12/03/2009

கிழக்கு மாகாண சபைக்கு வழங்கப்படாமல் இருந்த தேசிய பட்டியல் ஆசனம் த.ம.வி.பு கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட அமைப்பாளருக்கு


நடைபெற்று முடிந்த கிழக்கு மாகாண சபை தேர்தலில் எஞ்சியிருந்த ஒரு தேசிய பட்டியல் ஆசனம் த.ம.வி.பு கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட அமைப்பாளரான பூ.பிரசாந்தன் அவர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது.

தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சியின் தலைவரும் கிழக்கு மாகாண முதலமைச்சருமான சிவநேசதுரை சந்திரகாந்தன் தலைமயிலான குழு இன்று கௌரவ பாராளுமன்ற உறுப்பினரும் ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகருமான பசில் ராஜபக்ஷ மற்றும் கல்வி அமைச்சரான சுசில் பிரேம ஜெயந்த ஆகியோருடன் நடைபெற்ற கலந்துரையாடலில் மேற்படி முடிவு எட்டப்பட்டுள்ளதாக அறிய முடிகிறது.
0 commentaires :

Post a comment