6/22/2009

மேற்கு வங்காள மாநிலத்தில் மாவோயிஸ்டுகள் கிளர்ச்சி: பாதுகாப்புப் படையினர் அனுப்பிவைப்பு


மேற்கு வங்காள மாநிலத்தில் அரசுக் கெதிரான கலகங்களில் இறங்கி சில கிராமங்களைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்த மாவோயிஸ்ட் போராளிகளை விரட்டியடிக்க இந்திய இராணுவம் அனுப்பி வைக்கப்பட்டது.
சுமார் 1800 இராணுவத்தினர் மேற்கு வங்காள மாநிலத்துக்கு அனுப்பி வைக்கப் பட்டனர்.
லொறிகள், பீரங்கிகளுடன் சென்ற இந்திய இராணுவத்தினர் சென்ற சனிக் கிழமை மீண்டும் இடங்களை கைப்பற்றி மாவோயி ஸ்டுகளை விரட்டியடித்தனர்.
அடர்ந்த காடுகளூடாகச் சென்ற இராணு வத்தினர் மவோயிஸ்டுகளின் கட்டுப்பா ட்டிலிருந்த லால்கார் நகரத்தை மீளவும் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்ததாக இராணுவ உயரதிகாரி தெரிவித்தார். இன் னும் சில நாட்களின் பின்னர் அனைத்துப் பிரதேசங்களும் கட்டுப்பாட்டுக்குள் வந்து விடுமென்றார். இந்தியாவின் மேற்கு வங்காள மாநிலத்தில் இந்திய மாக்ஸிஸ்ட் கட்சியின் ஆட்சிநிலவுகிறது கடந்த வாரம் மாநில அரசுக்கெதிராகப் புரட்சி செய்த மாவோயிஸ்ட்டுகள் சில கிராமங்களைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தனர். கிராமவாசிகள் சிலரும் மாவோயிஸ்டுக ளுடன் இணைந்து கொண்டனர். இதை யடுத்து சென்ற சனிக்கிழமை இந்திய அரசு பாதுகாப்புப் படையை அங்கு அனுப் பியது பொது மக்களின் உயிரிழப்புக் களைத் தவிர்க்கும் வகையில் அங்கு இராணுவ நடவடிக்கை முன்னெடுக்கப்ப ட்டது.
இதில் மாவோயிஸ்டுகள் தங்கள் முன்னரங்க நிலைகளிலிருந்து பின்வாங்கச் சென்றனர் தலைநகர் கொல்கத்தாவிலிரு ந்து 80 மைல் தொலைவில் லால்கார் நகர் உள்ளது. இது உட்பட இன்னும் பல கிராமங்களை படையினர் மீட்டெடுத்தனர்.0 commentaires :

Post a comment