12/03/2009

நடைபெற உள்ள ஜனாதிபதி தேர்தல் குறித்து த.ம.வி.பு கட்சியின் உயர்மட்டகுழு இன்று கொழும்பில் முக்கிய கலந்துரையாடல்

tmvpநடைபெற உள்ள ஜனாதிபதி தேர்தல் தொடர்பாக த.ம.வி.பு கட்சியின் நிலைப்பாடு குறித்து த.ம.வி.பு கட்சியின் நிலைப்பாடு குறித்து த.ம.வி.பு கட்சியின் தலைவரும் கிழக்கு மாகாண முதலமைச்சருமான சிவநேசதுரை சந்திரகாந்தன் தலைமையிலான உயர்மட்டக்குழு இன்று ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகரான பசில் ராஜபக்ஷ மற்றும் அமைச்சரான சுசில் பிரேம ஜெயந்த ஆகியோருடன் ஒரு முக்கிய சந்திப்பொன்றினை ஏற்படுத்தியிருந்தது.

இச்சந்திப்பின் ஊடாக கிழக்கு மாகாண சபை தொடர்பாகவும் கிழக்கு மாகாணத்தின் அபிவிருத்தி தொடர்பாகவும் பல்வேறு சாதகமான முடிவுகள் எட்டப்பட்டுள்ளதாக தெரியவருகிறது, இது தொடர்பாக உத்தியோகபூர்வ தகவல்கள் நாளை காலை 10 மணிக்கு கொழும்பில் நடைபெற உள்ள ஊடகவியலாளர் மாநாட்டில் த.ம.வி.பு கட்சியின் தலைவர் உத்தியோகபூர்வமாக வெளியிடுவார் என தெரியவருகிறது இம்முக்கிய கலந்துரையாடலில் த.ம.வி.பு கட்சியின் சார்பாக கட்சியின் செயலாளர் எட்வின் சில்வா கைலேஸ்வரராஜா, கட்சியின் தேசிய அமைப்பாளரும் மாகாண சபை உறுப்பினருமான எட்வின் சில்வா கிருஸ்ணானந்தராஜா, கட்சியின் கொள்கை பரப்புச் செயலாளர் அஷாத் மௌலானா மற்றும் திருமலை மாவட்ட அமைப்பாளர் திருமதி ஜுடி தேவதாசன் ஆகியோர் கலந்து கொண்டனர்.
0 commentaires :

Post a Comment