12/15/2009

ஈராக் போர் குறித்து டொனி பிளேயரிடம் விசாரணை


ஈராக் போர் விசாரணைகள் பற்றி பிரிட்டனின் முன்னாள் பிரதமர் டொனி பிளேயர் அடுத்த வருட ஆரம்பத்தில் விசாரிக்கப்படவுள்ளதாகத் தெரிவிக்கப்படுகி ன்றது. லண்டன் பி.பி.சி. தொலைக் காட்சியின் நேர்காணலின்போது இத்தக வலை ஈராக் போர் தொடர்பாக ஆராயும் பிரிட்டன் குழுவின் அதிகாரி தெரிவித்தார்.

ஈராக் முன்னாள் ஜனாதிபதி சதாம் ஹாஸைனிடம் பேரழிவு ஆயதங்கள் இல்லையெனத் தெரிந்திருந்தாலும் ஈராக் மீது போர் தொடுக்க டொனி பிளேயர் வற்புறுத்தப்பட்டிருக்கலாம் என பி.பி.சி நேர்காணலின்போது அந்த அதிகாரிகள் தெரிவித்தனர்.

அமெரிக்காவின் முன்னாள் ஜனாதிபதி ஜோர்ஜ் புஷ்ஷ¤டன் பிளேயர் கொண்டிருந்த நெருக்கமான உறவுகள் பிரிட்டிஷ் பிரதமரை ஈராக் மீது படையெடுக்க வைத்திருக்கலாம் என பிரபல பத்திரிகை ஒன்று அபிப்பிராயம் வெளியிட்டுள்ளது. ஈராக் போரின் முக்கிய நபராகவுள்ள டொனி பிளேயர் மீதான விசாரணைகள் பகிரங்கமாக நடைபெறும் எனவும் போர் விசாரணை அதிகாரிகள் தெரிவித்தனர்.

ஈராக்கில் பேரழிவு ஆயுதங்கள் இல்லையென சோதனை செய்யப்பட்ட பின்னர் ஊர்ஜிதம் செய்யப்பட்டது இதன் பின்னர் சங்கடத்துக்குள்ளான முன்னாள் பிரதமர் டொனி பிளேயர் மத்திய கிழக்கு நாடுகளுக்கு ஈராக் அச்சுறுத்தலாக இருந்தமையும் படை எடுப்புக்கான காரணங்களில் ஒன்று எனக் கூறியிருந்தார்.0 commentaires :

Post a Comment