12/20/2009

கி.மா.சபை போனஸ் ஆசனத்திற்கு த.ம.வி.பு. உறுப்பினர் நியமனம்கிழக்கு மாகாண சபையில் கடந்த ஒன்றரை வருடங்களாக வெற்றிடமாகக் காணப்பட்ட போனஸ் ஆசனத்திற்கு தமிழ் மக்கள் விடுதலைப் புலிகளின் மட்டக்களப்பு மாவட்ட அமைப்பாளர் பூபாலப்பிள்ளை பிரசாந்தன் இன்று நியமிக்கப்பட்டுள்ளார்.

மட்டக்களப்பு முன்னாள் அரசாங்க அதிபர் இரத்தினம் மௌனகுருசாமி இப்பதவிக்கு ஏற்கனவே நியமிக்கப்பட்டிருந்த போதிலும், லண்டனில் தங்கியிருக்கும் அவர் நாடு திரும்பி அப்பதவியை ஏற்க முன்வராத காரணத்தினால் இவ்வெற்றிடம் ஏற்பட்டிருந்தது.

அண்மையில் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகளுக்கும் ஜனாதிபதி சிரேஷ்ட ஆலோசகர் பசில் ராஜபக்ஷவுக்குமிடையில் இடம்பெற்ற சந்திப்பின் போது, இவ்வெற்றிடம் தமது கட்சி உறுப்பினர் ஒருவர் மூலம் நிரப்பப்பட வேண்டும் என வலியுறுத்தப்பட்டிருந்தது.

கடந்த மாகாண சபைத் தேர்தலில் த.ம.வி.பு கட்சியின் சார்பாக மட்டக்களப்பு மாவட்டத்தில் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி வேட்பாளர் பட்டியலில் போட்டியிட்ட இவர் கிழக்கு மகாண முதலமைச்சரின் இணைப்புச் செயலாளராகவும் கடமையாற்றியிருந்தமை குறிப்பிடத்தக்கது.0 commentaires :

Post a comment