12/30/2009

வடக்கில் கைவிடப்பட்ட ஒரு இலட்சத்து 28 ஆயிரம் ஏக்கரில் மீண்டும் பயிரிட நடவடிக்கை


வட மாகாணத்தில் மோதல் காரணமாக கைவிடப்பட்டுள்ள ஒரு இலட்சத்து 27 ஆயிரம் ஏக்கர் மேட்டு நிலத்தில் மீண்டும் பயிரிட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக வட மாகாண ஆளுநர் மேஜர் ஜெனரல் ஜி. ஏ. சந்ரசிறி தெரிவித்தார். தற்பொழுது 33,980 ஏக்கரில் பயிரிடப்பட்டு வருவதோடு பெரும்போகத்தின் போது 10,592 ஏக்கரில் பயிர்ச் செய்கைகள் மேற்கொள்ளப்பட உள்ளதாகவும் ஆளுநர் தெரிவித்தார்.

மேட்டு நிலங்களில் மீண்டும் பயிர்ச் செய்கைகளை ஆரம்பிப்பதற்காக இதுவரை 24,500 கிலோ கிராம் விதைகள் விநியோகிக்கப்பட்டுள்ளன.

வீட்டில் மரக்கறி பயிரிடுவதற்காக 4,200 பக்கட் விதைகளும் வழங்கப்பட்டுள்ளன. தற்போது மன்னார் மாவட்டத்தில் 1,639 ஏக்கரிலும் வவுனியா மாவட்டத்தில் 21,382 ஏக்கரிலும் யாழ். மாவட்ட த்தில் 10,963 ஏக்கரில் பயிரிடப்பட்டு வருவதாகவும் ஆளுநர் தெரிவித்தார்.

பெரும்போகத்தின் போது மன்னார் மாவட்டத்தில் 631 ஏக்கரி லும் முல்லைத்தீவு மாவட்டத்தில் 750 ஏக்கரிலும் வவுனியா மாவட் டத்தில் 5,645 ஏக்கரிலும் யாழ். குடா வில் 3,456 ஏக்கரிலும் கிளிநொச்சி மாவட்டத்தில் 110 ஏக்கரிலும் மேட்டு நிலப்பயிர்ச் செய்கை மேற் கொள்ளப்பட உள்ளன.0 commentaires :

Post a comment