12/09/2009

மட்டக்களப்பு அபிவிருத்திக் குழுக் கூட்டம்


மட்டக்களப்பு அபிவிருத்திக் குழுக் கூட்டம்

01அபிவிருத்தி ஒருங்கிணைப்புக் குழு இணைத் தலைவர்களான கிழக்கு மாகாண முதலமைச்சர் சிவனேசத்துரை சந்திரகாந்தன் ,மத்திய அமைச்சர்களான எஸ்.எச்.அமீர் அலி ,விநாயகமூர்த்தி முரளீதரன் மற்றும் மாகாண ஆளுனர் வைஸ் அட்மிரல் மொகான் விஜயவிக்கிரம ஆகியோர் தலைமையில் இக்கூட்டம் நடைபெற்றது.

இக்கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவின் படி மட்டக்களப்பு - அம்பாறை மாவட்ட எல்லைப் பிரதேசமான கெவிலியாமடு மற்றும் மட்டக்களப்பு - பொலன்னறுவை மாவட்ட எல்லைப் பிரதேசமான தோணி தாண்ட மடு ஆகிய இடங்களில் தொடரும் சட்டவிரோத குடியேற்றங்கள் குறித்து ஆராய்வதற்காக அரசாங்க அதிபர் ,மாகாண காணி ஆணையாளர் ,பிரதேச செயலாளர் பொலிஸ் ,இராணுவம் மற்றும் விசேட அதிரடிப் படை அடங்கிய குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளது.இக்குழுவின் அறிக்கையை எதிர்வரும் திங்கள் கிழமைக்கு முன்னர் சமர்ப்ப்பிக்குமாறு அரசாங்க அதிபர் கேட்கப்பட்டுள்ளார்.

மட்டக்களப்பு - கல்முனை வீதியில் களுவாஞ்சிக்குடி பொலிஸ் நிலையம் முன்பாக மூடப்பட்டுள்ள வீதியை உடனடியாக திறந்து பொதுப் போக்குவரத்துக்கு அனுமதியளிப்பது என்றும் இக்கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டுள்ளது.0 commentaires :

Post a comment