12/25/2009

தமிழ் பேசும் மக்களின் புதிய அரசியல் தலைமை மீண்டும் திரும்பும் 35 வருடகால அரசியல் சுழற்சி! தமிழ் பேசும் மக்களுக்கு விடிவு கிட்டுமா? (சாகரன்

1970 களில் தமிழ் மிதவாக கட்சிகளின் பாராளுமன்றத் தேர்தல் தோல்வியும், அதனைத் தொடர்ந்த தமிழர் விடுதலைக் கூட்டணியின் தோற்றமும், வட்டுக்கோட்டைத் தீர்மானமும் இதன் அடிப்படையில் அமைந்த 1977 தேர்தல் வெற்றியும் தொடர்ந்த ஐக்கிய தேசியக் கட்சியுடனான நட்பும், மாவட்டசபை ஏற்பும் ஆயுதம் எந்திய இயங்கங்களின் ‘புதிய’ தலைமையை நோக்கி தமிழ் பேசும் மக்களின் தலைமையை இடம் பெயர வைத்தது என்பது இலங்கை தமிழ் பேசும் மக்களின் வரலாறு. இன்றும் 35 வருடங்களுக்கு பின்பு இதே மாதிரியான ஒரு நிலமையை நோக்கி தமிழ் பேசும் மக்களின் தலைமை சக்தி நகர்வதற்குரிய வாய்ப்புக்கள், முயற்சிகள் மேற் கொள்ளப்படுகின்றன. புலிகள் ஏனைய சகல விடுதலை இயக்கங்களையும், வெகு ஜன அமைப்புக்களையும் தமழ் பிரதேசங்களில் செயற்படவிடாமல் முடக்கியும் தமிழர் விடுதலைக் கூட்டணியை ‘இல்லாமல்’ செய்து தமிழ் தேசியக் கூட்டமைப்பை உருவாக்கி தான் மட்டும் ஏகபோகமா இருந்து எல்லாமுமாகி நின்று, இன்று ஏதும் இல்லாமல் போய்விட்ட நிலையில் மீண்டும் ஒரு புதிய அரசியல் தலைமை சுழற்சிக்குள் தமிழ் பேசும் மக்கள் தள்ளப்பட்டுள்ளனர்;. இனி ஏற்படப்போகும் ‘புதிய தலைமை’ கடந்த கால வரலாற்றை உள்வாங்கி தன்னை கட்டமைத்து சரியான முற்போக்கான வெற்றித் தலைமையாக உருவெடுக்குமா? என்பதே எம்முன் எழுந்திருக்கும் இன்றைய பிரதான அரசியல் கேள்வி ஆகும். 1970 ஆண்டு இலங்கையில் நடைபெற்ற பாராளுமன்றத் தேர்தலில் தமிழரசு கட்சி, தமிழ் காங்கிரஸ் தலைவர்கள் பலரின் தோல்விகள் அவர்களை அதிர்ச்சிக்கு உள்ளாக்கியது. குறிப்பாக அமிர்தலிங்கம், சிவசிதம்பரம், இராசமாணிக்கம், தங்கத்துரை போன்றோரின் தோல்விகள் அவர்களை நிலைகுலைய வைத்தது. தமது எதிர்கால பாராளுமன்ற பதவிகள் பற்றி சிந்திக்க வைத்தது. இவர்களின் சிந்தனையெல்லாம் தமிழ் மக்களைப்பற்றியல்ல. தமிழ் மக்களின் எதிர்காலத்தைப் பற்றியும் அல்ல. மாறாக தமது தேர்தல் தோல்விகளைப் பற்றியே. மீண்டும் தமது நாற்காலிகளை பிடிக்க என்ன செய்யலாம்? என்பதைப்பற்றி. தமிழ் மிதவாத பிற்போக்கு தலைமைமைகள் ஐக்கிய தேசிய கட்சியின் நண்பனாக இருந்து தமிழ் மக்களுக்கு துரோகம் செய்து வந்ததற்கு மக்கள் நல்ல பாடம் புகட்டிவிட்டார்களோ என்று அவர்களை பயம் அடையச் செய்தது. இவ் 1970 தேர்தலில் வெற்றிபெற்று ஆட்சி அமைத்த சிறீமாவோ பண்டாரநாயக்கா தலைமையிலான இடதுசாரி ஐக்கிய முன்னணி அரசாங்கம் அறிவித்த பல்கலைக்கழக அனுமதிக்கான ‘தரப்படுத்தல்’ என்ற விடயத்தை இறுகப் பிடித்தனர் தமிழ் மிதவாத பிற்போக்கு தலைமைகள். யாழ்பாண மத்தியதர வர்க்க மக்களின் பெரும் மூலதனச் செயற்பாடு தம் பிள்ளைகளை பல்கலைக்கழகம் வரை அனுப்பி வாழ்கையில் வெற்றி? அடையச் செய்தல் ஆகும். இச்செயற்பாடு அரசு செயற்படுத்திய தரப்படுத்தலால்; அதிகம் பாதிப்படைந்தது. இதில் பெருவாரியாக பாதிக்கப்பட்ட தமிழ் பேசும் மாணவர்கள் யாழ்பாணத்து மாணவர்களே. இதேபோல் கொழும்பு மாவட்ட (சிங்களம் பேசும்) மாணவர்களும் பாதிக்கப்படனர். பிரதேசரீதியான தரப்படுத்தலில் யாழ்ப்பாணம் தவிர்ந்த ஏனைய (கல்வியில்) பின்தங்கியிருந்த தமிழ் மாவட்ட மாணவர்கள் பலன் அடைந்தனர் என்பது உண்மை நிலையை தமது சுயநலத்திற்காக வசதியாக மறைத்தே வைத்திருந்தனர் தமிழ் மிதவாத பிற்போக்கு தலைமைகள். ஆனால் இன விகிதாசார தரப்படுத்தலினால் தமிழ் பேசும் மாணவர்கள் பாதிக்கப்பட்டனர் என்பது மறுப்பதற்கில்லை என்பது இங்கு கவனிக்கப்படதக்கது. இதே வேளை இடதுசாரி ஐக்கிய முன்னணி அரசினால் அறிமுகப்படுத்திய சுதேசிய உற்பத்தியை ஊக்குவித்தல் என்ற பொருளாதாரக் கொள்கையினால் யாழ்பாணத்து விவசாயிகளின் பொருளாதாரம் மட்டும் அல்ல முழு இலங்கையும் உணவு உற்பத்தியில் தன்னிறவை நோக்கி எகிறிப் பாய்ந்ததை தமிழ் பேசும் மக்களின் தலைமைகள் முன்னிறுத்தவில்லை மாறாக பாணுக்கும், வெளிநாட்டு துணி வகைகளுக்கும், அரிசியிற்கும் சங்கக் கடையில் வரிசையில் மக்கள் நின்றதை முன்னிலைப்படுத்தினர் இவர்கள். கூடவே கள்ளக்கடத்தல் மூலம் இந்திய சரக்குகளை(வெளிநாட்டு) இலங்கைக்கு கடத்தி வருவதை இவர்கள் மறைமுகமாக ஆதரித்தனர். தமிழ் மக்களின் மிதவாதக் கட்சிகளிலும் யாழ்ப்பாண மேட்டுக்குடியினரின் மேலாதிக்கமே மேலோங்கி நின்றது என்பது உண்மையே. எனவே யாழ் மேட்டுக் குடியினரின் அபிலாஷைகளை பிரதிபலிக்கும் தமிழ் மிதவாத கட்சிகளான தமிழரசுக்கட்சி, தமிழ் காங்கிரஸ் என்பன தரப்படுத்தல் என்பதனை தமது கரங்களில் தூக்கிப்படித்து தமிழ் இளைஞர்களுக்கு உணர்சியூட்டல் என்ற விடயத்தை மிகவும் இலாவகமாக செய்தன. இதற்கு இலங்கையை ஆண்டுவந்த பேரினவாத அரசுகளின் செயற்பாடுகளும் உறுதுணையாக இருந்தன. ஐதேக ஆட்சியாளர்களால் தமது ஆட்சிக்காலங்களில் நடத்திவரப்பட்ட தமிழ் பேசும் மக்களுக்கெதிரான இனக்கலவரங்களும் தமிழ் இனவாதத்தை தூக்கிப்பிடிக்க நிறையவே உதவி செய்தன. பேரினவாத தலைமைகளுக்கும் தமது பாராளுமன்ற நாற்காலிகளை இறுக்கப்பற்றிகொள்ள இனவாதமே இலகுவான ஆயுதமாக இருந்தது. சிங்களம் பேசும் உழைக்கும் வர்க்கத்தையும், தமிழ் பேசும் உழைக்கும் வர்க்கத்தையும் இணையவிடாமல் தடுபதில் அவர்கள் வெற்றிகாண்பதற்கு தமது பேரிவாத சிந்தனையை சிறுபான்மை இனத்தின் மீது ஏவுவதில் பின் நிற்கவில்லை. தமிழ் பிரதேசங்களை பிரித்தாளும் கொள்கையில் ஆரம்பித்து திட்மிட்ட குடியேற்றம், இனக்கலவரம் என ஐக்கிய தேசிய கட்சியின் தலைவர்கள் டிஎஸ் செனநாயக்காவில் ஆரம்பித்து இன்றுவரை தமது தமிழ் மக்களுக்கு எதிரான செயற்பாடுகளை அவ்வப்போது அரகேற்றி வந்தனர், வருகின்றனர்;. அண்மையில் ஐக்கிய தேசியக்கட்சியின் பொது வேட்பாளர் சரத் பொன்சேகாவின் தமிழ், முஸ்லீம் மக்கள் இலங்கைக்கு வந்த ‘விருந்தாளிகள்’ என்று குறிப்பிட்டதும் இதன் தொடர்சியாகத்தான் பார்க்க முடியும். ஆனாலும் தமிழ் தேசிக் கூட்டமைப்பு வரையிலான தமிழ் மிதவாத தலைமைகள் இதே ஐக்கிய தேசியக் கட்சியுடன்தான் நட்பு பூண்டுவந்தன, வருகின்றன என்பது துர்அதிஷ்டவசமானது, துரோகத்தனமானது, அயோக்கித்தனமானது. தமிழ் பேசும் மக்களின் உரிமைகள் வென்றெடுக்கப்படாமல் போனதற்கு இதுவும் ஒரு முக்கிய காரணியாகும். 1970 இல் ஏற்பட்ட பாராளுமன்ற தேர்தல் தோல்வியில் இருந்து உதித்ததுதான் தமிழர் விடுதலைக் கூட்டணி என்ற புதிய மிதவாத தலைமை. இதன் தொடர்சியாக உருவாக்கப்பட்ட வட்டுக் கோட்டைத் தீர்மானம் எல்லாம். தமிழ் மக்களின் அரசியல் உரிமைப் பிரச்னைகளுக்கான தீர்வு என்ற அடித்தளத்தில் இருந்து இது தோற்றிவிக்கப்பட்டதாக காட்டிக் கொள்ளவதற்காக முன்வைக்கப்பட் கோஷம் ‘தனிநாடு(தமிழ் ஈழம்)’, ‘ஆண்டபரம்பரை ஆள நினைப்பதில் தவறு ஒன்றும் இல்லையே’, ‘தமிழனுக்கு ஒரு நாடு இல்லை என்பதினால் தனிநாடு (தமிழ் ஈழம்) கேட்கின்றோம்’ என்பதெல்லாம் வெறும் உணர்சியூட்ட பாவிக்கப்பட்ட கோஷங்களே! பிற்போக்கான கோஷங்களே! பிழையான தத்துவார்த்த கோஷங்கள் இவை. மிழ் பேசும் மக்கள் இலங்கையில் இரண்டாம்தரப் பிரஜைகளாக உரிமைகள் மறுக்கப்பட்ட நிலையில் இருந்து வருகின்றனர் என்பதும் உண்மையே. இனக்கலவரங்கள் மூலம் தமிழ் பேசும் மக்கள் பாரதூரமான பாதிக்கப்பட்டு வந்தனர் என்பதும் உண்மையே. பிரிட்டிஷ் அரசு இலங்கைக்கு ‘சுதந்திரம்?’ வழங்கிவிட்டு செல்லும் போது தமிழ் பேசும், சிங்களம் பேசும் தொழிலாள வர்க்கங்களை தொடர்ந்து ஐக்கிப்படவிடாமல் இருபதற்குரிய பிரித்தாளும் தந்திரத்தை பாவித்து முரண்பாடுகளை திட்டமிட்டு ஏற்படுத்திவிட்டு சென்றதும் உண்மையே. இலங்கையில் இருக்கும் இடதுசாரிகள் பேரினவாதத்திற்கு எதிராக ஐக்கியப்பட்டு அதேவேளை சிறுபான்மை தமிழ் பேசும் மக்களின் அரசியல் உரிமைப் பிரச்சனையை சுயநிர்ணய உரிமையின் அடிப்படையில் அணுகத் தவறியமையினால் சிங்கள, தமிழ் பேசும் உழைக்கும் வர்க்கங்களை ஐக்கியப்படுத்தி இலங்கையில் உள்ள அனைத்து தரப்பு மக்களின் சம, சகவாழ்வை உறுதிப்படுத்தும் போராட்டங்களுக்கு தலைமை கொடுக்க முடியாமல் பலவீனப்பட்டு போயினர். அன்றைய காலகட்டத்தில் இலங்கையில் தமிழ் மக்களுக்கு பிரச்சனை இல்லையா? நிறையவே இருந்தன. ஒரு சிறுபான்மை தேசிய இனத்திற்கு மறுக்கப்பட்ட அரசியல் உரிமை என்ற பிரதான பிரச்சனை இருந்தது. தமிழர் விடுதலைக் கூட்டணியின் வட்டுக் கோட்டைத் தீர்மானமும், அதனைத் தொடர்ந்த 1977 ஆண்டு பொதுத் தேர்தலில் முன்வைக்கப்பட்ட தனிநாட்டிற்கான அங்கீகாரம் கோரல் என்ற கோஷமும் தமிழ் மக்களின் சுயநிர்ணய உரிமையின் அடிப்படையில் உருவானவை அல்ல. இவை வெறும் பாராளுமன்ற நாற்காலிகளைப் பிடித்து பதவிகளைப் தக்கவைத்துக் கொள்ளல் என்ற சுயநலத்தின் அடிப்படையில் மட்டும் உருவானவவை. அவர்களின் விருப்பின்படி 1977ம் ஆண்டு தேர்தலில் வடக்க கிழக்கு தமிழ் பேசும் மக்களின்; அமோக ஆதரவுத்தளத்தின் மத்தியில் தமிழர் விடுதலைக் கூட்டணி வெற்றியீட்டியது. இதனைத் தொடர்ந்து வழமைபோல் ஐதேக யுடன் தனது நட்புப்பாலத்தை விரிவாக்கி தனிநாட்டுக் கோரிக்கையை கிடப்பில் போட்டுவிட்டு மாவட்டசபையை தமக்கு வாக்களித்த மக்களின் கருத்துக்களுக்கு செவிசாய்காமல் ஏற்றதுதான் தமிழர் விதலைக் கூட்டணி செய்ய அரசியல் காட்டிக்கொடுப்பு, துரோகத்தனம். 1977 ம் ஆண்டு தேர்தலில் தமிழர் விடுதலைக் கூட்டணியினர் பெறும் வாக்குக்கள் சுயநிர்ணய உரிமையின் அடிப்படையில் தமிழ் பேசும் மக்கள் பிரிந்து செல்வதற்கான அங்கீகாரத்தை தமிழ் மக்களிடம் கோரி இதனை சர்வ தேசத்திற்கு எடுத்துக்காட்டும் ஒரு தேர்தலாக கருதிய யாழ் பல்கலைகழக மாணவர்கள் இரு கிழமை தமது விரிவுரைகளை தவிர்த்து வடக்கு கிழக்கு எங்கும் சென்று தேர்தல் பிரச்சாரம் செய்து இவ் வெற்றிக்கு உழைத்தனர். தேர்தலில் வெற்றியீட்டிய தமிழர் விடுதலைக் கூட்டணியினர் ஜேஆர் அரசுடன் ‘இணங்கி’ மாவட்டசபையை ஏற்றவுடன் அதனைக் கண்டித்து யாழ்பல்கலைக்கழக மாணவர்கள் அமிர்தலிங்கத்தின் கொடும்பாவியை எரித்தனர். தமிழர் விடுதலைக் கூட்டணியினர் ஆத்திரம் அடைந்தனர். பல்கலைக்கழக மாணவர்களின் நியாயமான எதிர்ப்பு போராட்டததை சீர்தூக்கிப் பார்க்கத் தவறினர். மாணவர்களுக்கு எதிராகவும் செயற்பட விளைந்தனர். அன்றைய காலகட்டத்தில் மிகவும் மோசமான இனவாதியான சிறில் மத்தியூ பாராளுமன்றத்திலும் ஏனைய இடங்களிலும் பேசும் போது கூறுவான் யாழ் பல்கலைக்கழக மாணவர்கள் குதிரை ஓடி பல்கலைக்கழகம் வந்தவர்கள் என்று. அதனை சிலகாலம் கழித்து யாழ்பல்கலைக் கழக முன்வீதியில் மேடையமைத்து தமிழர் விடுதலைக் கூட்டணியினர் யாழ் பல்கலைக் கழக மாணவர்களை நோக்கி ‘உங்கே படிப்பவர்கள் குதிரை ஓடி பல்கலைக்கழகத்திற்கு தெரிவு செய்யப்பட்டனர்’ என்று மேடையில் போட்டு பேசி சிறில் மத்தியூவின் கூற்றிற்கு அங்கீகாரம் வழங்கி தமது ஆத்திரத்தை தீர்த்துக் கொண்டனர். அவ் மேடையில் இன்றைய மாவை சேனாதிராஜாவும் உட்கார்ந்து இதனை ஆமோதித்து பேசினார் என்பதுதான் வரலாறு. யோகேஸ்வரன், சிவசிதம்பரம் போன்றவர்களும் அதில் பிரசன்னம் ஆகியிருந்தனர். 1974 பகுதிகளில் தமிழர் விடுதலைக் கூட்டணியின் தோற்றமும் அதன் செயற்பாடும் எவ்வாறு இருக்கும் என்பதை உணர்ந்திருந்த முற்போக்கு சிந்தனையுடைய இளைஞர்கள் (சிறப்பாக தமிழ் மாணவர் பேரவை, டொக்கர் தர்மலிங்கத்தின் தலைமையிலான தமிழ் ஈழ விடுதலை இயக்கம்(வுநுடுழு அல்ல)) தமிழ் பேசும் மக்களின் சுயநிர்ணய உரிமை அடிப்படையிலான பிரச்சனைக்கு ஐக்கியப்பட்ட இலங்கைக்குள் தீர்வு காணமுடியாது என்பதனை உணர்ந்து உழைக்கும் மக்களின் தலைமையில் ஈழவிடுலைப் போராட்டத்தை முன்னெடுப்பதற்கான தயாரிப்புக்களில் ஈடுபட்டு வந்தனர். இவ் பிரதான கொள்கையின் அடிப்படையின்; முதற்கட்டமாக விடுதலை அமைப்பு ஒன்றை அமைப்பு ரீதியாக கட்டுதல், தொடர்ந்து அவ் அமைப்பிற்கான வேiலைத் திட்டங்களை வரைதல் போராளிகளை அணிதிரட்டி அரசியல் மயப்படுத்தல். அரசியல்மயப்படுத்திய இவ் மக்கள் போராளிகள் மக்களை மத்தியில் வேலை செய்து மக்களை அரசியல் மயப்படுத்தல், அதன் தொடர்சியாக ஆயுதப் போராட்டத்தை முன்னெடுத்தல் என்ற படிமுறையூடாக பயணிக்க தொடங்கினர். தேசிய விடுதலைப் போராட்டத்தில் மத்தியதர வர்க்கமும் மாணவர்களும், இளைஞர்களும் போராட்ட சக்திகள். பெண்விடுதலையையும் இணைத்தே தேசிய விடுதலைப் போராட்டம் பயணிக்க வேண்டும் என்பதிலும் சரியான சிந்தனைச் செயற்பாட்டில் இருந்தனர். ஏன் இதில் தமிழ் தேசிய முதலாளிகளும் அரவணைத்துச் செல்லப்பட வேண்டிய சக்திகள் என்பதில் தெளிவாக இருந்தனர். ஆனால் தலைமை சக்தி பாட்டாளி மக்கள் தான் என்பதை தமது கொள்கையாக ஏற்று செயற்பட்டனர். மேலும் சிங்கள மக்கள் மத்தியில் உள்ள முற்போக்கு சக்திகளுடனும் நல்லுறவை பேணி அவர்களையும் தேசிய விடுதலைப் போராட்டத்திற்கான ஆதரவு சக்கிகளாக மாற்றும் முயற்சிகளில் ஈடுபட்டனர். எமது விடுதலைப் போராட்டமானது தேசிய விடுதலைப் போராட்டத்துடன் நின்று விடப் போவது இல்லை. மாறாக முழு இலங்கை;குமான ஒரு சமூகப்; புரட்சி என்ற பரிணாமத்திற்கு அடுத்த கட்டமாக நகர்த்தி செல்லப்பட வேண்டும் என்ற தொலை நோக்கு பார்வையில் செயல்பட்டனர் இச் செயற்பாடுகளைக் கண்ட தமிழர் விடுதலைக் கூட்டணியினர் தமது ‘ஆண்ட பரம்பரை மீண்டும் ஆள நினைபதில் தவறு இல்லையே’ என்ற கோட்பாட்டை தூக்கிப்பிடிக்க கண்டுபிடித்த அமைப்புத்தான் தமிழீழ விடுதலைப் புலிகளும், அவர்களை ஒத்தவர்களும். புலியிஷத்தை வளர்த்துவிட்ட பெருமை தமிழ் பிற்போக்கு தலைமை தமிழர் விடுதலைக் கூட்டணியையே சாரும். தமிழர் விடுதலைக் கூட்டணியின் மெதுவான போக்கு, தோல்விகளில் இருந்து ‘திமிறிப்பாய’ ஆரம்பித்ததே ஆயுதம் தாங்கிய தமிழீழ விடுதலைப்புலிகளும், இதனை ஒத்த ஆயுதம் தாங்கிய தமிழீழ விடுதலை அமைப்புக்களும். ஆனால் மிகவும் பரிதாபமான விடயம் என்னவென்றால் தமிழர் விடுதலைக் கூட்டணியால் வளர்த்துவிடப்பட்ட மிருகம்(புலி) தனக்கு நரபலியாக அமிர்தலிங்கம், யோகேஸ்வரன் உட்பட பலரையும், விருந்துண்ண வந்து வேட்டு வைத்து கொலை செய்தது மனித நாகரிகம் வெட்கித் தலைகுனியும் காட்டு மிராண்டித்தன நிகழ்வு ஆகும். ஆயுத அமைப்பாக, சுத்த இராணுவக் கண்ணோட்டத்தில் தம்மை வளர்த்துக் கொண்ட தமிழீழ விடுதலைப் புலிகள் ஏனைய மாற்று அமைப்புக்களை முற்று முழுதாக ஆயுத ரீதியில் முடக்கி அவர்களை தமிழ் பிரதேசங்களில் செயற்பட அனுமதியாமல் செய்தல் என்பதை தனது பிரதான வேலைத்திட்டமாக ஆரம்ப முதலே கொண்டிருந்தனர். ஆரம்பத்தில் இதற்கான செயற்பாடுகளை இங்கொன்றும், அங்கொன்றுமாக தற்செயலாக, தவறுதலாக என்று கூறிகொண்டு செய்து வந்தனர். புலிகள் தமது அமைப்பு ரீதியான பிரகடனப்படுத்திய ‘மாற்று இயக்கங்களை தடை செய்தல்’ என்;ற செயற்பாட்டை 1986 நடுப்பகுதியில் ஆரம்பித்து இறுதிப்பகுதிகுள் ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியுடன் ‘முடித்து’க் கொண்டனர். புலிகளின் இவ் நடவடிக்கைகளை தடுத்து நிறுத்த முடியவில்லை எவராலும். மக்கள் துப்பாக்கிச் சனியனால் மௌனமாக்கப்பட்டனர். இது மே 18, 2009 வரை தொடர்ந்தது. புலிகளால் முடக்கப்படும் அளவிற்கு மாற்ற இயங்கங்கள் பலவீனமாக இருந்தன என்பது அவ் அவ் அமைப்புகள் ரீதியான பிரச்னையும் கூட. தமிழ் பேசும் சமூகத்தில் இருந்து உருவான விடுதலை அமைப்புக்கள் அவ் சமூகத்தின் வர்க்க குணாம்ச பிரதி பலிப்புக்களை தமக்குள் கொண்டிருக்கும் என்பது வி;ஞ்ஞான பூர்வமானது. இதன் அடிப்படையில் பார்த்தால் புலிகளின் இருப்பும், இல்லாமல் போதலும் தமிழ் பேசும் சமூகத்தின் வர்க்க(முரண்பாடு) குணாம்சத்தின் வெளிபாடே ஆகும். கூடவே ஏனைய மாற்று இயங்கங்களை புலிகள் பலவீனப்படுத்தி முடக்கியதும் இந்த குணாம்சத்தில் வெளிப்பாடே. இந்த விளைவு ஏற்கமுடியாத, ஜீரணிக்க முடியாத விடயமாக இருந்தாலும் இவ் உண்மையை ஏற்றுக் கொண்டே ஆக வேண்டும். புலிகளால் முடக்கப்படும் அளவிற்கு பலவீனமா இருந்தது மாற்று அமைப்புகளின் பலவீனங்களின் அடிப்டையிலும்தான். இதன் தொடர்சியாக மாற்று அமைப்புக்களால் ‘வீச்சாக’ எழுந்து வரமுடியாமல் போனதும் மாற்று அமைப்புக்களில் நிலவிய கொள்கை, வேலைத்திட்டம். அமைப்பு போன்றவற்றின் பலவீனமான நிலமையும் காரணம் ஆகும். மீண்டும் இன்று ஏறக்குறைய 35 வருடங்களின் பின்பு புலிகளின் தோல்வியில் இருந்து புதிய தமிழ் பேசும் மக்களின் தலைமைகள் உருவாக்கத்திற்கான முயற்சிகள் முன்னெடுக்கப்படுகின்றன. இதனைத் தொடர்ந்து அரசியல் வேலைத்திட்டங்களை இலங்கையில் முன்னெடுத்தல் என்ற ஆரோக்கியமான நிகழ்வுகள் நடைபெற்றக் கூடிய சாத்தியமான நிலமைகள் ஏற்பட்டு வருகின்றன. இது உள்நாட்டிலும் வெளிநாடுகளிலும் முன்னெடுக்கப்படுகின்றன. ஏற்கனவே ஈழவிடுதலைப் போராட்டத்தில் ஈடுபட்டு இன்று ‘கட்டெறும்பு’ நிலையில் உள்ள அமைப்புக்களும், இவ் அமைப்புக்களில் வேலை செய்து பல்வேறு காரணங்களால் ஒதுங்கி, ஒதுக்கப்பட்டு, தலைமறைவாகி போன்ற பல்வேறு நிலைமையில் இருந்த பலர் தற்போது ஏற்பட்டுள்ள ஜனநாய நிலமைகளை பாவித்து அமைப்புக்களை கட்ட, புனரமைக்க முயல்கின்றன. இதே வேளை 1970 பிற்பகுதியில் வுருடுகு செய்தது போல் தம் இருப்பை தக்க வைத்துக் கொள்ள புலிகளின் வாரிசுகளும் முயன்றுவருகின்றன. அது தமிழ் தேசியக் கூட்டமைப்பு, ‘நாடு கடந்த அரசு’ போன்ற வடிவங்களில் நடைபெறுகின்றன புதிய அமைப்பை கட்டி தலைமை கொடுத்தல் என்ற வகையில்; தமிழ் தேசியக் கூட்டமைப்புடன் கூடிப் பேசுதல் ஒருபுறம், சூரிச் மகாநாடு மறுபுறம், ‘நாடு கடந்த அரசு’ மறுபுறம், னுவுNயு இன்னொரு புறம், நுPனுP இன்னொருபுறம் என்று புறப்பட்டுள்ள வேளையில் 35 வருடங்களுக்கு முன்பு தமிழர் விடுலைக் கூட்டணியின் தவறுகளில் இருந்து உருவான விடுதலை அமைப்புக்கள் தோற்றுப் போன? நிலைமைகள் ஏன்?, எப்படி? ஏற்பட்டன என்பவற்றை கருத்தில் கொண்டு இன்று ஆரம்பித்திருக்கும் புதிய தலைமையை உருவாக்குதல் என்ற அரசியல் வேலைத்திட்டங்கள் முன்னெடுப்பவர்கள் பாடம் கற்றுக் கொள்ள வேண்டும் இப்படியான முயற்சிகளில் ஈடுபடும் போது குறிப்பாக தமிழ் பேசும் மக்கள் தரப்பில் இதுவரைகாலமும் பிரதான சக்தியாக காட்சிப்படுத்தப்பட்ட புலிகளும், அவர்களின் வழித் தோன்றல்களும் படு பிற்போக்கான ‘ஆண்ட பரம்பரை மீண்டும் ஆள நினைப்பது தவறு ஒன்றும் இல்லையே’ என்ற இத்துப் போன பிரிவினைவாத கோஷத்தின் அடிப்டையில் குழப்பல்கள், வெருட்டல்களை செய்ய முயல்வார். ஏன் ஊடுருவல்களையும் செய்வர். இதில் எச்சரிகையாக இருத்தல் வேண்டும். இலங்கை அரசை பொறுத்தவரையிலும் எங்களை ‘பிரிவினைவாதிகள்’ என்ற பட்டம் கொடுத்து ‘பயங்கரவாதிகளாக’ சித்தரித்து எங்களை இல்லாமல் செய்ய முற்படுவர். இதற்கு சர்வ தேச நாடுகளில் உள்ள பிற்போக்கு அரசுகளும், சக்திகளும் இதற்கான ஆதரவு வேலைகளில் முழுமூச்சுடன் ஈடுபடுவர் இவ்வாறான அக புற சூழல்களை கருத்தில் கொண்ட செயற்பட வேண்டியது அவசியம். இலங்கையில் வாழும் தமிழ் பேசும் மக்களுக்கான அரசியல் போராட்டத்தை தீர்மானிக்கும் பிரதான சக்தி இலங்கையில் வாழும் தமிழ் பேசும் மக்கள்தான். போராட்டமும் அங்கிருந்துதான் முன்னெடுக்கப்பட வேண்டும். தலைமை சக்தியும் அங்கேதான் உருவாக்கப்பட வேண்டும். வெளிநாடுகளில் வாழும் புலம் பெயர் தமிழ் பேசும் மக்கள் இவ் அரசியல் போராட்டத்திற்கு உந்து சக்தியாகவும், ஆதரவு சக்தியாகவும் இருக்கலாமே ஒளிய, மாறாக எல்லாமுமாக இருக்க முடியாது. கருத்துக்களை பயமின்றி விவாதிக்க, பரிமாற்றம் செய்ய ஏற்பட்டிருக்கும் ‘புதிய’ நிலைமைகளை நாம் எமக்கு சாதகமாக பாவிக்க வேண்டும். தமிழ் பேசும் மக்களின் சுயநிர்ணய உரிமை அரசியல் போராட்டம் பற்றிய பார்வைகள் பலதரப்பட்டவர்களிடம் வேறு வேறாக இருந்தாலும் விவாதித்தல், கருத்துக்களைப் பரிமாறல், விமர்சித்தல், சுயவிமர்சனம் செய்தல் போன்ற ஆரோக்கியமான நடைமுறைகளை நாம் பின்பற்ற வேண்டும். இது ஒரு ஆரோக்கியமான அரசியல் அமைப்பை அமைக்க, அரசியல் வேலைத்திட்டத்தை முன்னெடுக்க வழிவகுக்கும். நாடு கடந்த அரசு’ என்ற உருத்திரகுமாரன் போன்றோரின் சித்து விளையாட்டுக்கள் அவர்களுக்கு சோற்றுக்கு மேல், கார், பங்களா, இன்னபிற சொத்துக்களை புதிதாக உருவாக்கவும் ஏற்கவே புலம் பெயர் தமிழ் மக்களிடம் போராட்டம் என்ற பெயரில் வசூலித்த பணத்தில் வாங்கிய சொத்து, பத்துக்களையும் தமக்காக நிர்வகிக்க மட்டுமே உதவும். மாறாக சோற்றக்கே அலையும் இலங்கை வாழ் தமிழ் பேசும் மக்களுக்கு உதவப் போவதுதில்லை. இதனை புறம் தள்ளிவிட்டு முன்னோக்கி நகரவேண்டிய காலகட்டம் இது. மே 18 ஒரு முடிவல்ல. அது தமிழ் பேசும் மக்களின் உரிமைப் போராட்டம் தோற்றுப் போன நாளும் அல்ல. மாறாக தமிழ் பேசும் மக்களின் போராட்டம் புது திசைவழியில் பயணிக்க கதவுகள் அகல திறக்கப்பட்ட நாள். தமிழ் பேசும் மக்களின் உரிமைப் போராட்டம் முடிந்தும் போகவில்லை. இன்னும் இருந்து கொண்டுதான் இருக்கின்றது. அரசியல் உரிமைகள் பிச்சை போல் கெஞ்சி கேட்டு பெறுவதல்ல. யாசித்தும் பெறுவதல்ல. மாறாக உரிமையுடன் போராடிப் பெறுவது. பேசிப்பெறுவது மாறாக ஏசிப் பெறுவதுமல்ல. இது இணக்கப்பாட்டுடான அணுகு முறையாக இருந்தால் எல்லோருக்கும் நலம். நாம் விரும்புவதும் இதுவே. நிறைவேற்றவது முக்கியமாக இருதரப்பைச் சார்ந்த விடயம். ஒருவர் வழங்க மற்றவர் பெறுவது மட்டும் அல்ல. இருவரும் இணைந்தே தீர்மானிக்க வேண்டும். இதுவே நிரந்தர சமாதானத்தை உறுதிப்படுத்தும். இனிவரும் காலங்களில் தமிழ் பேசும் மக்களின் போராட்டத்தின் தலைமை சக்தியானது தமிழ் பேசும் மக்களின் ஆதரவுத்தளத்துடன் மட்டும் நிற்காது சிங்களம் பேசும் மக்கள் மத்தியில் உள்ள முற்போக்கு சக்திகளுடன் ஒரு ஆழமான ஆதரவுத்தளத்தையும் ஒத்துழைப்புக்களையும் உள்வாங்கி சர்வதேச சமூகத்தின் முன் எங்கள் போராட்டத்தின் நியாயாதிக்க தன்மையையும் அதற்கான ஆதரவு தளத்தையும் விரிவுபடுத்தும் வகையில் முன்னெடுக்கப்பட வேண்டும். அதற்கு நிறைய வேலைகள் செய்யப்படவேண்டும். நாம் பிரிவினைவாதிகள் அல்ல. பயங்கரவாதிகள் அல்ல. தமிழ் மக்களின் சுயநிர்ணய உரிமை வேண்டி நிற்கும் போராளிகள், மனிதர்கள், தேசிய இனம் என்பதை நிலைநிறுத்த வேண்டும். பேச்சுவார்த்தைகள் மூலம் பிரச்சனைகளை பேசித்தீர்ப்பதில் நாம் எப்போதும் உண்மையாகவும், முதன்மையாகவும், செயற்படுவோம் என்பதை நம்ப வைக்க வேண்டும். இலங்கையில் உள்ள சகல மக்களும் சம உரிமையுடன் வாழும் சக வாழ்வையே நாம் வேண்டி நிற்கின்றோம். இதற்காகவே போராடுகின்றோம் என்பதை சர்வ தேச சமூகத்திற்கு எடுத்தியம்ப வேண்டும். கொள்கையில்; விட்டுக்கொடுப்பு, காட்டிக்கொடுப்பில்லாத உழைக்கும் மக்களின் தலைமையை நாம் உறுதிப்படுத்த வேண்டும். சந்தர்பவாத அரசியல் நிலைப்பாட்டை உடைய சக்திகளை தலைமை பொறுப்புக்களில் இருத்து தவிர்க்க வேண்டும். நாம் தோற்றுப் போகவில்லை. எமது பிரச்சனைகள் இதுவரை தீர்க்கப்படவும் இல்லை. இதற்கான முன்னெடுப்புக்களையும் இதுவரை எம்மால் காணவும் முடியவில்லை. மாறாக போராட்டம் புதிய, மாற்றான திசைவழியில் பயணிப்பதற்கான கதவு மட்டும் திறக்கப்பட்டுள்ளது. எமது பிரச்சனைகள் தீர்க்கப்பட வேண்டும். தெருவிற்கு தெரு, மூலை முடுக்கெல்லாம் 24 மணிநேரமும் சந்தேகக் கண்களுடனும், துப்பாக்கிகளுடனும் மனிதர்களை கண்காணிக்கும் தேசத்தில் எந்த ஒரு மனிதனும் சுதந்திரமாக சுவாசிக் முடியாது. வாழ முடியாது. துப்பாக்கித் தமிழ் மனிதரை மட்டும் புலிகளாக பார்த்த நிலமை மாறி ‘துப்பாக்கி இல்லாத’ சகல தமிழ் பேசும் மக்களையும் சந்தேகக் கண்ணோடு பார்க்கும் அன்றாட நிகழ்வுகளே மே 18 பிறகு தமிழ் பேசும் மக்கள் வாழும் இடமெல்லாம் உள்ளது. உரிமைகள் மறுக்கப்படும் எந்த மனிதனும் நீண்டகாலத்திற்கு மௌனமாக இருக்கமாட்டான். இன்று இல்லாவிடினும் பிறிதொருநாள் போராடத்தான் புறப்படுவான். இது வரலாறு எமக்கு கற்றுத்தந்த பாடம் மட்டுமல்ல மானிடத்தின் இயல்பும், உரிமையும் கூட. மே 18 ல் தோற்றவர்கள் புலிகள் மட்டுமே. மாறாக மக்கள் அல்ல. மக்களின் போராட்டமும் அல்ல. மாறாக போராட்டம் மாற்றுத் திசை வழியில் பயணிக்க ஆரம்பிக்க ‘பிள்ளையார் சுழி’ போடப்பட்டு விட்டதுதான் நிஜம். மே 18. 2009 இற்கு முன்பு, டிசம்பர் 1986 உடன் ஏனைய விடுதலை அமைப்புக்களும், மக்களும் புலிகளால் முடக்கப்பட்டு விட்டனர், மௌனமாக்கப்பட்டனர் என்பதுதான் கசப்பான உண்மை. இடையே ஏற்பட்ட வடக்கு கிழக்கு மகாணசபை காலத்தில் மக்களும், விடுதலை அமைப்புக்களும் குறுகியகாலம், குறுகிய பிரதேசத்திலாவது தம்மை சிறிதளவேனும் தமது ஜனநாயக செயற்பாட்டில் ஈடுபட்டு தம்மை ஆசுவாசப்படுத்திக் கொண்டனர் என்பதையும் நாம் மறந்து விடக் கூடாது. மே 18 இற்கு பிறகு ஏனைய மாற்று முன்னாள் விடுதலை அமைப்புக்கள் வெற்றியடைந்தனவா? வெற்றியடைப் போகின்றனவா? என்பதை சற்று பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும். (சாகரன்) (மார்கழி 23, 2009)

0 commentaires :

Post a comment