12/03/2009

நடக்கும் என்பார் நடக்காது… நடக்காது என்பார் நடந்துவிடும்…. கிழக்கு மாகாண செயற்பாட்டை முன்னுதாரணமாக கொள்வோம்

அமெரிக்கா போன்ற வளர்சியடைந்த நாடுகளில் கூட இவ்வளவ ‘வேகமாக’ இடம் பெயர்ந்தவர்களை மீள்குடியெற்றம் செய்ததாக வரலாறு இல்லை. அமெரிக்காவில் இயற்கை அனர்த்தங்களால் பாதிக்கப்பட்ட மக்கள் ஆண்டுகள் பல சென்றும் இன்னும் முழமையாக மீள் குடியேற்றப்படவில்லை. வருந்தத்தக்க, துன்பியல் வன்னிப் போரில் முள்ளுக் கம்பியிற்கு பின்னால் நிறுத்தப்பட்ட மக்களில் 50 வீதத்திற்கு மேற்பட்டோர் மீள் குடியேற்றப்பட்டு தமது இயல்பு வாழ்வை நோக்கி டீவகமாக நகர்ந்து கொண்டு இருக்கின்றார்கள்;. இவர்களை மீள் குடியேற்றும் போது ஒரு வாகனத்தில் ஆட்கள் என்றால் 4 வாகனங்களில் அவர்களுக்கு தேவையான பொருட்கள் என்ற வீதத்தில் கொண்டு செல்லப்படுவதாக கனடாவில் இருந்து இலங்கை சென்று 2 மாதம் தங்கியிருந்து வந்த அன்பர் ஒருவர் கண்ணால் கண்டதாக கூறினார். எஞ்சிய மிகுதிப் பேர் நிபந்தனையுடன் கூடிய சுதந்திர நடமாட்டங்களுக்கு அனுமதிக்கப்பட்டுள்ளனர். ஐரோப்பிய நாடுகளுக்க வாழ்வு தேடி சென்ற வெளிநாட்டவர்களுக்கு (நம்மவர்களிடம் இந்த அனுபவம் நிறைய உண்டு) ஒரு மட்டுப்படுத்திய நடமாட்டத்தையே அவ் அவ் நாட்டு அரசுகள் சில வருடங்களுக்கு அனுமதித்து வந்தது. இதன் தொடர்சியாக அகதி அந்தஸ்தில் இருந்து இவ் நாட்டுக் குடியுரிமை அந்தஸ்து கிடைத்தவுடன் இவ் நடமாடும் மட்டுப்படுத்தல் தளர்த்தப்படுவது வழக்கம். கனடா, அமெரிக்கா, அவுஸ்திரேலியா போன்ற நாடுகளில் இந்த நடை முறை இருக்கவில்லை. இலங்கையில் புலிகள், இலங்கை அரசுக்கிடையேயான யுத்தத்தில் உள்ளுரில் அகதிகள் ஆக்கப்பட்டவர்கள். கிழக்கு மாகாணத்தில் கனடா, அமெரிக்கா போன்ற அகதிகள் அணுகு முறமைகளையும், வன்னியி;ல் அகதியாக்கப்பட்ட மக்கள் ஐரோப்பிய நாடுகளின் அகதிகள் அணுகு முறமையையும் இலங்கை அரசு கடைப்பிடிப்பதை நாம் காணக் கூடியதாக இருக்கின்றது. இன்றை சுதந்திர நடமாட்டம் இதன் ஒரு அங்கமே. ஆனாலும் இது தனது நாட்டு மக்களுக்கு வழங்கப்பட்ட ‘தண்டனை’ என்பது வேதனைக்குரிய விடயம். ஆனால் மீள் குடியேற்றத்திறகு முன்பு முகாங்களில் தங்க வைக்கவேண்டிய தேவைகள் நிலமைகள் இருந்தன என்பதை மறுப்பதற்கு இல்லை. அரசாங்கம் கடந்த வாரம் அறிவித்திருந்ததற்கு அமைய வவுனியா மனிக்பாம் முகாம்களில் உள்ள மக்கள் தாங்கள் விரும்பிய இடங்களுக்கு வெளியில் சென்று வருவதற்கு நேற்று செவ்வாய்க்கிழமை காலை முதல் அனுமதி வழங்கியுள்ளது. ஆயிரக்கணக்கானவர்கள் மனிக்பாம் முகாம் தொகுதியில் இருந்து வெளியில் தனியாகவும் குடும்பமாகவும் வெளியில் வந்து பல இடங்களுக்கும் சென்றார்கள். ஒரு நாள் தொடக்கம் 15 நாட்கள் வரையில் வெளியில் சென்று தங்கியிருந்துவிட்டுத் திரும்பி வருவதற்கு முகாம்களில் உள்ள அதிகாரிகள் தமக்கு அனுமதி வழங்கியிருப்பதாக முகாம்களில் இருந்து வெளியில் வந்த பலரும் தெரிவித்தனர். கொழும்பு, கண்டி, யாழ்ப்பாணம், வவுனியா, மன்னார், திருகோணமலை என்று நாட்டின் பல இடங்களுக்கும் செல்வதற்காகத் தாங்கள் முகாம்களில் இருந்து வெளியில் வந்திருப்பதாகவும் அவர்கள் தெரிவித்தனர். கடந்த 6 மாதங்களுக்கு மேலாக முகாம்களில் தங்க வைத்திருந்த தங்களுக்கு வெளியில் சுதந்திரமாகச் சென்று வருவதற்கு வழங்கப்பட்டுள்ள அனுமதி பெரும் மகிழ்ச்சியை அளித்திருப்பதாகவும் அவர்களில் பலர் தெரிவித்தனர். இவை இப்படி இருக்க இன்றும் இன்னமும் உள்நாடடில் எதிர் கட்சிகளும், வெளிநாட்டில் புலிகளின் பிழைப்புவாதிகளும் வேறுவிதமாக கூறுகின்றனர். முகாங்களை வதை முகாங்கள் என்கின்றனர், தடுப்பு முகாங்கள் என்கின்றனர். உணவு வழங்குகின்றார்கள் இல்லை என்கின்றனர். வெளியில் செல்ல எப்போதும் அனுமதிக்கமாட்டார்கள். மீள் குடியேற்றம் நடைபெறமாட்டாது. முகாமிற்கு முகாம் மாற்றுகின்றார்கள் என்கின்றனர். மீள்குடியேற்றம் நடைபெறவே இல்லை என்கின்றனர். இன்னும் சிறப்பாக செய்திருக்கலாம் என்ற ஆலோசனைகள், ஒத்தாசைகள் உதவிகள் செய்யலாம். மாறாக குறைகள் மட்டும் கூறுவதும், நடைபெறும் நல்ல விடயங்களை மறுப்பதும், மறைப்பதும் கடை கெட்ட அயோக்கித்தனம். அரசாங்கத்திற்கு ஒரு வேலைத்திட்டம், அரசியல் இருக்கின்றது. அதன்படி அது ‘முன்னேறி’க் கொண்டுதான் இருக்கின்றது. வேண்டும் என்றால் விடுவிக்கப்பட்ட, மீள்குடியேற்றப்பட்ட மக்களை கேட்டுப்பாருங்கள். இணக்கமான அணுகுமுறைக்கு நாம் பழக்கப்படுத்திக் கொண்டே ஆகவேண்டும். உலக, இலங்கை மாற்றங்களை கருத்தில் எடுத்தே செயல்படவேண்டும். அன்றேல் நாம் ‘இல்லாமல்’ போய்விடுவோம். மிரட்டல் அல்ல எச்சரிக்கை, டார்வினின் கூர்ப்பு தத்துவம் இலங்கை தமிழ் மக்களுக்கும் பொருந்தும். கிழக்கு மாகாணம் இலங்கை இihணுவத்தினால் கைபற்றப்பட்டபோது இதனைவிட மேலாக தூற்றினார்கள். அதன் வளர்ச்சி இன்று அது வடக்கு மட்டும் ‘தமிழ் ஈழம்’ என்ற கருத்தோட்டத்திற்குள் ‘மேதகு’க்களால் சுருக்கப்பட்டுள்ளது. புலம் பெயர்நாடுகளில் புலிகளால் அவர்களின் அடிவருடிகளால் இன்று பேசப்படுவது வடக்கு மட்டுமே. கிழக்கை மறந்து பல காலங்கள் ஆகிவிட்டன. ஆனால் கிழக்கு நகர்ந்துகொண்டுதான் இருக்கின்றது. முன்னேறிக் கொண்டுதான் இருக்கின்றது. இதன் அர்த்தம் கிழக்கில் ‘எல்லாம்’ கிடைத்துவிட்டது என்பதல்ல. இன்னும் எவ்வளவோ ‘போராட’ வேண்டியள்ளது. ஒரு காலத்தில் ஜனநாக மறுப்பிற்குள் இருந்தவர்கள் இன்று ஆட்சியில் அமர்ந்து ஜனநாயகத்தை கட்டிக்காப்பதில் நிறையவே உழைக்கின்றார்கள். அங்கு தமிழ் - முஸ்லீம் உறவு மேலும் ஆராக்கியமான நிலமைகளை நோக்கி நகர்ந்து கொண்டே வருகின்றன என்பதை கிழக்கான் போன்ற நல்ல மனிதர்கள் மூலமா அறிய முடிகின்றது. அண்மையில் சுவிஸ் வந்த கிழக்கு மாகாண முதல்வர் பலருக்கும் நம்பிக்கை ஊட்டுவதான செயற்பாடுகளை தன்னக்தே கொண்டிருப்பதாக அவருடன் நேரில் கலந்துரையாடியவர்கள் தெரிவிக்கின்றனர். கிழக்கு மாகாண சபை அமைக்கப்பட்டபோதும், அதற்கு முதல் புலிகளின் பிடியிலிருந்து விடுவிக்கப்பட்டு ரிஎம்விபி இன் கட்டுப்பாட்டிற்கள் வந்தபோதும் மட்டக்களப்பில் இருந்து ‘யாழ்பாணத்து’ மக்கள் துரத்தப்படுகின்றார்கள் என்றனர். இச்செய்தி சில காலங்களில் நீர்த்துப் போய் பொய்யாகிவிட்டது. முஸ்லீம் - தமிழ் உறவுகள் பாதிக்கப்படும் என்றார்கள். ஆனால் உறவுகள் நிறையவே மேலும் இறுக்கமாகி வருவதாக அங்கிருந்து வரும் செய்திகள் தெரிவிக்கின்றன. செயல்வீரன் இரா. துரைரத்தினத்தின் குரல் மாகாண அரசுக்கு ஆதரவாகவும், அதேவேளை மாகாண, மத்திய ஆரசுகளின் செயற்பாடுகளில் உள்ள குறை, நிறைகளை சுட்டிக்காட்டும் பலமான குரலாக அச்சுறுத்தல் இன்றி ஒலித்துக் கொண்டுதான் இருக்கின்றது. இது கிழக்க மாகாணத்ததை ஆண்டுகொண்டிருக்கும் ரிஎம்விபி இற்கு கிடைத்த வெற்றியாகவே கருதவேண்டியுள்ளது. ஜனநாயகத்தின் குரல்கள் யாராலும் நசுக்கப்படமாட்டாது என்பதை எடுத்துக்காட்டுவதாக அமைகின்றன. வெளிநாட்டு வாழ்வை துறந்து தனது மக்களின் வாழ்வில் நேரடியாக பங்கெடுக்க நாடு திரும்பிய ரிஎம்விபி முக்கியஸ்தரின் ரகுவின் கொலை எம்மை மிகவும் பாதித்த விடயங்களில் ஒன்று. இவரை எமக்கு தனிப்பட்ட முறையில் தெரியாது. ஆனால் ஒரு இக்கட்டான காலகட்டத்தில் தனது ‘வளமான’ வெளிநாட்டு வாழ்வை துறந்து தனது மக்களுக்கு சேவை செய்ய வந்த ஒருவரை யாராக இருந்தாலும் என்ன காரணத்திற்காக இருந்தாலும் கொலை செய்தது கண்டிக்க தக்கது. வருந்தத்தக்கது. எமக்கு ஏமாற்றம் அளித்தது விடயம் ஒன்று. அவருக்கு எமது மரியாதை கலந்த வணக்கங்கள். அவரின் குடும்ப உறவுகளுக்க எமது ஆழ்ந்த அனுதாபங்கள். வேறு சில விரும்பத்தகாத நிகழ்வுகளும் ஆரம்பத்தில் இருந்தன அவற்றை பிரேதப்பரிசோதனை செய்வதை இவ்விடத்தில் தவிர்கின்றோம். நம்பிக்கை ஒளியீட்டும் தடப்பாதையில் பயணிக்க தொடங்கியுள்ள கிழக்கு மாகாண சபையின் செயற்பாடுகளை வடக்கு மாகாண மக்கள் ஒரு முன் உதாரணமாக கொண்டு செயற்படுவோம். இதன் அர்த்தம் கிழக்கு மாகாணத்திற்கு சகலதும் கிடைத்து விட்டது என்பதல்ல, மாறாக கிடைத்தவையை சரியாக பயன்படுத்த முனையும் ஆரோக்கிய பாதையை நோக்கி பயணிக்க தொடங்கியுள்ளனர் என்றே கூறுகின்றோம். சிறப்பாக கிழக்கு முதல்வர் பிள்ளையான் (மன்னிக்கவும் இப்படி அழைப்பதில் ஒரு நெருக்கத்தை நாம் உணர்கின்றோம்) அவர்களுக்கு ஒரு சபாஷ். நீங்களும் உங்கள் ‘வுநயஅ’ உம் செயற்படும் விதம் நம்பிக்கைகளை மேலும் வளர்த்தே வருகின்றது. என்றும் நாம் உங்கள் சரியான செயற்பாடுகளுடன் இணைந்தே இருப்போம். நல்லதையே சிந்திப்போம் செயற்படுத்துவோம். நீங்கள் சரியான விடயங்கள் மற்றவர்களிடம் இருந்து கேட்க தயாராக இருக்கம் வளர்ச்சிப் போக்கு ஒரு ஆரோக்கியமான எதிர் காலத்தை யாபேருக்கும் அமைத்துக் கொடுக்கும் என்பதில் அசைக்க முடியாத நம்பிக்கை எமக்குண்டு. இது ஒரு ஆரோக்கியமான வளர்ச்சிப் போக்கின் எடுத்தக்காட்டாக எல்லோராலும் பார்க்கப்படுகின்றது. நாம் எல்லோரும் தமிழ் மக்கள் பிரச்சனையில் இணைந்து செயற்பட்டால் நாம் எல்லோரும் பலம் பெறுவோம். இதற்கான ஒரு ஆரொக்கிமான சூழ்நிலைகள் நிலவுவதாக வரும் செய்திகள் எம்மை மகிழ்ச்சி அடையச் செய்கின்றன. பத்மநாபா ஈபீஆர்எல்எவ் இன் செயலாளர் தி. ஸ்ரீதரன் கருத்தரங்குகளில் கூறிவரும் செய்திகளும் இவற்றையே கட்டியம் காட்டி வருகின்றன. எனவே கிழக்க மாகாணத்தின், மாகாண சபையின் செயற்பாடுகளை ஒரு முன்னுதாரணமாக கொண்டு வடக்கு மாகாண மக்களும் தம்மை முன்னே நகர்த்த முயல்வார்கள் என நம்புகின்றோம். வடக்கு கிழக்கு மாகாண மக்களுக்கிடையே இருக்கும் பொதுவான உரிமைப் போராட்டம், அதிகார நிலைநாட்டல் போராட்டம், ஏனைய விடயங்கள் சம்மந்தமாக இணைந்து, இயந்து போராடுவதில் ஒரு புரிந்துணர்வை ஏற்படுத்துவது நலம். இதற்கான பேச்சு வார்த்தைகளில் ஈடுபடுதலும் நலம். இதுவே எதிர் காலத்தில் நாம் யாபேரும் சுபிட்சமாக வாழ வழிவகுக்கும். நம்பிக்கையுடன் செயற்படுபோம். நடக்கும் என்பார் நடக்காது… நடக்காது என்பார் நடந்துவிடும்….

thenee

0 commentaires :

Post a Comment