” 1985 ம் ஆண்டு மே மாதம் 14 ந் திகதி அநுராதபுர சிறீ மஹா போதி விகாரையில் கொல்லப்பட்ட பிக்குகள், பிக்குணிகள் மீது தொடுக்கப்பட்ட புலிகளின் பௌத்த மதத்திற்கெதிரான படுகொலைத் தாக்குதலானத பின்னர் முஸ்லிம் மதத்தின்மீதான தாக்குதல்களாகவும் வெளிப்பட்டது. 1983 யூலை தமிழர்களுக்கெதிரான வன்முறையையொத்த மீண்டும் ஒரு வன்முறையினைத் தூண்டுவதற்கு புலிகள் பல தடவை பொள்தமதத்தின்மீதான தாக்குதல்களை மேற்கொண்டபோதும் அவை எதுவுமே புலிகளுக்கு வெற்றியளிக்கவில்லை.1983 தமிழர்களுக்கெதிரான வன்முறை குறித்து பிரபாரனை புகழ்ந்து போற்றும் அனிதா பிரதாப் தனது இரத்தத்தீவு (Island of blood) என்னும் பத்தகத்தில் பின்வருமாறு குறிப்பிடுகிறார். கொழும்ப வீதிகளில் கொள்ளைகள் தீவைப்புக்கள், கொலைகள் செய்திருப்போர் மனிதர்களல்ல நரகலோகத்திலிருந்து தப்பிவந்திருக்கும் அரக்கர் கூட்டமே இதனைச் செய்திருக்கவேண்டும். இவர்களில் அநேகர் மது அருந்தியிருந்தனர். முனிதப் பிறப்புக்கள் இத்தகைய இழி செயலை செய்வதற்கு சாத்தியமல்ல என்று குறிப்பிட்டிருந்தார். 1983 யூலைக் கலவரத்தில் ஈடுபட்டிருந்தவர்கள் நரகலோகத்திலிருந்து தப்பிவந்த அரக்கர் கூட்டமென்றால் மேற்கொண்ட (புலிகளின்)வன்முறைகளைச் செய்தவர்கள் மது அருந்தாது புலி வெறிகொண்ட அரக்கர் கூட்டமா என்பதனை வரலாறு நிர்ணயிக்கும
»»  (மேலும்)

3/30/2009

கிழக்கு மாகாண சபைக்கு அதிகாரம் வழங்கப்படக் கூடாது என்கின்ற அமைச்சர் கருணாவின் கருத்து ஏற்புடையதா? வடிகட்டிய சுயநலத்தின் வெளிப்பாடா?

-கு.சாமித்தம்பி-

அதிகாரப் பகிர்வுகளுக்கு எதிராக அமைச்சர் கருணா தெரிவித்திருக்கும் கருத்துக்கள் முதற்தடவையானது அல்ல. பொலிஸ் அதிகாரங்கள் வழங்கப்படக் கூடாது, காணி அதிகாரங்கள் வழங்கப்படக்கூடாது என்ற நீண்ட காலமாகவே கருணா தெரிவித்து வருகின்றார். அவர் ரி.எம்.வி.பி. இல் இருந்த காலத்தில் அக்கருத்துகளுக்கிருந்த முக்கியத்துவத்தைவிட அமைச்சர் பொறுப்பேற்ற பின்னரும் அதே கருத்தை அவர் தெரிவிக்கையில் அதற்கான பரிணாமம் வேறானது. இவரது கருத்துக்கள் கிழக்கு மாகாண மக்கள் மத்தியில் மட்டும் அல்ல முழு தமிழ் பேசும் மக்களிடையேயும் கடும் அதிருப்தியினை ஏற்படுத்தியுள்ளது. வடக்கு, கிழக்க வாழ் மக்கள் இதுவரை இழந்தவைகள் ஏராளம். தமிழ் மக்களின் போராட்டம் மக்கள் சார்பானதாக அன்றி பிரபாகரன் போன்ற பயங்கரவாத தலைமைகளுக்கானதாக மாற நேர்ந்ததால் இன்று மிகப்பெரிய மனித அவலத்தை எதிர்கொண்டுள்ளது. இந்தநிலையில் எமது போராட்டத்தின் வழிமுறைகளை மாற்றிக்கொள்ள வேண்டும் என்பதன் வெளிப்பாடுகளாகவே பல முன்னாள் போராளி இயக்கங்கள் ஜனநாயகப் பாதையில் செயற்பட்டு வருகின்றன. அதன் அடிப்படையிலேயே புலிகளில் இருந்து கிழக்கு மாகாணப் போராளிகள் பிரிந்தபோது மக்கள் அதனை ஆதரித்தார்கள். ஜனநாயகப் பாதை என்பதும் ஒரு வகையில் அரசியல் போராட்டம்தான். ஆனால் ஜனநாயக வழிக்கு திரும்புதல் என்பதன் அர்த்தம் சராணகதி அடைவதல்ல. ஆனால் வன்முறைகளைக் கைவிட்டதாகக் கூறுகின்ற கருணா அம்மான் அமைச்சர் முரளிதரன் ஆகிவிட்ட நிலையில் மக்கள் உரிமைகளுக்கெதிராக தெரிவித்து வருகின்ற கருத்துக்கள் சரணாகதி அடைந்தவனின் வார்த்தைகளைவிட தரம் தாழ்ந்துள்ளன. கிழக்கு மாகாணசபைக்கு அதிகாரங்கள் தேவையில்லை என்ற சொல்வதற்கு மக்கள் இதுவரை முரளிதரனுக்கு ஆணை வழங்கவில்லை. மக்களால் தெரிவுசெய்யப்பட்ட ஒரு சபையும் அமைச்சரவையும், முதலமைச்சரும் அதிகாரப் பகிர்வுக்கான ஜனநாயகக் கோரிக்கைகளுக்காக போராடி வருகின்ற இந்த நிலையில் சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் நியமனப்பட்டியல் எம்.பி.யாக பதவியைப் பெற்றுக்கொண்ட அமைச்சர் முரளிதரன் அதற்கெதிராக கருத்துத் தெரிவிக்க அருகதையற்றவராகும். கிழக்குமாகாண மக்களின் சார்பில் அதுவும் அந்த மக்களுக்கு எதிராகவே கருத்துத் தெரிவிக்க தார்மீக தகுதி எதுவும் அமைச்சர் முரளிதரனுக்கு கிடையாது. அதிகாரங்கள் தேவையில்லை என்றால் இதற்காக இவ்வளவு அழிவுகளையும் இழப்புகளையும் மக்கள் எதிர்கொண்டார்கள்? ஒரு இனம் தனது பிரிவினைக் கோரிக்கையை கைவிடலாம். வன்முறைகளையும் கைவிடலாம்;. ஆனால் தனது இனத்தின் இருப்பையும் அடையாளத்தையும் பாதுகாத்துக் கொள்ளக் கூடிய குறைந்தபட்ச உரிமைகளைக் கோருவது மிக மிக அவசியமானதாகும். இன்று தமிழ் தலைவர்கள் மட்டுமல்ல சிங்களத் தலைவர்களில் பலர் கூட அதிகாரப் பகிர்வு எப்படியிருக்க வேண்டும் என்ற ஆராய்ந்து கொண்டிருக்கின்ற நிலையில், இந்தியா கூட தமிழ் மக்களின் பிரச்சனைகளை அதிகாரப் பகிர்வு மூலம் திர்க்குமாறு கோரியிருக்கின்ற நிலையில், இலங்கைத் தமிழரின் பிரச்சனைக்கு அரசியல் தீர்வை முன்வைக்குமாறு சர்வதேச சமூகம் தொடர்ச்சியாக இலங்கை அரசை கேட்டுக்கொண்டிருக்கின்ற நிலையில் அமைச்சர் முரளிதரன் கூறிவருகின்ற கருத்துக்கள் வடிகட்டிய சுயநலத்தின் வெளிப்பாடுகள் மட்டுமேயாகும். வெளிநாட்டமைச்சராக இருந்த கதிர்காமர் கூட புலிகளின் பயங்கரவாத செயற்பாடுகளை எதிர்த்தாரேயன்றி தமிழ் மக்களுக்கான அதிகாரப் பகிர்வுக்கு எதிராக ஒருபோதும் அவர் கருத்துக் கூறியதில்லை. 10 ஆண்டுகளுக்கு மேலாக ஐக்கிய தேசியக் கட்சி, சிறிலங்கா சுதந்திரக் கட்சி என்று எது வந்தாலும் அதனுடன் சேர்ந்து எம்.பி.யாகவும் அமைச்சராகவும் இன்றுவரை இருந்துவரும் டக்ளஸ் தேவானந்தா கூட இதுபோன்ற மக்கள் விரோதக் கருத்துக்களை ஒருபோதும் வாய்திறந்து உதிர்த்ததில்லை. இன்றும் அவர் அமைச்சராக இருக்கின்ற போதிலும் அதிகார பகிர்வுக்கான கோரிக்கைகளை என்றமே கைவிட்டதில்லை. “மத்தியில் கூட்டாட்சி, மானிலத்தில் சுயாட்சி” தனித்துவத்துக்கும் ஒற்றுமைக்குமான ஒரே நேர அழைப்புடனேயே அவர் அரசியல் நடாத்துகின்றார். தமிழ் மக்களின் உரிமைகளுக்கெதிராக இதுபோன்ற கருத்துக்களை வெளியிடுவதனூடாக கருணா அம்மான் அமைச்சு பதவிகளை அனுபவிக்கலாம். ஆனால் மக்களுக்கு பாதுகாப்பு உத்தரவாதம் தேவை. குறைந்த பட்சம் பொலிஸ் அதிகாரம் ஒன்றே அதை உறுதிப்படுத்தும். அதனாலேயே 13 வது சட்டத் திருத்தத்தில் காணி, பொலிஸ் அதிகாரங்கள் மாகாண சபைகளுக்கு வழங்கப்பட வேண்டும் என்ற பாராளுமன்றமே ஒப்புதல் அளித்துள்ளது இன்று சாதாரண ஒரு சராசரி பிரசை கூட 13 வது சட்டத்திருத்தம் பற்றி பேசும் அளவிற்கு அரசியல் விழிப்புணர்ச்சி மக்களிடம் ஏற்படுத்தப்பட்டிருக்கின்றது. இவையெதையும் கண்டுகொள்ளாமல் தனக்கு அமைச்சுப் பதவி மட்டுமே தேவை. மக்களைப் பற்றி எந்தக்கவலையும் இல்லை என்பதாக அமைச்சர் முரளிதரனின் கருத்துக்கள் அமைந்துள்ளன. இவை மக்களிடத்தில் ஏற்படுத்திவருகின்ற அதிருப்திகள் அளவுகடந்து இருக்கின்றன. கிழக்கு மாகாணசபை உறுப்பினர்கள் மக்களது அதிருப்திகளை ஊடகங்களுக்கு எடுத்துச் செல்லவேண்டும். கிழக்கு மாகாண மக்களின் இறைமைக்கெதிராக அமைச்சர் கூறியுள்ள கருத்துக்களை வாபஸ் பெறக் கோர வேண்டும். அமைச்சர் முரளிதரனின் கருத்துக்கெதிராக பகிரங்க கண்டனத் தீர்மானம் ஒன்றை நிறைவேற்ற வேண்டும் என்பதே இன்றயை கிழக்கு மாகாண மக்களின் எதிர்பார்ப்பாகும்.


»»  (மேலும்)

ஜூன் மாதம் முதல் திருகோணமலைக்கும் மட்டக்களப்பிற்கும் இடையிலான நேரடி ரயில் பஸ் சேவை
திருகோணமலைக்கும் மட்டக்களப்பிற்கும் இடையிலான நேரடி ரயில் பஸ் சேவை எதிர் வரும் ஜூன் முதல் வாரத்தில் ஆரம்பிக்கப்படும் என கிழக்கு மாகாண முதலமைச்சரின் செயலாளர் எஸ்.மாமாங்கராஜா தெரிவித்தார்.நேற்று மாலை மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தில் நடை பெற்ற செய்தியாளர்கள் சந்திப்பின் போது இந்த தகவலை அவர் வெளியிட்டுள்ளார்.கிழக்கு மாகாண சபையின் கடந்த கால வேலைத் திட்டங்கள் ,எதிர் கால வேலைத்திட்டங்கள் தொடர்பாக மட்டக்களப்பு மாவட்ட செய்தியாளர்களுக்கு விளக்கமளிக்கும் வகையில் இந்த சந்திப்பு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.இங்கு அவர் மேலும் தெரிவிக்கையில்,"கிழக்கு மாகாண சபை செயல்படத் தொடங்கி 10 மாதங்கள் ஆகியுள்ள நிலையில் குறிப்பாக இந்தியா குறிப்பிடத் தக்க சில உதவிகைள வழங்கியுள்ளது.இந்தியாவினால் வழங்கப்பட்ட18 பஸ் வண்டிகளில் 10 பஸ் வண்டிகள் அரசாங்கத் திணைக்களங்கள் ,பாடசாலைகள் மற்றும் சிறுவர் இல்லங்களுக்கு பகிர்ந்தளிக்கப்பட்டுள்ளன.மிகுதி 8 பஸ் வண்டிகள் தற்போது தலா 100 பேர் பயணம் செய்யக் கூடிய வகையில் 4 ரயில் பஸ்களாக மாற்றியமைக்கப்பட்டு வருகின்றது.ஜூன் மாதம் முதல் வாரத்தில் இந்த 4 ரயில் பஸ்களும் மட்டக்களப்பிற்கும் திருகோணமலைக்கும் இடையில் பகல் நேரம் சேவையில் ஈடுபடும் " என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

»»  (மேலும்)

கிழக்கு மாகாணத்தில் நெசவுக் கைத்தொழிலைநவீனமயப்படுத்தத் திட்டம்உலகிலேயே பொருளாதார வீழ்ச்சி ஏற்பட்டிருக்கும் இன்றைய காலகட்டத்தில் இலங்கையின் பொரு ளாதாரம் வளர்ச்சியடைந்து வருகின்றது. யுத்தத்தின் மத்தியிலும் இலங்கை பாரிய அபிவிருத்தி திட்டங்களை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ மஹிந்த சிந்தனையின் ஊடாக கிராமிய மட்டத்தில் கிராமிய கைத்தொழில்களை நடைமுறைப்படுத்தி வருகின்றார்.
அந்த வகையில் நெசவு கைத்தொழில்களை நவீன முறையில் இலத்திரனியல் தொழில்நுட்ப ரீதியில் கைத்தொழில்களை இலங்கையில் நடைமுறைப்படுத்துவதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருவதாக கிழக்கு மாகாண விவசாய கால்நடை உற்பத்தி அபிவிருத்தி, கிராமிய கைத்தொழில் அபிவிருத்தி, மீன்பிடி அமைச்சர் துரையப்பா நவரத்தினராஜா தெரிவித்தார்.
கிண்ணியா குறிஞ்சாக்கேணி நெசவு நிலையத்தில் பயிற்சி நெறிகளை ஆரம்பித்து வைத்து உரையாற்றும்போது இவ்வாறு தெரிவித்தார். அங்கு அவர் தொடர்ந்தும் கருத்து தெரிவிக்கையில்,
கிழக்கு மாகாணம் பயங்கரவாத பிடியில் இருந்து விடுபட்டதன் பின்னர் கிழக்கில் சுமுகமான நிலையை ஏற்படுத்தி மக்கள் நிம்மதியாகவும், சுதந்திரமாகவும் நடமாடக்கூடிய சூழலை ஏற்படுத்தி தங்களின் தொழில்துறையை மேன்மைப்படுத்தும் நோக்கில் பல திட்டங்களை நடைமுறைப்படுத்தி மக்களின் வாழ்க்கைச் சுமையை குறைக்கும் நோக்கில் ஜனாதிபதி மேற்கொண்டு வரும் திட்டங்களுக்கு மக்கள் பாராட்டு தெரிவிக்க வேண்டும்.
23 வருடங்களுக்குப் பின்னர் கிழக்கு மாகாணம் கிராமிய சிறு கைத்தொழில்களில் ஆர்வம் காட்டி வருவது பாராட்டத் தக்க விடயாகும். கிழக்கு மாகாண மக்கள் சிறு கைத்தொழில் தேர்ச்சிப் பெற்றவர்கள்.
கிழக்கு மாகாணத்தில் உற்பத்தி செய்யப்படுகின்ற பொருட்கள் வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டு அங்கு விற்கப்படுவதையும், அந்த பொருட்களுக்கு அங்கு அதிகூடிய வரவேற்பு இருப்பதை அண்மைக்காலத்தில் நான் வெளிநாடு சென்றபோது அதனை அவதானிக்க முடிந்தது. ஆகவே எமது ஒவ்வொரு பிரதேசத்திலும் உள்ள மூலப்பொருட்களையும் உற்பத்தி செய்து அந்த மூலப்பொருட்களை வெளிநாடுகளுக்கு அனுப்பி கிராமியத் தொழிலை ஊக்குவித்து அந்த கிராமிய மக்களின் பொருளாதாரத்தை கட்டியெழுப்புவதற்கும் கிழக்கு மாகாண விவசாய அமைச்சு நடவடிக்கை எடுத்து வருவதாகவும் தெரிவித்தார்.

»»  (மேலும்)

3/29/2009

அந்த நாலு பேருக்கு நன்றி


-குவார்னிகா-வன்னியை ஆண்ட கடைசி முடிசூடாமன்னன் பிரபாகரனது தலைநகராம் கிளிநொச்சி இலங்கை அரசிடம் வீழ்ந்த நாள் தமிழர் வரலாற்றில் கரிநாளா? கடற்படை காலாட்படை வான்படை சகிதம் தனது ஆட்சியைப் பலப்படுத்தியிருந்த மன்னன் எவ்வாறு தனது இறுதி நாளை எண்ணிக் கொண்டிருக்க வேண்டி வந்தது? ஈழத்தின் மிகப்பெரிய இராணுவ முகாமான ஆனையிறவையே தன்வசப்படுத்திய மன்னன் ஒரு சத்தமும் இல்லாது ஆனையிறவை விடுடோடியது எப்படி? ஒரே நாளில் 300க்கும் அதிகமான இளைஞர்களைப் பலிகொடுத்துக் கைப்பற்றிய பூநகரி இராணுவமுகாம் இராணுவத்திடம் திரும்பியது எப்படி? தாண்டிக்குளத்தில் உள்ளுக்க விட்டடித்தவர்கள் முல்லைத்தீவில் சும்மா உள்ளுக்க வரவிட்டது எதனால்?அந்தக்காலம் யாழ்ப்பாணத்தில காங்கேசந்துறை இராணுவ முகாமும் பலாலி இராணுவ முகாமும் கோட்டை இராணுவ முகாமும் மட்டுமே இருந்தபொழுது வன்னியில 7 பெரிய இராணுவமுகாம்கள் விளங்கி வந்தது.ஆனையிறவு, தள்ளாடி, ப+நகரி,மாங்குளம்,கொக்காவில், முல்லைத்தீவு வவுனியா என்று எல்லாமே மிகப்பெரிய இராணுவபலம் கொண்ட முகாம்கள். இவற்றிற் இடையில் பல பொலிஸ் நிலையங்கள். இவற்றிற்கெல்லாம் ஈடுகொடுத்துக் கொண்டிருந்தவர்கள் வன்னிமக்கள். அப்போது புலிகளின் வன்னிப் பொறுப்பாளராக இருந்தவர் அவர்களது துணைத்தலைவர் மாத்தையா அவர்கள். அந்தத் துணைத் தலைவர் மாத்தையா எப்படி ஒரே நாளில் துரோகியானார். இதை எல்லாவற்றையும் விட முக்கியமானவர் ஒருவர், கிழக்குமாகாணப் பொறுப்பாளராக இருந்தவர் சந்தோசம் என்பவர். இன்றிருக்கிற புலிகளுக்கு தெரிந்திருக்காது அவரை. nரிந்தவர்களுக்கு அவர் காலமாகி விட்டார் என்பது மாத்திரமே தெரியும். ஆனால் எப்படிக்காலமானார் என்று தெரியுமா? 90களின் ஆரம்பத்தில் ஒரு புலியண்ண ஒருவர் பேசிக் கொண்டிருக்கும்போது சொன்னார் அண்ண சந்தோசத்துக்கென்றும் ஒரு நாலு பேர் இருப்பாங்கள் தானே என்று.மாத்தையாவிற்கு வன்னியிலிருந்த புலி உறுப்பினர்களிடம் சரியான மரியாதை இருந்தது. முன்பு கொக்கோ கோலாலும் கோடன்சேட்டும் சான்டில்சும் மட்டுமே தெரிந்த யாழ்ப்பாணத்து ப்புலிகளுக்கு வன்னிப் புலிகள் என்றால் ஒரு இழக்காரம். யாழ் கோடடையிலிருந்து வெளியேறிய இராணுவத்தைத் தடுக்க மாத்தையாவால் வன்னியிலிருந்து புலிகள் அனுப்பிவைக்கப்பட்டார்கள். அப்பொழுதிலிருந்தே வன்னிப்புலிகளுக்கும் யாழ்ப்பாணத்துப் புலிகளுக்கும் சகவாசம் சரியில்லாமல் இருந்தது. முறுகல் இருந்தது. பின்பு மாத்தையாவைத் துரோகி எனத் திட்டம் போட்டுத்தான் தீர்த்துக் கட்டினது என்று எல்லோருக்கும் தெரியும். இப்ப அந்தப் புலியண்ண சொன்னதப் பாருங்கோ மாத்தையாவுக்கென்றும் நாலுபேர் இருப்பாங்கள் தானே.மன்னாரில விக்டர் என்று ஒருவர் இருந்தார் அவர் களத்தில் சாகும் பொது றோமன் என்றும் ஒரு சின்னப்பொடியன் இறந்தான். தமிழ் நாட்டுநெடுமாறனுக்கு நல்லாத் தெரியும். விக்டரின் நேர்மை மன்னார் சனத்துக்கு நல்லாத் தெரியும் என்ன செய்யுறது நெடுமாறனுக்குத் தெரியாது. மன்னார் சனத்துக்கு விக்டருக்கு பின்னால் இருந்து எப்படிக் குண்டு பட்டது என்று தெரியும். விக்டருக்குத் தெரியாமல் போட்டுது. ஆனால் பாருங்கோ விக்டருக்கென்றும் நாலு பேர் இருப்பாங்கள்தானே.யாழ்ப்பாணத்தில கிட்டு என்று ஒருவர் இருந்தார். அவருக்கு கலைப்பறித்து பிறகு கடலில உயிரைப்பறித்ததை ஒருவரும் மறக்கமாட்டியள். கிட்டுவுக்கு கால் போகவைத்தது என்று சொல்லி யாழ்ப்பாணத்தில் எத்தனை பேரை போட்டார்கள். பிறகு அந்தக் குற்றம் மாத்தையாவுக்கு மாற்றப்பட்டது. கிட்டுவை கடலில காட்டிக் கொடுத்தது என்று சொல்லி பிரான்ஸ் திலகரையும் காணவில்லை. இப்ப கிட்டுவுக்கும் நாலுபேர் இருப்பாங்கள். திலகருக்கும் நாலுபேர் இருப்பாங்கள்தானே. மட்டக்களப்பில கருணா என்று ஒருவர் தான் தாண்டிக்குளத்தில நின்று உள்ளுக்க வரவிட்டு அடித்தது. அவரைத் துரோகியாக்கின கதை தெரியும் தானே. அவரோட நிக்காம தலைவரை நம்பி வந்து நேற்றுவரை கூட இருந்த கரிகாலன் அண்ண எங்கே? புலித்தேவன் அண்ண எங்கே? இளந்திரையன் அண்ண எங்கே? இவர்கள் எல்லோருக்கும் ஒவ்வொரு நாலு பேர் இருக்கத்தானே செய்வாங்கள். இப்படி ஒவ்வொருவருக்கும் பின்னால் இருந்த நாலுபேரை யோசிக்காமல் விட்டபடியால எங்கட மன்னன் தனது நிலங்களையெல்லாம் பறிகொடுத்து. இன்னும் இருக்கிற நாளை எண்ணிக் கொண்டிருக்க வேண்டியிருக்கிறது. மன்னன் மக்களைக் காப்பாறிறியதாகச் சொன்ன காலம் போய் மன்னனைக் காக்க மக்கள் பலியெடுக்கப்படுகிறார்கள். எத்தனை மக்களைக் கொன்றாவது மன்னனைக் காப்பாற்றிவிட நமது சமூகம் முயன்று கொண்டிருக்கிறது. ஆனால் எப்படியாவது மன்னனை விட்டுவிடக்;கூடாது என்று அந்த நாலு பேர்கள் காத்திருக்கிறார்கள்.»»  (மேலும்)

தமிழ்க் கூட்டமைப்பினருடன் பேச்சு நடத்துவதற்கு ஜனாதிபதியின் கதவுகள் திறந்தேயுள்ளன : அரசாங்கம் அறிவிப்பு; தீர்வில் உறுதி என்கிறது


பேச்சுவார்த்தை மூலமே தேசிய பிரச்சினையை தீர்க்கவேண்டும் என்று வலியுறுத்தும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பேச்சுவார்த்தைக்காக அரசாங்கத்தின் உயர்மட்டத்திலிருந்து விடுக்கப்பட்ட அழைப்பை நிராகரித்துள்ளது. இது ஏன் என்று எங்களுக்கு புரியவில்லை. அமெரிக்காவினதோ சீனாவினதோ மக்களை பற்றி பேச்சுநடத்த ஜனாதிபதி அழைப்பு விடுக்கவில்லை. மாறாக தமிழ் மக்களின் பிரச்சினைகள் பற்றி பேச்சுநடத்தவே அழைப்பு விடுத்திருந்தார்" என்று ஊடகத்துறை அமைச்சர் லக்ஸ்மன் யாப்பா அபேவர்த்தன தெரிவித்தார். எதிர்காலத்திலும் எந்த நேரத்திலும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினருடன் பேச்சு நடத்துவதற்காக ஜனாதிபதியின் கதவுகள் திறந்தே உள்ளன என்றும் அமைச்சர் மேலும் குறிப்பிட்டார். அரசியல் நிலைமைகள் தொடர்பில் பேச்சு நடத்துவதற்காக ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ விடுத்த அழைப்பை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் நிராகரித்தமை தொடர்பில் வினவியபோதே அவர் மேற்கண்டவாறு கூறினார். இவ்விடயம் தொடர்பில் அவர் மேலும் தெரிவித்ததாவது: "ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ விடுத்த அழைப்பை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நிராகரித்துள்ளது. ஆனால் பிரச்சினைக்கு அரசியல் ரீதியில் பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காணப்படவேண்டும் என்று கூட்டமைப்பு வலியுறுத்துகின்றது. அப்படியானால் அவர்கள் பேச்சுவார்த்தையில் கலந்துகொள்ள வேண்டுமே? பிரச்சினைக்கு அரசியல் தீர்வுகாணப்படவேண்டும் என்பதில் அரசாங்கம் உறுதியாக இருக்கின்றது. அதற்காகத் தமிழ்க் கட்சிகளுடன் பேச்சு நடத்த வேண்டியதன் அவசியத்தை உணர்கின்றோம். இந்நிலையில் என்ன பிரச்சினையாயினும் பேசினால்தானே தீர்வை எட்டலாம்? பேச்சுவார்த்தைகளின்போது கருத்து முரண்பாடுகள் மற்றும் இணக்கப்பாடின்மை என்பன தோன்றலாம். ஆனால் முதலில் பேச்சுவார்த்தை நடத்தவேண்டும். பிரச்சினை தொடர்பில் பேச்சு நடத்தாமல் பிரச்சினைகள் பற்றி கூறிக் கொண்டிருப்பதில் அர்த்தமில்லை. அதனால்தான் நாட்டின் உயர்மட்டத்திலிருந்து பேச்சுவார்த்தைக்காக அழைப்பு விடுக்கப்பட்டது. உண்மையில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் அரசாங்க தரப்பினருடன் பேச்சுநடத்தி தமிழ் மக்களின் தேவைகள் மற்றும் அபிலாஷைகள் தொடர்பில் எமக்கு உணர்த்தவேண்டும். தமிழ் மக்களின் தேவைகள் தொடர்பில் அரசாங்கத்தை வலியுறுத்த வேண்டும். இதுதான் உண்மையில் இடம்பெற்றிருக்க வேண்டும். அதனைவிடுத்து, பேச்சுவார்த்தைக்கான அழைப்பை ஏன் நிராகரிக்கின்றனர் என்பது புரியவில்லை. எமது பிரச்சினையை எம்மால் தீர்த்துக்கொள்ள முடியும். அதற்கான முயற்சிகளையே நாம் மேற்கொள்கின்றோம். அமெரிக்காவினதோ சீனாவினதோ மக்களைப் பற்றிப் பேச்சு நடத்த ஜனாதிபதி தமிழ்க் கூட்டமைப்புக்கு அழைப்பு விடுக்கவில்லை. மாறாக இலங்கையில் உள்ள தமிழ் மக்கள் தொடர்பில் பேச்சுநடத்தவே அழைப்பு விடுக்கப்பட்டது. எனவே தமிழ் மக்களை பிரதிநிதித்துவப்படுத்தும் கூட்டமைப்பினர் பேச்சுவார்த்தையில் கலந்துகொள்ளவேண்டும். தமது பொறுப்பை தட்டிக்கழிக்கக்கூடாது. எனினும் ஜனாதிபதி கதவுகளை மூடப்படவில்லை. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினருடன் பேச்சுவார்த்தை நடத்த ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ கதவுகளை எப்போதும் திறந்தே வைத்துள்ளார்" இவ்வாறு அவர் கூறினார்.


»»  (மேலும்)

காணி பகிர்ந்தளித்தால் மட்டும் போதாதுகாணிகளை மட்டும் பகிர்ந்து கொடுப்பதால் பொருளாதாரத்தில் மிகவும் பின்தங்கிய நிலையிலிருக்கும் தொழிலாளர்களால் சுயமாக ஒரு வீட்டை கட்ட முடியாது.
அன்றாடம் உழைத்து உணவு உட்பட பல தேவைகளைப் பூர்த்திசெய்து கொள்வதற்கான பொருளாதார வசதியைக் கொண்டிராத இச் சமூகத்திற்கு தொழிற்சங்கத் தலைமைகளோ தோட்ட நிர்வாகங்களோ கைகொடுத்து உதவ முன்வரவில்லை.
சம்பந்தப்பட்ட நிறுவனங்களுடன் தொடர்புகொண்டு அவற்றின் மூலம் நிறைவேற்றிவைக்கப்பட வேண்டிய பணிகளைப் பெற்றுக்கொடுக்கவோ முன்வருவதில்லை. வறுமையில் வாழ்ந்துவரும் இவர்கள் தோட்ட வேலையையும் இழந்துள்ள காணியைப் பெற்றுக்கொண்ட போதிலும் குடியிருப்புகளில் இருப்பது போலவே தொடர்ந்தும் வாழ்ந்துவரும் துர்ப்பாக்கிய நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர்.
இங்கிரிய தோட்டத்தில் வசித்து வந்த 55 தொழிலாளர் குடும்பங்களுக்கு 2000 ஆம் ஆண்டில் அதே தோட்டத்தில் ஒவ்வொருவருக்கும் தலா 15 பேர்ச் காணி வீதம் பகிர்ந்தளிக்கப்பட்டது. ஒரு சிலர் தமது சுய முயற்சியினால் குடியிருப்புகளை அமைத்துள்ளனர்.
இருபத்தைந்தாயிரம் ரூபாவுக்கும் மேற்பட்ட பணம் செலவழித்து மின்சார வசதியைப் பெற்றுக்கொண்டுள்ளனர். பெரும்பாலானோர் மண், கிடுகு, தகரம் இவற்றினாலான குடிசைகளை அமைத்து வாழ்ந்து வருகின்றனர்.
குடிநீர், மின்சாரம், பாதை, சனசமூக நிலையம், விளையாட்டு மைதானம், மலசலகூட வசதி எதுவும் கிடையாது. வசதி வாய்ப்புக்கள் உள்ளவர்கள் தமது காணியில் குடிநீர்க் கிணறுகளையும் மலசல கூடங்களையும் அமைத்துக் கொண்டுள்ளனர்.
குடிநீர், மலசல கூட வசதியற்ற பலர் அயலவர்களின் கிணற்றிலிருந்து குடிநீரைப் பெற்றுக்கொள்வதுடன் மலசல கூடங்களையும் பாவித்து வருகின்றனர். குளிப்பதற்கென பொதுவான கிணறு அமைக்கப்படவில்லை. குளிப்பதற்கும், ஆடைகளைத் துவைப்பதற்கும் நீரோடைகள், குளக்கரையை நாடிச் செல்ல வேண்டியுள்ளது. காணி வாங்கி எட்டு வருடங்கள் ஆகிவிட்டன. இதுவரை எதுவித அடிப்படை வசதிகளும் செய்து கொடுக்கப்பட வில்லை. காணிக்கான உறுதி கூட இதுவரை வழங்கப்படவில்லை. அரசியல்வாதிகளினதும், தொழிற்சங்கவாதிகளினதும் கவனத்துக்கு பல தடவைகள் கொண்டு வரப்பட்ட போதிலும் எவ்வித பயனும் ஏற்படவில்லை. தேர்தல் காலத்தில் மட்டும் வாக்குகளை வாங்கிக் கொள்கின்றார்கள்.
ஆனால் எவ்வித உரிமையோ, உதவியோ, கிடையாது. யாருமற்ற அநாதைகளாகவே இருந்து வருகின்றோம்.
ஒவ்வொருவருக்கும் 40 பேர்ச் காணி வழங்குவதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வந்தபோது அதை கிடைக்க விடாது தடுத்து 15 பேர்ச் காணியாக குறைப்பதற்கு தொழிற்சங்கவாதிகளே காரணமாக இருந்துள்ளனர். ஹொரணை பேர்த் தோட்டத்திலும் இதே நிலைதான் கூடுதலாக தொடர்ந்தது. எதனையும் பெற்றுக் கொடுக்காவிடினும் கிடைக்க விருப்பதைத் தானும் கிடைக்க விடாது இவ்வாறு தடுத்து நிறுத்தும் நடவடிக்கைகளில் ஈடுபடுவது வேதனைக்குரிய விடயமாகும் என குடியிருப்பாளர்கள் தெரிவிக்கின்றனர். பெரும்பான்மையினத்தவர்களுக்கு இப்பிரதேசத்தில் காணிப் பங்கீடு செய்து தேவையான அனைத்து வசதிகளும் செய்து கொடுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
இதேவேளையில் இங்கு வசித்து வருபவர்களில் சிலர் தமக்குரிய 15 பேர்ச் காணியில் அரைவாசியை வெளியாருக்கு விற்பனை செய்துள்ளனர். இவ்வாறு காணியை விலைக்கு வாங்கியவர்கள் சட்டரீதியாக காணி உறுதி எழுதி பெற்றுக் கொண்டுள்ளனர். இதனால் காணி உரிமையாளர்களுக்கு காணி உறுதி வழங்கப்படும்போது சிக்கல் ஏற்படும் நிலை தோன்றியுள்ளது. காணி உரிமையாளர்களிடம் இது குறித்து கேட்டபோது,
தொழிலாளர்கள் தமக்கு உரிமை கிடைக்கவில்லை. உதவி கிடைக்கவில்லை என குறைகூறும் அதேவேளையில் தமக்கு கிடைப்பதை முறையாகப் பயன்படுத்தவோ, பாதுகாத்துக் கொள்ளவோ முயற்சிக்காது துஷ்ப்பிரயோகம் செய்யும் நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருவதை தவிர்த்துக் கொள்ள வேண்டும். தொழிலாளர் மத்தியிலும் பல தவறுகள் உண்டு என்பதை இங்கே சுட்டிக்காட்டப்பட வேண்டியது அவசியமாகும். இங்கு வசித்து வரும் குடியிருப்பாளர்களில் சிலர் கருத்துத் தெரிவிக்கையில்,
வெங்கடாசலம் யோகமர் (36)
காணி மட்டுமே வழங்கப்பட்டது. வேறு எந்த வித உதவியும், வழங்கப்படவில்லை. இதனால் வீடு கட்டிக்கொள்ள வசதியில்லாத காரணத்தினால் குடிசையமைத்துள்ளோம். லயத்தில் இருந்ததை விட மோசமாகவே இருந்து வருகிறோம். கீழ் பிரிவில் காணி பிரித்துக் கொடுக்கப்பட்டுள்ளதால் தொழிலாளர்கள் மேல்பிரிவுக்கு வேலைக்குப் போகின்றனர். பெரும்பாலானோர் வெளியிடங்களுக்கே வேலைக்குப் போகின்றனர். சந்தாப் பணம் அறவிடப்படுகிறது. ஆனால் சங்கத்து தொழிற்சங்கத் தலைவர் மூலம் எதுவும் செய்து கொடுப்பதில்லை. அன்றாட சாப்பாட்டுக்கே உழைக்க வேண்டியுள்ளது. குடிநீர், மலசல கூட வசதி எதுவுமே கிடையாது. தலைவர்மார் அவரவரின் வசதியையும், தேவைகளையும் பூர்த்தி செய்து கொள்கின்றனர்.
வை.எம். எக்னஸ் நோனா (67):
காணி கொடுத்த பின் எதுவுமே செய்து தரப்படவில்லை. காணிக்கு இன்னும் உறுதி கிடையாது. உறுதியைப் பெற்றுத்தர ஐயாயிரம் ரூபா கேட்கின்றனர். அன்றாடம் உழைத்து சாப்பாட்டுக்குக் கூட போதாமல் இருக்கும்போது எங்கிருந்து பணம் கொடுப்பது? காணி பெற்றுத் தருவதாகக் கூறி ஒவ்வொருவரிடமிருந்தும் 300 ரூபா சேர்த்து எம்மையும் வாகனத்தில் ஏற்றி களுத்துறை கச்சேரிக்கு கூட்டிச் சென்று மாதங்கள் பல கடந்துவிட்ட போதிலும் காணி உறுதி இதுவரை கிடைத்த பாடில்லை.
ஆர். நாகேஸ்வரி (27):
நானும் எனது கணவரும் பிள்ளைகள் இரண்டு பேருமாக ஒரு மண் குடிசையிலேயே வசித்து வருகிறோம். மிகவும் ரிZ(தியிலேயே வசித்து வருகிறோம்.
மலசல கூடம், குடிநீர் வசதி எதுவுமே இல்லை. அயலவரின் மலசல கூடத்துக்கே போக வேண்டியுள்ளது. அல்லது பற்றையை நோக்கிச் செல்ல வேண்டியுள்ளது. வேலை முடிந்து மாலையில் வீடு திரும்பினால் கை, கால் கழுவ நீண்டதூரம் செல்ல வேண்டியுள்ளது. எங்கள் நிலையை எவரும் புரிந்துகொள்வதாத் தெரியவில்லை என்றார்.
மைக்கல் சரோஜின் (66):
காணிக்கு உறுதி வாங்கித் தருவதாக 2,500 ரூபா அறவிடுவது என்பது பற்றி யோசித் துப் பார்க்க வேண்டும். காணி மட்டுமே வழங்கப்பட்டது. இங்கு தேவையான வீதி, குடிநீர், மலசல கூடம், மின்சாரம் மற்றும் தேவைகள் குறித்து யாருமே கவலைப்படவில்லை.
வீடு எப்படிக் கட்டிக்கொள்வார்கள் என்பது பற்றியும் சிந்திக்கவில்லை. காணிக்கு உறுதி வாங்கித் தருவதாக பணம் பெற்றுக்கொண்ட போதிலும் இன்னும் உறுதி கிடையாது. வாங்கித் தருகிறோம்; வாங்கித் தருகிறோம் என சங்கத்தில் உரியவர்கள் சொல்கிறார்கள். அமைச்சர்களான ஆறுமுகன் தொண்டமான், சந்திசேகரன் போன்றோர் எமது நிலை குறித்து கவனம் செலுத்த வேண்டும்.
எஸ். புஷ்பராசா (32)
நான் எனது முயற்சியில் வீடு கட்டிக் கொண்டேன். இல்லாதவர்கள் எப்படி கட்டிக்கொள்வார்கள் எனக் கேள்வியெழுப்பினார்.

»»  (மேலும்)

கொழும்பு முஸ்லிம்களின் முற்றத்தில் புதையுண்டிருக்கும் சில முத்துக்கள்


கொழும்பு முஸ்லிம்களின் வரலாறு எழுதப்பட வேண்டும்; ஆவணப்படுத்தப்பட வேண்டும் அவற்றை அகழ்ந்து, கிண்டிக் கிளறி தொகுத்தாலே, தொடரும் பணிகளுக்கு துணை புரிவது போலாகும். பதச் சோறாக, சில முத்துக்களை ஆர்வலர்களின் சிந்தனைக்கு விருந்தாக்க விழைகின்றேன்.
கொழும்பு மருதானை தெமட்டகொடை தெருவில், இடநெருக்கடியால் மூச்சுத் திணறும் கைரியா முஸ்லிம் மகளிர் வித்தியாலயம், இலங்கை முஸ்லிம்களின் பாடசாலை வரலாற்றில் முன்னோடி பள்ளிக்கூடங்களில் ஒன்று. அது சமீபத்தில் தன் 125 ஆவது ஆண்டு நிறைவை கொண்டாடி மகிழ்ந்தது. இப்பள்ளிக்கூட முற்றத்தில் எல்லோரும் தெரிந்து கொள்ள வேண்டிய அருமையான சம்பவமொன்று புதைந்து கிடைக்கின்றது. இதோ... அதன் விபரம் வருமாறு.
அல் மத்ரஸத்துல் கைரியா ஆரம்ப காலத்தில் இறைமறை குர்ஆனை ஓதிக் கொடுக்கும் ஒரு மத்ரஸா (பள்ளிக்கூடம்) பாணியிலேயே துவங்கப்பட்டு - நடத்தப்பட்டு வந்திருக்கிறது. இதனை மர்ஹும் லெவ்வை காக்கா என்ற பெரியாரே ஆரம்பித்திருக்கிறார். இப்பெரியாரின் மூன்று பெண்பிள்ளைகளான அக்கா, தங்கையரே கைரியாவின் வளர்ச்சியில் பெரும் கரிசனை காட்டி நடத்தி வந்துள்ளனர்.
இவ்வாறு கைரியா வளர்ந்து வரும் காலத்தில, இப்பள்ளிக்கூடம் வருங்காலத்தில் பெரிய தலையிடியாக வரலாமென்று தப்பெண்ணம் கொண்டு, எப்படியும் இந்த மத்ரஸாவை இங்கிருந்து அகற்றிவிட வேண்டும் என்று, “சரிந்த” பார்வையில் திரைமறைவு நடவடிக்கையில் ஈடுபடத் துவங்கியுள்ளனர் சிலர்.
இதே காலகட்டத்தில் பக்கத்தே இருக்கும் போதி மாதவனின் விஹாரையில் நடைபெறவிருந்த வைபவமொன்றுக்கு பிரதம அதிதியாக பெளத்த அமைச்சர் ஒருவர் அழைக்கப்பட்டிருக்கின்றார். விழாவுக்கு வருகைதரவுள்ள பிரதம அதிதியை மருதானை சந்தியிலிருந்து, தெமட்டகொடை ரோடு ஆரம்பமாகும் இடத்திலிருந்து ஊர்வலமாக அழைத்துவர ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இச்செய்தி பகுதி மக்களுக்கு தெரியவந்ததில், கைரியா நிர்வாகிகளின் காதுகளுக்கும் எட்டியுள்ளது. மூன்று சகோதரியரில் ஒருவர் அரபு மொழியில் கீதமொன்றை இயற்றி, அதில் அதிதியாக வரவிருக்கும் அமைச்சரின் பெயரையும் சேர்த்து, ஒரு சிறுமியை மனனஞ் செய்யும்படி கூறி, அரபு கீதத்தை கொடுத்து ஏற்பாடு செய்துள்ளார். வைபவ நாளும் வந்து விட்டது. அமைச்சர் ஊர்வலமாக அழைத்து வரப்படுகிறார். கைரியா நிர்வாகம் என்ன செய்தது தெரியுமா?
அரபு கீதத்தை மனனஞ் செய்த சிறுமியை, கைரியா வாசலில் மேசையொன்றில் ஏறி நிற்கச் செய்து கத்தி பாடும்படி ‘திரிசிஷ்டர்ஸ்’ வேண்டவே, அந்தச் சிறுமி அவ்வாறே பாடிக்கொண்டிருக்க, ஊர்வலம் கைரியா அருகில் வந்துவிட்டது. மேசை மீது எழுந்து நின்று ஏதோ கத்திப்பாடும் சிறுமியை, பிரதம அதிதி கண்டு விட்டார். மொழி புரியாத அந்த அரபு பாடலில் உச்சரிக்கப்பட்ட அமைச்சரின் பெயர் தெளிவாக பிரதம அதிதியான அமைச்சரின் காதில் விழுந்துவிடவே, அவரது கவனம் திசைதிரும்ப, கைரியாவின் மீது பார்வை விழ, எவரும் எதிர்பாராத விதமாக, “மே மொனவாத தஹம் பாஸெலத?” எனக் கேட்டவாறே (இது என்ன சமயப் பாடசாலையா?) கைரியாவினுள் அமைச்சர் நுழைய அமைச்சரின் ‘பரிவாரங்கள்’ பின்தொடர, ஊர்வலம் கைரியாவை மொய்க்கலாயிற்று. விழா ஏற்பாட்டில் இல்லாதது, இறை ஏற்பாடாய் நடந்து விட்டது.
அமைச்சர் உள்ளே நுழைந்தபோது அங்கே மாணவர்கள் தொப்பி அணிந்தபடி, மாணவியர் முக்காடிட்டபடி குர்ஆன் ஓதிக்கொண்டிருக்கும் காட்சியை கண்குளிர பார்த்தவாறே “ஆ... நடக்கட்டும்” என்ற ரீதியில் போன வேகத்திலேயே திரும்பி விட்டார். ஊர்வலம் விழா மேடையை அடைய வைபவம் களைகட்டி இனிதே நடந்து முடியும் தருணத்தில், அந்த “சிலர்” அமைச்சரை நெருங்கி, கைரியாவை காட்டி, ஏதேதோ சொல்லி, அதை அப்புறப்படுத்தித் தருமாறு வேண்டவே,
“ஏக்க மட்ட கரண்ட பே... ஏக்க தஹம் பாஸெலனே... ஏக்க பவ்வெடக்... மட்ட பே... “ (அது என்னால் செய்ய முடியாது... அது சமயப் பாடசாலையல்லவா? அது பாவமான காரியம்.. என்னால் முடியாது) எனக் கூறி மறுத்துவிட்டாராம் அமைச்சர்!
அமைச்சரின் அந்த மறுப்பே கைரியா கம்பீரமாக காலத்தை வென்று வளர்ச்சிபெற காரணமாயிற்று. இந்த சம்பவத்தை எழுத்துருவாக்கி, ஆவணப்படுத்தி வைக்க வேண்டாமா? நடந்த சம்பவங்கள் எழுதுவானாலும், அவை பேச்சளவில் இருந்தால், நாளடைவில் காற்றோடு கலந்து கரைந்து விடும். எழுத்துருவில் இருந்தால், என்றேனும் ஒருநாள் சான்றாக முன்வந்து சாட்சி கூறும்.
அம்மட்டோ? கொட்டாஞ்சேனை பகுதியில் சூ ரோட் என்றொரு தெரு இருக்கிறது. ஒரு காலத்தில் சப்பாத்து - செருப்பு தைக்கும் தொழிலாளர்கள் இத்தெருவில் குடியேறி வாழ்ந்ததால், இப்பெயர் வந்ததாகக் கூறுகிறார்கள். இந்த சூ ரோட்டின் 100க்கு ஒரு வீதமானவர்கள் முஸ்லிம் அல்லாத தமிழ்ப் பேசும் இந்து – கிறிஸ்தவ சகோதரர்களே வாழ்கின்றனர். இப்படி முஸ்லிம் அல்லாத அன்பர்கள் 99 வீதமாக வாழும் ஒரு தெருவின் நடுவே, நீண்டகாலமாக ஒரு பள்ளிவாசல் (மசூதி) ஐங்காலத் தொழுகைகளை நடத்தியவாறு சமயப் பணி புரிந்து வருகிறது. சமீப காலத்தில் கட்டடப் புனர்நிர்மாணம் கண்டு ஒரு ஜும்ஆப் பள்ளிவாசலாக கம்பீரமாக எழுந்து நின்று, சன்மார்க்க மணம் வீசி வருகிறது. சுற்றுப் புறங்களிலும் அவ்வளவாக முஸ்லிம் குடியேற்றங்கள் இல்லாத நிலையில், 99 சதவீத தமிழன்பர்கள் வாழும் தெருவில் ஒரு பள்ளிவாசல் வந்தது எப்படி? இதை ஆய்ந்து - தோய்ந்து ஆவணப்படுத்தினால், உசாத்துணை தகவலுக்கு உதவுமே!
கொழும்பு முஸ்லிம்கள் செறிவாக வாழும் ஒரு பகுதி புதுக்கடையாகும். இந்தப் புதுக்கடையில் சில்வர் ஸ்மித் லேன் என்றொரு தெரு இருக்கிறது. இந்தத் தெருவில் முஸ்லிம்கள் சுமார் 98 சதவீதம் வாழ்ந்து வருகின்றனர். இந்த ஒழுங்கையிலுள்ள தோட்டமொன்று தமிழ்ப்பேசும் இந்துக்களின் துர்க்கையம்மன் கோயில் கம்பீரமாக எழுந்து நின்று, தினமும் சமயப்பணி புரிந்து வருகிறது. பக்கத்தில் இன்னொரு கோயிலும் இருப்பது குறிப்படத்தக்கது. முஸ்லிம்கள் 98 சதவீதமாக வாழ்ந்துவரும் இத்தெரு தோட்டத்தில் ஒரு கோயில் வந்தது எப்படி? இதை ஆய்ந்து - தோய்ந்து ஆவணப்படுத்தினால், உசாத்துணை தகவலுக்கு உதவுமே! நீண்டகாலமாக சூரோட் பள்ளிவாசலும், சில்வர் ஸ்மித்லேன் கோயிலும் எவ்வித இடையூறுமின்றி சமய நல்லிணக்கத்திற்கு நல்ல உதாரணங்களாகத் திகழ்ந்து வருவதை எழுத்துருவில் ஆவணப்படுத்துதல் அவசியமல்லவா?
கொழும்பு மாளிகாவத்தை முஸ்லிம் ஜனாஸா நல்லடக்க மைதானத்தின் பென்னாம் பெரிய இடம், ஒரு முஸ்லிம் சமூகத்திற்காக அன்பளிப்பாகக் கொடுத்த காணி என்ற செய்தி, செழுங்கிளை தாங்கும் அந்த முஸ்லிம் செல்வந்தரின் விசால மனத்தின் விலாசமல்லவா? இந்த நல்ல செய்தியை நாளைய வாரிசுகளுக்கு சொல்ல வேண்டாமா? புறக்கோட்டை பகுதி தலைநகரின் பொலிவுக்கு பிரசித்தமான இடம். இப்பகுதியை “பெட்டா” என்றே பலரும் அழைக்கின்றனர். ‘பெட்டா’வுக்கு ஆங்கில அகராதி அர்த்தம் கூறவில்லை. “பேட்டை” என்பதே ‘பெட்டா’வாகத் திரிபடைந்திருப்பதாக ஒரு செய்தியுண்டு.
இத்தகவலை தெரிந்தவர்கள் சொல்ல, எழுத்தாக்க வேண்டாமா? இப்படி பல முத்துக்கள் கொழும்பு முஸ்லிம்களின் முற்றங்களில் புதைந்திருக்கின்றன. இவைகளை எழுத்தாக்க முனைவோமா?


»»  (மேலும்)

3/28/2009

தமிழ் மக்களின் தீர்வு பற்றியல்ல தலைவரின் உயிர் பற்றியே எனது அக்கறை - சம்பந்தன் சூளுரை.


- கு.சாமித்தம்பி -பலரும் எதிர்பார்த்தது போல் சம்பந்தன் முரண்டு பிடித்துவிட்டார். தமிழில் ஒரு அழகான பழமொழி உண்டு. “ஒன்று தட்டில் ஏறவேண்டும், இல்லாவிடில் சுழகில் ஏறவேண்டும்.” தட்டிலும் ஏற மாட்டேன் சுழகிலும் ஏறமாட்டேன் என்ற அடம் பிடிப்பவர்கர்களை நாம் என்ன செய்யமுடியும். புலிகள் தமது முழுப்பலத்தையும் பாவித்து மாற்று வேட்பாளர்களை கொன்று குவித்து போதாக்குறைக்கு கள்ள வோட்டும் போட்டு பாராளுமன்றுக்கு அனுப்பியதற்கு சம்பந்தன் நன்றியுடையவராய் இருக்கிறார். நாட்டின் இன்றைய நிலைபற்றிப் பேச்சுக்களை நடாத்த ஜனாதிபதி தமிழ் தேசியக் கூட்டமைப்பினருக்கும் பகிரங்க அழைப்பு விடுத்திருந்தார். ஏற்கனவே நடந்துவருகின்ற சர்வகட்சி மாநாட்டில் பங்கு பற்றாது ரி.என்.ஏ எம்பிக்கள் சர்வதேசம் எங்கும் பறந்து பறந்து இறுதி யுத்தப்பிரச்சாரம் செய்துகொண்டிருந்த போதிலும் ஜனாதிபதி கீழ் இறங்கி வந்து இந்த கூட்டமைப்பினரை மக்களின் பிரதிநிதிகள் என மதித்து பேச அழைத்திருந்தார். ஆனால் த.தே.கூ. இந்த அழைப்பை நிராகரித்திருக்கின்றது. கடந்த கால ஒப்பந்தங்களும் பேச்சுவார்த்தைகளும் பலனற்றப் போனதற்கு சிறிலங்கா அரசு மட்டும் பொறுப்பல்ல. தமிழ் தரப்பினரின் குத்துக்கரணங்களும் பின்கதவு ஒப்பந்தங்களும் குதியாட்டங்களுமே காரணம். இந்த சுய நலன்களுக்கான கணக்கு வளக்குகளுடன் வழமைபோன்றே தமிழரசுக் கட்சி பாரம்பரியத்தை சம்பந்தன் காப்பாற்றியிருக்கின்றார். “புலிகளின் தாகம் தமிழீழ தாயகம் என்று தினாவெட்டு பேசிய புலிகள் இன்று தின்னச் சோறின்றி வணங்கா மண்ணுக்காக காத்துக்கிடக்கிறார்கள். மக்களைக் கைவிட்டு புறமுதுகு காட்டி ஓடிக்கொண்டிருக்கிறார்கள். இந்த நிலைமையானது யுத்தவெற்றி என்கின்ற இறுமாப்பை சிறிலங்கா பேரினவாத சக்திகளுக்கு தந்திருக்கின்றது. யாருடனும் பேசத்தேவையில்லை என்கின்ற நிலைமையை சிறிலங்கா அரசுக்கு இராணுவ வெற்றிகள் ஏற்படுத்திக் கொடுத்துக்கொண்டிருக்கின்றன. ஆனாலும் ஜனாதிபதி தமிழ் தேசியக் கூட்டமைப்பினருக்கு அழைப்பு விட்டிருந்தார். இது இறுதித் சந்தர்ப்பங்களில் ஒன்று. புலிகளால் குற்றுயிராக்கப்பட்டு சிறிலங்கா இராணுவத்தின் முகாம்களுக்குள் தஞ்சம் அடைந்து அங்கிருந்துதான் தமிழரின் அதிகமான ஜனநாயகப் பக்கம் முளைத்தது. மாற்றுக்கட்சிகள் என்ற சொல்லப்படுகின்ற பெரும்பாலான கட்சிகள் மக்கள் பலத்தைக் காட்டி மக்கள் உரிமைகளை பேரம் பேசமுடியாத துர்ப்பாக்கிய நிலைமை இன்றுவரை நீடிக்கின்றது. இந்த நிலையில் இலங்கைத் தமிழரின் எதிர்காலம் என்பதோ, அதிகாரப் பரவரலாக்கம் என்பதோ இன்ற இருக்கின்ற மாகாணசபை முறைமையை காப்பாற்றுவதில் மட்டுமே தங்கியுள்ளது. எப்படியும் பேசித்தான் ஆகவேண்டியநிலை. ஆனால் கூட்டமைப்பினரின் இறுமாப்பு தேடிவந்த சீதேவியை புறம்காலால் எட்டி உதைக்கும் அக்கிரமக்காறனுக்கு ஒப்பானது. சம்பந்தனின் தலைமையில் எடுக்கப்பட்டிருக்கின்ற இந்த முடிவு தமிழ் மக்களின் எதிர்காலம் பற்றிய ஒரு பொறுப்பற்ற செயலாகும். அரசின் மீது மட்டுமே எப்போதும் குறைகூறும் கூட்டமைபினர் புலிகள் ஏறக்குறைய ஒடுக்கப்பட்டுள்ள இந்த நிலையில், யுத்தம் 21 சதுர கிலோ மீற்றருக்குள் குறுக்கப்பட்டுள்ள இந்த நிலையில் இலங்கைத் தமிழரின் எதிர்காலம் குறித்து அரசு என்ன தீர்வை வைத்திருக்கின்றது? என்ற கேள்வியை எழுப்ப இந்த சந்தர்ப்பத்தை ஏன் பயன்படுத்தியிருக்க முடியாது. கிழக்கை வடக்கோடு இணைக்க ஓயாது கோரிவரும் சம்பந்தன் கிழக்கில் யுத்தம் முடிவுக்கு வந்து மாகாணசபை ஆட்சி முறைமை ஏற்படுத்தபட்டு ஒருவருடமும் கடந்து விட்ட இந்த நிலையில் அங்கே என்ன அதிகாரப் பகிர்வு நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது? ஏன் அங்கே 13 வது திருத்தச் சட்டம் அமூலாக்கப்படவில்லை. ஏன் காணி, பொலிஸ் அதிகாரங்கள் இன்னும் வழங்கப்படவில்லை? என்கின்ற கேள்விகளுடன் ஜனாதிபதியை சந்தித்திருந்தால் அது அரசாங்கத்தின் பொறுப்பையும் முன்மாதிரியையும் நிரூபிக்குமாறு கேட்கின்ற சவாலை விடுவதாய் இருந்திருக்கும். ஆனால் கூட்டமைப்பினருக்கு மக்கள் உரிமை பற்றி எந்தக்கவலையும் கிடையாது. அவர்களின் கவலை எல்லாம் தலைவரின் உயிரைக் காப்பற்றுவதில் மட்டுமே தங்கியுள்ளது. யுத்தத்தை நிறுத்தினால் மட்டுமே பேசத் தயார் என்ற நிபந்தனை விதித்துள்ள கூட்டமைப்பினர் புலிகளை ஆயுதங்களை கீழே வையுங்கள் நாங்கள் பேச்சுவார்த்தைக்கு போகிறோம். என்று அறிக்கை விடத்தயாரா? அல்லது குறைந்த பட்சம் மக்களின் அழிவைத் தடுக்கவே யுத்தத்தை நிறுத்தக் கோருகிறோம் என்பது உண்மையானால் புலிகளின் பிடியில் உள்ள மக்களை விடுவிக்கச் சொல்லி ஏன் இவர்கள் இன்னும் அறிக்கை விடவில்லை. மக்களைப்பற்றி அல்ல இவர்களின் கவலை பிரபாகரனின் உயிருக்கு எந்தநேரமும் ஆபத்து வரலாம் என்பதே இவர்களைப் பீடித்துள்ள இன்றைய கவலையாகும். அக்கிரமக் காரர்கள் அழிந்து போகக் கூடாது என்பதே கூட்டமைப்பினரின் கவலை. இதுதான் தமிழரசுக் கட்சியின் பழக்கதோசம், பாரம்பரியம். இப்படித்தான் மிதவாத அரசியலில் முகத்தைக் காட்டிக்கொண்டு வன்முறைகளை ஆதரிப்பது அவர்களது வழக்கம். எதிர்ப்பது ஒன்றின் ஊடாகவே தமது இருப்பை உறுதிப்படுத்திக் கொள்வதுதான் தமிழ்த் தலைவர்களின் பாரம்பரியம். ஏனென்றால் இன்று நேற்றல்ல என்றுமே தாம் என்ன கொள்கையில் இயங்குகின்றோம், எதைக் கோருகின்றோம் என்பதில் தெளிவான பார்வை எப்போதுமே இருந்ததில்லை. தமிழரசுக்கட்சி என்ற தமிழிலும் பெடரல் பாட்டி என்று பெயர் வைத்துக்கொண்டு இயங்கி பச்சோந்தி பரம்பரையில் வந்தவர் சம்பந்தன். தமிழீழப் பிரகடனம் செய்துவிட்டு பாராளுமன்றத்து கதிரைகளை அலங்கரித்தவர்கள் அவர்கள். இளைஞர்களை உருவேற்றி ஆயுதப்போராட்டத்தை வழிநடாத்தி இன்று இத்தனை அவலங்களுக்கும் காரணமானவர்கள் இந்த தமிழருசுக் கட்சியினர். இறுதியாகக் கிடைத்த சந்தர்ப்பத்தையும் நழுவவிட்டு விட்டு என்ன செய்யப்போகிறார்கள். பாவம் மக்களும் தலைவர் உள்ளே விட்டடிப்பார், உள்ளே விட்டடிப்பார் என்று காத்துக்கிடந்து ஏமாந்து போனார்கள். இன்னுமொருமுறை தலைவர் விட்டாலும் சம்பந்தன் விடமாட்டார் பாருங்கோவன் என்று காத்துக்கிடக்கட்டும்.


»»  (மேலும்)

இந்தோனேஷியாவில் அணை உடைந்ததில் 50 பேர் பலி; 100க்கு மேற்பட்ட வீடுகளுக்கு சேதம்


இந்தோனேஷியாவில் அணை ஒன்று உடைந்து அதிலிருந்து தண்ணீர் சீறிப் பாய்ந்து சென்றதில் 50 பேர் உயிரிழந்தனர். மேலும் நூற்றுக்கணக்கான வீடுகள் தண்ணீரில் அடித்துச் செல்லப்பட்டன.
இந்தோனேஷியா தலைநகர் ஜகார்த்தாவுக்கு அருகே பழமையான அணை ஒன்று உள்ளது. இப் பகுதியில் இடைவிடாத அடைமழை பெய்ததைத் தொடர்ந்து அந்த அணை உள்ளூர் நேரப்படி நேற்று அதிகாலை 2 மணி அளவில் திடீரென உடைந்து அதிலிருந்த தண்ணீர் 3 மீட்டர் உயரத்துக்கும் கூடுதலாக அருகாமையில் இருந்த குடியிருப்புப் பகுதிகளில் சீறிப் பாய்ந்தது.
இதனால் அங்கிருந்த நூற்றுக்கணக்கான வீடுகள் தண்ணீரில் அடித்துச் செல்லப்பட்டன. அத்துடன் ஏராளமான வீடுகளும், கட்டிடங்க ளும் தண்ணீரில் மூழ்கின.
இதில் 50 பேர் பலியாகிவிட்டனர். மேலும் 100க்கும் மேற்பட்டோரை காணவில்லை என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.
பலரை காணவில்லை என்பதாலும் ஏராள மான வீடுகள் தண்ணீரில் மூழ்கி இருப்பதாலும் சாவு எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் என அஞ்சப்படுகிறது. அணைக்கு அருகில் உள்ள பகுதி எங்கும் வெள்ளக்காடாக காட்சி அளிப் பதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
பாய்ந்தோடும் வெள்ளத்தில் உயிரிழந்த மனிதர்களின் உடல்களும் வீடுகளிலிருந்து அடி த்து வரப்பட்ட மேசை, நாற்காலிகள் மற்றும் இதர பொருட்களும் மிதந்தன. மீட்புக்குழுவி னர் படகுகளில் சென்று முழு வீச்சில் மீட்புப் பணியில் ஈடுபட்டு வருகின்றன.
இதேவேளை பாதிக்கப்பட்ட மக்களின் சுகா தார வசதியைக் கவனிக்க சகாதார அமைச்சு நட வடிக்கை மேற்கொண்டு வருவதாக அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.»»  (மேலும்)

மட்டக்களப்பு மாவட்ட அபிவிருத்தி குழுக் கூட்டம்

மட்டக்களப்பு மாவட்ட அபிவிருத்திக் குழுக் கூட்டம் நாளை மறுதினம் திங்கட்கிழமை (30) காலை 9 மணியளவில் மட்டக்களப்பு மாவட்ட செயலக மண்டபத்தில் நடைபெறவுள்ளது.
மாவட்ட அபிவிருத்திக் குழுத் தலைவர் அமைச்சர் எம். எஸ். எஸ். அமீர் அலி தலைமையில் நடைபெற உள்ள இக் கூட்டத்தில் முதலமைச்சர் சிவனேசதுரை சந்திரகாந்தன், பாராளுமன்ற உறுப்பினர்கள், மாகாண சபை உறுப்பினர்கள், உள்ளூர் திணைக்களத் தலைவர்கள் ஆகியோரும் கலந்து கொள்ளவுள்ளனர்.
மட்டக்களப்பு மாவட்டத்தின் 14 பிரதேச செயலகப் பிரிவுகளிலும் இந்த வருடத்தில் முன்னெடுக்கப்படவுள்ள பல்வேறு துறை சார்ந்த அபிவிருத்தி நடவடிக்கைகள் தொடர்பாக இக் கூட்டத்தில் விரிவாக ஆராயப்பட உள்ளது.
வெளிநாட்டு நிதி நிறுவனங்கள், அரச சார்பற்ற தன்னார்வத் தொண்டர் அமைப்புக்கள், மற்றும் கருத்திட்ட அமைப்புக்கள் என்பவற்றின் மூலமாக ஏற்கனவே மேற்கொள்ளப்பட்டு வரும் வேலைத் திட்டங்களின் முன்னேற்றம் பற்றியும், புதிய திட்டங்களை ஆரம்பித்து அமுல்படுத்துவது தொடர்பாகவும் இக் கூட்டத்தில் விசேட கவனம் செலுத்தப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.»»  (மேலும்)

கிழக்கு மாகாணத்தில் இன நல்லுறவு மேலோங்கியுள்ளது.
முஸ்லிம்கள், தங்கள் தேவைகளையும், குறைபாடுகளையும் நிவர்த்தி செய்து கொள்ளுவதற்காக ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் அமோக வெற்றியில் பங்காளர்களாக ஆகிவிட வேண்டும் என்று முன்னாள் எம்.பியும், ஜனாதிபதி சட்டத்தரணியுமான எம்.எம். ஸ¤ஹைர் தெரிவித்துள்ளார்.
அதேநேரம் தூரநோக்கற்ற தலைவர்களைக் கொண்டிருக்கும் கட்சிகளுக்கு வாக்களிப்பதால் முஸ்லிம்களுக்கு எந்த நன்மையுமே கிடைக்கப் போவதில்லை. அவர்கள் தொடர்ந்தும் எதிரணியில் இருப்பவர்களே என்றும் அவர் குறிப்பிட்டிருக்கிறார்.
மேல் மாகாண சபைத் தேர்தல் தொடர்பாக விடுத்திருக்கும் அறிக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு சுட்டிக்காட்டியுள்ளார்.
அந்த அறிக்கையில் அவர் மேலும் குறிப்பிட்டிருப்பதாவது, ஏற்கனவே நடந்து முடிந்துள்ள மாகாண சபைத் தேர்தல்களைப் போன்று மேல் மாகாண சபைத் தேர்தலிலும் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தலைமையிலான ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியே அமோக வெற்றிபெற்று ஆட்சி அமைக்கும். இதில் ஐயமில்லை.
இந்நாட்டுக்கு இரு தசாப்தங்களுக்கும் மேலாக பெரும் தலையிடியாக இருந்த பயங்கரவாதப் பிரச்சினையை முடிவுக்குக் கொண்டு வருவதற்கு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ சரியான தலைமைத்துவத்தையும், வழிகாட்டலையும் வழங்கி வருகின்றார். இதன் பயனாக கிழக்கு மாகாணம் ஏற்கனவே விடுவிக்கப்பட்டிருக்கிறது. அங்கு ஜனநாயக கூட்டமைப்புக்கள் மீள ஏற்படுத்தப்பட்டிருக்கின்றன. மக்கள் அச்சம், பீதியின்றி நடமாடும் சூழல் உருவாக்கப்பட்டிருக்கிறது. இதே நிலமை வட மாகாணத்திலும் ஏற்படுத்தப்படும்.
நாட்டினதும், நாட்டு மக்களினதும் நன்மைகளைக் கருத்திற் கொண்டு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ முன்னெடுத்துவரும் நடவடிக்கைகளுக்கு பெரும்பான்மை சிங்கள மக்கள் முழுமையான ஆதரவை நல்குகின்றார்கள். கடந்த மாகாண சபைகளின் தேர்தல் முடிவுகளை எடுத்துப் பார்த்தால் ஐ.ம.சு.முன்னணியின் வெற்றியில் ஐக்கிய தேசியக் கட்சியின் பரம்பரை சிங்கள வாக்காளர்களும் பங்காளர்களாகி இருப்பதை அவதானிக்கலாம்.
பயங்கரவாதத்தின் பிடியிலிருந்து நாட்டை மீட்டெடுக்கவென ஜனாதிபதி அர்ப்பணிப்புடன் மேற்கொண்டு வரும் வேலைத்திட்டங்களைக் கெளரவிக்கும் வகையிலும், நன்றி செலுத்தும் வகையிலுமே அவர்கள் ஐ.ம.சு. முன்னணியை அமோக வெற்றி பெறச் செய்கின்றனர். இது மறுக்க முடியாத உண்மையாகும்.
இதேநேரம் இந்நாட்டில் இன வன்முறைகள் ஏற்பட்ட ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் முஸ்லிம்களுக்குப் பாதுகாப்பு வழங்கியவர்கள் முப்படையினர்தான். அதேபோல் வடக்கு, கிழக்கு மாகாணங்களில் ஏனைய சமூகத்தவரைப் போன்று முஸ்லிம்களும் அச்சம் பீதியின்றி நிம்மதியாக வாழக்கூடிய சூழலை ஏற்படுத்தி கொடுத்திருப்பவர்களும் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தலைமை தாங்கும் முப்படையினரே ஆவர். பயங்கரவாதிகளால் வெளியேற்றப்பட்ட மூதூர் முஸ்லிம்கள் ஒரு மாதகாலத்திற்குள் மீளக்குடியமர்த்தப்பட்டார்கள். இருபது வருடங்களுக்கும் மேலாகத் தங்களது சொந்த விவசாய நிலங்களுக்கு செல்ல முடியாதிருந்த முஸ்லிம்கள் இப்போது அச்சம், பீதியின்றி செல்லும் நிலமை ஏற்பட்டுள்ளது.

»»  (மேலும்)

3/27/2009

பிரான்ஸ் செனட் சபையின் உள்ளும் புலிகளின் அட்டகாசம்.


தமிழர்கள் வெட்கித் தலைகுனியவேண்டிய நிகழ்வு.பிரான்சின் செனட் சபை பலநூறு கால வரலாற்றுப்பெருமை கொண்டது. சுதந்திரம், சமத்துவம், சகோதரத்துவம் எனும் பண்பாட்டின் பிறப்பிடமான பிரன்சு நாட்டின் மூத்த பிரஜைகளால் அலங்கரிக்கப்படுவது இந்த செனட் சபையாகும். புத்திஜீவிகள், அனுபவசாலிகள், சமூகத்தின் மதிப்புக்குரிய தலைவர்கள் என்ற வரிசையில் உள்ளவர்களை கொண்டமைந்தது இந்த சபை. இந்த செனட்டர்கள் தென்னாசியப் பிராந்தியத்தில் இன்று யுத்தகளங்களாகவும், யுத்தத்தை எதிர்கொள்ளும் தேசங்களாகவும் காணப்படுகின்ற நாடுகள் பற்றிய புரிதல்களை ஏற்படுத்திக்கொள்ளும் நோக்குடன் அண்மையில் சில முயற்சிகளில் இறங்கியிருந்தனர். அதன் அடிப்படையில் தென்னாசியாவில் இன, சமூக, பொருளாதார முரண்பாடுகளை களைந்து சமாதானத்தை உருவாக்க முயலும் வகையில் பிரச்சனைப்பாடுகளின் மூலங்களை அறிந்துகொள்ள பசுமைக் கட்சிசார்ந்த செனட்டர்கள் இணைந்து அண்மையில் ஒரு கருத்தரங்கினை ஒழுங்கு செய்திருந்தனர். அதனடிப்படையில் கடந்த 24 ம் திகதி செவ்வாய் அன்று தென்னாசியாவில் யுத்த அபாயங்களை கொண்ட நாடுகள் எனும் வகையில் ஈரான், ஆப்கானிஸ்தான், பாகிஸ்தான், இந்தியா மற்றும் இலங்கை போன்ற நாடுகள் பற்றிய அமர்வுகளைக் கொண்ட ஒரு முழுநாள் கருத்தரங்கை நடாத்த முனைந்தனர். இந்த கருத்தரங்கு பாரிஸ் நகர மையத்தில் அமைந்துள்ள செனட்சபை வளாகத்தினுள் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. பரிஸ் செனட்டரான துநயn னுநளநளளயசனஇ பிரான்சின் ஓத் ரென் பிரதேச செனட்டரான துயஉஙரநள ஆரடடநச போன்றோர் தலைமையில் அமர்வுகள் ஆரம்பிக்கப்பட்டன. இலங்கைப் பிரச்சனை பற்றி உரையாற்ற மூவர் தெரிவுசெய்யப்பட்டிருந்தனர். இலங்கையில் இன சமூக முரண்பாடுகள் பற்றிய எழுத்து கள ஆய்வுப் பணிகளில் அடையாளப்படுத்தப்பட்ட இருவர் இதில் அடங்கியிருந்தனர். ஒருவர் பிரன்சு நாட்டின் பிரஜையான பேராசிரியர் எரிக் மேயர் என்பவராகும். மற்றயவர் தமிழ் சூழலில் ஜனநாயக மாற்றுக்கருத்தாளர்களில் அறியப்பட்ட எம்.ஆர்.ஸ்ராலினாகும். மூன்றாமவராக இலங்கையின் பிரன்சு நாட்டுக்கான தூதுவர் லியனல் பெர்னாண்டோ அவர்களும் அழைக்கப்பட்டிருந்தார். இந்த அமர்வில் பார்வையாளர்கள் வரிசையில் பல செனட்டர்கள், மனிதஉரிமைவாதிகள், எழுத்தாளர்கள், பல்கலைக்கழக மாணவர்கள் மற்றும் பத்திரிகையாளர்கள் என்று தேர்ந்தெடுக்கப்;பட்ட சுமார் 75 பேர் வரையானோர் மட்டுமே அனுமதிக்கப்பட்டிருந்தனர். இந்த நிகழ்வுகளில் காலை இடம் பெற்ற ஈரான், ஆப்கானிஸ்தான், பாகிஸ்தான் போன்ற நாடுகளின் அமர்வுகள் மிக அமைதியாகவும் கண்ணியமாகவும் நடந்தேறின. கருத்தாளர்கள் உரையாற்றி முடிந்ததும் பார்வையாளர்களின் வரிசையில் இருந்தோர் கேள்விகள் கேட்பதற்கும் தமது எதிர்க்கருத்துகளை சொல்வதற்கும் போதிய நேரமும் வழங்கப்பட்டது. பிற்பகல் 1.30 மணிக்கு இலங்கை மற்றும் இந்தியா பற்றிய அமர்வுகள் ஆரம்பமாயின. உலகில் எந்த மூலையில் இலங்கை பிரச்சனை பற்றிய மாநாடுகள், கருத்தரங்குகள், ஆயுவுகள், விவாதங்கள் என்ற எது இடம் பெற்றாலும் அங்கு தமிழ் மக்களின் சார்பில் கருத்துத் தெரிவிப்பவர்களாக புலிகள் மட்டுமே இடம் பிடித்துக்கொண்டிருக்கின்றனர். இந்த நிலையில் பிரான்ஸ் நாட்டு செனட் சபையில் புலிகள் அல்லாத ஒருவர் இலங்கை தமிழ் மக்களின் பிரச்சனை குறித்து உரையாற்ற அழைக்கப்பட்டிருந்தமையை புலிகளால் பொறுத்துக்கொள்ள முடியவில்லை. இதனால் பத்திரிகையாளர்கள் என்றோ, மனித உரிமை அமைப்புகள், இளையோர் அமைப்புகள் என்றோ தமக்கென புலிகள் உருவாக்கி வைத்திருக்கும் பினாமி முகவரிகள் ஊடாக சுமார் 15 புலிகள் பர்வையாளர் வரிசைகளில் இடம் பிடித்துக்கொண்டனர். எம்.ஆர்.ஸ்ராலினுடைய உரை ஆரம்பமாகி சுமார் 3 நிமிடங்கள் கூட சென்றிராத நிலையில் அந்த அமைதியான மண்டபத்தில் குறுக்கீடுகளும் கூச்சல்களும் எழுப்பப்பட்டன. நன்கு திட்டமிடப்பட்ட வகையில் காட்டுக்கூச்சல் எழுப்பிய புலிகள் ஸ்ராலினின் உரையை தொடரவிடாது தடுக்கமுயன்றனர். இலங்கை அரசுக்கெதிராகவும், புலிகளுக்காதரவாகவும் இவர்களது கோசங்கள் ஒலித்தது. செனட் வளாக அமைதி புலிகளால் சீர் குலைக்கப்பட்டது. பார்வையாளர் வரிசையில் இருந்த பல பிரமுகர்கள் எழும்பி “வெட்கம், வெட்கம், இப்படியா இலங்கைத் தமிழர்கள் நடந்துகொள்வார்கள்” என்று வினா எழுப்பியும் புலிகள் தமது காட்டுத்தர்பாரை நிறுத்தவில்லை. இறுதியில் பல பார்வையாளர்கள் எழுந்து மண்டபத்தை விட்டு வெளியேற முனைந்தனர். அவை நடத்துனர்களின் அறிவுறுத்தல்களை கிஞ்சித்தேனும் மதியாத புலிப்பினாமிகளின் அநாகரிகமான செயற்பாடுகளினால் இலங்கை பிரச்சனை பற்றிய அமர்வுகள் நிறுத்தப்பட்டு நிகழ்சி நிரல் இந்திய பற்றிய தலைப்புக்கு மாற்றப்பட்டது. ஒரு மூத்த செனட் உறுப்பினர் “இலங்கைத் தமிழர் பிரச்சனையை உலகம் ஏன் இதுவரை புரிந்துகொள்ள வில்லை என்பதை நான் இப்போது புரிந்துகொண்டேன்.” என கூறிக்கொண்டு சபையை விட்டு வெளியேறிச் சென்றார்.


»»  (மேலும்)

நூல்கள் அன்பளிப்பு


கொழும்பு பல்கலைக்கழகத்தின் மனித உரிமைகளுக்கான கற்கை நிலையத்தினால் கிழக்கு ஊடக இல்ல நூலகத்திற்கென பெருந் தொகையான நூல்கள் அன்பளிப்புச் செய்யப்பட்டுள்ளன.அம்பாறை மாவட்ட ஊடகவியலாளர்களுக்கான மனித உரிமைகள் சம்பந்தமான கலந்துரையாடலொன்று அண்மையில் சாய்ந்தமருது பரடைஸ் வரவேற்பு மண்டபத்தில் நடைபெற்ற போது கொழும்பு பல்கலைக்கழகத்தின் மனித உரிமைகள் கற்கை நிலையத்தின் தமிழ் மொழி மூல ஒருங்கிணைப்பா ளர் சட்டத்தரணி ரஜந்தினி சிவகுமார் இந்த நூல்களை கையளித்தார்
»»  (மேலும்)

கிழக்கு மாகாண விளையாட்டு விழாவை நான்கு கட்டமாக நடத்தத் திட்டம்

கிழக்கு மாகாண பாடசாலைகளுக்கிடையிலான 2009 ஆம் ஆண்டிற்கான மாகாண மட்ட விளையாட்டுப் போட்டிகளை நான்கு கட்டங்களாக நடத்துவதற்கு மாகாணக் கல்வித் திணைக்களம் தீர்மானித்துள்ளது. எதிர்வரும் மே மாதம் 21 ஆம் திகதி தொடக்கம் ஜுன் மாதம் 07 ஆம் திகதிவரை அம்பாறை, கல்முனை, மட்டக்களப்பு, மற்றும் திருகோணமலை ஆகிய இடங்களில் போட்டி நிகழ்ச்சிகள் நடத்தப்படவுள்ளன.
கபடி, கரப்பந்து, மற்றும் எல்லே ஆகிய போட்டிகள் அம்பாறையிலும், பூப்பந்தாட்டம், மேசைப்பந்தாட்டம், சதுரங்கம் ஆகிய போட்டிகள் கல்முனையிலும் நடத்தப்படவுள்ளன.
கூடைப்பந்தாட்டம், கிரிக்கெட் மற்றும் வலைப்பந்தாட்டம் ஆகிய போட்டிகள் மட்டக்களப்பிலும், உதைபந்து, உடற்பயிற்சி மற்றும் மைதான சுவட்டு திகழ்ச்சிகள் திருகோணமலையிலும் நடைபெறவுள்ளதாக மாகாணக் கல்வித் திணைக்களம் அறிவித்துள்ளது. இதேவேளை, மட்டக்களப்பு மாவட்டத்தில் மாகாண மட்டத்திலான விளையாட்டுப் போட்டி நிகழ்ச்சிகளை நடத்துவது தொடர்பான திட்டமிடல் கூட்டம் எதிர்வரும் 08 ஆம் திகதி மட்டக்களப்பு மத்தி வலயக் கல்வி அலுவலகத்தில் நடைபெறவுள்ளது.


»»  (மேலும்)

3/26/2009

சேருநுவரயில்


கந்தளாய், சேருநுவர, தெஹிவத்த என்ற இடத்தில் இனந்தெரியாத ஆயுததாரிகள் நடத்திய துப்பாக்கிப் பிரயோகத்தில் ஐவர் கொல்லப்பட்டுள்ளதுடன் மேலும் இருவர் படுகாயமடைந்துள்ளனர்.
கந்தளாய், சேருநுவர, தெஹிவத்த சமகிபுர கிராமத்தில் நேற்று முன்தினம் இரவு 9.00 மணிக்கும் 11.00 மணிக்கும் இடையில் இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளதாக பொலிஸ் ஊடக பேச்சாளர், சிரேஷ்ட பொலிஸ் அத்தி யட்சகர் ரஞ்சித் குணசேகர தெரிவித்தார்.
தெஹிவத்த கிராமத்தை அண்டிய காட்டுப் பகுதியில் ஊடுருவியுள்ள புலிகளே அப்பாவி விவசாயிகளை இலக்கு வைத்து இந்த துப்பாக்கிப் பிரயோகத்தை மேற்கொண்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.கந்தளாய், சேருநுவர, தெஹிவத்த என்ற இடத்தில் இனந்தெரியாத ஆயுததாரிகள் நடத்திய துப்பாக்கிப் பிரயோகத்தில் ஐவர் கொல்லப்பட்டுள்ளதுடன் மேலும் இருவர் படுகாயமடைந்துள்ளனர்.

கந்தளாய், சேருநுவர, தெஹிவத்த சமகிபுர கிராமத்தில் நேற்று முன்தினம் இரவு 9.00 மணிக்கும் 11.00 மணிக்கும் இடையில் இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளதாக பொலிஸ் ஊடக பேச்சாளர், சிரேஷ்ட பொலிஸ் அத்தி யட்சகர் ரஞ்சித் குணசேகர தெரிவித்தார்.

தெஹிவத்த கிராமத்தை அண்டிய காட்டுப் பகுதியில் ஊடுருவியுள்ள புலிகளே அப்பாவி விவசாயிகளை இலக்கு வைத்து இந்த துப்பாக்கிப் பிரயோகத்தை மேற்கொண்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.

விவசாயத் தொழிலில் ஈடுபட்டு வந்த இவர்கள் இரவு நேரத்தில் தங்களது வயல்களை பாதுகாக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த வேளையிலேயே இந்தக் கொடூரத் சம்பவம் இடம்பெற்று ள்ளது.

அந்தப் பிரதேசத்திற்கு வந்துள்ள ஆயுததாரிகள் ஐந்து விவசாயிகளினதும் இரு கைகளையும் பின்புறமாகக் கட்டிவிட்டு அவர்களை முழங்காலில் அமரச் செய்த நிலையிலே தலையில் சுட்டுள்ளனர் என்று ஆரம்ப விசாரணைகளிலிருந்து தெரிய வந்துள்ளதாக எஸ். எஸ். பி. மேலும் தெரிவித்தார்.

ரி-56 ரக துப்பாக்கியை பயன்படுத்தி மிகவும் அருகி லிருந்து அவர்கள் துப்பாக்கிப் பிரயோகத்தை மேற் கொண்டுள்ளனர் என்றும் அவர் குறிப்பிட்டார்.

இந்தச் சம்பவத்தில் காயமடைந்த மேலும் இரு விவசாயிகள் கந்தளாய் வைத்தியசாலையில் அனுமதிக்கப் பட்டுள்ளனர். இவர்களுக்கு தீவிர சிகிச்சை மேற் கொள்ளப்பட்டு வருகின்றது. எம்.ஜி. நிஹால் சரத், டபிள்யூ. வீரதாச, டபிள்யூ. எச். சுனில், டபிள்யூ. எச். சுகத பால, கருணாதாஸ ஆகிய ஐவருமே உயிரிழந்தவர்கள் ஆவர். பிரபாத் சிந்தக, ஜகத் குமார ஆகிய இருவருமே இந்தச் சம்பவத்தில் காயமடைந்துள்ளனர் என்றும் பொலிஸ் ஊடக பேச்சாளர் தெரிவித்தார்.

சம்பவம் இடம்பெற்ற இடத்தைச் சுற்றி இராணுவத் தினரும் பொலிஸாரும் தேடுதல் நடவடிக்கையில் ஈடுபட்டு வருவதுடன் இது சம்பந்தமாக சேருநுவர பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.விவசாயத் தொழிலில் ஈடுபட்டு வந்த இவர்கள் இரவு நேரத்தில் தங்களது வயல்களை பாதுகாக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த வேளையிலேயே இந்தக் கொடூரத் சம்பவம் இடம்பெற்று ள்ளது.
அந்தப் பிரதேசத்திற்கு வந்துள்ள ஆயுததாரிகள் ஐந்து விவசாயிகளினதும் இரு கைகளையும் பின்புறமாகக் கட்டிவிட்டு அவர்களை முழங்காலில் அமரச் செய்த நிலையிலே தலையில் சுட்டுள்ளனர் என்று ஆரம்ப விசாரணைகளிலிருந்து தெரிய வந்துள்ளதாக எஸ். எஸ். பி. மேலும் தெரிவித்தார்.
ரி-56 ரக துப்பாக்கியை பயன்படுத்தி மிகவும் அருகி லிருந்து அவர்கள் துப்பாக்கிப் பிரயோகத்தை மேற் கொண்டுள்ளனர் என்றும் அவர் குறிப்பிட்டார்.
இந்தச் சம்பவத்தில் காயமடைந்த மேலும் இரு விவசாயிகள் கந்தளாய் வைத்தியசாலையில் அனுமதிக்கப் பட்டுள்ளனர். இவர்களுக்கு தீவிர சிகிச்சை மேற் கொள்ளப்பட்டு வருகின்றது. எம்.ஜி. நிஹால் சரத், டபிள்யூ. வீரதாச, டபிள்யூ. எச். சுனில், டபிள்யூ. எச். சுகத பால, கருணாதாஸ ஆகிய ஐவருமே உயிரிழந்தவர்கள் ஆவர். பிரபாத் சிந்தக, ஜகத் குமார ஆகிய இருவருமே இந்தச் சம்பவத்தில் காயமடைந்துள்ளனர் என்றும் பொலிஸ் ஊடக பேச்சாளர் தெரிவித்தார்.
சம்பவம் இடம்பெற்ற இடத்தைச் சுற்றி இராணுவத் தினரும் பொலிஸாரும் தேடுதல் நடவடிக்கையில் ஈடுபட்டு வருவதுடன் இது சம்பந்தமாக சேருநுவர பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.»»  (மேலும்)

கிழக்கு மீள்குடியேற்றப் பகுதி கிராமங்களில் வீதிகள் அபிவிருத்தி

கிழக்கு மாகாணத்தின் மீள் குடியேற்றக் கிராமங்களி லுள்ள வீதிகளை துரிதகெதியில் புனர்நிர்மாணம் செய் வதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகி றது. இதன் பொருட்டு வீதி அபிவிருத்தி அதிகார சபையினதும், அவ்வப் பிரதேசத்தின் உள்ளூராட்சி சபைகளினதும் வாகனங்கள் பயன்படுத்தப்படவிருப்பதுடன் பொதுமக்களின் சிரமதான அடிப்படையிலான பணிகளும் பெற்றுக்கொள்ளப்படவிருப்பதாக கிழக்கு மாகாண வீதி அபிவிருத்தி வீடமைப்பு கிராமிய மின்சாரம் மற்றும் நீர்வழங்கல் அமைச்சர் எம். எஸ். உதுமாலெவ்வை தெரிவித்தார்.
வன்செயல் செயற்பாடுகள் மற்றும் போர்ச் சூழல் நிலைமைகளினால் பாதிக்கப்பட்டு சுமார் 25 வருடங் களுக்கு மேலாக புனர்நிர்மாணம் செய்யப்படாம லிருக்கும் வீதிகளை திருத்தியமைக்கும் செயற்திட்டம் தொடர்பில் ஊடகவியலாளர்களுக்கு விளக்கமளிக்கும் வைபவத்தில் அமைச்சர் பேசினார்.
வைபவம் ஏறாவூர் புன்னைக்குடா வீதியிலுள்ள தேசிய காங்கிரஸ் பணிமனையில் கட்சியின் அமைப்பாளர் கே. எல். அக்கில் அர்ஷாத் தலைமையில் நடைபெற்றது. (ஐ-ந)


»»  (மேலும்)

பொட்டு அம்மானின் அதிநவீன வசிப்பிடம் படையினரிடம்


புதுக்குடியிருப்பு, இரணைப்பாளை பிரதேசத்தில் அமைக்கப்பட்டிருந்த புலிகளின் புலனாய்வுத் துறை தலைவர் பொட்டு அம்மானின் பிரதான இரு ப்பிடத்தை பாதுகாப்புப் படையினர் கைப்பற்றியுள் ளனர்.
இரணைப்பாலையின் தென்பகுதியில் பாரிய தேடு தல்களை மேற்கொண்ட இராணுவத்தின் 58வது படைப் பிரிவினர் இந்த பாதுகாப்பு இல்லத்தை கைப்பற்றியுள்ளதாக இரா ணுவப் பேச்சாளர் பிரிகே டியர் உதய நாணயக்கார தெரிவித்தார். பொட்டு அம் மான் மற்றும் கபில் அம்மான் என்ற புலிகளின் மிக முக்கியஸ்தர்கள் இருவருமே இந்த பாதுகாப்பு இல்லத்தை பயன்படுத்தி யுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.
இந்த இல்லத்திலிருந்தே இவர்கள் பயங்கரவாத நடவடிக்கைகளையும் திட்டங்களையும் தீட்டியுள்ளனர்.
புலிகளின் அதி உயர் பாதுகாப்பு வலயமான இரணைப் பாலை பிரதேசத்திலேயே பொட்டு அம்மானின் இந்த பாதுகாப்பு இல்லம் அமைக்கப்பட்டுள்ளது.
இந்த இல்லத்தை முழுமையாக பாதுகாக்கும் வகையில் புலிகள் பாரிய மண் மூட்டைகளால் மறைத்துள்ளனர். இந்த வீட்டை சுற்றியும் பாரிய பாதுகாப்பு அரண்கள் அமைக்கப்பட்டுள்ளன.
இராணுவத்தின் 58வது படைப் பிரிவின் கட்டளைத் தளபதி பிரிகேடியர் சவேந்திர சில்வா தலைமையிலான படையினர் மேற்கொண்ட இந்த பாரிய தேடுதலின்போது அந்த பாதுகாப்பு இல்லத்தை அண்மித்த பகுதியிலிருந்து ஜீப் வண்டி ஒன்றையும் கண்டெடுத்துள்ளனர்.
பொட்டு அம்மானே இந்த ஜீப் வண்டியை பயன் படுத்தியுள்ளதாக பாதுகாப்பு வட்டாரங்கள் தெரி விக்கின்றன.
இதேவேளை பெரும் எண்ணிக்கையிலான மிதிவெடி களையும் இராணுவத்தினர் இந்தப் பிரதேசத்திலிருந்து கண்டெடுத்துள்ளனர் என்றும் பிரிகேடியர் தெரிவித்தார்.
புலிகளின் அதி உயர் பாதுகாப்பு பிரதேசமான இரணைப்பாலையிலிருந்து புலிகளின் மேலும் பல முக்கிய உபகரணம் இருக்கக்கூடும் என்ற அடிப்படையில் படையினர் தொடர்ந்தும் தேடுதல்களை மேற்கொண்டு வருவதாக அவர் மேலும் சுட்டிக்காட்டினார்.»»  (மேலும்)

3/23/2009

ரணிலுக்கு எதிரானதைப் போன்ற நடவடிக்கையை மு.காவும் பின்பற்றட்டும்!


ரணில் விக்ரமசிங்கவின் தலைமையை மாற்ற முன்வந்துள்ள அக்கட்சி செயற் குழுவினரின் துணிச்சலை நாம் பாராட்டு வதோடு இது போன்ற துணிவு சமூகப் பற்றற்ற ரவூப் ஹக்கீமின் தலைமையையும் மாற்ற முஸ்லிம் காங்கிரஸ் அங்கத்த வர்களுக்கும் ஏற்பட வேண் டும் என உலமா கட்சி தலை வர் மெளலவி முபாறக் அப் துல் மஜீத் தெரிவித்துள்ளார்.

கல்முனை கட்சிக் காரியாலயத்தில் இடம்பெற்ற உலமாக்களுடனான கூட்டத்தில் உரையாற்றும் போதே மேற்கண்டவாறு குறிப்பிட்டார். தொடர்ந்து உரையாற்றிய அவர்,
ஐ. தே. க. என்ற வண்டியின் சாரதியாக ரணில் இருக்கும் வரை அதில் நான் ஒரு போதும் ஏற மாட்டேன் என அன்று தலைவர் அஷ்ரப் கூறியதை மு. காவின் தலைமையும் அதன் உறுப்பினர்களும் உதாசீனம் செய்த போதும் இன்று அக்கருத்தை ஐ. தே. கவின் செயற் குழு உறுப்பினர்கள் ஏற்று செயற்படுத்த முன்வந்துள்ளமை பாராட்டுக்குரியதாகும்.
இது போன்ற துணிவு மு. காவினருக்கு வருமா என்பது சந்தேகமே. என்றாலும் அத்தகைய துணிவு வந்தால் மட்டுமே அவர்களுக்கு சமூகப்பற்று இருக்கின்றது என்பது தெளிவாகும்.
அத்தகைய துணிவை ஏற்படுத்த வேண்டுமாயின் முஸ்லிம் சமூகமும் ஒன்றுபட்டு மு. காவின் தேர்தல் வேட்பாளர்களை நிராகரிக்க முன்வரவேண்டும்.
எவ்வாறு ஐ. தே. க. ஆதரவாளர்கள் கடந்த தேர்தல்களில் அக்கட்சிக்கு வாக்களிப்பதை தவிர்த்து அதன் செயற் குழுவினருக்கு இத்தகைய தைரியத்தை அளித்தார்களோ அதே போல் முஸ்லிம் சமூகமும் மு. காவுக்கு வாக்களிப்பதை தவிர்த்துக்கொள்வதன் மூலம் அக்கட்சி உயர் உறுப்பினர்களுக்கும் தைரியத்தை வரவழைக்க முடியும்.
இல்லையேல் ரவூப் ஹக்கீமும் அவரை சார்ந்துள்ளோரும் இந்த சமூகத்தை அதளபாதாளத்தில் தான் கொண்டு போய் நிறுத்துவார்கள் என்பதை எச்சரிக்கின்றோம் என்றும் தெரிவித்து ள்ளார்.
»»  (மேலும்)

புலித் தலைமையின் சுயநலமிக்க செயற்பாடே வன்னி மக்களின் இன்றைய நிலைக்கு காரணம்சுயலாபம் கருதிய புலித் தலைமையின் செயற்பாடுகள் தான் இன்று இவ்வாறாதொரு நிலைமை வன்னி மக்களுக்கு ஏற்படக் காரணமென அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.
இன்று ஏற்பட்டிருக்கும் இந் நிலைமையைத் தொடரவிட ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ ஒருபோதும் இடமளிக்கமாட்டார். விரைவில் சொந்த இடங்களில் வன்னி மக்கள் மீளக் குடியமர்த்தப்படும் வரை சகல வசதிகளும் படிப்படியாக மேற்கொள்ளப்படும் என்றும் இவ்விடயங்கள் தொடர்பில் ஜனாதிபதியு டன் விரைவில் கலந்துரையாட இருப்பதா கவும் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார். வவுனியா தமிழ் மத்திய மகாவித்தியாலய நலன்புரி நிலையத்திற்கு நேற்று விஜயம் செய்து அங்கு தற்காலிகமாகத் தங்க வைக்கப்பட்டிருக்கும் மக்கள் மத்தியில் உரையாற்றும் போதே அமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா மேலும் இங்கு உரையாற்றுகையில் தெரிவித்ததாவது,
ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை நம்பி இப்பகுதியில் எப்போது காலடி எடுத்து வைத்தீர்களோ, அந்த நிமிடம் முதல் உங்களது உயிர் வாழும் உரிமையும், பேச்சு உரிமையும் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
இதேபோன்று உங்களுக்கான நடமாடும் உரிமையையும் தொழில் செய்யும் உரிமையையும் நீங்கள் இன்னும் சில காலத்தில் பெற்றுக் கொள்ளலாம். பாதுகாப்பு நிலைமைகள் உறுதி செய்யப்பட்டதன் பின்னர் உங்களுக்கான இயல்பு வாழ்க்கை தானாகவே திரும்பிவிடும்.
இங்கு கருத்து தெரிவித்த, நலன்புரி நிலைய மக்கள், தாங்கள் வன்னியில் இருந்தபோது புலிகள் மேய்ப்பர்களாகவும், தாங்கள் மேய்க்கப்பட்டவர்களாகவும் வாழ வேண்டிய நிர்ப்பந்தத்தில் வாழ்ந்து வந்ததாகவும் எப்போதும் அதிகாரத் தோரணையின் கீழ் புலிகள் தங்களை நடத்தி வந்ததாகவும் கூறினார். இந்நிலையில் மாற்றம் ஏற்படுத்தி தங்களது இயல்பு வாழ்க்கைக்கு ஏற்பாடு செய்து தரும்படி அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவிடம் மக்கள் கோரிக்கையும் விடுத்ததுடன் , அமைச்சர் தங்களுக்கு எப்போதும் உதவியாக இருப்பார் என்பதில் தங்களுக்கு எவ்வித சந்தேகங்களும் இல்லை என்றும் தெரிவித்தனர்.»»  (மேலும்)

இரணைப்பாலை முழுவதும் படையினரின் கட்டுப்பாட்டில்
புலிகளின் முக்கிய தளமாக விளங்கிய புதுக்குடியிருப்பு இரணைப்பாலை முழுவதையும் பாதுகாப்புப் படையினர் கைப்பற்றியுள்ளதாக இராணுவப் பேச்சாளர் பிரிகேடியர் உதய நாணயக்கார நேற்றுத் தெரிவித்தார்.
இரணைப்பாலை கைப்பற்றப்பட்டதன் மூலம் புலிக ளின் புலனாய்வுத்துறை தலைவரின் முக்கிய தளம், அந்தப் பிரதேசத்தில் அமைக்கப்பட்டிருந்த அவர்களது இறுதி பிரதான நடவடிக்கைத் தலைமையகத்தையும் படையினர் பூரண கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வந்துள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.
புலிகளிடம் எஞ்சியுள்ள பிரதேசத்தை முழுமையாக விடுவிக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ள பாதுகாப்புப் படையினர் தற்பொழுது அவர்களை 25 சதுர கிலோ மீற்றர் பரப்புக்குள் வெற்றிகரமாக முடக்கியுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.
புதுக்குடியிருப்பு ஏ-35 வீதியின் ஒன்றரை கிலோ மீற்றருக்கு மேற்பட்ட பிரதேசத்தை தமது பூரண கட்டுப் பாட்டின் கீழ் கொண்டுவந்துள்ள பாதுகாப்புப் படை யினர் தற்பொழுது ஏ-35 பிரதான வீதியூடாகவும் எஞ்சி யுள்ள பிரதேசத்தை நோக்கி முன்னேறி வருவதாகவும் அவர் குறிப்பிட்டார்.
புலிகளின் புலனாய்வுத்துறை தலைவர் பொட்டு அம் மான், கடற் புலிகளின் தலைவர் சூசை ஆகியோர் உட்பட முக்கிய தலைவர்களுக்காக நிர்மாணிக்கப்பட்டிருந்த அதி சொகுசுகளைக் கொண்ட வீடுகள், உட்பட பாதுகாப்பு அரண்களையும் படையினர் இங்கு கைப்பற்றியுள்ளனர். இதற்கமைய இரணைப்பாலை பிரதேசம் முழுவதையும் புலிகள் தங்களது அதி உயர் பாதுகாப்பு வலயங்களில் நன்றாக பயன்படுத்திவந்துள்ளதற்கான சகல தடயங் களும் காணப்படுவதாக வன்னி கள முனையிலுள்ள படை வீரர்கள் சுட்டிக் காட்டியுள்ளனர்.
இரணைப்பாலை பிரதேசத்திலிருந்து செய்மதி தொலைத்தொடர்பு கருவிகள், அதி நவீன தொலைத் தொடர்பு உபகர ணங்கள் உட்பட பல முக்கிய பொருட் களும், அதி சக்தி வாய்ந்த வெடி பொரு ட்கள் மற்றும் ஆயுதங்களையும் கைப்பற்றி யுள்ள படையினர் உழவு இயந்திரம், வான், கப் வண்டி உட்பட ஏழு வாகனங் களை படையினர் இந்த நடவடிக்கையின் போது நிர்மூழமாக்கியுள்ளனர்.
இரணைப்பாலை பிரதேசம் முழுவதையும் நடவடிக்கையின் போது பாதுகாப்புப் படையினர் பலமுனைகளில் நடத்திய தாக்குதல்களில் பெரும் எண்ணிக் கையிலான புலிகள் கொல்லப்பட்டும் படுகாயமடைந்தும் உள்ளதாக இரா ணுவப் பேச்சாளர் மேலும் சுட்டிக் காட்டி னார்.
புலிகளிடம் எஞ்சியுள்ள சிறிய பிர தேசத்தை முற்றாக விடுவிக்கும் இறுதிக் கட்ட நடவடிக்கைகளில் இராணுவத்தின் 53 வது படைப் பிரிவின் கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல் கமல் குணரட்ன, 58 வது படைப் பிரிவின் கட்டளைத் தளபதி பிரிகேடியர் சவேந்திர சில்வா, 55 வது படைப் பிரிவின் கட்டளைத் தளபதி பிரிகேடியர் பிரசன்ன சில்வா ஆகியோர் தலைமையிலான மூன்று படைப் பிரிவுகளும் இராணுவத்தின் எட்டாவது அதிரடிப்படையின் கட்டளைத் தளபதி கேர்ணல் ரவிப்பிரிய தலைமையிலான படையினரும் ஈடுபட்டுள்ளனர் என்றும் பிரிகேடியர் மேலும் தெரிவித்தார்.


»»  (மேலும்)

3/22/2009

சுற்றுலாத் துறை பிரதி அமைச்சர் கிழக்கு மாகாணத்தின் கரையோரப் பிரதேசங்களுக்கு விஜயம்

சுற்றுலாத் துறை பிரதி அமைச்சர் பைசார் முஸ்தபா நேற்றும் இன்றும் கிழக்கு மாகாணத்தின் கரையோரப் பிரதேசங்களுக்கு விஜயம் செய்து அம்மாகாணத்தின் உல்லாசப் பயணத்துறை அபிவிருத்தி குறித்து நேரடியாக ஆராய்ந்துள்ளார்.

நேற்று கிழக்கு மாகாண முதலமைச்சர் சிவனேசதுரை சந்திரகாந்தன் சகிதம் திருகோணமலை மாவட்டம் கன்னியா , மட்டக்களப்;பு மாவட்டம் வாகரை ,பணிச்சங்கேனி ,பாசிக்குடா மற்றும் கல்லடி ஆகிய இடங்களில் உல்லாசப் பயணத்துறை அபிவிருத்திக்கு என அடையாளம் காணப்பட்ட இடங்களை பார்வையிட்டார்.

இன்று அம்பாறை மாவட்டத்திலுள்ள உல்லை மற்றும் அறுகம்பை ஆகிய கடலோர பிரதேசங்களுக்கும் பிரதி அமைச்சரும் மாகாண முதலமைச்சரும் விஜயம் செய்கின்றனர்.

"கிழக்கு மாகாண உல்லாச பயண அபிவிருத்தியில் வெளி நாட்டு மற்றும் வெளி மாவட்ட முதலீட்டாளர்களை ஈடுபடுத்தும் நோக்கம் இல்லை.அம் மாகாணத்தைச் சேர்ந்த முதலீட்டாளர்களை ஈடுபடுத்துவதே அரசாங்கத்தின் நோக்கம்" என்கின்றார் பிரதி அமைச்சர் பைசால் முஸ்தபா.

"தற்போது இம் மாகாணத்தில் அமைதியான சூழ்நிலை ஏற்பட்டுள்ளதால் உல்லாசப் பயணத்துறையை ஊக்குவிக்கக் கூடிய சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.இதற்காகவே பல்வேறு திட்டங்கள் தீட்டப்பட்டுள்ளது.அந்த அந்த மாவட்டங்களைச் சேர்ந்த இளைஞர் மற்றும் யுவதிகளுக்கு வேலை வாய்ப்புகளும் கிடைக்கும் " எனறும் குறிப்பிடுகின்றார்.
»»  (மேலும்)

கிழக்கு பல்கலைக்கழக பெண்கள் விடுதியில் மாணவி தீகுளித்து தற்கொலை

கிழக்கு பல்கலைக்கழகத்தில் பெண்கள் விடுதியில் இன்று காலை முல்லைத்தீவைச் சேர்ந்த மாணவியொருவர் தீக்குளித்து தற்கொலை செய்துள்ளார் முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு முதலாம் வட்டாரத்தைச் சேர்ந்த ரவீந்திரன் சுதர்சனா ( வயது 23 ) என்ற கலைப் பீட மூன்றாம் ஆண்டு மாணவியே இவ்வாறு தற்கொலை செய்துள்ளார். விடுதி குளியல் அறைக்குள் தனக்கு தானே இம் மாணவி தீ மூட்டியமாகவும் ,மாணவியின் அவலக் குரல் கேட்டு அங்கு விரைந்த மாணவர்கள் குளியலறை கதவை உடைத்து உள்ளே நுழைந்து மாணவியை வைத்தியசாலைக்கு எடுத்துச் செல்லும் வழியில் உயிர் பிரிந்து விட்டதாக தெரிவிக்கப்படுகிறது.இப் பல்கலைக்கழக பெண்கள் விடுதியில் கடந்த ஒரு மாத காலத்திற்குள் முல்லைத்தீவைச் சேர்ந்த மாணவி தற்கொலை செய்து கொண்ட இரண்டாவது சம்பவம் இதுவாகும். முல்லைத்தீவிலுள்ள பெற்றோர் மற்றும் உறவினர்களுடனான தொடர்புகள் துண்டிக்கப்பட்ட நிலையில் கடந்த மாதம் 26 ம் திகதி முல்லைத்தீவைச் சேர்ந்த மற்றுமொரு மாணவி தூக்கில் தொங்கி தற்கொலை செய்து கொண்டமை குறிப்பிடத்தக்கது
»»  (மேலும்)

44 வகையான விசேட மருந்துப் பொருட்களுடன் கிறீன் ஓசியன் கப்பல் புதுக்குடியிருப்பு விரைவு

புதுக்குடியிருப்பு, புதுமாத்தளன் பகுதியிலுள்ள மக்களுக்கென 44 வகை யான விசேட மருந்துப் பொருட்களுடன் கிaன் ஓஷியன் கப்பல் நேற்று மாலை புறப்பட்டுச் சென்றதாக அத்தியாவசிய சேவைகள் ஆணையாளர் எஸ். பி. திவாரட்ண தெரிவித்தார்.
எம்பிசிலின் போன்ற என்டி பயோடிக் (நோய் முறிப்பு) மருந்துப் பொரு ட்கள் அடங்கிய பொதிகளுடன் நேற்று புறப்பட்டுச் செல்வதற்கான அனுமதி வழங்கப்பட்டதாகவும் அவர் தெரிவித்தார்.
மருந்துப் பொருட்களை புதுமாத்தளன் பகுதியில் இறக்கிய பின்னர் திரும்பிவரும் கிaன் ஓஷியன் கப்பல் மீண்டும் அடுத்தவாரம் சுமார் 2000 லக்டோஜன் குழந்தை கள் பால்மா, 2000 என்கர் பிளஸ் வன் குழந்தைகள் பால்மா என்பவற்றுடன் மீண் டும் புதுமாத்தளன் பகுதிக்கு கப்பல் புறப்பட்டுச் செல் லும் என்றும் அத்தியாவசிய சேவைகள் ஆணையாளர் எஸ்.பி. திவாரட்ண கூறினார்.
அத்துடன் ஏ-9வீதியூடாக 20 லொறிகளில் பொருட்கள் அனுப்பப்படவுள்ள தாகவும் அத்தியாவசிய சேவைகள் ஆணையாளர் தெரிவித்தார்.
எதிர்வரும் வியாழக்கிழமையன்று கொழும்பு வெலிசரை களஞ்சியசாலையிலி ருந்து 20 லொறிகளும் புறப்படவுள்ளன. அத்தியாவசிய உணவுப் பொருட்கள் அல்லாத கோழித்தீன், மாட் டுத்தீவனம், அடங்கலான சுமார் 300 மெற்றிக் தொன் பொருட்கள் 20 லொறிகளில் கொண்டு செல்லப்படவுள்ளதாகவும் தெரிவித்தார்.
கடந்தமுறை போன்றே யாழ். குடாநாட்டிலிருந்து இறால், கருவாடு, வெங் காயம் போன்ற பொருட்கள் கொழும்புக்கு கொண்டு வரப்படவுள்ளன. இவை யாழ். நாவற்குழி களஞ்சிய சாலையிலிருந்து கொண்டு வரப்படும்.
ஏ-9 வீதியூடாக யாழ். குடாநாட்டுக்கு அத்தியாவசிய பொருட்களை கொண்டு செல்லல் மற்றும் யாழ். உற்பத்திப் பொருட்களை கொண்டுவருதல் போன்ற நடவடிக்கைகளை அரசாங்கம் ஆரம்பித்துள்ளமையையிட்டு யாழ். வர்த்தகர் சங்கம் வெகுவாக பாராட்டியுள்ளதுடன் தொடர்ந்தும் தமது சங்கம் அரசுக்கு ஒத்துழைப்புகளை வழங்கும் என தெரிவித்துள்ளதாகவும் அத்தியாவசிய சேவைகள் ஆணையாளர் எஸ். பி. திவாரட்ண மேலும் தெரிவித்தார்.


»»  (மேலும்)

இரணைமடுக்குளத்தை பிரதானப்படுத்தி வடக்கில் பாரிய நீர் விநியோகத் திட்டம்


இரணைமடுக்குளத்தை பிர தானப்படுத்தி வடக்கில் பாரிய நீர் விநியோகத் திட்டம் முன்னெ டுக்கப்படுமென நீர் வழங்கல் அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்தார்.
உலக நீர் தினம் இன்று அனு ஷ்டிக்கப்படுகின்றது. இதை முன் னிட்டு அமைச்சர் மஹிந்த அமர வீர தினகரனுக்கு மேலும் கருத் துத் தெரிவிக்கையில்,
கிழக்கு மாகாணம் படையின ரால் விடுவிக்கப்பட்டு மூன்று மாத காலப் பகுதிக்குள் நீர் வழங்கல் அபிவிருத்தி நடவடிக்கைகள் மேற் கொள்ளப்பட்டது போலவே வடக்கிலும் மேற்கொள்ள அமை ச்சு திட்டமிட்டுள்ளது.
வடக்கில் பாதுகாப்பு உறுதிப்படுத்தப்பட்டதும் 12,500 மில். ரூபா செலவில் புதிய நீர் விநியோகத் திட்டத்தை முன்னெடுக்கவுள்ளதாக அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்தார்.
யுத்த சூழ்நிலைகள் காரணமாக வடக்கிற்கு ஒதுக்கப்படும் நிதிகள் உரிய முறையில் பயன்படுத்த முடியாமல் இருந்தது. சமாதான காலப்பகுதியில் அபிவிருத்தி வேலைகளை முன்னெடுக்க முனைந்த வேளையில் புலிகள் அதனை தமக்குச் சாதகமாக பயன்படுத்திக் கொண்டனர். தமது கட்டுப்பாட்டுப் பகுதிகளில் தாங்களே செய்ய வேண்டுமெனவும் அபிவிருத்தித் திட்டங்களுக்காக ஒதுக்கப்படும் நிதி தமக்கு ஊடாகவே செல்ல வேண்டுமென கோரினர். இதனால் குறைந்தளவு நிதியையே கடந்த காலங்களில் ஒதுக்க நேர்ந்தது.
தற்போது அரசாங்கத்தின் கட்டுப்பாட்டிற்குள் வட மாகாணம் வந்துள்ளது. படையினரின் முழுமையான கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவரப்பட்டதும் முதற்கட்ட பணிகள் முன்னெடுக்கப்படும். அதற்கான ஏற்பாடுகள் அனைத்தையும் நாம்செய்து வருகின்றோம். இன்னும் மூன்று மாத காலப் பகுதிக்குள் வேலைகள் முன்னெடுக்கப்படும்.
வடக்கில் இரணைமடுக்குளம் பிரதான நீர்த்தேக்கமாக இருந்து வந்துள்ளது. அதன் மூலம் பல்லாயிரக்கணக்கான விவசாயிகள் பயனடைந்தனர். புலிகளின் கட்டுப்பாட்டில் இருந்த காலப் பகுதியில் அக்குளத்தை தமது தேவைகளுக்காக மட்டுமே பயன்படுத்தினர்.
தமிழ்மக்களுக்காக போராடுவதாகக் கூறிக் கொண்டு அம்மக்களுக்கு எதிராகவே செயற்பட்டு வந்தனர். தமிழ் மக்கள் மீது உண்மையாக அக்கறையிருந்திருந்தால் இரணைமடுக்குளத்தை சேதப்படுத்தியிருக்க மாட்டார்கள். தற்போது இரணைமடுக்குளம் படையினரின் கட்டுப்பாட்டின் கீழ் வந்துள்ளதால் வட பகுதி மக்களுக்கு சுத்தமான குடிநீரை வழங்குவதற்கு எமது அமைச்சு தயாராக இருக்கிறது.
இவ்வாண்டு உலக நீர் தினத்தின் தொனிப் பொருளாக சகலருக்கும் சமமான உரிமை வழங்குவதாகும். நீரின்றி மனிதர்கள் மட்டுமல்ல ஜீவராசிகளும் உயிர்வாழ முடியாது. இந்த நீர்வளத்தை எல்லாக் காலங்களிலும் அனைத்து தரப்பினரும் பெற்றுக் கொள்ளக் கூடிய விதத்தில் திட்டங்கள் முன்னெடுக்கப்படும்.
புதிய நீர் விநியோகத் திட்டத்தின் ஊடாக குடிநீர் வழங்குவது என்பது துரியமாக அபிவிருத்தி கண்டுவரும் இந்த யுகத்தில் நீரைப் பாதுகாப்பதற்கும் நீர்ப்போசனைப் பகுதிகளைப் பாதுகாப்பதற்கும் புதிய செயல் திட்டங்கள் ஏற்படுத்திக் கொடுக்கப்பட வேண்டியது அவசியமாகும்.
மழை நீரைப் பயன்படுத்துவது பற்றி சிந்திக்கப்படுகிறது. மழை நீரை சேமித்து பயன்படுத்துவதன் மூலம் பல நன்மைகள் கிடைக்கின்றன.
நீருக்கான கட்டணத்தை குறைத்துக் கொள்ளக் கூடியதாக இருக்கும். எதிர்வரும் காலங்களில் கொழும்பு மாநகரப் பகுதிகளிலும் மழை நீரைச் சேமிப்பதற்கான வழிவகைகள் குறித்து அமைச்சு ஆராய்ந்து வருகிறது.
சுத்தமான குடிநீரை 78 வீதமான மக்கள் பயன்படுத்துகின்றனர். 23 வீதமானோர் பாவனைக்கு உதவாத நீரைப் பயன்படுத்துகின்றனர். இதில் பெரும்பாலானோர் வடக்கு கிழக்கைச் சேர்ந்தவர்கள் இதன் காரணமாகவே தொற்று நோய்கள் ஏற்படுகின்றன. அவர்களுக்கு சுத்தமான குடிநீரை வழங்குவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்படும்.
கொழும்பு மாநகர பகுதியில் சில இடங்களில் குடிநீருக்குத் தட்டுப்பாடு நிலவுகிறது. களனி வலது கரை நீர் விநியோகத் திட்டத்தின் மூலம் சுத்தமான குடிநீர் வழங்கத் தேவையான நடவடிக்கைகளை நீர் வழங்கல் அமைச்சு மேற்கொண்டு வருகிறது. இதற்கென 6500 மில். ரூபா ஒதுக்கப்பட்டுள்ளது.
நீர் வழங்கல் அமைச்சு சலருக்கும் சுத்தமான குடிநீரை வழங்குவதையே பிரதான நோக்கமாகக் கொண்டுள்ளது. இது ஒரு முதலீட்டாகும். அசுத்த நீரைப் பயன்படுத்துவதால் ஏற்படும் பாதகமான விளைவுகளுக்கு ஒரு முற்றுப்புள்ளி வைக்கப்படல் வேண்டும்.
சுத்தமான குடிநீரை வழங்க வேண்டும். அசுத்த நீரின் பயனால் சிறுவர் நோய்வாய்ப்படும் போது வைத்தியசாலைகளுக்காக செலவிடும் நிதி மிச்சப்படுத்தப்படும். நீர் விநியோகத்திற்கென இவ்வாண்டு 29,000 மில். ரூபா ஒதுக்கப்பட்டுள்ளது. அதன் மூலம் நாடு முழுவதிலும் பல்வேறு அபிவிருத்தித் திட்டங்களை அமைச்சு முன்னெடுக்கவுள்ளதாக நீர் வழங்கல் அமைச்சர் மஹிந்த சமரவீர மேலும் தெரிவித்தார்.


»»  (மேலும்)

3/21/2009

புலிகளின் இந்து பாசிச முகத்தை உலகிற்கு உறுதிப்படுத்தியுள்ள பள்ளிவாசல்கள் மீதான தாக்குதல் -கதிர்-


தமிழீழ விடுதலைப் புலிகள் விடுதலையின் பேரால் உருவான போதும் அந்த நோக்கு திசைமாறி சீர்கெட்டு இன்று குட்டிச் சுவராகியிருக்கிறார்கள். இந்திய பிரதமர் ராஜிவ் காந்தியின் கொலையுடன் புலிகள் இந்தியாவில் பயங்கரவாதிகளாக கணிக்கப்பட தொடங்கினார்கள். ஆனாலும் ஜரோப்பிய நாடுகளும் மேற்குலகமும் அவர்களை போராளிகள், கெரில்லாக்கள், பிரிவினைவாதிகள் என்ற முகவரி கொண்டே கணித்து வந்தது. 2002 ஆம் ஆண்டில் நோர்வே நாட்டின் உதவியுடன் புரிந்துணவு ஒப்பந்தம் ஒன்றை செய்ததினூடாக புலிகளுக்கு சர்வதேச ரீதியாக ஒரு மறைமுகமான ராஜதந்திர அந்தஸ்தும் கிடைத்திருந்தது. ஆனால் மாவிலாற்றில் புலிகள் யுத்தத்தை தொடங்கியதின் ஊடாக புரிந்துணவு ஒப்பந்தமும் அமைதிக்கான பேச்சுவார்த்தைகளும் முறிந்து புலிகள் மீண்டும் பயங்கரவாதிகள் என்கின்ற முகவரியை பெற்றுக்கொண்டார்கள். அதைத்தொடர்ந்து ஜரோப்பிய ய+னியன், கனடா, அவுஸ்ரேலியா என்று பலநாடுகளும் புலிகளை பயங்கரவாதிகளாகப் பிரகடனப்படுத்தியுள்ளன. இந்த நிலையில் புலிகள் கடந்த சிலவாரங்களுக்கு முன்னர் மேற்கொண்ட மாத்தறை பள்ளிவாசல் மீதான தாக்குதலானது அவர்களது இந்துத்துவ அடிப்படைவாத பயங்கர முகத்தை உலகிற்கு உணர்த்தியுள்ளது. புலிகளது வரலாற்றில் 1990 ஆம் ஆண்டில் முஸ்லிம்கள் மீது மேற்கொள்ளப்பட்ட படுகொலைகளும் இனச்சுத்திகரிப்பு நடவடிக்கைகளும் கொஞ்சநஞ்சமன்று. யாழ்ப்பாணத்தில் இருந்து ஒரு லட்சம் முஸ்லிம்களை துரத்தியடித்த நிகழ்வு, காத்தான்குடி பள்ளிவாசல் இரண்டில் ஒரே நேரத்தில் 103 பேர் கொல்லப்பட்டனர். ஏறாவ+ரிலும் அதை அண்டிய கிராமங்களிலும் 116 பேர் வெட்டியும், சுட்டும் கொல்லப்பட்ட நிகழ்வும், மக்கா யாத்திரைப் பயணிகள் 65 பேர் குருக்கள்மடம் பகுதியில் வைத்து சுட்டுக்கொல்லப்பட்ட நிகழ்வு போன்றவை அவற்றில் குறிப்பிடத்தக்கன. இந்தக் கொடூரங்களும் இனச்சுத்திகரிப்பு முயற்சிகளும் அன்றைய நிலையில் சர்வதேசத்தின் கவனத்தை எட்டவில்லை. ஏனெனில் இன்று உள்ளதுபோல் இலங்கைப் பிரச்சனை சர்வதேசத்தின் கவனத்தைப் பெற்றிருக்கவில்லை. ஆனால் முஸ்லிம்கள் மீது நடாத்தப்பட்ட மிலேச்சத்தனமான அந்தத் தாக்குதல்கள் மேலாதிக்க மனப்பாங்கில் இருந்து எழுபவை. ஒரு இனத்தின் மீதான சுத்திகரிப்பு செயற்பாடு. இதற்கான அடிப்படைக் காரணம் புலிகளை வழிநடத்துவது யாழ்ப்பாணிய வைசவேளாள கருத்தியலே ஆகும் என்கின்ற சில கருத்துக்கள் இலங்கை எழுத்தாளர்களினால் முன்வைக்கப்பட்டது. எனினும் இந்தக் குற்றச்சாட்டுக்கள் புலிகளை சர்வதேச ரீதியாக அம்பலப்படுத்த பலங்கொண்டவையாக இருக்கவில்லை. இந்த நிலையில்தான் புலிகள் மீண்டும் மீண்டும் ஏன் முஸ்லிம்கள் மீதான தமது மேலாதிக்கத்தை நிறுவ முயற்சிக்கின்றார்கள். சர்வதேசமே பயங்கரவாதிகள் என்ற தம்மை முத்திரை குத்தியிருக்கின்ற நிலையில் பள்ளிவாசல் மீதான மற்றுமொரு தாக்குதலை ஏன் புலிகள் மேற்கொண்டார்கள் என்கின்ற கேள்விகள் எழும்புகின்றன. புலிகளைப் பொறுத்தவரையில் தமது உண்மையான முகமான யாழ்ப்பாண மேலாதிக்க குணாம்சத்தில் இருந்து விடுபடுவதென்பது தற்கொலைக்கு சமமானதொன்று. அதுமட்டுமன்றி இன்று உலகில் உள்ள முஸ்லிம் எதிர்ப்புவாத மனோநிலையை பற்றிப்பிடிப்பதன் ஊடாக சர்வதேச ரீதியாக தாம் இழந்துபோன ஆதரவுகளை மீளப்பெற்றுக்கொள்வதற்கான முயற்சியில் புலிகள் ஈடுபட்டுள்ளார்கள். அது மட்டுமன்றி இந்தியாவில் வளர்ந்து வருகின்ற முஸ்லிம் எதிர்ப்புணர்வை பயன்படுத்தி தம்மை இந்துத்துவ சக்திகளின் ஆதரவாளர்களாகக் காட்டும் முயற்சியிலும் புலிகள் ஈடுபட்டுள்ளார்கள். இத்தகைய காரணங்களின் அடிப்படையிலேயே மேற்படி பள்ளிவாசல் தாக்குதல்களை புலிகள் ஈடுபட்டிருக்கின்றார்கள். புலிகளின் தலைவர் பிரபாகரனது உடம்பில் ஓடுவது இந்து ரத்தம் என்று கடும்போக்கு இந்துத்துவ கொள்கை கொண்ட சிவசேன அமைப்பின் தலைவர் பால்தக்ரே ஒருமுறை சொன்னார். கடந்த சிலமாதங்களாக இந்த சிவசேனாவுடனும் அதுசார்ந்து நிற்கின்ற பாரதீய ஜனதா கட்சியுடனுமான உறவை புதுப்பிக்க புலிகள் கடும் முயற்சியில் இறங்கியிருக்கின்றார்கள். தமிழ் தேசியக் கூட்டமைப்பினூடாக அக்கட்சியின் உயர்மட்டத் தலைவர்களைச் சந்தித்து புலிகளைப் பாதுகாக்க உதவிகோரும் பேச்சுவார்த்தைகள் நடாத்தப்பட்டு வருகின்றன. சிவாஜிலிங்கம் போன்றோர் கடந்த மாதம் அக்கட்சியின் தலைவர் அத்வாணியை சந்தித்து பேச்சுக்கள் நடாத்தியிருந்ததும் இதில் ஒரு அங்கமேயாகும். இதன் தொடர்ச்சியாகவே பால்தக்ரே கடந்த இருவாரங்களுக்கு முன்னர் “இந்தியாவில் உள்ள முஸ்லிம்கள் உலக முஸ்லிம்களுக்காக குரல் கொடுக்கலாம் என்றால், இலங்கையில் உள்ள இந்துக்களுக்காக நாம் ஏன் குரல் கொடுக்க முடியாது” என்று கர்ஜித்தார். அதுமட்டுமன்றி “காஸ்மீர் தீவிரவாதிகளை அடக்கி ஒடுக்க இலங்கைத் தமிழர்களை நாம் அனுசரித்து செல்வதன் ஊடாக புலிகளை நாம் ஏன் பயன்படுத்தக்கூடாது” என்கின்ற கருத்தக்களையும் தெரிவித்திருந்தார். அதாவது புலிகளின் கொள்கை கோட்பாடுகள் இந்துத்துவ அடிப்படை வாதத்தில் இருந்து எழுபவை, எழவேண்டும் என்பதே இந்திய இந்துத்துவ வாதிகளின் விருப்பமாகவும் நோக்கமாகவும் இருக்கின்றது. இந்த சமிக்கைகள் புலிகளுக்கு வாய்ப்பானவையாகும். தாம் முஸ்லிம்களுக்கு எதிரானவர்கள் என்கின்ற உருவகத்தை இன்னும் பலமாக்க, விஸ்தரிக்க வைப்பது இந்தியாவில் அதிலும் மத்தியில் செல்வாக்கு செலுத்தக்கூடிய ஒரு அமைப்பை தமக்கு வசதியாக, வாய்ப்பாக உபயோகித்துக்கொள்ள நல்ல வழி என புலிகள் சிந்திக்கின்றார்கள். இதன் காரணமாகவே புகலிடத்தில் இருந்து வெளியாகும் புலிசார்ந்த இணையத்தளங்களும் வானொலி, தொலைக்காட்சி போன்றவைகளும் கூட இந்துப்பாஸிஸ மனோநிலை கொண்ட பாரதீக ஜனதா கட்சியை புகலிடத்தமிழர்களுக்கு அறிமுகப்படுத்தும் கைங்கரியத்தில் ஈடுபட்டுள்ளார்கள். மறுபுறம் இஸ்ரவேல் கனவுகளில் இலங்கைத் தமிழர்களை மிதக்க வைத்து என்றுமே கிடைக்காத ஈழத்துக்காக ஆதரவு கோருகின்றார்கள். இன்னுமொரு புறம் அமெரிக்கப் படையினர் வந்து யுத்தத்தில் சிக்குண்டுள்ள மக்களைக் காப்பாற்றுவதற்கான முயற்சிகளை இட்டு ஆராய்ந்துவருகின்ற வேளையில் புலிகள் தம்மை முஸ்லிம்களுக்கு எதிரானவர்கள் என்கின்ற விதத்தில் நிரூபித்துக்காட்ட முயலுகின்றார்கள். அமெரிக்கப்படையினர் வந்து புது மாத்தளங்கரையில் இறங்கி மக்களைக் காப்பாற்றி விட்டால் அடுத்த கணமே பிரபாகரனை சிறிலங்கா இராணுவம் ஆயுதம் இன்றியே துரத்திப் பிடித்துவிடும் நிலை உண்டு. எனவே அமெரிக்காவுக்கும் புலிகள் மாத்தறை பள்ளிவாசல் தாக்குதல் ஊடாக ஒரு செய்தியை அவசர அவசரமாக வெளிப்படுத்தியுள்ளனர். நாங்களும் முஸ்லிம்களுக்கு எதிரானவர்கள் தான். பால்தக்ரேக்கும் பாரதீய ஜனதாவுக்கு மட்டுமல்ல நாங்கள் உங்களுக்கும் நண்பர்கள்தான். எங்களை அழிக்கமுயலும் சிறிலங்கா அரசுக்கு உதவவேண்டாம் என்பதாகவே அந்தச் செய்தி இருக்கின்றது. புலிகளது இந்தச் செய்தியை சர்வதேசம் உள்வாங்கியிருப்பதற்கான வாய்ப்புகள் அதிகம் உண்டு. அதனால்தான் என்னவோ ஜரோப்பாவில் இருந்து முதன் முறையாக புலிகளை “இந்துத்துவ புலிகள்” என விழித்து பிரான்சில் இருந்து வெளிவருகின்ற பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது.


»»  (மேலும்)

புகழ் பூத்த திரைப்படப்பாடகர் வீ.முத்தழகுதிரைப்படம் என்பது பல அம்சங்களைக் கொண்டது. திரைப்பட வளர்ச்சியில் திரைக்கு முன்னால் மட்டுமின்றி திரைக்குப் பினனாலும் பல கலைஞர்கள் பங்களிப்பு செய்கிறார்கள். திரைக்குப் பின்னால் மின்னும் நட்சத்திரங்கள்தான் இந்த திரை இசைக் கலைஞர்கள். பாடகர்கள், இசையமைப்பாளர்கள், கவிஞர்கள் என்று அவர்களை குறிப்பிடலாம். இலங்கைத் திரை இசை உலகில் சாதனை புரிந்தவர்கள் பலர் இருக்கின்றனர். பாடகர்களைப் பொறுத்தவரை வீ. முத்தழகு முக்கியமான இடத்தில் இருக்கிறார். அத்துடன் தனித்துவமான பாடகர் என்ற பெயரையும் பெறுகிறார்.இலங்கை தமிழ் இசை உலகில் வேறு எவரும் செய்யாத வகையில் "சப்தஸ்வரம்' என்ற தனி நபர் இசை நிகழ்ச்சியைப் பலமுறை மேடையேற்றி விட்டார். 1974ஆம் ஆண்டு முதல் 2004ஆம் ஆண்டுவரையுள்ள 30 வருட காலத்தில் "சப்தஸ்வரம்' நிகழ்ச்சியை 15 முறை மேடையேற்றிவிட்டார். மெல்லிசைப் பாடகராக கலை உலகிற்கு வந்த வி. முத்தழகு, மறைந்த தென்னிந்தியப் பாடகர் ஏ. எம். ராஜாவின் குரலை ஞாபகப்படுத்தும் நம் நாட்டுப் பாடகர் சிங்களம், தமிழ், ஹிந்தி, உருது, மலையாளம், ஆங்கிலம் ஆகிய மொழிகளில் பாடிவிட்டார். மெல்லிசைப் பாடல்கள், மேடை நிகழ்ச்சிகள், திரைப்படப் பாடல்கள் என எவற்றையும் அவர் விட்டு வைக்கவில்லை. இலங்கையில் உருவான தமிழ்ப் படங்களில் இவர்தான் அதிகமாகப் பாடியிருக்கிறார் என்று கூறிவிடலாம். 10க்கு மேற்பட்ட சிங்களப் படங்களிலும் பாடியிருக்கிறார். கலாவதி, சுஜாதா, வனஜா, ஜெகதேவி, சந்திரிகா, லதா வல்பொல போன்ற நம் நாட்டுப் பாடங்களுடன் மட்டுமின்றி ஜிக்கி, ஜமுனா ராணி, சுசிலா போன்ற தென்னிந்திய சினிமாப் பாடகிகளுடன் சேர்ந்து பாடியிருக்கிறார்."சப்த ஸ்வரம்' தமிழ் நிகழ்ச்சியைப் போல் "பெம் கெக்குலு பிப்பி' (காதல் மொட்டுகள் மலர்கின்றன) என்ற தலைப்பில் தனி நபர் சிங்கள நிகழ்ச்சியை 10 முறைக்கு மேல் நடத்தி விட்டார்கள்.கொழும்பு, பம்பலப்பிட்டி சென். மேரிஸ் வித்தியாலயத்தில் முத்தழகு கல்வி பயின்றார். 1963இல் அப்பாடசாலையின் சிங்களப் பிரிவில் மெல்லிசைப் பாடல் போட்டி ஒன்று நடைபெற்றது. அப்போட்டியில் இவருக்கு இரண்டாவது பரிசு கிடைத்தது. இச்சம்பவத்தின் பின் இசையே அவரது வாழ்க்கையாகவும் தொழிலாகவும் மாறியது. அதே ஆண்டில் பாகிஸ்தானில் லாகூர் பல்கலைக்கழகத்தில் இசை நிகழ்ச்சியொன்று நடைபெற்றது. சாரண இயக்கத்தில் அங்கு சென்ற முத்தழகு இந்த இசை நிகழ்ச்சியில் பாடினார். உருது மொழியிலும் சிங்கள மொழியிலும் பாடினார். தனது தாய்மொழியான தமிழில் பாடவும் மறக்கவில்லை.அந்த இளம் வயதிலேயே தான் ஒரு சினிமாப் பின்னணிப் பாடகராக வரவேண்டும் என்று கனவு கண்டாராம். அந்தக் கனவு "புதிய காற்று' திரைப்படம் மூலம் நனவாகியது.ஏ. எம். ராஜாவை மானசீகக் குருவாக கருதும் வி. முத்தழகு பிரபலம் பெற்றது "புதிய காற்று' திரைப்படம் மூலம் என்றாலும் அதற்கு முன்பே அவர் தமிழில் மெல்லிசைப் பாடல்களைப் பாடிவிட்டார். தமிழில் மெல்லிசைப் பாடல்களை பாடுவதற்கு முன்பு சிங்களத்திலும் பல மெல்லிசைப் பாடல்களை பாடிவிட்டார். இன்றுவரை இவர் பாடிய பாடல்களில் சிங்களப் பாடல்களே அதிகம். 4000 சிங்களப் பாடல்களைப் பாடியிருக்கும் இவர், தமிழ்மொழியில் 1500 வரையான பாடல்களையே பாடியிருக்கிறார். 1989ஆம் ஆண்டு பாடகி லதா வல்பொலவுடன் சேர்ந்து சைப்பிரஸ், லெபனான் போன்ற நாடுகளுக்கு சென்று இசைக் கச்சேரி செய்து விட்டு வந்தார். அடுத்து ஐரோப்பிய நாடுகளுக்கு செல்லும் வாய்ப்பு பாடகர் அபயவர்த்தன பாலசூரியவினால் வழங்கப்பட்டது.பரீசில் இவர் நிகழ்ச்சிக்கு வந்த இரண்டு இலங்கைத் தமிழ் கலைஞர்கள் இவரது இசைத்தட்டை வாங்காது சென்றது இவருக்கு பெரிய கவலையைக் கொடுத்ததாம். முதன் முதலில் "புதிய காற்று' படத்தில் பாடும் வாய்ப்பை வி. பி. கணேசன் இவருக்கு வழங்கினார். அதைத் தொடர்ந்து "கோமாளிகள்', "ஏமாளிகள்', "நான் உங்கள் தோழன்', "தென்றலும் புயலும்', "தெய்வம் தந்த வீடு', "அநுராகம்', "எங்களில் ஒருவன்', "நெஞ்சுக்கு நீதி', "அவள் ஒரு ஜீவநதி', "நாடு போற்ற வாழ்க', "சர்மிளாவின் இதயராகம்' போன்ற படங்களில் பாடினார்."புதிய காற்று' 1975ஆம் ஆண்டு திரைக்கு வந்தது. "சர்மிளாவின் இதயராகம்' 1993ஆம் ஆண்டு திரைக்கு வந்தது. கிட்டத்தட்ட 20 வருட இடைக்காலத்தில் உருவான சகல தமிழ்ப் படங்களிலும் முத்தழகு பின்னணிப் பாடியிருக்கிறார் என்பது அவரது திறமைக்கு எடுத்துக் காட்டாகும். இலங்கையில் உருவான தமிழ்த் திரைப்படங்களில் முத்தழகுவே அதிகமான பாடல்களைப் பாடியிருக்கிறார் என்றுகூடச் சொல்லி விடலாம்."புதிய காற்று' திரைப்படத்தை அடுத்து "அநுராகம்' என்ற படத்தில் பாடினார். யசபாலித நாணயக்கார தயாரித்த இப்படத்தின் இசையமைப்பாளர் சரத் தஸநாயக்க ஆவார். இவர் இசையமைத்து முத்தழகு பாடிய ""எண்ணங்களாலே இறைவன் தானே'' என்ற பாடல் மிகவும் பிரபலம் பெற்ற பாடலாக விளங்கியது. இப்படத்தை தயாரித்து யசபாலித்த நாணயக்காரவே முத்தழகுவுக்கு சிங்களச் சினிமாவில் பாடும் வாய்ப்பை வழங்கினார். "ஆஞ்சனா' என்ற படத்தில் விஜயகுமாரதுங்கவுக்கு பின்னணி பாடும் வாய்ப்பே அது.இதையடுத்து "யச மித்துரோ', "அலிபாபா', ஹொறுஹதலி ஹா, சுஜா சத்த சூர்யா போன்ற படங்களில் பின்னணி பாடினார். தென்னிலங்கையில் நடைபெறும் இசை நிகழ்ச்சிகளில் ஓரிரு தமிழ்ப் பாடல்கள் இடம்பெறும். அந்தப் பாடலை பாடுபவராக நிச்சயம் முத்தழகுவே வந்து நிற்பார். பேராதெனியவில் பிறந்த முத்தழகு சிறு வயதிலேயே கொழும்புக்கு வந்துவிட்டார். 1953 ஆம் ஆண்டு முதல் இன்று வரை 5000 க்கும் மேற்பட்ட பாடல்களை பாடிவிட்டார். 1957 ஆம் ஆண்டு வானொலியில் பாடத் தொடங்கிய இவர் சிங்களம், தமிழ் என்று பல பாடல்களைப் பாடிவிட்டார்.கர்நாடக இசைக்கு ஏ.எஸ். நாராயணனும் இந்துஸ்தான் இசைக்கு எம்.எஸ். செல்வராஜாவும் தனது வழிகாட்டிகள் என்று கூறுகிறார். இவரது திறமைக்கு 1995ஆம் ஆண்டு சிறந்த பாடகருக்கான ஜனாதிபதி விருதும் 2002 ஆம் ஆண்டு தேசிய பாடகருக்கான "கலாபூஷணம்' விருதும் கிடைத்தது.1987 ஆம் ஆண்டு இந்து கலாசார அமைச்சு இவருக்கு "மெல்லிசைச் செல்வன்' என்ற பட்டத்தை வழங்கியது. "இன்னிசை மணி', "கலை மணி' என்பனவும் முத்தழகுவுக்கு கிடைத்த மேலும் சில பட்டங்களாகும். 1995 ஆம் ஆண்டை முத்தழகுவால் இலகுவில் மறக்க முடியாது. அன்றுதான் இவர் 10 தமிழ் படங்களில் பாடிய 15 பாடல்கள் சி.டி. இசைத்தட்டில் வெளியாகி உலகத்தின் பல வானொலி நிலையங்களிலும் ஒலிபரப்பாகியது. ஐரோப்பிய உலக இசைச் செயலகம் வருடாவருடம் வெளியிடும் சி.டி. இசைத்தட்டில் இவரது பாடல்கள் முதன் முதலாக பதியப்பட்டு உலகெங்கும் பரவியது. "சவுண் லங்கா இன்ரநேஷனல்' நிறுவனத்தின் அனுசரணையில் உருவாக்கப்பட்ட இந்த இசைத் தட்டுகளுக்கு 'கூச்ட்டிடூ ஏடிtண் ஊணூணிட் குணூடி ஃச்ணடுச்' என்று பெயர் சூட்டப்பட்டது. 1970 1980 காலப் பகுதி இலங்கை வானொலியின் சிறந்த மெல்லிசைப் பாடகராக முத்தழகு விளங்கினார். இன்றுவரை இலங்கையின் வானொலியிலும் தொலைக்காட்சியிலும் பாடிவரும் அவருக்கு "தேசியப் பாடகர்' என்ற பட்டம் வழங்கி கௌரவிக்கப்பட்டுள்ளது. "மெல்லிசையை மக்கள் மயப்படுத்த வேண்டுமென்பது தன் கனவு' என்று கூறுகிறார் முத்தழகு."இலங்கையில் திரை இசை' என்ற தலையங்கத்தில் யாராவது சரித்திரம் எழுத முனைந்தால் 1975 முதல் 1983 ஆம் ஆண்டு காலப்பகுதியை "திரை இசையின் செழிப்பான ஆண்டு' என்று எழுத வேண்டி வரும். அதில் பாடகர் முத்தழகுவின் பெயர் இடம்பெறாமல் அந்த அத்தியாயம் நிறைவு பெறாது.»»  (மேலும்)

கலாபூஷணம் முத்தழகு அவர்களின் பெயர் காலத்தால் அழிந்துவிடாது. – முதலமைச்சர் அனுதாபம்.


மட்டக்களப்பின் அரசியல், கலை, இலக்கிய வரலாற்றில் தனக்கென ஒரு தனி முத்திரை பதித்தவர் அண்ணன் முத்தழகு. இவர் மட்டக்களப்பு மாநகர சபையின் முன்னாள் உறுப்பினராக, நகைக்கடை வர்த்தக சங்கத்தின் தலைவராக, ஒரு சிறந்த கவிஞராக, சிறந்த உழுத்தாளனாக எமது மக்களுக்கு ஆற்றியுள்ள சேவைகள் காலத்தால் அழிந்துவிட முடியாதவை. தமிழ் இனம் வாழும்வரை அண்ணன் முத்தழகுவின் பெயர் நிலைத்து நிற்கும். அன்னாரின் மறைவினால் கலை உலகத்திற்கு ஒரு பெரிய இடைவெளி ஏற்பட்டுள்ளது. அன்னார் எமது தாய் நாட்டில் மாத்திரம் அல்ல தென் இந்தியாவிலும் தனது பெயரை நிலைநிறுத்தியவர். அரச உயர் விருதான கலாபூஷணம் விருதினைப் பெற்று எமது பிரதேசத்திற்குப் பெருமை தேடித்தந்தவர். அன்னாரின் பிரிவால் துயர் உற்றிருக்கும் குடும்பத்தினருக்கும், மற்றும் கலைஞர்களுக்கும் எனது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக்கொள்கின்றேன் என கிழக்கு மாகாண முதலமைச்சர் சிவனேசதுரை சந்திரகாந்தன் தனது அனுதாபச் செய்தியில் தெரிவித்துள்ளார்..

»»  (மேலும்)

பாசிக்குடா அபிவிருத்தி பணிகள் இன்று வைபவரீதியாக ஆரம்பம்
கிழக்கில் சுற்றுலாத்துறை மேம்பாடு:


கிழக்கு மாகாணத்தில் சுற்றுலாத்துறைக்கு பிரசித்தி பெற்ற இடமான மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள பாசிக்குடாவை புனரமைத்து அபிவிருத்தி செய்வதற்கான வேலைகள் இன்று ஆரம்பித்து வைக்கப்படவுள்ளது. சுற்றுலாத்துறை பிரதியமைச்சர் பைசர் முஸ்த்தபா வைபவரீதியாக இதன் புனரமைப்பு வேலைகளை இன்று ஆரம்பித்து வைப்பார். கிழக்கு மாகாண முதலமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தனின் வேண்டுகோளின் பேரில் சுற்றுலாத்துறை அமைச்சினால் பாசிக்குடா அபிவிருத்தி செய்யப்படவுள்ளது.»»  (மேலும்)

3/20/2009

மோதல் பிரதேசங்களில் சிக்குண்டுள்ள மக்களின் நிலை கவலைக்கிடமாக உள்ளது- செஞ்சிலுவைச் சங்கம் தெரிவிப்பு


வடபகுதியில் இடம்பெற்று வரும் மோதல்கள் காரணமாக பெரும் எண்ணிக்கையிலான பொதுமக்கள் பாரிய இன்னல்களை எதிர்நோக்கி வருவதாகவும், மக்களின் நிலை நாளுக்கு நாள் கவலைக்கிடமாக மாறி வருவதாகவும் சர்வதே செஞ்சிலுவைச் சங்கம் தெரிவித்துள்ளது.பாதுகாப்பான வலயங்கள் நோக்கி தப்பிச் செல்லும் நோக்கில் ஆயிரக்கணக்கான பொதுமக்கள் கரையோரப் பகுதிகளில் காத்திருப்பதாகவும் ,பாதுகாப்பு வலயங்கள் நோக்கிச் செல்ல காத்திருக்கும் பெரும் எண்ணிக்கையிலான பொதுமக்கள் உணவு, குடிநீர் உள்ளிட்ட அடிப்படை வசதிகளின்றி பெரும் இன்னல்களை எதிர்நோக்கி வருவதாக சர்வதேச செஞ்சிலுவைச் சங்கத்தின் கொழும்புக் கிளைத் தலைவர் போல் கெஸ்டல்லா தெரிவித்துள்ளார்


»»  (மேலும்)

புதுமாத்தளன் பகுதிக்கு 1265 மெற்றிக்தொன் உணவு


52 வகையான மருந்துகள் அனுப்புவைப்பு;தட்டுப்பாடே கிடையாது: அமைச்சர் சமரசிங்க


முல்லைத்தீவு, புதுமாத்தளன் பகுதியில் புலிகளின் பிடியில் சிக்கியுள்ள பொதுமக்களுக்கென 1265 மெற்றிக்தொன் அத்தியாவசிய உணவுப் பொருட்களும், 52 வகையான மருந்துப் பொருட்களும் அனுப்பிவைக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவம் மற்றும் மனித உரிமைகள் அமைச்சர் மஹிந்த சமரசிங்க நேற்றுத் தெரிவித்தார்.
அத்தியாவசிய உணவுப் பொருட்க ளுக்கோ மருந்து வகைகளுக்கோ எவ்விதத் தட்டுப்பாடுகளும் கிடையாது என திட்டவட்டமாக தெரிவித்த அமைச்சர் அவ்வாறு தட்டுப்பாடுகள் நிலவுவதாக கூறப்படும் தகவல்கள் முற்றிலும் உண்மைக்கு புறம்பானது என்றும் தெரிவித்தார்.
முல்லைத்தீவில் புலிகளின் பிடியில் சிக்கியுள்ள அப்பாவி தமிழ் மக்களின் நிலைமைகள் தொடர்பாகவும் அவர்களுக்காக அரசாங்கம் முன்னெடுக்கும் நடவடிக்கைகள் தொடர்பாகவும் ஊடகங்களுக்கு விளக்கமளிக்கும் செய்தியாளர் மாநாடு நேற்று மாலை ஜனாதிபதி செயலகத்தில் நடைபெற்றது. அமைச்சர் மஹிந்த சமர சிங்க தலைமையில் நடை பெற்ற இந்த செய்தியாளர் மாநாட்டில், வெளி விவகார அமைச்சின் செய லாளர் கலாநிதி பாலித கொஹன மனித உரிமை கள் அமைச்சின் செயலாளர் கலாநிதி ரஜீவ விஜேசிங்க, இராணுவப் பேச்சாளர் பிரிகேடியர் உதய நாணயக் கார மற்றும் சுகாதார அமைச்சின் (மருந்து விநி யோகம்) பிரதிப் பணிப் பாளர் நாயகம் டாக்டர் விமல் ஜயந்த ஆகியோர் கலந்து கொண்டனர்.அமைச்சர் இங்கு மேலும் உரையாற்றுகையில்:-முல்லைத்தீவில், புலிக ளின் பிடியில் சிக்கியுள்ள மக்களுக்கென கடந்த மூன்று வாரங்களுக்குள் 1265 மெற்றிக்தொன் உணவுப் பெருட்களை அரசாங்கம் அனுப்பிவைத்துள்ளது.கடந்த 17ம் திகதி முதல் 19ம் திகதி வரையான மூன்று நாட்களுக்குள் மாத் திரம் மூன்று தடவைகள் 515 மெற்றிக்தொன் உணவுப் பொருட்கள் அனுப்பி வைக் கப்பட்டுள்ளன. அதில் 15 மெற்றிக்தொன் மரக்கறி வகைகளும் அடங்கும்.அரசாங்கம் அத்தியாவ சிய உணவுப்பொருட்களை அனுப்பிவைக்கும் அதே சமயம், உலக உணவுத் திட் டம் உதவிகளை வழங்கியு ள்ளது.முல்லைத்தீவிலுள்ள மக்க ளுக்குத் தேவையான ஒரு தொகை மருந்துப் பொரு ட்கள் கடந்த 5ம் திகதி அனுப்பி வைக்கப்பட்டு ள்ளன. தற்பொழுது அங்கு தேவையான மருந்து பொருட்கள் களஞ்சியப்ப டுத்தப்பட்டுள்ளதாக சுகா தார அமைச்சின் பிரதிப் பணிப்பாளர் நாயகம் டாக்டர் விமல் ஜயந்த தெரிவித்தார்.கடந்த மூன்று தினங்க ளுக்குள் அண்டிபயோடிக் உட்பட 52 வகையான மரு ந்துப் பொருட்கள், திரு கோணமலையிலுள்ள பிரா ந்திய மருத்துவ விநி யோகப் பிரிவுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. அவை திருமலையிலுள்ள கடற்படையினருக்கு ஒப்ப டைக்கப்பட்டு திருமலை பிராந்திய கடற்படைத் தளபதியின் வழிகாட்டலின் தேவைக்கேற்ப உரிய நேரத் தில் அனுப்பிவைக்கப்படும் என்றார்.முல்லைத்தீவு மாவட்டத் திற்குப் பொறுப்பான பிரா ந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் டாக் டர் ரி. வரதராஜாவின் பெயரைப் பயன்படுத்தி இந்தப் பிரதேசத்தில் மருந் துப் பொருட்களுக்குத் தட்டு ப்பாடுகள் நிலவுவதாக புலிகள் வதந்திகளை பர ப்பி வருகின்றனர்.பணிப்பாளரின் பெயரைப் பயன்படுத்தி இரு வேறுபட்ட கடிதங்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ள தாகவும் அவ்வாறு அனுப் பிவைக்கப்பட்ட கடிதங்கள் இரண்டின் “கடிதத் தலைப் புக்கள்” (ழிலீttலீr சிலீaனீ) ஒன்றுக்கு ஒன்று முரணா னதாக உள்ளதாகவும் அமைச்சர் சுட்டிக்காட்டி னார். அந்தத் கடிதத் தலை ப்புக்களில் எழுத்துப் பிழை கள் இருப்பதையும் ஆதார மாக சுட்டிக்காட்டிய அமை ச்சர், இவை போலியான வை என்றும் தெரிவித்தார்.சுகாதார அமைச்சின் செயலாளர் டாக்டர் அத் துல கஹந்தலியனகே முல் லைத்தீவு பிராந்திய சுகா தார சேவைகள் பணிப் பாளர் டாக்டர் ரி. வரதரா ஜாவுடன் ஏற்கனவே தொடர்பு கொண்டு கேட்ட போது, தனது பெயர்பயன் படுத்த ப்பட்டு மாறுப்பட்ட தகவ ல்கள் வெளியிடப்படுவதாக ஏற்றுக் கொண்டுள்ளார் என் றும் அவர் சுட்டிக்காட்டினார்.

»»  (மேலும்)