11/30/2009

ஏகாதிபத்தியங்களுக்கு பச்சைக்கொடி காட்டினார் பொன்சேகா.


அரசியலுக்கு புதிய தலைவரான ஜெனரல் (ஓய்வு பெற்ற) சரத் பொன்சேகா ஜனாதிபதி தேர்தலில் தான் போட்டியிடப் போவதாக நேற்று அறிவித்தார். அச் சமயம் அவர் உள்ளூர் மற்றும் வெளிநாட்டு ஊடகவியலாளர்களுடன் நடத்திய ஊடகவியலாளர் மாநாட்டின் போது எதிர்க்கட்சியினரின் கூட்டணியில் உள்ள பங்காளி கட்சிகளின் கொள்கைகளுக்கு மாறான கருத்துக்களை கூறியிருந்தார் நாட்டின் பொருளாதாரம் பற்றி தனக்கு எதுவும் தெரியாது என்பதை அச் சமயம் அவர் ஏற்றுக் கொண்டதுடன் ஐக்கிய தேசியக் கட்சி தசாப்தங்களுக்கு முன் கடைப்பிடித்து வந்த திறந்து பொருளாதார கொள்கையை ஏற்றுக் கொள்வதாகவும், தான் ஜனாதிபதியாக தெரிவானால் அதனையே கடைப்பிடிக்கப் போவதாகவும் கூறினார். கூட்டணியின் பங்காளி கட்சியான மக்கள் விடுதலை முன்னணியானது ஐக்கிய தேசியக் கட்சியின் திறந்த பொருளாதார கொள்கையை முழுமையாக எதிர்த்து வருவது பற்றி அவருக்கு எதுவும் தெரிந்திருக்கவில்லை. பொன்சேகாவின் இவ்வாறான கொள்கையை மக்கள் விடுதலை முன்னணி ஏற்றுக் கொள்ளுமா என்று அரசியல் பகுப்பாய்வாளர்கள் கேள்வி எழுப்புகின்றனர். அவ்வாறான கொள்கை உள்ளூர் கைத்தொழில்களை பாதிப்பதுடன், அரச துறையில் வேலை வாய்ப்புகளையும் குறைத்து, தனியார்மயப்படுத்தலை ஊக்குவிப்பதுடன் எரிபொருள் விலைகளையும் அதிகரித்துவிடும் என்று அரசியல் பகுப்பாய்வாளர்கள் கூறுகின்றனர். மக்கள் விரும்பினால் மனத்திருப்திக்காக மதுபானம் அருந்தும் சுதந்திரம் அவர்களுக்கு வழங்கப்பட வேண்டும் என்று ஜெனரல் பொன்சேகா மற்றொரு தவறான விடயத்தையும் அங்கு குறிப்பிட்டார். இதன் மூலம் நாட்டில் குடிகாரர்கள் பெருமளவில் அதிகரிக்கும் நிலை ஏற்படலாம். அத்துடன் தனது தேர்தல் பிரசாரத்துக்காக புலிகள் இயக்க தலைவர் பிரபாகரனின் பெற்றோர்களிடமிருந்தும், புலிகள் ஆதரவாளர்களிடமிருந்தும் நிதி உதவியை ஏற்றுக் கொள்ள தயாராக இருப்பதாக அவர் அங்கு கூறியிருந்தது மிகவும் மோசமான ஒரு கூற்றாக அமைந்தது நாட்டின் ஸ்திரத்தை ஒழிக்கும் வெளிநாட்டிலுள்ள புலிகளின் சதி வேலையின் ஒரு பகுதியாக ஜெனரலின் இந்த கூற்று அமைந்திருப்பதாக பொது மக்கள் கோபாவேசத்துடன் இருக்கின்றனர்.

நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறையை ஒழிப்பதற்கு பாராளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பெரும்பான்மை அவசியமென ஜெனரல் அங்கு அழுத்தமாக கூறினார். முன்றில் இரண்டு பெரும்பான்மை என்ற தூரத்துக்கனவை, செய்ய முடியாத ஒன்றைப் பற்றி பேசுவதற்கு முன் அவர் ஜனாதிபதி தேர்தலில் வெற்றி பெறுவதை பற்றி சிந்திக்க வேண்டும் என்று அரசியல் பகுப்பாய்வாளர்கள் கூறுகின்றனர். அதேவேளை யுத்த முனையில் தான் பதவி வகித்தபோது பல தவறுகளை செய்ததாக ஜெனரல் மேற்படி ஊடகவியலாளர் மாநாட்டில் ஒப்புக் கொண்டார். ஒரு சந்தர்ப்பத்தில் ஊடகவியலாளர்கள் அவரிடம் பல கேள்விகளை எழுப்பினர். இதனால் தடுமாற்றம் அடைந்த ஜெனரல் பொன்சேகா அக்கேள்விகளில் பலவற்றுக்கு பதிலளிக்கும் அரசியல் அனுபவம் தனக்கு இல்லை என்று கூறியதுடன் முடிந்த வரை குறைந்த அளவு கேள்விகளையே தன்னிடம் கேட்குமாறு ஊடகவியலாளர்க ளிடம் வலியுறுத்தி கேட்டுக் கொண்டார்.


»»  (மேலும்)

இலங்கையில் பொதுநலவாய மாநாட்டை நடத்த 45 நாடுகள் ஆதரவு

2011 ஆம் ஆண்டில், பொதுநலவாய நாடுகளின் மாநாட்டை, இலங்கையில் நடத்துவதற்கு 51 நாடுகளில் 45 நாடுகள் ஆதரவை வெளியிட்டுள்ளன.

இந்த ஆதரவு கடந்த புதன்கிழமை ரினிடாட் அன்ட் டபேக்கோவில் நடைபெற்ற பொதுநலவாய அமைச்சர்களின் மாநாட்டில் கிடைக்கப் பெற்றுள்ளது.

பிரித்தானியா, நியூஸிலாந்து மற்றும், கனடா ஆகிய நாடுகள் இலங்கையில் பொதுநலவாய நாடுகளின் கூட்டம் என்ற யோசனைக்கு தமது எதிர்ப்பை வெளியிட்டுள்ளன.

2007 ஆம் ஆண்டு கம்பாலாவில் நடைபெற்ற பொதுநலவாய மாநாட்டின் போது 2011 ஆம் ஆண்டின் மாநாட்டை இலங்கையில் நடத்துவதற்குத் தீர்மானிக்கப்பட்டது.

அதேவேளை, இலங்கையில் மாநாட்டை நடத்துவதற்கு கனடா, பிரித்தானியா மற்றும் நியூஸிலாந்து ஆகிய நாடுகள் எதிர்ப்பு வெளியிட்டமையை அடுத்து இந்த விடயத்தைப் பொதுநலவாய நாடுகளின் தலைவர்கள் மாநாட்டில் முன்கொண்டு வர தீர்மானிக்கப்பட்டுள்ளது»»  (மேலும்)

முன்பள்ளி ஆசிரியர்களுக்கான பயிற்சி பட்டறை


கிழக்கு மாகாண முன்பள்ளி ஆசிரியர்களுக்கான பயிற்சி பட்டறை இன்று மட்டக்களப்பு சர்வோதயத்தில் நடைபெற்றது, கிழக்கு மாகாண சபையும் முன்பள்ளி ஆசிரியர் பயிற்சி நிறுவகமும் இணைந்து நடாத்தும் இந்நிகழ்வில் பிரதம அதிதியாக கிழக்கு மாகாண முதலமைச்சரும், அதிதிகளாக திருமதி சுபாஸ் சக்கரவர்த்தி மற்றும் புஸ்ப்பா அளுத்கமகே முதலமைச்சரின் இணைப்புச் செயலாளர் பூ.பிரசாந்தன் ஆகியோர் கலந்து கொண்டனர். இப்பயிற்சி பட்டறையில் சுமார் 600 முன்பள்ளி ஆசிரியர்கள் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது


»»  (மேலும்)

கனடாவுடன் இந்தியா அணு ஒப்பந்தம்


கனடாவுக்கும் இந்தியாவுக்கும் இடையே அணு சக்தி ஒப்பந்தம் போர்ட் ஆப் ஸ்பெயினில் கடந்த சனிக்கிழமை கையெழுத்தானது. கொமன் வெல்த் நாடுகளின் உச்சி மாநாட்டில் பங்கேற்ற பிரதமர் மன்மோகன் சிங் கனடா நாட்டு பிரதமர் ஸ்டீபன் ஹார்பருடன் இது குறித்து பேச்சுவார்த்தை நடத்தினார். அதன் அடிப்படையில் ஒப்பந்தம் கையெழுத்தானது.

அணு சக்தி சக்தி துறையில் இந்தியா மீது விதிக்கப்பட்டிருந்த தடை நீக்கப்பட்ட பின் இந்தியாவுடன் ஒப்பந்தம் செய்து கொள்ளும் 8 வது நாடு கனடா.»»  (மேலும்)

சிறுபான்மையினரின் அபிலாஷைகளை நிறைவேற்ற சிறந்த தலைவர் - கிழக்கு முதல்வர்
நடைபெறவுள்ள ஜனாதிபதித் தேர்தலில் ஜனாதிபதி மஹிந்த ராஜ பக்ஷவை ஆதரிப்பதற்கு தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சி முடிவுசெய்துள்ளது. இது தொடர்பாக ரீ.எம்.வி.பி.யின் தலைவரும் கிழக்கு மாகாண முதல மைச்சருமான சிவனேசதுரை சந்திர காந்தன் அறிவித்துள்ளார். ஜனாதிபதியை ஆதரிப்பதன் மூல மாகத்தான் கிழக்கில் சிறுபான்மை மக்களின் தங்களது அபிலாஷைகளை அடைய முடியுமென முதலமைச்சர் இந்த அறிவிப்பில் தெரிவித்துள் ளார். இது தொடர்பாக அவர் விடுத்து ள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ள தாவது ஜனாதிபதி மஹிந்த ராஜ பக்ஷவை இந்தத் தேர்தலில் ஏன் ஆதரிக்க வேண்டும் என்பதற்கு நிறைய காரணங்கள் உண்டு. எனி னும் பிரதானமாக கூறுவதென் றால்.... கிழக்கு மாகாண சபை என்று ஒன்று உருவாகியதற்கும் அது இன்று இயங்கிக் கொண்டிருப்பதற் கும் மஹிந்த ராஜபக்ஷவே கார ணம். கிழக்கு மாகாணத்தை முழு மையாக அபிவிருத்தி செய்வேன் என்ற அவரது வாக்குறுதி நிறைவேற்ற ப்பட்டுக் கொண்டிருக்கின்றது. பாரிய அபிவிருத்திப் பணிகள் நிறைவு பெற்றுள்ளன. மேலும் மேலும் அபிவிருத்திப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. மக்களின் வாழ்வாதாரம் இன்று மேம்படுத்தப்பட்டுள்ளன. கிழக்கு மாகாணத்தை அபிவிருத்தி செய் வேன் என்று அவர் வழங்கிய வாக்குறுதிகளுக்கும் மேலாக இன் னும் உதவிகள் செய்வேன் என்ற வாக்குறுதியையும் அவர் வழங்கியு ள்ளார் ஜனாதிபதிக்கும் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சிக்கும் இடையில் நெருங்கிய உறவுகள் அன்று தொட்டு இன்று வரை இருந்து வருகின்றது. அதில் எந்தவித மாற்றமும் இல்லை. அந்த உறவு மென்மேலும் வலுப்படும் என்பது உறுதி. தமிழ் மக்கள் இன்று நிம்மதியாக வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். அதை நாம் இன்று கண்கூடாக காண்கி ன்றோம். முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேக் காவை ஒரு போதும் தமிழ் மக்கள் ஆதரிக்க மாட்டார்கள். அவருக்கு ஒரு அரசியல் பின்னணி கிடையாது. அவருக்குரிய பின்னணி என்ன என்பதை மக்கள் நன்கு அறிவார்கள். நாம் அதை கூறத் தேவையில்லை. ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ ஒரு இறுக்கமான அரசியல் பின்னணியுடன் கூடியவர் என்பது யாவரும் அறிந்ததே. முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேக்கா தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியை இல்லாது ஒழிக்க வேண்டும் என்றிருந்தவர், என முதல்வர் சிவனேசதுரை சந்திரகாந்தன் தெரிவித்தார் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை நாம் ஆதரிக்கப் போவதில்லையென சில தவறான கருத்துக்கள் உலவுவதாகவும் அதில் எவ்வித உண்மையும் இல்லை என்றும் முதல்வர் சிவனேசதுரை சந்திரகாந்தன் தெரிவித்தார் எமக்கு சில குறைபாடுகள் இருக்கலாம். அவை அனைத்தும் எமக்கு இரண்டாம் பட்சமானவை. ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை மீண்டும் ஜனாதிபதியாக்குவதே எமது முதலாவது இலக்கு என்றும் அவர் மேலும் கூறினார்.


»»  (மேலும்)

11/29/2009

மாணவர்கள் கல்வியில் மாத்திரமின்றி இணைப்பாடவிதான செயற்பாடுகளிலும் அதிக அக்கறை காட்ட வேண்டும்- கிழக்கு மாகாண முதலமைச்சர்

img_2418கல்குடா வலயத்தின் மட்/வாழைச்சேனை இந்துக் கல்லூரியில் இடம்பெற்ற செவ்வாழை சஞ்சிகை வெளியீட்டில் பிரதம அதிதியாக கலந்து உரையாற்றிய கிழக்கு மாகாண முதலமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். பாடசாலை அதிபர் கே.தவராஜா தலைமையில் நடைபெற்ற மேற்படி சஞ்சிகை வெளியீட்டில் தொடர்ந்து கருத்து தெரிவித்த கிழக்கு மாகாண முதலமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் மாணவர்கள் அனைவருக்கும் நேர முகாமைத்துவம் மிகவும் முக்கியமான ஒன்றாகும் பாடசாலைக் காலங்களில் இருந்து நேர முகாமைத்துவத்தினை உணர்ந்து செயற்படுவதன் ஊடாக எதிர்காலத்தில் தொழில்வாய்ப்புக்கள் பெற்று தொழிலாற்றுகின்ற இடங்களிலும் நேர முகாமைத்துவத்தின் பங்கு பாரியளவில் செல்வாக்கு செலத்தும். பாடசாலையில் கல்வி கற்கின்ற மாணவர்கள் அனைவருமே எதிர்காலத்தில் சுவீற்சமிக்க எமது நாட்டை கட்டியெழுப்ப வேண்டிய பொறுப்புக்குரியவர்கள் பாடசாலைப் பருவத்தில் நாம் பழகுகின்ற ஒழுக்க விழுமியங்கள் எமது எதிர்கால வாழ்விற்கு வழிகோலாக அமைகின்றது என குறிப்பிட்டார். அவர் தொடர்ந்து குறிப்பிடுகையில், கடந்த காலங்களில் எமது மாணவ சமுதாயம் பல்வேறு இடர்களை சந்தித்து இருக்கின்றது. ஆனால் இன்று நாட்டின் எப்பகுதியிலும் குறிப்பாக கிழக்கு மாகாணத்தில் மாணவர்கள் எதுவித தங்கு தடைகளுமின்றி தாங்கள் விரும்பிய வழியில் கல்வி கற்பதற்கு ஏற்ற சூழல் உருவாக்கப்பட்டிருக்கின்றது. பாடசாலையில் கல்வி பயில்கின்றபோது பரீட்சையில் சித்தியடைவது மட்டும் எமது இலக்கல்ல, அதனோடு இணைந்து இணைப்பாடவிதானங்கள் எனக் குறிப்பிடப்படுகின்ற விளையாட்டு, கவிதை. கட்டுரை, நாடகம், சிறுகதை, தலைமைத்துவப்பயிற்சி விவாதங்கள் போன்ற பல்வேறு துறைகளிலும் சிறந்தவர்களாக விளங்க வேண்டும், பாடசாலையைப் பொறுத்தவரையில் மாணவர்கள், ஆசிரியர்கள், அதிபர்கள், பெற்றோரகள், பாடசாலை அபிவிருத்தி சங்கத்தினர், நலன் விரும்பிகள், பழைய மாணவர்கள் என ஓர் குடும்பம்போல் செயற்படுகின்றது. இதில் கற்பிக்கின்ற ஆசிரியர்களின் செயற்பாடானது ஒவ்வொரு மாணவனையும் பரீட்சைக்கு தயார்படுத்துவதோடு அவர்கள் தமது சொந்த வாழ்வில் கடைப்பிடிக்க வேண்டிய விடயங்களையும் சமுகத்தில் மதிக்கப்படுபவர்களாகவும் மாற்றப்படவேண்டிய பாரிய பொறுப்பு உடையவர்களாக விளங்குகின்றார்கள். பாடசாலை கல்வி தவிர்ந்த ஏனைய இணைப்பாடவிதான செயற்பாடுகளில் மாணவர்கள் ஆர்வம் காட்டுவதற்கு ஆசிரியர்களே வழிகாட்டியாக இருக்கவேண்டும். இவ்வாறு இருக்கின்ற பட்சத்திலேயே ஒவ்வொரு மாணவனினதும் இயல்பான ஆக்கப்படைப்புக்களை வெளிக் கொணர முடியும். இவ்வாறான ஆக்கப்படைப்புக்களின் தொகுப்புக்களே சஞ்சிகையாக ஒவ்வொரு பாடசாலையிலும் வருடாந்தம் வெளியிடப்படவேண்டும். இதனூடாக மாணவர்களது தனிப்பட்ட திறமை வெளிக்கொணரப்படுகின்றது. இவ்வாறான ஓர் வெளிப்படாகவே இன்று இந்த வாழைச்சேனை இந்துக்கல்லூரியின் செவ்வாழை சஞ்சிகையாகும். இச் சஞ்சிகை வெளியீட்டு விழாவில் கலந்து கொள்வதையிட்டு நான் மட்டற்ற மகிழ்ச்சியடைகின்றேன் எனவும் குறிப்பிட்டார். இவ்விழாவில் மாணவர்களின் வரவேற்பு நடனம், ஒயிலாட்டம், பொம்மலாட்டம், எனப்பல கலைநிகழ்வுகளும் இடம்பெற்றது, இச்சஞ்சிகை வெளியீட்டு விழாவில் கௌரவ அதிதியாக கல்குடா வலையக் கல்விப்பணிப்பாளர் திரமதி சுபாஸ் சக்கரவர்த்தி அவர்களும் விசேட அதிதிகளாக கோட்டக்கல்விப்பணிப்பாளர் திரு எஸ் .தங்கராஜா, உதவிக்கல்விப்பணிப்பாளர் ஞானராஜா, கோரளைப்பற்று கோட்டக்கல்விப்பணிப்பாளர் சின்னத்தம்பி அவர்களும் பாடசாலை அதிபர்கள், அபிவிருத்தி சங்க உறுப்பினர்கள் மற்றும் ஆசிரியர்கள், மாணவர்கள், பொதுமக்கள் என பலரும் கலந்து கொண்டனர்.இந்நிகழ்வின்போது முதலமைச்சர் 5ம் தர புலமைப்பரீட்சையில் சித்தியடைந்த மாணவர்களுக்கு பரிசில்களையும் வழங்கி வைத்தார்.

img_2312

img_2354

img_2380

img_2469

img_24181

img_2423

img_2427

img_2463

img_2445
»»  (மேலும்)

ஜனாதிபதி மஹிந்தவுடன் இணைந்து அரசியல் தீர்வு முயற்சியை முன்னெடுக்க முடியும்


வேட்பு மனு தாக்கல் செய்வதற்கு முன்னரே ஜனாதிபதித் தேர்தல் சூடு பிடிக்கத் தொடங்கிவிட்டது. பயங்கரவாதத்தைத் தோற்கடித்தமை, நான்கு வருட காலத்துக்குள் கூடுதலான அபிவிருத்தித் திட்டங்களை நடைமுறைப்படுத்தியமை, இடம்பெயர்ந்த மக்களை மீளக் குடியமர்த்தியதில் ஈட்டிய சாதனை, இனப் பிரச்சினைக்கான அரசியல் தீர்வு ஆகியவை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் தேர்தல் பிரசாரத்தில் முக்கிய இடம் வகிக்கவுள்ளன. எதிரணியின் பொது வேட்பாளர் எவராக இருந்தாலும் அவரது தேர்தல் பிரசாரத்தில் முக்கிய இடம் வகிக்கப் போவது நிறைவேற்று ஜனாதிபதி முறையை நீக்கும் விடயமாகும். நிறைவேற்று ஜனாதிபதி முறையை நீக்குவது என்ற ஒற்றைக் கோரிக்கையின் அடிப்படையிலேயே எதிரணிக் கூட்டு அமைந்திருக்கின்றது. தங்கள் பொது வேட்பாளர் தெரிவு செய்யப்பட்டு ஆறு மாதத்துக்குள் நிறைவேற்று ஜனாதிபதி முறையை நீக்குவார் என்று எதிரணித் தலைவர்கள் கூறுகின்றார்கள். இதைப் போன்ற ‘புலுடா’ வேறு எதுவும் இருக்க முடியாது. ஆரம்பத்திலேயே இவர்கள் மக்களை ஏமாற்றுகின்றார்கள். நிறைவேற்று ஜனாதிபதி முறை இன்றைய அரசியலமைப்பின் அடிப்படையான அம்சங்களுள் ஒன்று. ஜனாதிபதியினால் அதை மாற்ற முடியாது. பாராளுமன்றத்துக்கே அந்த அதிகாரம் உண்டு. அரசியலமைப்புத் திருத்த மசோதா பாராளுமன்றத்தில் மூன்றிலிரண்டு பெரும்பான்மையுடன் நிறைவேற வேண்டும். அதன்பின் சர்வசன வாக்கெடுப்பில் மக்களின் அங்கீகாரத்தைப் பெற வேண்டும். இந்த நடைமுறைக்கூடாகவே நிறைவேற்று ஜனாதிபதி முறையை நீக்க முடியும். பொது வேட்பாளர் ஜனாதிபதியாகத் தெரிவு செய்யப்பட்டு ஆறு மாதங்களுக்குள் நிறைவேற்று ஜனாதிபதி முறையை நீக்குவார் என்று எதிரணித் தலைவர்கள் கூறுவது அப்பட்டமான ஏமாற்று வித்தை. ஜனாதிபதித் தேர்தலிலும் பாராளுமன்றத் தேர்தலிலும் வெற்றியீட்ட முடியும் என்ற இவர்களின் கற்பனையை ஒரு வாதத்துக்காக ஏற்றுக்கொண்டு பார்த்தாலும், ஆறு மாதத்துக்குள் நிறைவேற்று ஜனாதிபதி முறையை இவர்களால் நீக்க முடியாது. பாராளுமன்றத்தின் ஆயுட்காலம் ஏப்ரல் மாதத்திலேயே முடிவடைகின்றது. பாராளுமன்றம் கலைக்கப்பட்டுத் தேர்தல் நடைபெறுவதும், புதிய பாராளுமன்றத்தில் அரசியலமைப்புத் திருத்த மசோதா மூன்றிலிரண்டு பெரும்பான்மையுடன் நிறைவேறுவதும், அதன்பின் சர்வசன வாக்கெடுப்பு நடைபெறுவதும் இன்றிலிருந்து ஆறு மாத காலத்துக்குள் நடக்க முடியாதவை. ஆரம்பத்திலேயே மக்களை ஏமாமற்றுகின்றார்கள் எதிரணியின் பொது வேட்பாளர் யார் என்பது திட்டவட்டமாக அறிவிக்கப்படாத போதிலும், சரத் பொன்சேகாவே தங்கள் வேட்பாளர் என்று ரணில் கூறுகின்றார். ஐக்கிய தேசியக் கட்சியின் முக்கியமான ‘புள்ளிகள்’ பலர் இந்த முடிவை ஏற்கவில்லை. ஏற்காதவர்களில் சிலர் வெளிப்படையாகவே எதிர்ப்புத் தெரிவித்துச் செயற்குழுக் கூட்டத்திலிருந்து வெளியேறியிருக்கி ன்றார்கள். மற்றவர்கள் மெளனமாக இருக்கின்றார்கள். அவர்களும் தங்கள் எதிர்ப்பை ஏதோவொரு விதத்தில் வெளிப்படுத்தவே செய்வார்கள். செயற்குழுக் கூட்டத்திலிருந்து வெளியேறியவர்களில் கொழும்பு மாநகரின் முன்னாள் உதவி மேயர் அஸாத் சாலியும் ஒருவர். சரத் பொன்சேகா கடந்த காலங்களில் தெரிவித்த இனவாதக் கருத்துகளை விலாவாரியாக எடுத்துக்கூறியே அஸாத் சாலி தனது எதிர்ப்பைத் தெரிவித்திருக்கின்றார். தன்மானமுள்ள சிறுபான்மையினர் இவருக்கு எப்படி வாக்களிக்க முடியும் என்று கேள்வியும் எழுப்பியிருக்கின்றார். இந்தக் கேள்வி ரணிலின் மனதி லும் தோன்றியிருக்க வேண்டும். அதனால்தான் தமிழ் மக்களின் உரிமைகளுக்குத் தான் உத்தரவாதம் அளிப்பதாகக் கடந்த வியாழக் கிழமை கூறினார். இவரே தமிழ் மக்களின் உரிமைகளில் அக்கறை இல்லாதவர். இன்னொருவருக்காக இவர் உத்தரவாதம் அளிக்கிறார். இனப் பிரச்சினையைப் பொறுத்தவரையில் ஐக்கிய தேசியக் கட்சி நழுவல் போக்கையே பின்பற்றி வருகின்றது. சில சந்தர்ப்பங்களில் முழுக்க முழுக்கப் பேரினவாத நிலைப்பாட்டையும் எடுத்திருக்கின்றது. எவர் தலைவராக இருந்தாலும் இதுதான் நிலை. ரணிலும் நழுவல் போக்கையும் கடைப்பிடித்திருக்கின்றார். பேரினவாத நிலைப்பாட்டையும் எடுத்திருக்கின்றார் பொதுசன ஐக்கிய முன்னணியின் தீர்வுத் திட்டத்தை எதிர்த்ததும் அத் தீர்வுத் திட்டம் பாராளுமன்றத்தில் நிறைவேற முடியாத நிலையை ஏற்படுத்தியதும் ரணிலின் பேரினவாத முகம். அன்று ரணிலுக்குப் பின்னால் நின்றுகொண்டு இத்தீர்வுத் திட்டத்தை எரித்தவர்களும் கிழித்து எறிந்தவர்களும் தமிழினத்தின் துரோகிகள். அத்துரோகிகளுக்குத் தலைமை தாங்கியவர் ரணில். ரணிலின் நழுவல் போக்கு சர்வகட்சிப் பிரதிநிதிகள் குழு தொடர்பானது. இக் குழுவின் செயற்பாடுகளில் ஐக்கிய தேசியக் கட்சி பங்குபற்றவில்லை. பங்குபற்றாமல் இருப்பதற்கு ரணில் கூறிய காரணங்கள் பொய்யானவை. நழுவல்தான் உண்மையான காரணம். சர்வகட்சிப் பிரதிநிதிகள் குழுவின் செயற்பாடுகளில் பங்குபற்றினால் குழுவின் ஆலோசனைகளை ஏற்க வேண்டும். அல்லது கட்சி தனியாக ஆலோசனைகளை முன்வைக்க வேண்டும். ரணில் இரண்டையும் விரும்பவில்லை. தீர்வுக்காக எவ்வித ஆலோசனையையும் முன்வைக்காமல் தமிழ் மக்களின் நண்பனாக வேஷம் போடுவது தான் ரணிலின் நோக்கம். அதனால்தான் இன்று வரை அரசியல் தீர்வுக்கான எந்தவொரு ஆலோசனையையும் அவரது கட்சி முன்வைக்கவில்லை. இந்த லட்சணத்தில் தமிழ் மக்களின் உரிமைகளுக்கு உத்தரவாதம் அளிக்கப் போகின்றாராம். கட்சிக்குள் முக்கியமானவர்களின் எதிர்ப்பையும் பொருட்படுத்தாமல் பொது வேட்பாளரை நிறுத்துவதில் ரணில் கூடுதலான அக்கறை செலுத்துவதற்கு அவரது சுயநல நோக்கமே காரணம். மஹிந்த ராஜபக்ஷவைத் தோற்கடிக்க முடியாது என்பது ரணிலுக்குத் தெரியும். ஏற்கனவே எல்லாத் தேர்தல்களிலும் தோல்வியடைந்ததால் கட்சிக்குள் &?ஸிl8நிlழி முகங்கொடுக்கின்றார். இந்தத் தேர்தலிலும் தோல்வியடைந்தால் கட்சியின் தலைவர் என்ற அந்தஸ்து அம்போ ஆகிவிடும். கட்சிக்குள்ளிருந்து வேறொருவரை வேட்பாளராகப் போட்டாலும் தலைவர் பதவிக்கு ஆபத்து. எனவேதான், வெளியிலிருந்து ஒருவரைப் பொது வேட்பாளராகப் போடும் முடிவுக்கு வந்தார். அதனால்தான் வழமையான பாணியில் தமிழ் பேசும் மக்களின் வாக்குகளைப் பொது வேட்பாளருக்குப் பெற்றுக்கொடுக்க முயற்சிக்கின்றார். ரணிலின் முயற்சி ஒருபுறமிருக்க, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நிலைப்பாடு என்ன என்ற கேள்வி அரசியல் வட்டாரங்களில் கேட்கப்படுகின்றது. தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக் குள் ஒரே கருத்துடையவர்கள் இல்லை. ஆரம்பத்திலேயே வேறுபட்ட கருத்துநிலைகளைக் கொண்டவர்களின் கூட்டணி தான் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு. பாராளுமன்றப் பிரதிநிதித்துவம் என்ற இலக்குடன் ஒன்று சேர்ந்தவர்களைப் புலிகளின் ஆயுதபல அச்சுறுத்தல் பிணைத்து வைத்திருந்தது. இப்போது புலிகள் அரங்கில் இல்லை. அதனால் மாறுபட்ட கருத்துகள் வெளிவருகின்றன. புலிகளின் நிகழ்ச்சி நிரலை ஏற்றுச் செயற்பட்டதன் மூலம் தமிழ் மக்களுக்குத் தீங்கு விளைவித்துவிட்டதைச் சிலர் உள்ளூர உணர்கின்றார்கள். புலிகளின் பாதைதான் சரியானது என்ற குரலும் அங்கிருந்து கேட்கின்றது. சுருக்கமாகக் கூறுவதானால் ஒருமித்த நிலைப்பாடொன்றுக்கு வர முடியாத நிலையில் இன்று கூட்டமைப்பு இருக்கின்றது. அரசாங்கம் சரியான பாதையில் செல்கின்றது என்றும், அந்த முயற்சிக்குக் கைகொடுக்க வேண்டும் என்றும் பலர் கருதுவதாகத் தெரிகின்றது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பாக இருந்தாலென்ன, இக் கூட்டமைப்பு உருவாகுவதற்கு முன் வெவ்வேறாக இயங்கிய கட்சிகளாக இருந்தா லென்ன இனப் பிரச்சினையைப் பொறுத்தவரையில் தவறுகள் புரிந்திருக்கின்றன. இத் தவறுகளால் இக் கட்சிகளுக்குப் பாதிப்பு ஏற்படவில்லை. தமிழ் மக்களே பலவிதங்களில் பாதிக்கப்பட்டார்கள். மக்களைத் தொடர்ந்தும் பாதிப்புக்கு உள்ளாக்காத விதத்தில் செயற்பட வேண்டிய கடப்பாடு தமிழ்த் தலைவர்களுக்கு உண்டு.

முதலில் சமகால யதார்த்தத்தை விளங்கிக்கொள்ள வேண்டும்.

பதின்மூன்றாவது அரசியலமைப்புத் திருத்தத்தின் கீழ் உருவாக்கப்பட்ட மாகாண சபைகள் செயற்படுகின்றன. வட மாகாணத்தில் மாகாண சபை செயற்படவில்லை. இந்த மாகாண சபை இனப் பிரச்சினைக்குச் சரியான தீர்வு என்று கூறுவதற்கில்லை. அதே நேரம் நிராகரிக்கப்பட வேண்டியது என்றும் கூற முடியாது. மாகாண சபை மூலமும் ஓரளவு சுயாட்சி அதிகாரம் கிடைக்கின்றது. ஆனால் அது போதுமானதல்ல. மாகாண சபையிலும் பார்க்கக் கூடுதலான ஒரு தீர்வைப் பெற வேண்டுமானால் அரசியலமைப்பில் மாற்றம் செய்ய வேண்டும். அதற்குத் தேவையான மூன்றிலிரண்டு பெரும்பான்மை அரசாங்கத்திடம் இல்லை. அரசாங்கத்துக்கு வெளியே உள்ள கட்சிகளிடமிருந்து அப் பெரும்பான்மையைப் பெறுவதற்கான சூழ்நிலையும் இல்லை.

இந்த நிலையிலேயே தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக் கட்சிகள் புலிகளின் நிகழ்ச்சி நிரலை ஏற்றுத் தனிநாட்டுப் பாதையிலே பயணித்தன. இதன் விளைவு தமிழ் மக்களுக்குப் பாதகமாக அமைந்து விட்டது. ஆயுதப் போராட்டமோ, தனிநாடோ சாத்தியமில்லை என்பது சந்தேகத்துக்கு இடமின்றி நிரூபணமாகிவிட்டது. ஐக்கிய இலங்கையில் அரசியல் தீர்வுதான் தமிழ் மக்களின் விமோசனத்துக்கான ஒரே வழி என்பது தெளிவாகிவிட்டது. உடனடியாக அத்தகைய தீர்வை அடையக்கூடிய சூழ்நிலை இப்போது இல்லை.

நியாயமான அரசியல் தீர்வுக்கு எதிரான இனவாத சக்திகள் அரசியல் அரங்கில் ஓரளவு பலமடைந்திருக்கின்றன. தமிழ்த் தலைவர்களின் தீர்க்கதரிசனமற்ற சில முடிவுகளே இந்த நிலை ஏற்படுவதற்கும் காரணம். இந்தப் பின்னணியிலேயே அரசியல் தீர்வுக்கான முயற்சி முன்னெடுக்கப்பட வேண்டும். முழுமையான அரசியல் தீர்வை அடையக்கூடிய சூழ்நிலை இப்போது இல்லை என்பதால் படிப்படியாக முன்னேறிச் செல்ல வேண்டும். பதின்மூன்றாவது அரசியலமைப்புத் திருத்தத்திலும் கூடுதலான தீர்வை நடைமுறைப்படுத்தப் போவதாக ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ கூறுகின்றார். அவரே வெற்றிவாய்ப்பு உள்ளவராகவும் இருப்பதால் அவருடன் இணைந்து அரசியல் தீர்வு முயற்சியை முன்னெடுக்கலாம். பாராளுமன்றத் தேர்தலில் அவரது கட்சி மூன்றிலிரண்டு பெரும்பான்மை பெறுவதற்குத் தமிழ் பேசும் மக்கள் கைகொடுப்பதன் மூலம் அரசியல் தீர்வு முயற்சியை முன்னெடுப்பதற்கு உதவ முடியும். இவ்வாறு அமையும் தீர்வு முழுமையான அரசியல் தீர்வை அடையும் முயற்சியில் வலுவான அடியெடுப்பாக இருக்கும்.


»»  (மேலும்)

11/28/2009

சிறுபான்மை இனத்தினரே ஜனாதிபதியினை தீர்மானிப்பதில் செல்வாக்கு செலுத்துவர்.-நாகலிங்கம் திரவியம் (ஜெயம்)


fdhfdjh30 வருடங்களான யுத்த அனர்த்தம் முடிவுக்கு கொண்டுவரப்பட்டபின் நடாத்தப்படவிருக்கின்ற ஜனாதிபதித் தெர்தலில் வெற்றி பெறுவது யார்? மக்கள் யாரினை ஜனாதிபதியாக ஏற்றுக் கொள்ளப்போகின்றார்கள்? என்ற எதிர்பார்ப்பு இலங்கையை கடந்து சர்வதேசம்வரை பேசப்படும் விடயம் ஆகிவிட்ட நிலையில், இலங்கையிலும் அனைத்துக் கட்சிகளும் அரசியல் தலைவர்களும் பிரச்சாரத்திற்கான ஆயத்தங்களில் துரிதமாக ஆரம்பித்தள்ளார்கள்.

எது எவ்வாறு அமைந்தாலும் சிறுபான்மை இன மக்களின் வாக்கினை யார் பெறுவார்களோ அவரே ஜனாதிபதியாக பெரும்பான்மை வாக்குகளுடன் தேர்ந்தெடுக்கப்படுவார் என்பது திண்ணம். இதற்கு சான்றாக கடந்த கால வரலாற்று நிகழ்வுகள் பறைசாற்றும் என கிழக்கு மாகாணசபை உறுப்பினரும் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் உப தலைவருமான நாகலிங்கம் திரவியம் (ஜெயம்) தெரிவித்தார்;.

அவர் தொடர்ந்தும் குறிப்பிடுகையில் ரி.எம்.வி.பி கட்சி இலங்கையின் தமிழ் பேசும் மக்களின் குரலாக எதிரொலிக்கும் கட்சி என்பதுடன் இலங்கையிலுள்ள அனைத்து மக்களையும் இனமத மொழி பேதமின்றி நேசிப்பது என்ற வகையில் மக்களினதும் நாட்டினதும் நன்மை கருதி கட்சியின் உயர்மட்ட கலந்துரையாடலின் பின்னர் ஜனாதிபதித் தேர்தலில் ஜனாதிபதியின் கரங்களைப் பலப்படுத்தும் எனவும், கிராம மட்ட மக்களின் உளக் குமுறல்களையும் தேவைகளையும் உணர்ந்து சேவை செய்யக் கூடிய நிலைமைகளை கடந்த காலங்களைப் போல் தொடர்தேற்சியாக வழங்க முன்வரவதனை உறுதி செய்ய வேண்டிய கடமைப்பாடும் ஜனாதிபதிக்கு உண்டு என்பதனையும் சுட்டிக் காட்டுவதாகவும் குறிப்பிட்டார்.»»  (மேலும்)

தமிழ் பேசும் மக்கள் சரியான தருணத்தில் சரியான முடிவு எடுக்க வேண்டும் - அஷாத் மௌலானா.


லங்கையின் இன்றைய முக்கியத்துவம் மிக்க அரசியல் சூழ்நிலை தமிழ் பேசும் மக்கள் சரியான தருணத்தில் சரியானதொரு முடிவை மேற்கொள்வதே அவர்களின் அரசியல் உரிமையினையும் அபிவிருத்தியினையும் பெற்றுக்கொள்வதற்கான யுத்தியாகும் என த.ம.வி.பு கட்சியின் ஊடகப் பேச்சாளரும் கிழக்கு மாகாண முதலமைச்சரின் பிரத்தியேகச் செயலாளருமான அஷாத் மௌலானா தெரிவித்தார்.

தமிழ் மக்களின் நிலையானதொரு உரிமைப் போராட்டம் உரிய இலக்கை இதவரை எய்தமைக்கு தமிழ் அரசியல் தலைமைகளும் ஆயுதத் தலைமைகளும் சரியான நேரத்தில் சரியான முடிவு எடுக்க தவறியும் சரியான நேரத்தில் எடுக்கப்பட்ட தவறான முடிவுகளுமே காரணம் ஆகும். இன்றைய இலங்கையின் அரசியல் சூழ்நிலையின் யயதார்த்தம் உணர்ந்து தமது அரசியல் சக்தியினை சரியான முறையில் பயன்படுத்தவதே தற்போது உள்ள ஒரே வழியாகும். ஜனாதிபதி தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் இலங்கை நிறைவேற்று அதிகாரம் உள்ள ஜனாதிபதி முறையில் சிறுபான்மை மக்கள் தமக்கு தேவையானவற்றை பெற்றுக்கொள்வதற்கான சந்தர்ப்பம் உள்ளது. எனவே தமது வாக்குப் பலத்தை தமது உரிமைகளும் அபிவிருத்தியையும் வென்றெடுப்பதற்கான சரியான ஒரு தலைமையின் பின்னால் முதலீடு செய்வதே தற்போது உள்ள ஒரே வழியாக உள்ளது. இது விடயத்தில் த.ம.வி.பு கட்சி சரியான தருணத்தில் சரியான முடிவை மேற்கொண்டு தமது மக்களின் அரசியல் உரிமை பிரச்சினையிலும் அபிவிருத்தி விடயத்திலும் தூர நோக்கான தீர்க்கதரிசனம் உள்ள பாதையில் பயணிக்க தயாராகியுள்ளது என மேலும் தெரிவித்தார்.
»»  (மேலும்)

2வது சர்வதேச விமான நிலையம்; அம்பாந்தோட்டையில் நேற்று நிர்மாணப் பணிகள் ஆரம்பம்

இலங்கையின் இரண்டாவது சர்வதேச விமான நிலையமான அம் பாந்தோட்டை சர்வதேச விமான நிலையத்தின் நிர்மாணப் பணிகள் நேற்று ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ வினால் உத்தியோகபூர்வமாக ஆரம்பித்து வைக்கப்பட்டது. சீன அரசாங்கத்தின் நிதியுதவியு டன் 210 மில்லியன் அமெரிக்க டொலர் செலவில் நிர்மாணிக்கப்பட வுள்ள மேற்படி விமான நிலை யத்திற்கான பெயர்ப்பலகையை நேற்றுக் காலை ஜனாதிபதி மஹிந்த ராஜ பக்ஷ உத்தியோகபூர்வமாக திறந்து வைத்து நிர்மாணப் பணிகளை ஆர ம்பித்து வைத்தார். அத்துடன் சீன துறைமுக பொறியி யலாளர் நிறுவ னத்திற்கும் - இலங்கை விமான நிலையம் மற்றும் விமான சேவைகள் நிறுவனத்திற்குமிடையில் விசேட ஒப்பந்தமொன்றும் கைச்சாத்திடப்பட்டது. அம்பாந்தோட்டை மாவட்டத்தின் லுணுகம் வெஹெர மத்தல பிரதேசத்தில் மேற்படி விமான நிலையம் நிர்மாணிக்கப்படவுள்ளது டன் 2,000 ஏக்கர் பரப்பளவில் இவ்விமான நிலையமும் அதனைச் சேர்ந்த கட்டிடங்களும் அமையப்பட வுள்ளன. முதலாவது சர்வதேச விமான நிலையமான கட்டுநாயக்க பண்டார நாயக்க சர்வதேச விமான நிலையம் 40 வருட வரலாற்றைக் கொண்டது. அடுத்ததாக இரண்டாவது சர்வதேச விமான நிலையம் அம்பாந்தோட் டையில் அமைக்கப்படவுள்ளது. கட்டுநாயக்க விமான நிலையத்தின் நாற்பதாண்டு பூர்த்தி தினத்தை நினைவுகூரும் வகையில் நேற்று அம்பாந்தோட்டை விமான நிலைய த்திற்கான நிர்மாணப் பணிகள் ஆரம்பிக்கப்பட்டன. நேற்றைய இந்நிகழ்வில் பிரதம அதிதியாகக் கலந்து கொண்டு சர்வதேச விமான நிலையத்திற்கான நிர்மாணப் பணிகளை ஆரம்பித்து வைக்க வருகை தந்த ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை தேசியக் கொடியை கைகளில் ஏந்திய பாட சாலை மாணவர்கள் வரவேற்றனர் அமைச்சர்களான சமல் ராஜபக்ஷ, மஹிந்த அமரவீர, ஜீ. எல். பீரிஸ், ஜோன் செனவிரத்ன, சுமேதா ஜீ. ஜயசேன, பிரதியமைச்சர் சரத் குண ரத்ன, நிருபமா ராஜபக்ஷ எம்.பி. சீனத் தூதுவர் திருமதி யங்சிங்விங் உட்பட இலங்கை சீன முக்கியஸ் தர்கள் பலரும் இந்நிகழ்வில் கலந்து கொண்டதுடன் பல கலாசார அம் சங்களும் இடம்பெற்றன.


»»  (மேலும்)

ஜனவரி 31க்குள் மீள்குடியேற்றத்தை பூர்த்தி செய்யும் செயற்திட்டம் தயார் யாழ்ப்பாணத்தில் மீள்குடியேற்றம் நிறைவு - அமைச்சர் ரிசார்ட்

வவுனியா நிவாரண கிராமங்களிலும், ஏனைய இடங்களிலும் தங்கியுள்ள மக்கள் அனைவரையும் எதிர்வரும் ஜனவரி மாதம் 31ம் திகதிக்கு முன்னதாக அவர்களின் சொந்தக் கிராமங்களில் மீளக்குடியமர்த்த அரசாங்கம் திட்டங்களை வகுத்து செயற்படுவதாக மீள்குடியேற்ற அனர்த்த நிவாரண சேவைகள் அமைச்சர் ரிசாத் பதியுதீன் தெரிவித்தார்.

கிழக்கிலும், யாழ்ப்பாணத்திலும் மீள்குடியேற்றம் முற்றாக நிறைவடைந்துள்ள தாகக் கூறிய அமைச்சர் பதியுதீன், எதிர்வரும் டிசம்பர் 5ம் திகதிக்கு முன்னர் 3600 பேரை மீளக்குடியமர்த்த நடவடிக்கை எடுத்துள்ளதாகக் கூறினார். மீள்குடியேற்ற அனர்த்த நிவாரண சேவைகள் அமைச்சில் நேற்று (27) பிற்பகல் நடைபெற்ற செய்தியாளர் மாநாட்டிலேயே அமைச்சர் இதனைத் தெரிவித்தார்.

இன்று (27) (நேற்று) மாந்தை கிழக்குப் பகுதியில் 800 பேர் மீளக்குடியமர் த்தப்பட்டுள்ளனர். எதிர்வரும் 30ம் திகதி பூநகரியில் 1000 பேர் குடியமர்த்தப்படுவர். கிளிநொச்சி கரைச்சியில் டிசம்பர் இரண்டாந் திகதி ஆயிரம் பேரும், ஐந்தாம் திகதி வவுனியா கிழக்கில் 800 பேரும் மீளக்குடியம ர்த்தப்படுவார்களெனவும் அமைச்சர் குறிப்பிட்டார்.
»»  (மேலும்)

ஜனாதிபதி வேட்பாளர் ஒருவரை நிறுத்த முடியாத நிலையில் ஐ.தே.கஇலங்கையின் வரலாற்றில் முதற் தடவையாக ஜனாதிபதி வேட்பாளர் ஒருவரை களமிறக்க முடியாத நிலை ஐக்கிய தேசிய கட்சிக்கு ஏற்பட்டுள்ளது என்று ஊடகத்துறை அமைச்சரும் தேசிய அபிவிருத்தி தொடர்பான பேச்சாளருமான லக்ஷ்மன் யாப்பா அபேவர்த்ன நேற்றுத் தெரிவித்தார். தமது வேட்பாளரை களமிறக்க முடியாமல் போன ஐ. தே. கவும், ஜே. வி.யும் சேர்ந்து உறுப்பினர்களே இல்லாத 14 கட்சிகளுடன் இணைந்து பொது வேட்பாளர் ஒருவரை களமிறக்கியுள்ளதாகவும் அவர் தெரிவித்தார். யுத்தத்தை வெற்றி கொண்டு, பாரிய அபிவிருத்தி பணிகளை நாடளாவிய ரீதியில் முன்னெடுத்துச் செல்லும் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுடன் போட்டி போட முடியாத நிலையிலேயே இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் சுட்டிக்காட்டினார். மாத்தறை மாவட்டம் உட்பட நாடளாவிய ரீதியில் அரசாங்கம் முன்னெடுத்து செல்லும் பாரிய அபிவிருத்தி வேலைத் திட்டங்கள் தொடர்பாக மாத்தறை மாவட்டத்தைச் சேர்ந்த நகர சபை, பிரதேச சபை தலைவர்கள், உறுப்பினர்களுக்கு விளக்கமளிக்கும் முதலாவது செயலமர்வின் அங்குராப்பணம் வைபவம் கம்புருகமுவ பிரதேசத்தில் இடம்பெற்றது. இதன் போதே அமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்தார். தகவல் மற்றும் ஊடகத்துறை அமைச்சின் செயலாளர் டபிள்யூ. பி. கனேகல, தேசிய அபிவிருத்திக்கான ஊடக மத்திய நிலைய பணிப்பாளர் நாயகம் ஆரிய ரூபசிங்க உட்பட முக்கியஸ்தர்கள் பலர் கலந்து கொண்ட இந்த செயலமர்வில் அமைச்சர் மேலும் உரையாற்றுகையில், கடந்த நான்கு ஆண்டு காலத்திற்குள் அபிவிருத்தி பணிகளுக்காக அரசாங்கம் ஒரு இலட்சத்து 80 ஆயிரம் கோடி ரூபாவை செலவு செய்துள்ளது. துறைமுகம், விமான நிலையம், வீதி, நீர்ப்பாசனம், மின்சாரம், கல்வி, உட்பட சகல துறைகளிலும் பல்வேறுபட்ட பாரிய அபிவிருத்திகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. கிராம அபிவிருத்திக்காக சேவையாற்றும் உறுப்பினர்களை கெளரவிக்கும் வகையில் அவர்கள் ஆற்றிய சேவைகள் அடங்கிய புத்தகம் ஒன்று தேசிய ஊடக மத்திய நிலையத்தினால் தயாரிக்கப்படும் என்று தெரிவித்த அமைச்சர், இந்த புத்தகம் சம்பந்தப்பட்ட உறுப்பினர்கள் தான் செய்த சேவைகளை தேர்தல் காலங்களில் மக்களுக்கு தெரியபடுத்த உதவியாக அமையும் என்றார். 2012 ஆண்டு நாட்டிலுள்ள சகல வீடுகளுக்கும் மின்சாரம் வழங்கப்படும். சகல உட்கட்டமைப்பு மற்றும் அடிப்படை வசதிகள் செய்து கொடுக்கப்படும் ஜனாதிபதியின் சிறந்த அரசியல் தலைமைத்துவத்தின் மூலம் யுத்தத்தை வெற்றிக் கொண்டது போன்று அபிவிரு த்திகளும் முன்னெடுக்கப்படும் என்றும் அமைச்சர் சுட்டிக்காட்டினார்.
»»  (மேலும்)

ஜனவரி 26இல் ஜனாதிபதி தேர்தல் வேட்புமனுத் தாக்கல் டிச. 17


ஜனாதிபதி தேர்தலை எதிர்வரும் ஜனவரி 26ஆம் திகதி நடத்துவதற்குத் தேர்தல் ஆணையாளர் தீர்மானித்துள்ளார்.

வேட்புமனு தாக்கல் எதிர்வரும் டிசம்பர் 17ஆம் திகதி காலை 9 மணி முதல் மாலை 11 மணி வரை இராஜகிரியவில் உள்ள தேர்தல் செயலகத்தின் கேட்போர் கூடத்தில் இடம்பெறும்.

வேட்பு மனுக்கள் மீதான ஆட்சேபங்களை அதே தினம் காலை 9.00 மணி முதல் காலை 11.30 வரை தெரிவிக்கலாம். எந்தவொரு வேட்பாளரினதும் வேட்புமனு மீதான ஆட்சேபத்தை மற்றொரு வேட்பாளரோ அல்லது வேட்புமனுவில் கையொப்பமிடும் நபரோ தெரிவிக்கலாம்.

அனைத்து வேட்பாளர்களும் வேட்புமனு வை தாக்கல் செய்வதற்கு முதல் நாள் நண்பகல் 12 மணிக்கு முன்னர் கட்டுப்பணம் செலுத்த வேண்டும். அங்கீகரிக்கப்பட்ட கட்சியொன்றின் வேட்பாளர் கட்டுப் பணமாக 50 ஆயிரம் ரூபாவும் சுயேச்சை வேட்பாளர் கட்டுப்பணமாக 75 ஆயிரம் ரூபாவும் செலுத்த வேண்டும். தேர்தல் திணைக்களத்தின் கணக்காளர் (நிதி) வேட்புமனுக்கள் தாக்கல் செய்யப்படுவதற்கு முதல் நாள் நண்பகல் 12 மணி வரை கட்டுப்பணத்தை ஏற்றுக்கொள்வார்.

அங்கீகரிக்கப்பட்ட கட்சியொன்றின் வேட்பாளராக அல்லாதோர் தான் தெரிவு செய்யப்பட்ட பாராளுமன்ற உறுப்பினர் என்பதை பாராளுமன்ற செயலாளர் நாயகத்தின் கையொப்பமிடப்பட்ட சான்றிதழ் மூலம் உறுதிப்படுத்த வேண்டும்.

தேர்தலுக்கு பயன்படுத்தப்படும் வாக்காளர் இடாப்பு 2008 ஆம் வருட வாக்காளர் இடாப்பாகும். வாக்களிக்க தகுதியுள்ள மொத்த வாக்காளர்களின் எண்ணிக்கை 140 இலட்சத்து 88 ஆயிரத்து 500 ஆகும்.
»»  (மேலும்)

11/27/2009

தமிழீழ தேசிய மாவீரர்நாள் 2009தமிழீழ தேசிய மாவீரர்நாள் 2009

»»  (மேலும்)

சரத் பொன்சேகாவை பொது வேட்பாளராக நிறுத்த ஐ.தே.க ஒப்புதல்


இலங்கையின் ஜனாதிபதி தேர்தலுக்கான பிரதான எதிர்க்கட்சிகளின் பொது வேட்பாளராக ஜெனரல் சரத் பொன்சேகாவை நிறுத்த முக்கிய எதிர்க்கட்சியான ஐக்கிய தேசியக் கட்சி உடன்பட்டுள்ளதாக அந்தக் கட்சியின் தலைவரான ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.

ஜேவிபி கட்சி அவரை ஜனாதிபதி தேர்தல் வேட்பாளராக நிறுத்த தாம் ஆதரவு வழங்குவதாக ஏற்கனவே அறிவித்திருந்தது.

அதேவேளை, வரக் கூடிய ஜனாதிபதி தேர்தலில் யாரை ஆதரிப்பது என்பது தொடர்பில் தாம் இன்னமும் எந்தவிதமான முடிவுக்கும் வரவில்லை என்று தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினரான சுரேஸ் பிரேமச்சந்திரன் தெரிவித்துள்ளார். அடுத்த ஓரிரு தினங்களில் இது குறித்த தமது கட்சியின் முடிவை அறிவிப்போம் என்றும் அவர் கூறினார்.

ஆனால், ஜனநாயக மக்கள் முன்னணி சரத் பொன்சேகாவுக்கு ஆதரவு வழங்கும் என்று அதன் தலைவரான மனோகணேசன் தெரிவித்துள்ளார்.


ruj; nghd;Nrfh xU jkpoh;


  jkpo; Njrpa $l;likg;G jpBu; mwpf;if!!!!! ruj; nghd;Nrf;fh xU
  jkpou;. mtUf;F jkpou; G+uz MjuT toq;f Ntz;Lk; vd Nfl;L
  Gypj; Njrpaf; $l;likg;Gmwpf;if.ruj; nghd;Nrfhtpd; %jhijau;
  aho;g;ghzj;jpy; nghd;idah guk;giuia Nru;e;jtu;fs; vd;Wk;
  gpiog;Gf;fhf nfhOk;G nrd;w mtu;fs; rpq;fs muh[fjpl;F gae;
  J nghd;idah vd;w ngaiu nghd;Nrf;fh vd;W khj;jp tho;e;jdu;
  vd;Wk; il fl;b jhilia ,wf;fpNghl;L njhiyf;fhl;rpapy; Ngl;b
  nfhLj;j Gj;jp [Ptp xUtu; njuptpj;jhu;..TNA NkYk; $Wifapy;
  jkf;F ruj; nghd;idahtpd; kPir> Kfntl;L>gjtp Mir ,tw;iw
  itj;J jhk; Kd;dNu mtu; jkpou; vd Cfpj;J ,Ue;jjhf $wpdu;.
  tpLjiy Gypfspd; jiytu; jk; jPu;f;f juprdj;jpd;
  %yk; ruj;nghd;idah xU jkpou; vd mwpe;jpUe;jjhfTk; Nghupy;
  jhk; Njhw;W jkpoiu(ruj; nghd;idahit) nty;y itj;J KO
  ,yq;ifiaAk; Ms itf;f jiytupd; jPu;f;fjuprdk; cjtp ,Ug;
  gjhf M];jpNuypa mwpT nfhOe;J xUtu; njuptpj;Js;shu;.NkYk;
  ruj; nghd;idahtpd; mnkupf;f tp[ak; kugZ gupNrhjid nra;J
  jhd; xU jkpou; vd epUgpgjw;fhfNt vd jkpo; mgpkhdp Rtp]; Re;
  juk; njuptpj;Js;shu;.
  ,jdhy; ahtUk; ruj; nghd;idahtpl;F thf;fspg;gjd;
  %yk; jiytu; gpugfhudpd; Miria epiw Ntj;jyhk; mNj rkak;
  jkpo;j; njrpaf; $l;likg;gpd; ,d; nrhj;J Rfq;fis $l;b mtu;
  fs; Rfkhf tho trjp nra;ayhk; vdTk; Gyd; ngah;;e;j Gj;jp [Ptp
  xUtu; Fwpg;gpl;lhu; tho;f jkpo;!!! tsu;f ruj; nghd;idah Gfo;!!!
  (ruj; nghd;idah tl khfhzj;jpd; Kjy;tuhff; $ba
  tha;g;G cz;L vdTk; $wg;gLfpwJ)(
eelanaasam.com(fw;gid)

»»  (மேலும்)

பெண்கள் மீதான அடக்குமுறை

இன்று அனு டிக்கப்படுகிறது. இன்று உலகளாவிய ரீதியில் பெண்களுக்கு எதிராக மேற்கொள்ளப்படும் வன்முறைகள் காலத்திற்கு காலம் வெவ்வேறு வடிவம் பெற்று வருகின்றனவே ஒழிய குறைந்தபாடில்லை. பெண்கள் மீதான உடல் ரீதியான வன்முறைகள் அதிகரித்த வண்ணமே உள்ளன. ஐ.நா வின் அறிக்கைகளைப் பார்க்கும்போது குடும்பத்தில் தனக்கு மிக நெருக்கமானவர்களாலேயே பெண்கள் பல்வேறு வன்முறைக்கு உட்படுத்தப்படுகிறார்கள். தும் மீது பிரயோகிக்கப்படும் வன்முறைகளை எதிர்த்து குரல்கொடுக்க துணியாத நிலையிலேயே இவர்கள் மீதான வன்முறைகளும் அடக்குமுறைகளும் நாளுக்குநாள் அதிகரித்து வருகின்றன என்பதே உண்மை. உலக சனத்தொகையில் இன்று பெண்களின் சதவீதம் 50 ஐ எட்டிவிட்டது. ஆண்களை விட ஒரு சமூகத்தில் பெண்கள் அங்கம் வகிக்கும் பாத்திரங்கள் இன்றியமையாதன என்று கூறலாம். எனினும் குடும்பம் மற்றும் சமூக வன்முறைகளில் பெரிதும் பாதிக்கப்படும் ஒரு பாத்திரமாகவும் பெண் விளங்குவது வேதனைக்குரியது இன்று குடும்ப வன்முறை என்ற பதம்கூட பெண்களுக்கு அநீதிகளின் அதிகரிப்பால் உருவானதோ என்றுகூட கூறத்தோன்றுகிறது. காரணம் பாதிக்கப்பட்ட குடும்பப் பெண்களின் எண்ணிக்கை அந்தளவானது.இன்று உலகம் எந்தளவிற்கு நாகரீகத்திலும் அறிவியலிலும் ஏற்றம் கண்டுவருகின்றதோ அந்தளவிற்கு குற்றச் சம்பங்களும் அதிகரித்துக்கொண்டே செல்கின்றன. ஆய்வுகளை பார்த்தால் தலை சுற்றும். இன்று உலகில் உள்ள பெண்கள் எண்ணிக்கையில் ஐந்துபெண்களில் ஒருவர் பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தப்பட்டோ அல்லது தனது வாழ்நாளில் ஒரு தடவையேனும் பாலியல் பலாத்காரத்துக்கு உட்பட்டோ இருப்பார். அமெரிக்காவில் 20 நிமிடங்களுக்கு ஒரு பெண் பாலியல் வல்லுறவுக்குட்படுத்தப்படுகிறாள். பிரான்ஸில் வருடந்தோறும் 25 ஆயிரம் பெண்கள் பாலியல் வல்லுறவுக்குட்படுத்தப்படுகின்றனர். துருக்கியில் திருமணமான பெண்களில் 35 வீதமானோர் தமது கணவராலேயே பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தப்படுகின்றனர். அவ்வளவு ஏன் எமது அண்டைய நாடான இந்தியாவில் கூட வருடந்தோறும் 15 ஆயிரம் பேர் சீதனக் கொடுமையால் கொல்லப்படுகின்றனர் என்பது எத்தனைப் பேருக்குத் தெரியும்? திருமண பராயம் அடையும் முன்பாகவே பெண்களை இல்வாழ்வில் பலவந்தமாக சேர்க்கும் நடைமுறை இன்று உலகில் பல நாடுகளில் உள்ளது. ஆய்வுகளின் படி பாரம்பரியம், கலாசாரம், சடங்கு என்ற பெயர்களில் இன்று உலகம் முழுவதும் 10-17 வயதுக்கிடைப்பட்ட 82 மில்லியன் சிறுமிகள் கட்டாயத் திருமணம் செய்யவேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர் குடும்ப கௌரவம் சமூகத்தின் விமர்சனம் என்பவை காரணமாக பல பெற்றோர்கள் கூட தமது பிள்ளைகளுக்கு நடக்கும் அக்கிரமங்களை மூடிமறைத்து விடுகின்றனர். இதுவே அவர்களுக்கெதிராக மேலும் மேலும் குற்றங்கள் பெருக வழிவகுக்கிறது வீட்டு வன்முறைகளுக்கு அப்பாற்பட்டு யுத்தங்கள் கூட இன்று பெண்களை பாடாய் படுத்துகின்றன.யுத்தத்தினால் இடம்பெயர்ந்த அகதிகளில் 80 வீதமானோரில் பெண்களும் சிறுவர்களுமே அடங்குகின்றனர். இதுவரை உலகில் இடம்பெற்ற 34 யுத்தங்களில் அதிகம் பாதிக்கப்பட்டவர்கள் பெண்களே யுத்தம் இடம்பெறும் பகுதிகளில் பெண்கள் மற்றும் சிறுமிகள் கடத்திச்செல்லப்படுவது 85 வீதமாக உள்ள பெண் என்பவள் பிறந்ததிலிருந்து பிரச்சினைகளுக்கும் சவால்களுக்கும் முகங்கொடுத்து வளரக்கூடிய ஒரு சூழல் உண்மையில் ஆசிய கண்ட நாடுகளுக்கு குறிப்பாக தென்கிழக்காசிய நாடுகளிடையே நிலவுகிறது. இறுக்கமான கலாசார பண்பாடுகளைக் கொண்டமைந்த நாடுகள் எள்றபடியாலேயே இந்நிலை என்று நாம் எம்மை சமாதானப்படுத்திக்கொள்ள முடியாது. உலகமே போற்றும் தாய் என்ற அற்புதமான பாத்திரப்படைப்பை கொண்ட பெண்ணின் உரிமைகள் மற்றும் பாதுகாப்பு தொடர்பில் இனி ஒரு விதி செய்வோம் என காலங்காலமாக கத்திக்கொண்டு இருப்பதில் மட்டும் பிரயோசனம் இல்லை என்பதே நிதர்சனம் ஐ.நா வின் அறிக்கைகளைப் பார்க்கும்போது குடும்பத்தில் தனக்கு மிக நெருக்கமானவர்களாலேயே பெண்கள் பல்வேறு வன்முறைக்கு உட்படுத்தப்படுகிறார்கள். தும் மீது பிரயோகிக்கப்படும் வன்முறைகளை எதிர்த்து குரல்கொடுக்க துணியாத நிலையிலேயே இவர்கள் மீதான வன்முறைகளும் அடக்குமுறைகளும் நாளுக்குநாள் அதிகரித்து வருகின்றன என்பதே உண்மை. உலக சனத்தொகையில் இன்று பெண்களின் சதவீதம் 50 ஐ எட்டிவிட்டது. ஆண்களை விட ஒரு சமூகத்தில் பெண்கள் அங்கம் வகிக்கும் பாத்திரங்கள் இன்றியமையாதன என்று கூறலாம். எனினும் குடும்பம் மற்றும் சமூக வன்முறைகளில் பெரிதும் பாதிக்கப்படும் ஒரு பாத்திரமாகவும் பெண் விளங்குவது வேதனைக்குரியது. இன்று குடும்ப வன்முறை என்ற பதம்கூட பெண்களுக்கு அநீதிகளின் அதிகரிப்பால் உருவானதோ என்றுகூட கூறத்தோன்றுகிறது. காரணம் பாதிக்கப்பட்ட குடும்பப் பெண்களின் எண்ணிக்கை அந்தளவானது.இன்று உலகம் எந்தளவிற்கு நாகரீகத்திலும் அறிவியலிலும் ஏற்றம் கண்டுவருகின்றதோ அந்தளவிற்கு குற்றச் சம்பங்களும் அதிகரித்துக்கொண்டே செல்கின்றன. ஆய்வுகளை பார்த்தால் தலை சுற்றும். இன்று உலகில் உள்ள பெண்கள் எண்ணிக்கையில் ஐந்துபெண்களில் ஒருவர் பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தப்பட்டோ அல்லது தனது வாழ்நாளில் ஒரு தடவையேனும் பாலியல் பலாத்காரத்துக்கு உட்பட்டோ இருப்பார். அமெரிக்காவில் 20 நிமிடங்களுக்கு ஒரு பெண் பாலியல் வல்லுறவுக்குட்படுத்தப்படுகிறாள். பிரான்ஸில் வருடந்தோறும் 25 ஆயிரம் பெண்கள் பாலியல் வல்லுறவுக்குட்படுத்தப்படுகின்றனர். துருக்கியில் திருமணமான பெண்களில் 35 வீதமானோர் தமது கணவராலேயே பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தப்படுகின்றனர் அவ்வளவு ஏன் எமது அண்டைய நாடான இந்தியாவில் கூட வருடந்தோறும் 15 ஆயிரம் பேர் சீதனக் கொடுமையால் கொல்லப்படுகின்றனர் என்பது எத்தனைப் பேருக்குத் தெரியும்? திருமண பராயம் அடையும் முன்பாகவே பெண்களை இல்வாழ்வில் பலவந்தமாக சேர்க்கும் நடைமுறை இன்று உலகில் பல நாடுகளில் உள்ளது. ஆய்வுகளின் படி பாரம்பரியம், கலாசாரம், சடங்கு என்ற பெயர்களில் இன்று உலகம் முழுவதும் 10-17 வயதுக்கிடைப்பட்ட 82 மில்லியன் சிறுமிகள் கட்டாயத் திருமணம் செய்யவேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். >குடும்ப கௌரவம் சமூகத்தின் விமர்சனம் என்பவை காரணமாக பல பெற்றோர்கள் கூட தமது பிள்ளைகளுக்கு நடக்கும் அக்கிரமங்களை மூடிமறைத்து விடுகின்றனர். இதுவே அவர்களுக்கெதிராக மேலும் மேலும் குற்றங்கள் பெருக வழிவகுக்கிறது வீட்டு வன்முறைகளுக்கு அப்பாற்பட்டு யுத்தங்கள் கூட இன்று பெண்களை பாடாய் படுத்துகின்றன.யுத்தத்தினால் இடம்பெயர்ந்த அகதிகளில் 80 வீதமானோரில் பெண்களும் சிறுவர்களுமே அடங்குகின்றனர். இதுவரை உலகில் இடம்பெற்ற 34 யுத்தங்களில் அதிகம் பாதிக்கப்பட்டவர்கள் பெண்களே யுத்தம் இடம்பெறும் பகுதிகளில் பெண்கள் மற்றும் சிறுமிகள் கடத்திச்செல்லப்படுவது 85 வீதமாக உள்ளது பெண் என்பவள் பிறந்ததிலிருந்து பிரச்சினைகளுக்கும் சவால்களுக்கும் முகங்கொடுத்து வளரக்கூடிய ஒரு சூழல் உண்மையில் ஆசிய கண்ட நாடுகளுக்கு குறிப்பாக தென்கிழக்காசிய நாடுகளிடையே நிலவுகிறது. இறுக்கமான கலாசார பண்பாடுகளைக் கொண்டமைந்த நாடுகள் எள்றபடியாலேயே இந்நிலை என்று நாம் எம்மை சமாதானப்படுத்திக்கொள்ள முடியாது உலகமே போற்றும் தாய் என்ற அற்புதமான பாத்திரப்படைப்பை கொண்ட பெண்ணின் உரிமைகள் மற்றும் பாதுகாப்பு தொடர்பில் இனி ஒரு விதி செய்வோம் என காலங்காலமாக கத்திக்கொண்டு இருப்பதில் மட்டும் பிரயோசனம் இல்லை என்பதே நிதர்சனம்.

»»  (மேலும்)

பட்டிப்பளையில் சமூக மண்டபம் விவசாயப் பண்ணை திறந்துவைப்பு


மட்டக்களப்பு - கொக்கட்டிச்சோலை பட்டிப்பளை பிரதேசத்தில் அவுஸ்திரேலிய மக்களின் சுமார் ஒருகோடி ரூபா நிதியுதவியில் நிர்மாணிக்கப்பட்ட சமூக மண்டபம் மற்றும் விவசாயப் பண்ணை என்பன மக்களிடம் கையளிக்கும் வைபவம் அண்மையில் இடம்பெற்றது.

மாவட்ட அரசாங்க அதிபர் சுந்தரம் அருமை நாயகம் இதன் பிரதம அதிதியாகக் கலந்து கொண்டார். உலக தரிசன நிறுவனத்தின் அபிவிருத்தி முகாமையாளர் கிறிஸ்டி அன்ரனி தலைமையில் நடைபெற்ற இவ்வைபவத்தில் செயல்திட்டப் பணிப்பாளர் ஸ்கொட் லவ்ட், வலயப் பணிப்பாளர் எஸ். சுதர்ஷன் ஆகியோரும் கலந்து கொண்டனர்.

சற்றலைட் நிலையம் வள மையம் ‘நூலகம், தொழில்நுட்ப அலுவலகம், பெண்கள் மற்றும் ஆண்கள் விடுதிகள் என்பனவும் இங்கு அமைக்கப்பட்டுள்ளன.»»  (மேலும்)

கிழக்கு ஆங்கில மொழி தின போட்டிகள் டிசம்பரில்


கிழக்கு மாகாணப் பாடசாலை மாணவர்கள் பங்கு பற்றும் மாகாண மட்டத்திலான ஆங்கில மொழித்தின போட்டி நிகழ்ச்சிகள் எதிர்வரும் டிசம்பர் மாதம் 07 ஆம் 08 ஆம் திகதிகளில் நடத்தப்படவுள்ளன.

இம்முறை இப்போட்டி நிகழ்ச்சிகளை மட்டக்களப்பு புனித மிக்கேல் கல்லூரியில் நடத்துவதற்கான ஒழுங்குகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக கிழக்கு மாகாணக் கல்வித் திணைக்களம் அறிவித்துள்ளது.

ஆங்கில எழுத்தாக்கம் மற்றும் கவிதைப் போட்டிகள் 07 ஆம் திகதியும், பேச்சு மற்றும் நாடகப் போட்டிகள் 08 ஆம் திகதியும் நடத்தப்படவுள்ளன.

ஏற்கனவே நடத்தி முடிக்கப்பட்டுள்ள மாவட்ட மட்டத்திலான ஆங்கில மொழி போட்டிகளில் முதலாம், இரண்டாம் இடங்களைப் பெற்று தெரிவு செய்யப்பட்ட மாணவர்கள் மாகாண ரீதியிலான போட்டிகளில் பங்குபற்றவுள்ளனர்.

»»  (மேலும்)

யாழ். குருநகர் கடற்றொழிலாளர் பிரச்சினைகளுக்கு அமைச்சர் டக்ளஸ{டனான சந்திப்பில் தீர்வு

யாழ். குடாநாட்டின் மேற்குக் கரையோரப் பகுதி கடற்தொழிலாளர்கள் எதிர்நோக்கும் பல்வேறு பிரச்சினைகளுக்குத் தீர்வு காணும் வகையில் ஈழமக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகமும் சமூக சேவைகள் மற்றும் சமூக நலத்துறை அமைச்சருமான டக்ளஸ் தேவானந்தா தலைமையில் குருநகர் கடற்தொழிலாளர் அபிவிருத்திச் சங்கத்தில் கலந்துரையாடலொன்று இடம்பெற்றது இழுவைப்படகு கடற்தொழிலாளர்கள் மற்றும் சிறு படகுகளில் தொழிலில் ஈடுபடும் கடற்தொழிலாளர்களுக்கிடையே தத்தமது தொழில்களைத் தொடர்வதில் கடந்த இரு மாத காலமாக நிலவி வந்த இழுபறிக்கு தீர்வு காணக்கூடிய சுமுகமான சூழ்நிலையை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா ஏற்படுத்தியுள்ள நிலையில் குருநகர் கடற்தொழிலாளர் சங்கம் கலந்துரையாடலை ஏற்பாடு செய்திருந்தது. இச் சந்திப்பின் போது கடற்தொழிலாளர் சங்கத்தின் உறுப்பினர்கள் கருத்து தெரிவிக்கையில் தமது கடற்தொழிலில் அதிக சிரத்தையெடுத்து இரு தரப்பினருக்குமிடையே சந்திப்பை ஏற்படுத்தி கடற்தொழிலை முன்னெடுப்பதற்கு அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா வழியமைத்துத் தந்தமைக்காக கடற்தொழிலாளர்களின் சார்பில் அமைச்சருக்கு தமது நன்றியையும் பாராட்டுதல்களையும் தெரிவித்துக் கொண்டனர். இதயடுத்து கடற்தொழிலை எதிர்காலத்தில் திறம்பட முன்னெடுத்துச் செல்வதற்கு தேவையான முன்னேற்பாடுகள், ஒழுங்குகள் தொடர்பாக அமைச்சரிடம் கடற்தொழிலாளர் சங்கத்தின் பிரதிநிதிகள் தமது ஆலோசனைகளை முன்வைத்தனர். அவற்றில் தற்போது நடைமுறையில் இருக்கும் அதிகாலை 4 மணிக்கு தொழிலுக்குச் செல்வதற்கான நேரத்தை அதிகாலை 3 மணிக்கு மாற்றுவதற்கு நடவடிக்கை எடுத்தல், ஒரு நாள் கடலில் தங்கிநின்று தொழில் செய்வதற்கான 28 அடி நீளப் படகினை தயாரித்தல் கடற்கரையில் மக்களின் பாவனைக்கு அனுமதிக்காத வீடுகளை குடியிருப்பதற்காக அனுமதித்தல் போன்ற 11 கோரிக்கைகள் அடங்குகின்றன. குருநகர் கடற் தொழிலாளர் சங்கத்தின் கோரிக்கைகளை பரிசீலித்து உரிய நடவடிக்கைகள் மேற்கொள்வதற்காகவும் அவற்றை நிறைவேற்றுவதற்கு கடற்தொழிலாளர்கள் அனைவரும் தமக்கு பக்கபலமாக இருக்கவேண்டும் என்றும் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா இக் கலந்துரையாடலின் போது கேட்டுக்கொண்டமை குறிப்பிடத்தக்கதாகும்.

»»  (மேலும்)

மட்டு. சுகாதார தொழிலாளர் வெற்றிடங்கள் நிரப்பப்பட்டனமட்டக்களப்பு மாவட்டத் திலுள்ள வைத்தியசாலைகளில் பல வருடகாலமாக நிலவும் சுகாதார தொழிலாளர் வெற்றிடங்கள் கிழக்கு மாகாண சுகாதார அமைச்சினால் நிரப்பப்பட்டுள்ளன.

இவ்வைத்தியசாலைகளில் சுகாதார தொண்டர்களாக சேவையாற்றிய 122 பேர் சுகாதார தொழிலாளர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர். இவர்களில் 112 பேர் மட்டக்களப்பு மாவட்டத்திலும் தலா 5 பேர் அம்பாறை, திருகோணமலை மாவட்டங்களிலும் நியமிக்கப்பட்டுள்ளனர்
»»  (மேலும்)

அம்பாறை மாவட்டத்தில் மட்பாண்டக் கைத்தொழில் அபிவிருத்தி


அம்பாறை மாவட்டத்தில் செயல் இழந்து போயிருக்கும் மட்பாண்ட உற்பத்தித் தொழிலை அபிவிருத்தி செய்வதற்கான வேலைத்திட்டமொன்றைக் கிழக்கு மாகாண சிறுகைத்தொழில் திணைக்களம் மேற்கொண்டுள்ளது.

இந்த திட்டத்தின் கீழ் யுத்த காலத்திற்கு முன்பு மட்பாண்ட தொழிலில் ஈடுபட்டுவந்த பெண்கள் பற்றிய விபரங்கள் கிராமசேவையாளர் பிரிவுகளில் இனம்காணப்பட்டு மீண்டும் அவர்களை மட்பாண்ட உற்பத்தியில் ஈடுபடுத்தும் நடவடிக்கைகள் மேற்கெள்ளப்பட்டுள்ளன.

இவர்களால் உற்பத்தி செய்யப்படும் மட்பாண்டங்கள் யாவும் இப்பகுதிகளிலுள்ள கோப் சிற்றிகள் மூலம் கொள்வனவு செய்யப்பட்டு விற்பனை செய்யப்படுவதற்கான ஒழுங்குகளும் செய்யப்பட்டுள்ளன.

இதே நேரத்தில் மட்பாண்டக் கூட்டுத்தாபனம் இறக்காமத்திலுள்ள ஓட்டுத் தொழிற்சாலையை முழுமையாக நவீனமயப் படுத்தி மட்பாண்டங்களையும் உற்பத்தி செய்யும் வேலைத்திட்டமொன்றை மேற்கொள்வதோடு மகோயா, பொத்துவில், ஆகிய இரு இடங்களிலும் உள்ள ஓட்டுத்தொழிற்சாலைகளையும் கிழக்கு அபிவிருத்தித் திட்டத்தின் கீழ் நவீனமயப்படுத்தவுள்ளது எனச் சம்பந்தப்பட்ட அதிகாரி குறிப்பிட்டார்.

»»  (மேலும்)

11/26/2009

புலம்பெயர்வாழ் பல்தரப்பு அறிஞர்களுடன் முதலமைச்சர் தலைமையிலான குழு சந்திப்பு

சுவிஸ்லாந்தின் பேர்ளின் நகரில் இலங்கையிலிருந்து புலம் பெயர்ந்து வாழும் அரசியல் சார், ஊடகம் சார், பொருளாதாரம் சார் அறிஞர்களுடன் கிழக்கு மாகாண முதலமைச்சர் தலைமையிலான குழுவினர் முக்கிய உயர்மட்ட கலந்துரையாடலில் 18.11.2009 அன்று ஈடுபட்டனர் இச்சந்திப்பின்போது தமிழ் மக்கள் விடுதலை புலிகள் அரசியல் கட்சியின் அரசியல் நிலைப்பாடு, மாகாண சபைகள் எதிர்நோக்கும் சவால்கள் யுத்தத்தின் பின்னரான கிழக்கிலங்கை நிலைமை போன்றன முக்கிய கருப்பொருளாக இருந்தன.

இச்சந்திப்பின்போது புலம் பெயர் வாழ் சமூகத்திடமிருந்து எடுக்கப்பட்ட பல்வேறுபட்ட சந்தேகங்களும் T.M.V.P யின் அரசியல் நிலைப்பாடு தொடர்பிலும் கட்சியின் தலைவரும் கிழக்கு மாகாண முதலமைச்சருமான சிவநேசதுரை சந்திரகாந்தன், கட்சியின் கொள்கை பரப்புச் செயலாளர் அஷாத் மௌலானா அவர்களும் திறம்படப் பதிலளித்தனர்.

இச்சந்திப்பில் கருத்து தெரிவித்த புலம் பெயர் வாழ் சமூகத்தினர் இதவரை நாள் T.M.V.P தொடர்பாக தங்களுக்கு இருந்து வந்த ஐயங்கள் நீங்கப் பெற்றதுடன் முதல்வரின் அணுகுமுறையும் அரசியல் நிலைப்பாடும் வெகுவாக தங்களை கவர்ந்துள்ளதாகவும் குறிப்பிட்டார்கள். இச்சந்திப்பில் மாகாண சபை உறுப்பினரும் த.ம.வி.புலிகளின் தேசிய அமைப்பாளருமான எட்வின் சில்வா கிருஸ்ணானந்த ராஜா (பிரதீப் மாஸ்ட்டர்) திருமலை மாவட்ட அமைப்பாளர் ஜுடி தேவதாசன் ஆகியோர் கலந்து கொண்டனர்.
dsc05706

dsc05703

dsc05654
»»  (மேலும்)

இன்று ஈதுல் அல்ஹா ஹச்சுப் பெருநாளை கொண்டாடும் முஸ்லிம் சகோதரர்களுக்கு எனது வாழ்த்துக்களை உரைப்பதில் பேரானந்தம் அடைகின்றேன்.


முஸ்லிம் சகோதரர்களின் வரலாற்றில் இப்பண்டிகைக்கு முக்கியமான இடமுண்டு, இதனை தியாகத்திருநாள் என்றும் அவர்கள் விழிப்பதுண்டு, இறைவனுக்காகவேண்டி அனைத்தையுமே தியாகம் செய்யும் உண்மையான மனப்பக்குவத்தினையும் இப்பண்டிகை வலியுறுத்தி நிற்கின்றது. ஒரு மனிதன் தன்னுள் புதைந்து கிடக்கும் கெட்ட வேண்டாத விடயங்களை விட்டொழித்து தூய்மையான பாதையில் பயணிப்பதையே இது வலியுறுத்துகின்றது. எமது நாட்டின் இன்றைய அரசியல் சூழ்நிலையில் இவ்வாறான தத்தவங்களும் வழிகாட்டுதல்களும் தேவைப்படும் ஒன்றாக உள்ளது. பிற சமூகங்களை மதித்து தனக்குள்ள உரிமைகள் அனைவருக்கும் கிடைக்க வேண்டும் என்ற உள்ளம் எமது நாட்டில் அதிகம் அதிகம் தேவைப்படுகின்றது. இன்றைய சூழ்நிலையில் யுத்தம் ஓய்ந்துள்ள நிலையில் எமது நாட்டின் நிரந்தர சமாதானத்திற்காகவும், பல விட்டுக் கொடுப்புக்களையும் தியாகங்களையும் செய்ய வேண்டி உள்ளது. தியாகத்தை நினைவுபடுத்தி அதனை வலியுறுத்தும் புனிதமான இத்தினத்தில் அனைத்து மனித உள்ளங்களிலும் மனிதம் மலர்ந்து பிறரின் உரிமைகளையும் கௌரவத்தினையும் பாதுகாக்கும் மனோபக்குவமும் விட்டுக் கொடுக்கும் தன்மையும் வலுப்பெற எனது ஆசிகள் உண்டாகட்டும்.


»»  (மேலும்)

முன்பள்ளி கல்வி அபிவிருத்திக்காக கிழக்கு மாகாண முதலமைச்சரின் நேரடிக் கண்காணிப்பின் கீழ் தனியான பிரிவு - கிழக்கு மாகாண முதலமைச்சர் நடவடிக்கை
கிழக்கு மகாணத்தில் முன்பள்ளி கல்வித்துறையினை மேம்படுத்துவதற்கான விசேட செயற்றிட்டம் ஒன்று கிழக்கு மாகாண முதலமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் அவர்களினால் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. முன் பள்ளிப் பாடசாலை மற்றும் ஆசிரியர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் இனங்காணப்பட்டு அதற்குரிய நடவடிக்கைகளை மேற்கொண்டு முன்பள்ளி கல்வித்துறையினை அதிகரிக்க நடவடிக்கை மெற்கொள்ளப்பட்டு வருகின்றது.

நேற்று கிழக்கு மாகாண சபையில் நடைபெற்ற வரவு செலவுத் திட்டத்தின் இரண்டாம் குழுநிலை விவாதத்தின் போது கல்வி அமைச்சின் வரவு செலவுத் திட்டம் முன்வைக்கப்பட்டபோது முதலமைச்சர் கருத்து தெரிவிக்கையில் கிழக்கு மாகாணம் கல்வித்தறையில் முன்பள்ளிக் கல்வி அபிவிருத்திச் செயற்பாடுகளை முன்னெடுப்பதற்கு வசதியாக முதலமைச்சரின் நேரடிக் கண்காணிப்பின் கீழ் தனியான பிரிவு ஒன்று ஆரம்பிக்கப்பட வேண்டும் இந்தப்பிரிவின் மூலமாகக் கிழக்கில் முன்பள்ளித்துறையை மேம்படுத்தவதற்கு பல்வேறு செயற்றிட்டங்கள் முன் எடுக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.»»  (மேலும்)

பெண்களுக்கு எதிரான வன்முறைகளுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் 16 நாட்கள் இன்று ஆரம்பம்.ஆளுமையுள்ள பெண்களை உருவாக்குவோம்ஜுடி தேவதாசன்.

தமிழ் மக்கள் விடுதலைப் புலிகளின் திருகோணமலை மாவட்ட அமைப்பாளர்

img_4843வடக்கு கிழக்கு மாகாணத்தை பொறுத்தமட்டில் மிகவும் துன்ப நிலைக்கு உள்ளகி இருப்பவர்கள் பெண்களே. கணவன், மகன், தந்தை, சகோதரர்களை இழந்து 30 வருடங்கள் சொல்லொண்ணாத் துயரை அனுபவித்து வந்த பெண்கள் தற்பொழுது நிம்மதி பெருமூச்சை விடுகின்றனர். வேலைக்கு. படிப்புக்கு மற்றும் வெளியே சென்று திரம்பி வருவார்களா? என்று ஏங்கிக் கொண்டிருக்கும் பெண்களுக்கு ஒரு முற்றுப்புள்ளி வைத்ததுதான் பெரும் மகிழ்ச்சி. ஒவ்வொரு பெண்ணும் இதனை அனுபவித்து வருகின்றனர். இந்நிலையில் பெண்களுக்கு எதிரான வன்முறையை ஒழிப்பதற்கான சட்டங்கள் மற்றும் கட்டமைப்புக்களை உறுதிப்படுத்தி உணர்வு பூர்வமான சேவை வழங்குனரை உருவாக்குவதன் மூலம் இப்பிரச்சினைக்கு தீர்வு காணலாம்.

இந்த நாட்கள் எமக்கு வலுவான ஆளுமையுள்ள பெண்களை உருவாக்கி அதன் மூலம் இப்பாரிய பிரச்சினையை எதிர்கொள்ள மனிதநேயமிக்க மனிதரை சிந்திக்க வைக்கும் பாரிய பொறுப்பை உணர்த்துகிறது.

»»  (மேலும்)

11/25/2009

கிழக்கு மாகாணம் எதிர்வரும் ஆண்டில் ஒரு சுபீற்சமான மாகாணமாக திகழ்வதற்கு கிழக்கு மாகாண சபை தனது முழு அதிகாரத்தையும் பிரயோகிக்கும்- முதலமைச்சர்


2010ம் ஆண்டிற்கான கிழக்கு மாகாண சபையின் வரவு செலவுத் திட்டத்தின் 2ம் குழு நிலை img_2112விவாதத்தில் கலந்து கொண்டு உரையாற்றிய கிழக்கு மாகாண முதலமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். முதலமைச்சர் செயலகம் மற்றும் தனது அமைச்சுக்கான கிராமிய அபிவிருத்தி சுற்றுலா மீள்குடியேற்றம் உள்ளுராட்சி போன்ற அமைச்சுக்கள் தொடர்பான வரவு செலவுத் திட்டத்தினை முன்வைத்து உரையாற்றும் போதே மேற்கண்டவாறு குறிப்பிட்டார். அவர் தொடர்ந்து குறிப்பிடுகையில் கிழக்கு மாகாண சபையின் வரவு செலவு திட்டத்தில் கடந்த ஆண்டைவிட இவ்வாண்டு ஓரளவு முன்னேற்றம் காணப்படுகின்றது. அத்தோடு கிழக்கு மாகாணம் குறிப்பிட்ட சில துறைகளில் பாரிய வளர்ச்சியையும் கண்டிருக்கின்றது. குறிப்பாக விவசாயம் மீன்பிடி கிராமிய அபிவிருத்தி, உல்லாசத்துறை போன்றவற்றில் குறிப்பிட்டளவு மாற்றம் ஏற்பட்டிருக்கின்றது. இதேபோல் எதிர்வருகின்ற ஆண்டில் கிழக்கு மாகாணம் ஓர் தன்னிறைவான மாகாணமாகத் திகழ்வதோடு ஓர் சுபிட்சமான மாகாணமாகவும் உருவாவதற்கு கிழக்கு மாகாண சபை தனது முழு அதிகாரங்களையும் பிரயோகிக்க வேண்டும் எனக்குறிப்பிட்டார்.

மேலும் தொடர்ந்து குறிப்பிடுகையில்
அதிகாரப்பகிர்வுகள் தொடர்பில் ஒரு சில முரண்பாடுகள் காணப்பட்டாலும் எதிர்வருகின்ற காலங்களில் எமது மாகாணம் முழுமையான ஓர் ஆளுமை மிக்க மாகாணமாக மாறுவதற்கு துறைசார் அபிவிருத்தியில் மக்கள் பிரதிநிதிகள் அனைவருமே ஒருமித்த சிந்தனையோடு செயற்பட வேண்டும் எனவும் குறிப்பிட்டார். முதலமைச்சர் செயலகம் தொடர்பாக முன்வைக்கப்பட்ட வரவு செலவுத் திட்டத்திட்ட பிரேரணை ஏகமனதாக ஏற்றுக் கொள்ளப்பட்டது குறிப்பிடத்தக்கது.»»  (மேலும்)

பிரான்ஸில்21 புலிகளுக்கு சிறை: தமிழர் ஒருங்கிணைப்புக்குழுவுக்கு தடைபுனர்வாழ்வுக்கழகமும் தடை செய்யப்படலாம்!!

பிரான்ஸில் வாழுகின்ற தமிழர் சமூகத்திடம் மிரட்டிப் பணம் பறித்த குற்றச்சாட்டின் கீழ் விடுதலைப்புலிகள் அமைப்பைச் சேர்ந்த 21 பேருக்கு பிரஞ்சு நீதிமன்றம் சிறைத்தண்டனை விதித்துள்ளது.

தமிழர் ஒருங்கிணைப்புக்குழு என்ற பெயரில் இயங்கிய புலிகளின் அமைப்பை கலைக்குமாறும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இலங்கை அரசாங்கத்துக்கு எதிரான போருக்காக பல லட்சக் கணக்கான ய+ரோக்களை இந்தக் குழுவினர் பிரான்ஸில் வாழும் தமிழ் மக்களிடம் மிரட்டிச் சேகரித்ததாக இவர்கள் மீது குற்றம்சாட்டப்பட்டிருந்தது.

விடுதலைப்புலிகள் அமைப்பின் பிரான்ஸ் பொறுப்பாளராகச் செயற்பட்ட நடராஜா மதிந்திரன் (பரிதி) என்பவர் உட்பட 21 பேர் இந்த வழக்கில் குற்றவாளிகளாக காணப்பட்டுள்ளனர்.

தமிழர் ஒருங்கிணைப்புக்குழு என்ற பெயரில் 1986ம் ஆண்டிலிருந்து இயங்கிவந்த அமைப்பு புலிகளுடன் தொடர்புகொண்டிருந்ததாகவும், புலிகளுக்காக இந்த அமைப்பைச் சேர்ந்த 22 பேர் தமிழ் மக்களிடம் கட்டாய நிதி வசூலிப்பிலும் மற்றும் தமிழ் மக்களை அச்சுறுத்துவதிலும் ஈடுபட்டுவந்ததாக இவர்கள் மீது குற்றம்சாட்டப்பட்டிருந்தது.

கடந்த மாதம் பல நாட்கள் நடைபெற்ற வழக்கு விசாரணையில் குற்றவாளிகள் சார்பில் 11 வழக்கறிஞர்கள் ஆஜராகி வாதாடியதுடன், அமெரிக்காவிலிருந்து பிரபல மனிதஉரிமைவாதியான திருமதி கரன் பாக்கர் நேரில் ஆஜராகி 22 பேர் சார்பிலும் சாட்சியமளித்திருந்தார்.

நேற்றைய தினம் 23ம் திகதி வழக்கு தொடர்பான திர்ப்பை நீதிபதிகள் வழங்கியுள்ளனர். அந்தத் தீர்ப்பில் 21 பேருக்கு சிறைத்தண்டனை வழங்கியுள்ளதுடன், தமிழர் ஒருங்கிணைப்புக்குழுவையும் கலைக்குமாறு சம்பந்தப்பட்ட அரசதிணைக்களத்திற்கு பணிப்புரை வழங்கியுள்ளனர்.

புலிகளின் தமிழர் புனர்வாழ்வுக்கழகம் குறித்து தீர்ப்பில் எதுவும் குறிப்பிடப்படவில்லை ஆனாலும் சிலர்மீது அந்த அமைப்பில் பணியாற்றியதாகவும் அதற்காக பணம்சேர்த்ததாகவும் குற்றம்சாட்டப்பட்டிருந்தது.

எனவே இந்தத் தீர்ப்பின் அடிப்படையில் அதனையும் தடைசெய்யுமாறு வழக்குத்தொடுநர் விண்ணப்பிக்கலாம் என்று நம்பப்படுகின்றது.

நேற்றைய தீர்ப்பில் தண்டனை விதிக்கப்பட்டவர்கள் விபரமும் தண்டனை விபரமும் வருமாறு:

நடராஜா மதீந்திரன் அல்லது பரிதி - (புலிகளின் பிரான்ஸ் பொறுப்பாளர்) 7 வருட சிறைத்தண்டனை

துரைசாமி ஜெயமூர்த்தி அல்லது ஜெயா - (நிதிப் பொறுப்பாளர்) - 6 வருட சிறைத்தண்டனை

புதியவன் தயாளன் - 3 வருட சிறைத்தண்டனை

கந்தசாமி உமாகரன் - 3 வருட சிறைத்தண்டனை (1 வருடம் ஒத்திவைக்கப்பட்ட)

மகாலிங்கம் ஜெயதாஸ் - 4 வருட சிறைத்தண்டனை

மார்க்கண்டு ஜெயபாலசிங்கம் - 3 வருட சிறைத்தண்டனை (1 வருடம் ஒத்திவைக்கப்பட்ட)

முகுந்தன் ஜெயவீரசிங்கம் - 6 மாத ஒத்திவைக்கப்பட்ட சிறைத்தண்டன்)

செல்லக்கண்டு ரவிகுலம் - 3 வருட சிறைத்தண்டனை (1 வருடம் ஒத்திவைக்கப்பட்ட)

கந்தையா மோகனதாஸ்- 2 வருட சிறைத்தண்டனை

போல் நிய+மன் - 18 மாத சிறைத்தண்டனை (6 மாதம் ஒத்திவைக்கப்பட்ட)

சின்னத்தம்பி சுதாகரன் - 3 வருட சிறைத்தண்டனை (1 வருடம் ஒத்திவைக்கப்பட்ட)

அரவிந்தன் துரைசாமி அல்லது மேத்தா - 5 வருட சிறைத்தண்டனை (18 மாதம் ஒத்திவைக்கப்பட்ட)

முருகானந்தம் ராஜலிங்கம் - 3 வருட சிறைத்தண்டனை (1 வருடம் ஒத்திவைக்கப்பட்ட)

காந்தரூபன் பாலசிங்கம் - 3 வருட சிறைத்தண்டனை (1 வருடம் ஒத்திவைக்கப்பட்ட)

ஏ. சகியரூபன் - 2 வருட சிறைத்தண்டனை

வின்சன் அமலதாஸ் - 2 வருட சிறைத்தண்டனை (6 மாதம் ஒத்திவைக்கப்பட்ட)

பேயாஸ் புலேந்திரன் - நிரபராதி

ஸ்ராலின் சவிரிமுத்து - 4 வருட சிறைத்தண்டனை

ரவி மாணிக்கம் அல்லது ஊத்த மாணிக்கம் - 2 வருட சிறைத்தண்டனை (6 மாதம் ஒத்திவைக்கப்பட்ட)

பார்த்திபன் சிறிகாந்தன் - 3 வருட சிறைத்தண்டனை (1 வருடம் ஒத்திவைக்கப்பட்ட)

முருகன் சிவசுப்பிரமணியம் - 3 வருட சிறைத்தண்டனை (1 வருடம் ஒத்திவைக்கப்பட்ட)

சிவதாசன் யோகராசா - 3 வருட சிறைத்தண்டனை (1 வருடம் ஒத்திவைக்கப்பட்ட)

»»  (மேலும்)

பொன்சேகாவை வேட்பாளராக முன்னிறுத்துகிறது ஜெ வி பி
இலங்கை ஜனாதிபதித் தேர்தலில் பொது வேட்பாளராக ஜெனரல் பொன்சேகாவை தாம் முன்மொழிந்துள்ளதாக ஜெ வி பி கூறியுள்ளது. இதை பிற கட்சிகள் ஏற்க வேண்டும் என்றும் அவர் கூறியுள்ளார்.

பிற எதிர்கட்சிகளும் இவரை ஆதரிக்க வேண்டும் என்று அக்கட்சி கோரியுள்ளது. ஆனால் பணியில் இருந்து விடுவிக்கப்பட்ட பிறகு தேர்தலில் நிற்பது குறித்து ஜெனரல் பொன்சேகா எதவும் கூறாமல் இருந்து வருகிறார்.

அதே நேரம் பிரதான எதிர்கட்சியான ஐக்கிய தேசிய கட்சியும் இது பற்றி எதுவும் தெரிவிக்காமல் உள்ளது.
»»  (மேலும்)

இலங்கை வரலாற்றில் திருப்புமுனையை ஏற்படுத்தியுள்ள மஹிந்த சிந்தனை


ஹிந்த சிந்தனை என்பது இலங்கை வரலாற்றின் முக்கியமான சந்தர்ப்பத்தில் புகழ்மிக்க திட்டங்களடங்கிய வரலாற்றுப் புகழ்மிக்க ஒரு வரைவாகும். இது ஒரு தேர்தல் உறுதி மாத்திரமன்றி பொதுவாகவே செயல்படுத்த முடியுமான செயலாற்றலுக்குக் கொண்டுவரக் கூடிய ஒரு திட்டமாதலால் இது ஒரு சரித்திரப் பிரசித்தி பெற்ற ஒரு திருப்பமாகவும் உள்ளது. இத்திட்டத்தினை முற்படுத்தும் போது இலங்கைச் சமூகம், பிரிந்து வேறுபட்டு இருந்ததோடு குரோதமனப்பான்மையும் மிக மும்முரமாகவே இருந்தது. இந்த கோபதாபம் அகற்றப்பட்டு தேசிய ஒற்றுமையை உறுதிப்படுத்தி மனித மனங்களில் பலவந்தமாக புகுத்தப்பட்ட தாழ்வு நிலையை அகற்றி சிறந்த சமூக கட்டமைப்பொன்றை உருவாக்குவதே “வடக்கின் வசந்தமாகும்” இந்த தேசிய வேலைத் திட்டத்தினூடாக ‘பண்பாட்டு விழுமியங்களை மேம்படுத்துதல், சிசு திரிய,’ போன்றவற்றை தேசிய ரீதியில் அமுல்படுத்தி சமூக மேற்பாட்டிற்கான பல வேலைத் திட்டங்கள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. இந்த இலக்கை அடையும் பொருட்டு சமூக அபிவிருத்தி அலுவல்கள் சம்பந்தமான ஆணையாளர் பதவியொன்றையும் நிர்மாணித்துள்ளதோடு கஷ்டப் பிரதேசங்கள் மற்றும் வளம் குன்றிய பகுதிகளும் உள்ளடக்கப்பட்டவாறு செயல்படுவதற்கு அந்த ஆணையாளருக்கு அதிகாரமும் வழங்கப்பட்டுள்ளது பண்பாட்டு விழுமியங்களை வளர்த்தல் மற்றும் சிசுதிரிய திட்டங்களின் ஆரம்பக்கட்ட வேலைகள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தலைமையில் 2006-07-12ம் திகதி முதல் 16ம் திகதி வரை இலங்கை மன்றக் கல்லூரியில் நடைபெற்றது. இவ்வாறு ஆரம்பிக்கப்பட்ட வடக்கின் வசந்தம் திட்டத்தின் மூலம், கலகம் நடைபெற்றுக் கொண்டிருந்த பகுதிகளில் வாழும் இளம் பாடசாலைச் சிறார்கள் தமது அறிவு மற்றும் பொழுதுபோக்கை மேம்படுத்திக் கொண்டவாறு பிரயோசனம் சுய அபிமானம், மற்றும் தன்னாற்றல் வளம், தேசிய பொறுப்பு, தலைமைத்துவம், கவின் கலை, கலகங்களை சமாதானப்படுத்துதல், உளத்தாக்கம், மனோ தத்துவ அறிவுரை, மற்றும் உளப்பாங்கை அதிகரித்தல் போன்றவற்றிற்குப் புறம்பாக உயர்தர வகுப்புக்களின் பாடங்கள் சம்பந்தமான போதனைகளுக்குச் சமுகமளித்து தமதறிவை அதிகரித்துக் கொள்கின்றனர். தேசிய இலக்கை செயற்பாட்டு ரீதியாகப் பெற்றுக் கொள்வதற்காக போர் நடைபெறுகின்ற கிராமங்களின் பாடசாலைகளுக்குச் சென்று அவர்களுடன் ஒன்றிணைந்து அவர்களது அறிவை உரசிப்பார்த்து அதனை அபிவிருத்தி செய்வதை மிக உயர்வாக எண்ணலாம். அவற்றான பகுதிகளிலுள்ள பல பாடசாலைகளின் இந்த தேசிய திட்டத்தை அமுல்படுத்தி அதில் பாடசாலைச் சிறார்களை பங்கு கொள்ளச் செய்யப்பட்டுள்ளது. அனுராதபுரம், பொலன்னறுவை, மன்னார், வவுனியா, திருகோணமலை, அம்பாறை மற்றும் மட்டக்களப்பு போன்ற வட-கிழக்கு மற்றும் வடமத்திய மாகாணப் பாடசாலைகளின் இளம் மாணவ மாணவிகளை உள்ளடக்கி இத்திட்டத்தின் மூலமாக நற்பயன் பெறப்பட்டுள்ளது. இதற்காக அறிஞர்கள், கல்விமான்கள் தமது பங்களிப்பையும் வழங்கியுள்ளனர். அவ்வாறே மதத் தலைவர்களின் ஆசீர்வாதமும் இத்திட்டத்தை சிறப்பாக நடாத்த பேருதவியாக இருந்தது. மேலும் வடக்கின் குழந்தைகள்- தெற்கின் குழந்தைகளுடன் நல்லுறவை அபிவிருத்தி செய்வதற்காக கொழும்பு ஆனந்தாக் கல்லூரி, டீ. எஸ். சேனாநாயக்கா வித்தியாலயம், கிராண்ட்பாஸ் சங்கபோதி வித்தியாலயம், ஹோமாகம ம. வித்தியாலயம், கே/ தோலங்கமுவ டட்லி சேனநாயக்க ம. வி., கண்டி மகாமாய வித்தியாலயம் போன்ற கல்லூரிகளை ஒன்றிணைத்து சகோதரத்துவம் மற்றும் சகவாழ்வை மேம்படுத்தும் வேலைத்திட்டங்கள் செயற்படுத்தப்பட்டது. இதனூடாக தமிழ்- சிங்கள- முஸ்லிம் மாணவர்களிடையே இருந்த வேற்றுமை, இடைவெளி, பீதி, சந்தேகம் அகற்றப்பட்டு அன்பு, பாசம், காரண காரியம் புரிந்துணர்வு அபிவிருத்தியடைந்துள்ளதாக உறுதியாகியுள்ளது. இதனை நோக்கும் போத மஹிந்த சிந்தனையின் அர்த்தபூர்வ தன்மை வெளிப்படுகின்றது. மேலும் யுத்தம் நடைபெறுகின்ற பிரதேசங்களின் பிள்ளைகளின் அழகுக்கலை, தயாரிப்புத் திறன் போன்ற தன்மைகளை மேம்படுத்திக் கொள்ளவும், சிசுதிரிய மூலம் அளிக்கப்படும் பங்கு மிக அதிகமாகும் பாடசாலைப் பிள்ளைகளால் பல தலைப்புக்களின் கீழ் நடத்தப்பட்ட ஓவியக் கண்காட்சியும் இங்கு சிறப்பாக நடைபெற்றது. மேலும் ஆடல், பேச்சுப்போட்டிகளும் அவர்களிடம் மறைந்திருந்த திறமைகளை வெளிக்கொணர்ந்து காட்டியது. பண்பாட்டு விழுமியங்கள் மேம்பாடு, சிசு திரிய திட்டத்தின் கீழ் வலப்பனைப் பகுதியில் மருந்து முகாம், புலமைப்பரிசில் உட்கட்டமைப்புத் திட்டங்கள், பூ மற்றும் தாவர நடுகை, பாடசாலை பூவளர்த்தல் திட்டம், முகாமைத்துவம் முக்கிய விடயங்களாக இத்திட்டத்தில் இடம்பெற்றன. செங்கடகல நவோதய திட்டத்தின் கீழும் ஆடல், பாடல், பேச்சு, சூழல் பாதுகாப்பு, விளம்பரம், அனர்த்த முகாமைத்துவம் போன்ற வேலைத்திட்டங்களும், சுய தொழிலுக்கான கடன் வசதி, புகைப்படக் கண்காட்சி, மனித உரிமைப் பயிற்சிகள், கல்வி கருத்தரங்குகள் நடத்துதல் போன்றவற்றிற்கு கற்ற, வசதி படைத்த அரச சார்புள்ள மற்றும் அரச சார்பற்ற நிறுவனங்களின் பங்களிப்பும் இங்கு மிக முக்கியமானதாகும். மேன்மைமிகு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்களின் நாலாண்டு பூர்த்தியாவதுடன், மஹிந்த சிந்தனையில் எழுதி வாக்களித்தவாறு வடக்கின் வசந்தம், பண்பாட்டு விழுமியங்களின் அபிவிருத்தி மற்றும் சிசு திரிய அங்கு குறிபபிட்டவாறே வெற்றிப்பாதையில் வீறுநடைபோடுகின்றன. முழு மூச்சாக காரியமாற்றிய அதன் ஆணையாளர் மற்றும் அதன் சக ஊழியர்களுக்கு இது மட்டற்ற மகிழ்ச்சியாகும். இதனூடாக சமூகத்தில் இதுவரை புரையோடியிருந்த ஜாதி, மத, மொழி, குல வாதங்களினால் ஏற்பட்டிருந்த அவல நிலையகன்று, சமூக அபிவிருத்திக்கான உறுதிவாய்ந்ததொரு சமூகத்தை நாட்டின் அபிவிருத்திக்காக உருவாக்குவதற்கு ஜனாதிபதி அவர்களின் நாலாண்டு சேவை பூர்த்தியையொட்டி வட- கிழக்கு மாணவ மணிகளின் ஒன்று திரள்வோடு பல செயற்திட்டங்களும், முகாம்களும் நடைபெறவுள்ளன. இந்நிகழ்ச்சிகள் 19ம் திகதி முதல் 25ம் திகதிவரை நடைபெறுவதோடு, 25ம் திகதி இன்று வட- கிழக்குப் பகுதியிலிருந்து வரும் 1000 பேரளவு மாணவ மாணவிகளுடன் அலரிமாளிகையில் சினேகபூர்வ சந்திப்பொன்றும் நடாத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.


»»  (மேலும்)

ஹஜ்ஜுப் பெருநாள் 28 ஆம் திகதி


புனித ஹஜ்ஜுப் பெருநாள் எதிர்வரும் 28ம் திகதி சனிக் கிழமை கொண்டாடப்படும் என அகில இலங்கை ஜய்இய்யத்துல் உலமா அறிவித்துள்ளது.

அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமா, கொழும்பு பெரிய பள்ளிவாசல் மற்றும் முஸ்லிம் சமய, கலாசார, பண்பாட்டு அலுவல்கள் திணைக்களம் ஆகியவை ஏகமனதாக எடுத்துக் கொண்ட தீர்மானத்திற்கமைய ஹஜ்ஜுப் பெருநாள் 28ம் திகதி கொண்டாடப்படும் என சுட்டிக்காட்டியுள்ளது.»»  (மேலும்)

11/24/2009

2010ம் ஆண்டிற்கான கிழக்கு மாகாண சபையின் வரவு செலவு திட்டம் இன்று முதலமைச்சரினால் சமர்ப்பிப்பு

dsc03479-copyகிழக்கு மாகாண சபை ஆரம்பிக்கப்பட்டு சுமார் 18 மாதங்கள் கடந்த நிலையில் கிழக்கு மாகாண சபையின் 2வது வரவு செலவுத் திட்டம் இன்று கிழக்கு மாகாண முதலமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் அவர்களினால் சபையில் சமர்ப்பிக்கப்பட்டது. மேற்படி வரவு செலவுத் திட்டத்தின் 2ம் குழுநிலை விவாதம் இன்று 09.30 மணிக்கு கௌரவ மாகாண சபையின் சபாநாயகர் பாயிஷ் தலைமையில் கூடிய சபை அமர்வில் விவாதத்திற்கு எடுக்கப்பட்டது.

இன்றைய முதல்நாள் அமர்வில் ஆளுனர் செயலகம் பேரவைச் செயலகம் மாகாண சேவை, பொதுக்குழு, முதலமைச்சர் செயலகம், ஆகியவற்றிற்கான வரவு செலவுத்திட்டம் விவாதத்திற்கு எடுக்கப்பட்டது. இதில் குறிப்பாக முதலமைச்சர் செயலகத்திற்குள் உள்ளுராட்சி திணைக்களம், கிராமிய அபிவிருத்தி உல்லாசம், மீழ்குடியேற்றம் போன்ற அமைச்சுக்கள் தொடர்பாக விரிவாக விவாதிக்கப்பட்டு கிழக்கு மாகாண முதலமைச்சரும் குறித்த அமைச்சுக்கு பொறுப்பான அமைச்சருமாகிய சிவநேசதுரை சந்திரகாந்தன் வரவு செலவுத் திட்ட அறிக்கையைச் சமர்ப்பித்து அதற்கான அங்கிகாரத்தை கோரியிருந்தார் இது வாக்கெடுப்பிற்கு ஏகமனதாக ஏற்றுக்கொள்ளப்பட்டது. அதே போல் ஆளுனர் செயலகம் பேரவைச் செயலகம் மாகாண பொதுச் சேவை ஆணைக்குழு தொடர்பான வரவு செலவுத்திட்டஅறிக்கையும் வாக்கெடுப்பில் ஏகமனதாக ஏற்றுக்கொள்ளப்பட்டது.

img_2127
»»  (மேலும்)

கிழக்கு மாகாண மக்களுக்கு மட்டுமன்றி அனைத்து மக்களுக்காகவும்கிழக்கு மாகாண சபை குரல் கொடுக்கும் -பூ.பிரசாந்தன்.


இன மத மொழி பேதங்களைக் கடந்து இலங்கையின் எந்த மூலையில் எப்பகுதி மக்கள் பாதிக்கப்பட்டாலும் குரல் கொடுக்கும் மாகாண சபை எமது கிழக்கு மாகாண சபையே இதன் பெருமை கிழக்கு மாகாண முதலமைச்சரையும் ஏனைய உறுப்பினர்களையும் சாரும். மேலும் குறிப்பிடுகையில் கிழக்கு மாகாணத்தினை அபிவிருத்திக்கு இட்டுச் செல்ல வேண்டுமானால் எம்மிடம் உள்ள ஏதோ ஒரு துருப்புச் சீட்டு கல்வியே ஆகும். கல்வி கற்ற நல்லொழுக்க சமூகத்தினை உருவாக்குவதற்கு அனைத்து ஆசிரியர்களும் அற்பணிப்புடன் சேவையாற்ற முன்வர வேண்டும். எதிர் கட்சி, ஆளும் கட்சி அமைச்சர், உறுப்பினர் என்ற நோக்கங்களுக்கு அப்பால் முதலமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் அவர்களின் திறமையான வழிநடத்தலின் மூலம் கோடிக்கணக்கான அபிவிருத்தி திட்டங்களுக்கு மனிதத்துவத்துடன் தமிழர், சிங்களவர், முஸ்லிம்கள் என்ற பேதங்கள் இல்லாமல் இன ஒற்றுமை கட்டியெழுப்பப்பட்டுள்ளது என்றால் கிழக்கு மாகாண சபை சாதித்த பெரும் சாதனையாகும் என கிழக்கு மாகாண முதலமைச்சரின் இணைப்புச் செயலாளர் பூ.பிரசாந்தன் தெரிவித்தார். அவர் தொடர்ந்து கருத்து தெரிவிக்கையில் குடும்ப சமூக காரணம் காட்டி கிராமப்புறங்களுக்கு சேவையாற்ற மறுத்து அனைவரும் இடமாற்றம் கோருவதும் கொடுக்க தவறுமிடத்து அரசியல் தலைமைகளையும் அதிகாரிகளையும் சாடுவதும் நியாயமற்றது. மாணவர்களின் எதிர்காலத்தினை கருத்திற் கொண்டு செயற்பட வேண்டும் எனவும் மக்களின் வரிப்பணத்திலேயே நாம் அனைவரும் ஊதியம் பெறுகின்ற போதும் இதனை உணர்ந்து முன்வந்து உழகை;க வேண்டும் எனவும் குறிப்பிட்டார். 20.11.2009 அன்று மட்ஃ கல்வியியற் கல்லூரி பயிற்சிகால ஆசிரியர்கள் கிழக்கு மாகாண சபையினை பார்வையிடுவதற்காக விஜயம் செய்தபோதே மேற்கண்டவாறு குறிப்பிட்டார். இச்சந்திப்பின்போது மாகாண அமைச்சர் உதுமாலெப்பை மற்றும் விரிவுரையாளர் மோகன் உட்பட ஆசிரியர்கள் பலரும்பலரும் கலந்து கொண்டனர்


»»  (மேலும்)

வாகரையில் அத்துமீறிய குடியேற்றம் இல்லை - பிரதேச செயலாளர்


மட்டக்களப்பு மாவட்டம் வாகரைப் பிரதேச அரச காணிகள் அபகரிக்கப்படுவதாக கூறப்படும் குற்றச்சாட்டில் எதுவித உண்மையும் இல்லை என வாகரைப் பிரதேச செயலாளர் எஸ்.ஆர்.ராகுலநாயகி தெரிவித்துள்ளார்.

கிழக்கு மாகாணத்தில் வாகரை,கிரான்,பட்டிப்பளை ஆகிய பிரதேச செயலக பிரிவுகளில் அரசகாணிகளில் அத்துமீறிய குடியேற்றங்கள் இடம்பெறுவதாக தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் பா.அரியநேத்திரன் ஜனாதிபதியிடம் சுட்டிக்காட்டியிருந்தார்.

இது தொடர்பாக ஆராய்ந்து அறிக்கைகளை சமரப்பிக்குமாறு ஜனாதிபதி செயலகம் மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபரை கோரியிருந்தது. இந்நிலையில், பா.அரியநேத்திரனின் புகாரில் எதுவித உண்மையும் இல்லை என்றும் அவ்வாறான சம்பவங்கள் எதுவும் இடம்பெறவில்லை என்றும் ராகுலநாயகி கடிதம் மூலம் மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபருக்கு அறிவித்துள்ளார்.

அக் கடிதத்தில்,

"கௌரவ நாடாளுமன்ற உறுப்பினர் பா.அரியநேத்திரன் அவர்களது கடிதத்தில் குறிப்பிடப்பட்ட பனிச்சங்கேனி கிராம சேவையாளர் பிரிவிலுள்ள சல்லித்தீவு கிராமத்தில் காணி அத்து மீறல்கள் எதுவும் நடைபெறவில்லை.

மேலும் இப் பகுதியில் சுனேலா ஜனவர்தனா தனியார் கம்பனியினால் உயிரியல் ஆய்வு மையம் அமைப்பதற்காக நீண்ட கால குத்தகையில் காணி கோரப்பட்டு மாகாண காணி ஆணையாளரின் அனுமதியும் பெறப்பட்டுள்ளது.அத்துடன் மாவட்ட காணி பயன்பாட்டுக் குழுவின் அனுமதி பெறவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

புச்சாக்கேனி கிராம சேவையாளர் பிரிவிலுள்ள தோணிதாண்டமடு கிராமத்தில் எல்லை தொடர்பான பிரச்சினை உள்ள போதிலும் காணி அத்து மீறல்கள் எவையும் நடை பெறவில்லை என்பதை தங்களின் நடவடிக்கையின் பொருட்டு அறியத் தருகின்றேன்." என தெரிவிக்கப்பட்டுள்ளது.


»»  (மேலும்)

பலனற்ற அணுகுமுறைகளை கைவிட வேண்டும்தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஸ்தாபிக்கப்பட்ட நோக்கத்திலிருந்து தடம் மாறியுள்ளோருக்குத் தகு ந்த பாடம் புகட்டப்படும் என்று கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் சிவாஜிலிங்கம் அண் மையில் கூறியிருப்பது கூட்டமைப்புக்குள் கருத்து வேறுபாடு தலைதூக்கியிருப்பதை வெளிப்படுத்து கின்றது. பாராளுமன்ற உறுப்பினர் சிவாஜிலிங்கம் ஒரு கடுங்கோட்பாட்டாளர். புலிகளின் தனிநாட்டு நிகழ்ச்சி நிரலின் முழுமையான ஆதரவாளராகச் செயற்பட் டவர். தனிநாட்டு நிகழ்ச்சி நிரலிலிருந்து விடுபட்ட வர்களையே தடம் மாறியவர்கள் என்று இவர் குறிப்பிடுகின்றார் போல் தெரிகின்றது. எவ்வாறா யினும், கட்சிக்குள் தோன்றிய கருத்து வேறுபாடு களைக் கையாள்வது அவர்களின் உட்கட்சி விவ காரம். ஆனால், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஸ்தா பிக்கப்பட்ட நோக்கம் முற்றுமுழுதாக உட்கட்சி விவகாரமாகாது. கூட்டமைப்பு மாத்திரமன்றி எல்லாத் தமிழ்க் கட்சிகளும் இனப் பிரச்சினையை மையமாகக் கொண்டே ஸ்தாபிக்கப்பட்டனவென்பதால் அது தமிழ் மக்கள் சார்ந்த விடயம். அகில இலங்கைத் தமிழ்க் காங்கிரஸ், தமிழரசுக் கட்சி, தமிழர் விடுதலைக் கூட்டணி, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஆகிய கட்சிகள் மாத்திரமன்றி, இன்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்குள் சங்கம மாகியிருப்பனவும் தனித்துவமாகச் செயற்படுவன வுமான முன்னாள் ஆயுதக் குழுக்கள் கூட இனப் பிரச்சினையின் தீர்வையே பிரதான நிகழ்ச்சி நிரலாகக் கொண்டிருந்தன. இக் கட்சிகளும் அமைப்புகளும் முன்வைத்த தீர்வுகள் வெவ்வேறானவையாக இருந்த போதிலும் இனப் பிரச்சினைக்குத் தீர்வு காண்பதே பிரதான நோக்கம். தந்திர இலங்கையின் அறுபது வருடத்துக்கு மேற்பட்ட வரலாற்றில் இனப்பிரச்சினையின் தீர்வுக்காகத் தமிழ்க் கட்சிகளும் அமைப்புகளும் மேற்கொண்ட முயற்சி கள் எவ்வித பலனையும் தரவில்லை. இந்திய வம் சாவளியினருக்குப் பிரசாவுரிமை மறுக்கப்பட்டமை தேசிய இனப்பிரச்சினையிலும் பார்க்கப் பாரதூ ரமானது. இந்திய வம்சாவளியினரின் பிரசாவுரிமைப் பிரச்சினை இப்போது தீர்க்கப்பட்டிக்கும் பின்னணி யில் தேசிய இனப் பிரச்சினை தீர்க்கப்படாதிரு ப்பதைப் பார்க்கும் போது தமிழ்த் தலைவர்களின் தவறான அணுகுமுறையே இந்த நிலைமைக்குக் காரணம் என்ற முடிவுக்கே வரவேண்டியுள்ளது. இரண்டு விதமான அணுகுமுறைகளைத் தவறானவை எனக் கூறலாம். ஒன்று ஆயுதப் போராட்டம் மூலம் தனிநாடு அமைக்க முடியும் என்ற அணுகுமுறை. மற்றது முழுமையான அரசியல் தீர்வைத் தவிர வேறு எதையும் ஏற்க முடியாது என்ற அணுகுமுறை. வெவ் வேறான சந்தர்ப்பங்களில் இவ்விரு அணுகுமுறை களும் பின்பற்றப்பட்டிருக்கின்றன. இவற்றினால் இனப்பிரச்சினை சிக்கலாகியதும் தமிழ் மக்கள் மோசமான பாதிப்புக்களுக்கு உள்ளாகியதுமே கண்ட பலன். எனவே இனப்பிரச்சினையின் தீர்வில் அக் கறையுள்ள கட்சிகளும் அமைப்புக்களும் தங்கள் நிலைப்பாட்டை மீள்பரிசீலனை செய்ய வேண்டிய காலம் வந்துவிட்டது. தவறான அணுகுமுறைகளையே தொடர்ந்து பின்பற்றுவது தமிழ் மக்களுக்குச் செய்யும் மிகப் பெரிய துரோகமாகிவிடும். அது அழிவுகளு க்கும் அவலங்களுக்கும் உள்ளாகியிருக்கும் மக்களின் வெந்த புண்ணில் வேல் பாய்ச்சுவது போலாகிவிடும். மக்களை மோசமான பாதிப்புகளுக்கு உட்படுத்தாமல் அரசியல் தீர்வை அடையும் அணுகுமுறையே இன்றைய தேவை. சமகாலத்தில் நடைமுறைச் சாத்தி யமான தீர்வை ஏற்றுக்கொண்டு முழுமையான அரசி யல் தீர்வுக்கான முயற்சியை முன்னெடுப்பதே புத்திசாலித்தனமானதும் மக்களின் நலன் சார்ந்ததுமாகும்.

»»  (மேலும்)

ஜனாதிபதித் தேர்தல் முதலில் இரண்டு வருடங்களுக்கு முன்னதாக தேர்தலுக்கு முகம் கொடுக்க ஜனாதிபதி தீர்மானம்


உரிய காலத்துக்கு இரண்டு வருடங்களுக்கு முன்னர் ஜனாதிபதி தேர்தலை நடத்துவதற்கு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தீர்மானித்து ள்ளார். ஜனாதிபதியின் இந்த தீர்மானம் குறித்து தேர்தல் ஆணை யாளருக்கு நேற்று நண்பகல் சுப நேரத்தில் அறிவிக்கப் பட்டதாக அமைச்சரவைப் பேச்சாளரும் தகவல் ஊடகத்துறை மற்றும் முதலீட்டு ஊக்குவிப்பு அமைச்சருமான அனுர பிரியதர்ஷன யாப்பா தெரிவித்தார். ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பில் அங்கம் வகிக்கும் சகல கட்சித் தலைவர்களையும் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ நேற்று காலை சந்தித்தார். ஜனாதிபதித் தேர்தலை உடனடியாக நடத்தத் தீர்மானித்திருப்பதாக கட்சித் தலைவர்களுக்கு ஜனாதிபதி இங்கு அறிவித்தார். ஜனாதிபதியின் இந்த தீர்மானத்தை கட்சித் தலைவர்கள் அனைவரும் ஏகமனதாக ஏற்றுக் கொண்டதாகவும் அமைச்சர் அனுர பிரியதர்ஷன யாப்பா குறிப்பிட்டார். ஜனாதிபதியின் வெற்றிக்கு முழு ஒத்துழைப்பும் வழங்குவதாக கட்சித் தலைவர்கள் அனைவரும் தெரிவித்துள்ளனர். இந்தச் சந்திப்பில் சகல மாகாண சபை முதலமைச்சர்களும் கலந்து கொண்டனர். ஜனாதிபதி மஹிந்த ராஜ பக்ஷ 2005 நம்பவர் 18ம் திகதி இலங்கையின் 5வது நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டார். அவரின் பதவிக் காலம் 2011 நவம்பர் 18 ஆம் திகதி நிறைவ டைய உள்ள நிலையில் ஜனாதிப தித் தேர்தலை முன்கூட்டி நடத்த ஜனாதிபதி முடிவு செய்துள்ளார ஜனாதிபதி தனது முடிவை முறைப்படி கடிதம் மூலமாக நேற்று (23) தேர்தல் ஆணை யாளருக்கு அறிவித்தார். இதன்படி ஜனாதிபதித் தேர்தலுக்கான வேட்புமனு கோரப்படும் திகதியை தேர்தல் ஆணையாளர் வெகுவிரைவில் அறிவிப்பார் என தேர்தல் செயலக வட்டாரங்கள் கூறின. நான்காண்டுகள் முடிவடைந்த பின்னர் எந்த நேரத்திலும், மேலுமொரு தவணைக்குப் பதவி வகிப்பதற்காக தேர்தல் மூலம் ஆணையொன்றுக்கென மக்களை வேண்டி நிற்பதற்கான தமது முன்னத்தை பிரகடனம் மூலம் வெளிப்படுத்தலாம் என அரசியலமைப்பின் 31 (3) (அ) (1) இந்த சரத்து ஜனாதிபதிக்கு அதிகாரம் அளிக்கிறது. இதன்படி முன்கூட்டி ஜனாதிபதித் தேர்தலை நடத்துவதாக ஜனாதிபதி அறிவித்துள்ளார். ஜனாதிபதித் தேர்தலை முன்கூட்டி நடத்தப்பட உள்ள அறிவிப்பு வெளியானதை யடுத்து நாட்டின் பலபாகங்களிலும் நீலக் கொடி ஏற்றி பட்டாசு கொளுத்தி மக்கள் தமது வரவேற்பை தெரிவித்தனர் கடந்த 15ம் திகதி நடைபெற்ற ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி தேசிய மாநாட்டின் போது எந்தத் தேர்தலை முதலில் நடத்த வேண்டும் என கூடி இருந்த பெருந்திரளான மக்களிடம் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ கேள்வி எழுப்பியிருந்தார். ஜனாதிபதித் தேர்தலையே முதலில் நடத்துமாறு சகல மக்களும் கைகளை உயர்த்திக் கேட்டுக் கொண்டனர். மக்களின் வேண்டுதலையும் கூட்டுக் கட்சிகளின் அபிப்பிராயத்தையும் பெற்று ஜனாதிபதித் தேர்தலை முன்கூட்டி நடத்த ஜனாதிபதி தீர்மானித் துள்ளார்


»»  (மேலும்)

11/23/2009

கெவலியாமடுதமிழ் விவசாயிகள் 25 வருடங்களின் பின்பு தற்போது அங்கு திரும்பி மீண்டும் விவசாயச் செய்கையை ஆரம்பித்துள்ளனர்


1985 ம் ஆண்டு காலப் பகுதியில் கிழக்கு மாகாணத்தில் தொடர்ந்த இன வன்முறைகளையடுத்து மட்டக்களப்பு - அம்பாறை மாவட்ட எல்லைப் பிரதேசமான கெவலியாமடு பகுதியிலிருந்து வெளியேறிய தமிழ் விவசாயிகள் 25 வருடங்களின் பின்பு தற்போது அங்கு திரும்பி மீண்டும் விவசாயச் செய்கையை ஆரம்பித்துள்ளனர்.

குறிப்பிட்ட 25 வருட காலத்தில் அவ்வப்போது போர் நிறுத்த
உடன்படிக்கைகள் என்றும், சமாதானப் பேச்சுவார்த்தைகள் என்றும், சமாதான சூழ்நிலை ஏற்பட்டிருந்தாலும் அந்த பகுதிக்கு செல்வதற்கு அந்த நேரத்தில் கூட அச்சமடைந்தவர்களாக காணப்பட்ட இவ்விவசாயிகள் தற்போது குடும்பத்துடன் அங்கு திரும்பிக் கொண்டிருக்கின்றார்கள்.
»»  (மேலும்)

ஈராக் தேர்தல்களைப் பகிஷ்கரிக்கப் போவதாக சுன்னி, குர்திஷ் முஸ்லிம்கள் எச்சரிக்கை

ஈராக்கில் ஜனவரி மாதம் நடைபெறவுள்ள பாராளுமன்றத் தேர்தலை பகிஷ்கரிக்கப்போவதாக சுன்னி, குர்திஷ் முஸ்லிம்கள் கூறியுள்ளனர். நவம்பர் 8 ஆம் திகதி ஈராக் பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட சட்டம் தங்கள் இனங்களைப் புறக்கணிப்பதாகக் கூறிய இவர்கள், இச் சட்டத்திற்கெதிராக ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்டனர். சனிக்கிழமை தலைநகர் பக்தாத் உட்பட முக்கிய நகரங்களில் இந்த ஆர்ப்பாட்டம் நடந்தது. ஈராக்கில் ஷியா முஸ்லிம்கள் பெரும்பான்மையாக உள்ளனர். சுன்னி, குர்திஷ் இன முஸ்லிம்கள் இரண்டாம் தரத்திலுள்ளனர். பிரதமர் நூரி அல்மாலிகி ஷியா இனத்தவராகவும் ஜனாதிபதி ஜலால்தலபானி குர்தீஷ் இனமாகவும் உப ஜனாதிபதி தாரிக் அல்ஹாஸிமி சுன்னி முஸ்லிமாகவும் உள்ளனர்.

இந் நிலையில் ஈராக் பாராளுமன்றத்தில் நீண்டகாலங்களாகக் கிடப்பில் கிடந்த சட்டம் நவம்பர் 08 இல் நிறைவேற்றப்பட்டது. ஜனவரியில் தேர்தல்களை நடத்தவும் 275 ஆக உள்ள பாராளுமன்ற ஆசனங்களை 323 ஆக உயர்த்தவும் அனுமதிக்கப்பட்டது. இனங்களின் சனத் தொகைப் பரம்பலுக்கேற்ப ஆசனங்கள் ஒதுக்கப்பட வேண்டுமெனப் புதிய சட்டம் தெரிவிக்கின்றபோதும் ஆசனங்கள் முறையாகப் பங்கிடப்பட வில்லையென குர்திஷ் - சுன்னி முஸ்லி ம்கள் கூறுகின்றனர். ஈராக் பாராளுமன்றத்தில் கடும் வாதப் பிரதிவாதங்களுக்கு மத்தியில் நவம்பர் 08 இல் நிறைவேற்றப்பட்ட சட்டம் அமெரிக்கப்படையினரின் வெளியேற்றத்தை துரிதப்படுத்தவில்லை. உப ஜனாதிபதியின் அதிகாரங்கள் வீட்டோ அதிகாரத்தின் மூலம் ஆபத்தை எதிர்நோக்கியுள்ளதென்றும் சுன்னி, குர்திஷ் முஸ்லிம்கள் தெரிவித்தனர்.

»»  (மேலும்)

வடக்கு மீன்பிடித்துறை அபிவிருத்திக்கு 1165 மில்லியன் ரூபா ஒதுக்கீடுவட மாகாணத்தில் மீன்பிடித்துறை அபிவிருத்திக்கான மத்திய கால திட்டத்திற்காக 1165 மில்லியன் ரூபா ஒதுக்கப்பட்டுள்ளதாக கடற்றொழில் நீரியல் வளத்துறை அமைச்சு தெரிவித்தது.

இதன்படி யாழ்ப்பாணம், வவுனியா, மன்னார், முல்லைதீவு, மற்றும் கிளிநொச்சி மாவட்டங்களில் பல திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் அமைச்சு உயரதிகாரி ஒருவர் குறிப்பிட்டார்.

வடக்கிலுள் மீன்பிடித்துறைமுகங்கள், இறங்குதுறைகள் என்பன அபிவிருத்தி செய்யப்பட்டு வருவதோடு நாரா நிறுவன பிரதேச அலுவலகங்களும் அங்கு அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இது தவிர நன்னீர் மீன்வளர்ப்புத் திட்டங்களும், சிறிய மீன் குஞ்சுகளை வளர்க்கும் நிலையங்களும் ஆரம்பிக்கப்பட உள்ளன.

»»  (மேலும்)

பொன்சேகாவின் ராஜினாமா ஐ.தே.மு.வின் முதல் தோல்விஐ. தே. க. தலைமையிலான கூட்டமைப்பினர் ராஜினாமா செய்ய வேண்டாம் என வலியுறுத்தியும் கேட்காமல் ஜெனரல் சரத் பொன்சேகா தனது பதவியை ராஜினாமா செய்தமை ஐ. தே. க. கூட்டின் படு தோல்விக்கான முதற் படியாகும் என உலமா கட்சித் தலைவர் மெளலவி முபாறக் அப்துல் மஜீத் குறிப்பிட்டுள்ளார்.

இது சம்பந்தமாக அவர் மேலும் குறிப்பிட்டுள்ளதாவது :-

ஒரு நாட்டின் இராணுவ வெற்றிக்கும் தோல்விக்கும் அந்நாட்டின் அரசியல் தலைமையே பிரதான காரணமாகும் என்பதைக் கூட தெரியாதவர்களாக ஐ. தே. க. கூட்டமைப்பினர் உள்ளனர்.

»»  (மேலும்)

11/22/2009

திருகோணமலையில் ஆயுதங்கள் மீட்பு

திருகோணமலை மாவட்டத்தின் கந்தல்காடு பகுதியில் இலங்கை விமானப்படையினர் நடாத்திய சோதனையில் விடுதலைப்புலிகளால் மறைத்துவைக்கப்பட்டிருந்த ஆயுதங்கள் மீட்கப்பட்டதாக விமானப்படைத் தலைமையகம் தெரிவித்துள்ளது.

தேடுதல் நடவடிக்கையின் போது, மில்லிமீற்றர் 82 வகை மோட்டார் குண்டுகள் 152 உட்பட தாக்குதலுக்குப் பயன்படுத்தப்படும் இராசயன திரவியங்களும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.


»»  (மேலும்)

இலங்கை வரலாறு படைக்கிறது

இடம்பெயர்ந்த மக்களை மீளக் குடியமர்த்தும் செயற் பாடு அரசியல் அரங்கில் அதிகம் பேசப்படும் விட யமாக இன்றுவரை இருக்கின்றது. அரசாங்கத்துக்கு எதிரான பிரசாரத்தில் எதிரணிக் கட்சிகள் இடம்பெயர்ந்தோர் பிரச்சினைக்கு முக்கியத்துவம் அளிப்பதை அண்மைக் காலமாக அவதானிக்க முடிகின்றது. இடம் பெயர்ந்தவர் களை இப்போதைக்கு மீளக் குடியமர்த்தக் கூடாது என்று சில மாதங்களுக்கு முன் கூறிய ஒரு பிரமுகர் இப்போது எதிரணி அரசியலில் சங்கமிக்கத் தொடங்கியதும் மீள்குடி யேற்றம் திருப்திகரமான முறையில் நடைபெறவில்லை என்று அரசாங்கத்தின் மீது கணை தொடுத்த வேடிக்கையையும் அண்மையில் பார்த்தோம். நாய்கள் எவ்வளவுதான் குரைத்தாலும் ஊர்தி நகரும் என்பது போல, எதிரணியினர் அரசியல் நோக்கத்துடன் செய்யும் பிரசாரங்களுக்கு மத்தியில் அரசாங்கம் தனது பொறுப்பைச் சரியான முறையில் நிறைவேற்றியது. இடம்பெயர்ந்த மக்க ளுக்கு நல்வாழ்வை அளிக்க வேண்டியது தனது பொறுப்பு என்று ஜனாதிபதி கூறியதை நடைமுறைப்படுத்தும் விதத் தில் செயற்பாடுகள் இடம்பெறுகின்றன. நிவாரணக் கிராமங் களில் தங்க வைக்கப்பட்டுள்ள மக்களுக்கு வேண்டிய சகல வசதிகளும் செய்து கொடுக்கப்பட்டன. இடம்பெயர் ந்த மக்களின் மீள்குடியேற்றம் மிகத் துரிதமாக நடைபெறு கின்றது. நிவாரணக் கிராமங்களிலுள்ள வசதிகள் பற்றியும் மீள் குடியேற்றம் பற்றியும் அரசாங்கத்தைக் கடுமையாக விமர்சித்த தமிழ்த் தேசியக் கூட்டமைப்புப் பாராளுமன்ற உறுப்பினர்கள் ஒரு தடவை அப்பகுதிகளுக்குச் சென்று வந்தபின் திருப்தி தெரிவித்தது மாத்திரமன்றி அரசாங்கத்து க்கு நன்றியும் தெரிவித்தார்கள். அந்த அளவுக்கு அர சாங்கம் இடம்பெயர்ந்த மக்களின் தேவைகளை நிறை வேற்றி வருகின்றது. ஜனாதிபதியின் ஆலோசகரும் பாராளுமன்ற உறுப்பினரும் வட க்கு அபிவிருத்திச் செயற்பாடுகளுக்குப் பொறுப்பானவரு மான பசில் ராஜபக்ஷ நேற்று வெளியிட்ட அறிவித்தல் இடம்பெயர்ந்த மக்களை நிச்சயம் மகிழ்ச்சியில் ஆழ்த்தி யிருக்கும். இடம்பெயர்ந்த மக்கள் தொடர்பான பல்வேறு விடயங்களையிட்டு அவர் முக்கியமான அறிவித்தலைச் செய்திருக்கின்றார். நிவாரணக் கிராமங்களில் உள்ளவர்களின் நடமாட்டங்கள் தொடர்பான கட்டுப்பாடுகள் முற்றாக நீக்கப்பட்டுள்ளன. அவர்கள் தங்கள் சொந்த வீடுகளில் வசிப்பவர்கள் போல எந்த நேரத்திலும் எங்கும் சென்று வரலாம். இடம்பெயர்ந்த மக்கள் அனைவரும் ஜனவரி 31ந் திகதிக்கு முன் அவர் களின் சொந்த இடங்களில் குடியேற்றப்பட்டுவிடுவர். அது வரையில் நிவாரணக் கிராமங்களில் தங்கியிருப்பவர்கள் வழமை போல எல்லா வசதிகளையும் பெறுவர். மீளக் குடி யேற்றப்பட்டவர்களுக்கு இதுவரை வழங்கிய இருபத்தை யாயிரம் ரூபா கொடுப்பனவு ஐம்பதாயிரம் ரூபாவாக அதிகரிக்கப்பட்டுள்ளது. மீள்குடியேற்றம் தொடர்பாக வழங்கப்பட்ட கூரைத்தகடு போன்ற பொருட்களும் இரண்டு மடங்காக அதிகரிக்கப்பட்டுள்ளன. உலகின் பல நாடுகளில் மக்கள் இடம்பெயர்ந்திருக்கின்றார்கள். ஆபிரிக்க நாடுகளில் உள்நாட்டு மோதல்கள் காரணமாக மக்கள் இடம்பெயர்ந்திருக்கின்றார்கள். அமெரிக்கா போன்ற வளர்ச்சியடைந்த நாடுகளில் இயற்கை அனர்த்தங்கள் காரணமாக இடம்பெயர்ந்திருக்கின்றார்கள். இலங்கையில் இடம்பெயர்ந்த மக்கள் மீளக் குடியேற்றப்படும் அளவு துரிதமாக வேறெந்த நாட்டிலும் மீள் குடியேற்றம் இடம் பெறவில்லை. இலங்கையில் இடம்பெயர்ந்த மக்களுக்குக் கிடைக்கும் வசதிகள் மற்றும் கொடுப்பனவுகள் போல வேறெந்த நாட்டிலும் இல்லை. இடம்பெயர்ந்தோருக்கான வசதிகள் மற்றும் மீள்குடியேற்றத்தைப் பொறுத்தவரையில் இலங்கை வரலாறு படைத்திருக்கின்றது.


»»  (மேலும்)