Election 2018

6/06/2009

அரசியல் தீர்வின் மூலம் ஆள்புல ஒருமைப்பாடு


தேசிய இனப் பிரச்சினைக்கு அரசியல் தீர்வு காணும் முய ற்சிக்கு மிகப் பெரிய தடை யாக இருந்த பயங்கரவாதம் இப்போது முற்றாகத் துடைத்தெறியப்பட் டுள்ளது. அடுத்த கட்டமாக அரசியல் தீர் வில் அரசாங்கம் கவனம் செலுத்துகின்றது. தமிழ் மக்கள் அச்சமும் சந்தேகமும் இல் லாமல் வாழும் சூழ்நிலையை உருவாக்கப் போவதாகவும் ஐக்கிய இலங்கையில் அரசி யல் தீர்வை நடைமுறைப்படுத்தப் போவ தாகவும் ஜனாதிபதி பகிரங்கமாக அறிவித் திருப்பது தமிழ் மக்களிடம் மாத்திரமன்றி ஜனநாயகத்தில் நம்பிக்கையுள்ள சகலரிட மும் மகிழ்ச்சியைத் தோற்றுவித்திருக்கின்றது.
அரசியல் தீர்வின் முதலாவது கட்டமாகப் பதின்மூன்றாவது அரசியலமைப்புத் திருத் தம் முழுமையாக நடைமுறைக்குக் கொண்டு வரப்படும் என்ற எதிர்பார்ப்பு மக்களிடம் ஏற்பட்டிருக்கின்றது. அரசியலமைப்பில் திருத்தம் செய்வதற்குத் தேவையான மூன்றி லிரண்டு பெரும்பான்மை அரசாங்கத்துக்கு இல்லாத நிலையில் முதற் கட்டமாகப் பதின்மூன்றாவது திருத்தத்தை நடைமுறைப் படுத்துவதற்கு அரசாங்கம் முன்வந்திருக்கி ன்றது. இதுவே இன்றைய நிலையில் நடை முறைச் சாத்தியமானது. இத் திருத்தத்தின் கீழான மாகாண சபை நியாயமான முறை யில் செயற்படத் தொடங்கிய பின் மேல திக அதிகாரங்களைப் பெறுவதற்குச் சாதக மான சூழ்நிலை உருவாகுமென எதிர்பார்க் கலாம்.
நாட்டின் ஆள்புல ஒருமைப்பாட்டுக்குப் பயங்கரவாதிகளிடமிருந்து தோன்றிய அச் சுறுத்தல் இப்போது இல்லை. இராணுவ நடவடிக்கையின் மூலம் அந்த அச்சுறுத்தல் முற்றாக நீக்கப்பட்டுவிட்டது. ஆள்புல ஒரு மைப்பாட்டை உறுதிப்படுத்த வேண்டிய பணி அடுத்ததாக உள்ளது. இது அரசியல் நடவடிக்கை மூலம் நிறைவேற்றப்பட வேண் டியது. அதனாலேயே அரசியல் தீர்வில் அர சாங்கம் கூடுதலான கவனம் செலுத்துகின் றது. இந்த நேரத்தில் குறுகிய அரசியல் லாப நோக்குடன் குட்டை குழப்பும் முயற்சியில் சிலர் ஈடுபட்டிருப்பது வருத்தத்துக்குரியது.
பதின்மூன்றாவது அரசியலமைப்புத் திருத் தத்தை நடைமுறைப்படுத்த அரசாங்கம் முயற்சித்தால் அதற்கு எதிராகப் போராட் டம் நடத்தப் போவதாக மக்கள் விடுதலை முன்னணி கூறுகின்றது. வலுவான ஐக்கிய இலங்கையைக் கட்டி வளர்க்க அரசியல் தீர்வு அத்தியாவசியமானதாக உள்ள நிலை யில் அதற்கு எதிரான போராட்டம் ஐக்கிய இலங்கைக்கு எதிரான போராட்டமாகவே அமையும்.
மக்கள் விடுதலை முன்னணி இடைக்கிடை தமிழ் மக்களுக்காக நீலிக்கண்ணீர் வடிக்கி ன்ற போதிலும் அடிப்படையில் அது தமிழ் மக்களின் நலன்களுக்கு விரோதமானது. அக் கட்சி தூக்கிப்பிடிக்கும் செங்கொடிக்கு எவ் விதத்திலும் பொருத்தம் இல்லாத கொள் கையையே அது பின்பற்றுகின்றது. இக் கட் சியின் தலைவர்கள் தங்களை மாக்சியவாதி களாக இனங்காட்ட முயற்சிக்கின்ற போதி லும் நடைமுறையில் இவர்கள் இனத்துவ வெகுஜனவிருப்புவாதத்தினால் (ETHNO POPULISM) வழிநடத்தப்படுகின்றனர். அர சியல் அதிகாரத்துக்காக மக்களின் இனத் துவ உணர்வுகளை மூலதனமாக்குவது அப் பட்டமான அரசியல் அநாகரிகம். கடந்த கால தமிழ்த் தலைமைகள் இதே தவறைச் செய்தன. இப்போது மக்கள் விடுதலை முன்னணியும் இதே தவறைச் செய்கின்றது.
ஐக்கிய இலங்கையிலேயே மக்களின் கவ னம் இருக்கின்றது. இனவாத சிந்தனை களை அவர்கள் ஏற்கப்போவதில்லை. அண் மையில் நடைபெற்ற தேர்தல்களில் மக்கள் விடுதலை முன்னணிக்குக் கிடைத்த படு தோல்வி இதற்கு உதாரணம்.
மக்கள் விடுதலை முன்னணி அதன் போக்கை மாற்றிக்கொள்ள வேண்டியதன் அவசியத்தைச் சுட்டிக்காட்ட விரும்புகின் றோம். இனங்களுக்கிடையே ஐக்கியத்தை வளர்த்து ஆள்புல ஒருமைப்பாட்டை வலுப் படுத்தும் முயற்சியில் ஈடுபட்டிருக்கும் ஜனா திபதிக்குப் பின்னால் மக்கள் அணிதிரண்டு ள்ளனர். மக்கள் விடுதலை முன்னணி இதைப் புரிந்துகொண்டு சரியான பாதைக் குத் திரும்புமென நம்புகின்றோம்.

thanks..thinakaran.edito

0 commentaires :

Post a Comment