12/11/2009

பாராளுமன்றம் கலைய இருக்கும் காலத்திலாவது மக்களின் அபிவிருத்தி குறித்து பேச மட்டக்களப்பு மாவட்ட தமிழ் தேசிய கூட்டமைப்பு எம்பிக்கள்

அபிவிருத்திக்குழு கூட்டத்தில் பங்கேற்பு.

meeting-300_1சுமார் 3வருடங்களின் பின்னர் முதன் முதலாக மட்டக்களப்பு மாவட்டத்தில் அபிவிருத்திக்குழு கூட்டத்தில் தமிழ் தேசிய கூட்டமைப்பு எம்பிக்கள் பங்கேற்பது வேடிக்கை. கடந்த 07.12.2009 அன்று மட்டக்களப்பு மாவட்டத்தின் இவ் ஆண்டிற்கான இறுதி மாவட்ட அபிவிருத்திக்குழு கூட்டம் அரசாங்க அதிபர் சுந்தரம் அருமைநாயகம் தலைமயில் நடைபெற்றது. இதில் தமிழ் தேசிய கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர்களான செல்வி தங்கேஸ்வரி,அரியேந்திரன் ஆகியோர்கள் கலந்து கொண்டார்கள்.

இவ் மக்கள் பிரதிநிதிகள் பாராளுமன்றம் கலைய இருக்கும் காலத்தில் மக்களின் அபிவிருத்தி குறித்து பேச முன்வந்திருப்பது வேடிக்கை. இவ்வளவு காலமும் சொகுசு மாளிகையில் வாழ்ந்து விட்டு இன்று தேர்தல் என்றவுடன் மீண்டும் எமது மாவட்ட மக்களின் வாக்குகளை சூறையாடுவதற்காக படையெடுத்திருக்க்கும் இக்கூட்டத்திற்கு மக்கள் சரியான பாடம் புகட்ட வேண்டும். இந்த 3வருடங்கள் எமது மக்களைப்பற்றி சிந்திக்காது இப்பொது வந்திருப்பது உன்மையில் அனைவர் மத்தியிலும் ஓர் ஐயத்தினை ஏற்படுத்தி இருக்கின்றது.
0 commentaires :

Post a Comment