12/29/2009

அலி சாஹீரும் (மௌலானா) அரசியல் பச்சோந்தித்தனம்!!! (பாகம் 1)

எஸ்.எம்.எம் பஷீர்


மௌலானா புலிகளின் புலிகளின் மட்டக்களப்பு பொறுப்பாளர் ரமேஷ் வேண்டிக்கொண்டபடிதான் கருணாவை கொழம்புக்கு கொண்டுவந்ததவர்; அவராக கருனாவை கொண்டுவர தீர்மானிக்கவில்லை . மொத்தத்தில் புலிகளின் கட்டளைப்படியே இவர் அதனை செய்தார். கருணாவை கொழும்புக்கு கடத்திவந்த அலி சாகிர் மௌலானா அமெரிக்காவில் இலங்கை அரசுக்கு எதிராகவும் புலிகளுக்கு எதிராகவும் தனக்கு சர்வதேச பாதுகாப்பு சட்டத்தின் கீழ் புகலிடம் தருமாறு விண்ணப்பித்தது, அந்த விண்ணப்பம் தீர்மானிக்கப்பட முன்னர் ராஜரீயகடவுச்சீட்டு பெறும் பதவி ஒன்றினை ( வெகுமதி ) பெற மறுபுறம் கருணா பிறிதொரு பெயரில் ராஜரீய கடவுச்சீட்டினால் பிரித்தானியாவுக்குள் நுழைந்தமைக்காக தண்டனை பெற்றார். இதனை பற்றி நான் டிசம்பர் மாதம் 2007 மாண்டு ஆங்கிலத்தில் ( Diplomacy of Reward and Retribution) என்று ஒரு கட்டுரை எழுதியிருந்தேன். அக்கட்டுரையின் தலைப்பாக " வெகுமதியும் தண்டனையும் வழங்கும் ராஜதந்திரம்" என்பதாகும். கடந்த இரண்டு வருடங்களில் இலங்கையில் ஏற்பட்ட அசாத்திய அரசியல் மாற்றங்கள், தகிடுதித்தங்கள் மீண்டும் இன்றைய நிகழ்வுகளுடன் இக்கட்டுரையை எழுத என்னைத்தூண்டின. இக்கட்டுரை நாயகர்கள் இருவரும் இன்று ஸ்ரீ லங்காவில் இருக்கிறார்கள் அதில் ஒருவர் பிரித்தானியாவிலிருந்து தனது சொந்தப் பெயரில் இலங்கை ஆவணம் பெற்று இலங்கை திரும்பி தேசிய நல்லிணக்க அமைச்சராக இருக்கிறார்; மற்றையவர் தனது பதவி காரணமாக புதிய ராஜரீய கடவுச்சீட்டு பெற்று இப்போது இலங்கை திரும்பியுள்ளார், அன்று காணப்பட்ட ஊடக கருத்துரைகளின் பிரதிபலிப்பாகவே ஒருவருக்கு வெகுமதி மற்றவருக்கு தண்டனை என்று தலைப்பிட நினைத்தேன், ஆனால் இன்று இருவருமே வெகுமதி ( Reward ) பெற்றிருக்கிறார்கள். அலி சாகிர் மௌலானா ஸ்ரீ லங்காவுக்கு செல்வதற்கு முன்னரே நான் இதற்கு முன்னர் முன்னர் எழுதிய "ஹீரோ டு சீரோ" (From Hero To Zero ) கட்டுரையில் இவர் பற்றி பின்னர் எழுதுவேன் என்று குறிப்பிட்டிருந்தேன், இக்கட்டுரை இன்றைய இன்றைய அரசியல் மாற்றங்களையும் தொட்டுசெல்கிறது.

சாகிர் மௌலானாவின் அகதி விண்ணப்பம் தீர்மானிக்கப்படா நிலையில் அமெரிக்க இலங்கை தூதுவராலயத்தில் " மினிஸ்டர்" எனப்படும் ராஜ தூதர் ஆக பொருளியல் பகுதியில் (Economic) நியமிக்கப்பட்ட காலகட்டத்தில் இலங்கை விட்டு ராஜரீய கடவுச்சீட்டில் ( Diplomatic passport ) பிரித்தானியாவுக்குள் நுழைந்த கருணா மீது பிரித்தானிய குடிவரவு அதிகாரிகள் சட்ட நடவடிக்கை எடுத்தனர்; அதன் விளைவாய் கருணா சிறிது காலம் தடுப்பு முகாமில் (Detention Camp ) வைக்கப்பட்டார். இருவருமே இன்று இலங்கையின் குடிவரவு குடியல்வுசசட்டத்தின் கீழ் ராஜரீய கடவுச்சீட்டுக்கு உரித்துடயவர்களாக இருக்கிறார்கள்.

மௌலானா அமெரிக்க இலங்கை தூதுவராலயத்தில் மினிஸ்டர் எனும் பதவியில் அவரது அகதி விண்ணப்பம் அமெரிக்க அரசால் தீர்மானிக்கப்படாமல் இருக்கின்றபோது நியமிக்கப்பட்ட போது இலங்கையின் பிரபல ஆங்கிலத்தினசரிகள் இது குறித்து கேள்வி எழுப்பின. செப்டம்பர் மாதம் ௨௦௦7 ம் ஆண்டு ஐக்கிய நாடுகளின் அறுபத்தி இரண்டாவது அமர்வுகளுக்காக அங்கு சென்றிருந்த இலங்கை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச அவர்களின் குழுவில் சென்றிருந்த ஜனாதிபதியின் ஆலோசகர் ஏ. எச். எம் அஸ்வர் அவர்களின் சிபாரிசின் காரணமாகத்தான் சாகிர் மௌலானாவுக்கு அப்பதவி வழங்கப்பட்டதாக எனது செய்தி மூலங்கள் தெரிவித்தன. இவரது நியமனம் குறித்து தி நேசன் ( The Nation ) எனும் கொழும்பு பத்திரிகை தனது தலைப்புச்செய்தியில் "அமெரிக்க அரசும் இலங்கை அரசும் ராஜரீய அமளியில்" (Diplomatic row) என்று மௌலானாவின் நியமனம் குறித்து கேள்வி எழுப்பியபோது. இலங்கையின் வெளிநாட்டு அமைச்சு அப்பத்திரிகை அறிக்கையில் தகவல்கள் அடிப்படை அற்றவை என்றும இலங்கையின் குடிவரவு குடியகல்வு திணைக்களம் இருபத்தி எட்டு டிசம்பர் மாதம் ௨௦௦7ம் ஆண்டு அலி சாஹீருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் ராஜரீய கடவுசீடுக்களை வழங்கி விட்டதாக அறிக்கையிட்டனர் ஆனால் தி நேசன் பத்திரிகையின் அமெரிக்க செய்தியாளர் தனது செய்தி உண்மையானது என்று தனது நிலைப்பாட்டிலிருந்து மாறவில்லை. ஆனால் இவரது நியமனம் இவருக்கு இலங்கை ராஜரீய கடவுச்சீட்டு வழங்கப்பட முன்னரும் , அவரது நியமனம் முறையாக அமெரிக்க அரசுக்கு அறிவிக்கப்பட்டு அவருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் அமெரிக்க ராஜாங்க அமைச்சு தனிப்பட்ட அடையாள அட்டைகளை வழங்கமுன்னரும் ராஜரீய அமளி நடைபெற்றது என்று கூறப்பட்டது, அதுவே அன்றைய செய்தியாகவும் இருந்தது. மேலும் இது பற்றி சண்டே டைம்ஸ் பத்திரிகையின் ராஜரீய செய்தி ஆசிரியர் ( Diplomatic Editor ) கருணாவின் கொழும்பு வெளியேற்றத்தை நிகழ உதவிபுரிந்த அலி சாகிர் மௌலானாவை வாசிங்டன் தீ சீ யில் (Washington D C ) உள்ள இலங்கை தூதராலயத்தில் மூன்றாவது உயர்நிலை ராஜரீய பதவியில் நியமித்து வெகுமதி வழங்கி யிருக்கிறது. இதுவரை எப்போதும் நடக்காத ஒன்றை, ஒருவேளை இதுவே முதல் தடவையாக இருப்பதால் இது கின்னஸ் சாதனையை (Guinness Record ) இலங்கை அரசு செய்திருப்பதாக எழுதி இருந்தார். இன்னொருபுறம் இவர் வாசிங்டனில் உள்ள இலங்கை தூதுவராலயத்தில் மினிஸ்டர் ஆக நியமனம் பெற்றபோது இவரது நியமனம் குறித்து அமெரிக்காவின் முன்னாள் ஜனாதிபதியான ரொனால்ட் ரீகனின் சட்டத்தரணி ப்ரூஸ் பைன் ( Bruce Fein ) அமெரிக்காவின் மௌலானா எப். பி.(F.B.I ) எனும் தேசிய உளவுத்துறைக்கு இவருக்கு வழங்கப்பட்ட நியமனம் முறைகேடானது என்று புகார் ஒன்றினை ஏப்ரல் மாதம் மூன்றாம் திகதி ௨௦௦7ல் சமர்ப்பித்திருந்தார். இவரது முறைப்பாட்டில் மௌலானாமீது பல அமெரிக்க தேசிய குடியியல் குற்றவியல் சட்டங்களுக்கு முரணான விதத்தில் அவர் முந்திய பிந்திய விஜயத்தின்போதும் நடந்திருந்தார் என்ற குற்றச்சாட்டை முன்வைத்திருந்தார்

இலங்கைக்கு 1987 லில் அமெரிக்காவிலிருந்து "திரும்பி வந்தபின்னர்" மட்டக்களப்பு தேர்தல் தொகுதியின் பாராளுமன்ற உறுப்பினர் டாக்டர் பரீத் மீராலேப்பை மரணமடைந்த இடத்துக்கு எம்.பி ஒருவரை நியமிக்க ஐக்கிய தேசிய கட்சி விண்ணப்பம் கோரியபோது பலர் விண்ணப்பித்திருந்தனர் ( தபால் மூல விண்ணப்பம்) அதில் இவரும் ஒருவர், ஐக்கிய தேசியக்கட்சியின் அன்றைய செயலாளர் ஹர்ஷா அபெவர்தனா கட்சியின் ஸ்ரீ கொத்தா நேர்முகப்பரீட்சையின் பின்னர் ரிஸ்வி சின்னலெப்பை என்பருக்கு எம்.பி பதவியினை வழங்கினார். இந்த காலகட்டத்தில் நாங்கள் பரஸ்பரம் சந்திக்க நேரிட்டது. அரசியலில் எப்படியாவது நுழைந்துவிடும் தீவிர நோக்கம் அவரிடம் காணப்பட்டது. இவரது இந்த முயற்சி தோல்வியுற்றதும் அவர் ஸ்ரீ லங்கா சுதந்திரக்கட்சியில் சேர்ந்து 1989 ஆண்டு மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிட்டார், ஆனால் அவரால் சுமார் இரண்டாயிரம் வாக்குகளை மட்டுமே பெறமுடிந்தது , அதற்கான காரணம் அன்று ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் அலையின் முன்னாள் அவரால் நீந்த முடியவில்லை. மௌலானா மக்களால் நிராகரிக்கப்பட்டார், திரும்பவும் கொழும்பில் தங்கி வாழத்தொட ங்கினார்; இந்நிலையில் எவ்வாறு அவர் மீண்டும் அரசியலுக்குள் நுழைந்தார்;, எவ்வாறு ரணில் விக்க்ரமசிங்ஹா முஸ்லிகளுக்கு "சத்திய பாதையை" காட்டுவதாக சென்ற பொதுத்தேர்தலில் பிரச்சாரம் செய்தார்; ஏன் அமெரிக்காவிலிருந்து முதலில் வெளியேறினார் என்பதெல்லாம் அரசியலில் தனிமனிதன் என்ற வகையில் அல்லாமல் இன்று சர்வதேச செய்தியாகிவிட்ட விடயமாகும் -தொடரும்.
0 commentaires :

Post a comment