Election 2018

6/06/2009

தீயசக்திகள் நாட்டில் இருக்கும் வரை நிராயுதபாணிகளாகவுள்ள ரி.எம்.வி.பி கட்சி உறுப்பினர்களின் பாதுகாப்பு உறுதிப்படுத்தப்பட வேண்டும்.

வன்முறைக் கலாச்சாரத்தை கைவிட்டு ஜனநாயக அரசியல் செயற்பாடுகளில் முழுநம்பிக்கை கொண்டு மக்களுக்கு வேவையாற்ற வந்த தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் அரசியல் கட்சி உறுப்பினர்களின் பாதுகாப்பு உறுதிப்படுத்தப்பட வேண்டும் என்றும், எதிர்காலத்தில் இவ்வாறான படுகொலைச் சம்பவங்கள் நாட்டின் எப்பாகத்திலும் இடம் பெறக்கூடாது என்பதனையே அமரர் அறவான் அவர்களின் படுகொலையானது உணர்த்துகின்றது. இதனையே மட்டக்களப்பு மக்களும் விரும்புகின்றார்கள் என்று கட்சியின் பொதுச் செயலாளர் எ.சி.கைலேஸ்வரராஜா அவர்கள் தமது கட்சியின் சிரேஷ்ட உறுப்பினரான இராமலிங்கம் ஜெயக்குமார் (அறவான் ) அவர்களின் அனுதாபச் செய்தியில் தெரிவித்துள்ளார்.
தமது கட்சியின் உறுப்பினர்கள் மக்களுக்கு வேவையாற்ற அர்ப்பணிப்புடன் இருக்கும் இந்நிலையில் தமது உறுப்பினர்கள் மிகவும் ஈனத்தனமான முறையில் ஆயுத மோகத்தில் கட்டுண்டு கிடக்கும் வஞ்சகர்களால் படுகொலை செய்யப்படுவதால் எதிர்காலத்தில் மக்களுக்கான அரசியல் சார்ந்த சேவைகளை செய்வதற்கான சந்தர்ப்பங்கள் சீர்குலைந்து போகும் அபாயம் தோன்றியுள்ளது என்றும், அதைவிட பொது மக்கள் மத்தியிலும் ஒருவகை அச்சம் ஏற்பட்டுள்ளது என்றும் அவர் தெரிவித்தார்.
சுpறந்த முறையில் மக்களுக்கு வேவையாற்றி வந்த கட்சியின் சிரேஷ்ட உறுப்பினரான அமரர் அறவான் அவர்களின் படுகொலையானது மிகவும் கண்டிக்கப்பட வேண்டியது என்றும் இவ்வாறான படுகொலைகளை கட்சி பேதங்களை மறந்து உண்மையான ஜனநாயகத்தை விரும்பும் அனைத்து அரசியல் கட்சிகளும் கண்டிக்க வேண்டும் என்றும் பயங்கரவாதம் இலங்கையின் அதிமேதகு ஜனாதிபதி அவர்களினால் அடியோடு வேரறுக்கப்பட்டு நாட்டில் சமாதானமும் அபிவிருத்திக்கான சந்தர்ப்பங்கள் அரசினால் நாட்டு மக்களுக்கு ஏற்படுத்திக் கொடுக்கப்பட்டிருக்கும் இச்சந்தர்ப்பத்தில் மீண்டும் ஆயுதக் காலாச்சாரத்தை ஊக்குவிக்கும் தியசக்திகளின் பின்புலத்தை கண்டுபிடிக்க ஜனநாயகத்தை நாட்டில் ஸ்தாபிக்க விரும்பும் அனைத்து அரசியல் கட்சிகளும் தமது ஒத்துழைப்பினை காவல்துறையினருக்கு வழங்க வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டுள்ளார்.
எதிர்காலத்தில் தமது கட்சி உறுப்பினர்கள் சுதந்திரமாக தமது மக்கள் பணியை மேற்கொள்ளுவதற்கு காவல் துறையினர் பாதுகாப்பளிக்க வேண்டும் என்றும் தாம் எப்போதும் காவல் துறையினரின் பாதுகாப்பையே முழுமையாக நம்புவதாகவும் இவ்வாறான படுகொலைகள் தொடராமல் இருப்பதற்கு காவல் துறையினரின் முழுமையான பாதுகாப்பையும் ஒத்துழைப்புக்களையும் தமது கட்சி எதிர்பார்த்து நிற்பதாக கட்சியின் பொதுச் செயலாளர் அவர்கள் தனது இரங்கல் உரையில் தெரிவித்துள்ளார்.


0 commentaires :

Post a Comment