12/18/2009

பொன்சேகாவின் தெரிவு இராணுவ ஆட்சிக்கு வழிவகுக்கும் ஆர். கே. ராஜலிங்கம்ஜனவரி 26ந் திகதி நடைபெறவுள்ள ஜனாதிபதித் தேர்தல் முன்னைய தேர்தல்களிலும் பார்க்க முக்கியத்துவம் வாய்ந்தது. இலங்கையில் ஜனநாயக பாரம்பரியம் தொடர்வதா அல்லது அப் பாரம்பரியத்திலிருந்து நாடு விலகிச் செல்வதா என்பதைத் தீர்மானிக்கின்ற தேர்தலாக இது அமையப் போகின்றது. எதிர்க் கட்சிகளினால் நிறுத்தப்பட்டிருக்கும் வேட்பாளர் நிறைவேற்று ஜனாதிபதி முறையை நீக்கப் போவதாகக் கூறுகின்றார். நிறைவேற்று ஜனாதிபதி முறையை நீக்குவது என்ற உடன்பாட்டின் அடிப்படையிலேயே எதிரும் புதிருமான அரசியல் கட்சிகள் அவரை ஆதரிக்கின்றன. எதிரணி வேட்பாளரின் இந்த வாக்குறுதி நிறைவேற்றக் கூடியதா என்பது பிரதானமான கேள்வி நிறைவேற்று ஜனாதிபதி முறையை நீக்குவதென்றால் அரசியலமைப்பில் மாற்றம் செய்ய வேண்டும். அரசியலமை ப்பில் திருத்தம் செய்யும் பிரேரணை பாராளுமன்றத்தில் மூன்றிலிரண்டு பெரும்பான்மையுடன் நிறைவேற்றப்பட்டு, சர்வசன வாக்கெடுப்பில் மக்களின் அங்கீகாரத்தையும் பெற்ற பின்னரே நிறைவேற்று ஜனாதிபதி முறையை நீக்க முடியும். பாராளுமன்றத்தில் மூன்றிலிரண்டு பெரும்பான்மை என்ற தடையைத் தாண்டுவது இலகுவான காரியமல்ல. இன்றைய பாராளுமன்றத்தில் எதிரணியினர் மூன்றிலிரண்டு பெரும்பான்மையைப் பெற முடியாது. அரசாங்க தரப்பிலிருந்து கணிசமான எண்ணிக்கையினர் எதிரணிக்கு மாறினால் மாத்திரமே மூன்றிலிரண்டு பெரும்பான்மையை எதிரணி பெற முடியும். இன்றைய நிலையில் அது சாத்தியமில்லை பொதுத் தேர்தலின் பின் அமையும் புதிய பாராளுமன்றத்தில் மூன்றிலிரண்டு பெரும்பான்மை கிடைக்குமா என்பது அடுத்த கேள்வி. ஜனாதிபதித் தேர்தலுக்காக எதிரணியில் ஏற்பட்டிருக்கும் ஐக்கியம் பொதுத் தேர்தலில் இருக்காது. விசேடமாக ஐக்கிய தேசியக் கட்சியும் மக்கள் விடு தலை முன்னணியும் பொதுத் தேர்தலில் எதிரெதிராகவே போட்டியிடப் போகின்றன. ஆட்சி அமைக்கக் கூடிய அளவு ஆசனங் களை ஐக்கிய தேசியக் கட்சி பெறுமா என்பது சந்தேகத்துக்கு இடமானது. ஆட்சி அமைப்பதற்குப் போதுமான அளவு ஆசனங்களைப் பெற்றாலும், இன்றைய தேர்தல் முறையின் கீழ் மூன்றிலிரண்டு பெரும்பான்மையை நினைத்துப் பார்க்கவும் முடியாது. மக்கள் விடுதலை முன்னணியின் பாராளுமன்ற உறுப்பினர்கள் ஆதரவளித் தாலும் மூன்றிலிரண்டு பெரும்பான்மை சாத்தியமில்லை. மக்கள் விடுதலை முன்னணி அடுத்த தேர்தலில் தனித்துப் போட்டியிடவிருப்பதால் அதனால் மிக குறைவான இடங்களையே பெற முடி யும். ஆகவே, எதிரணி வேட்பாளரான பொன்சேகாவினால் நிறைவேற்று ஜனாதிபதி முறையை நீக்க முடியாது. அவர் தெரிவு செய்யப்பட்டால் மக்களுக்கு அளித்த வாக்குறுதிக்கு மாறாக நிறைவேற்று அதிகாரமுடைய ஜனாதிபதியாகவே இருப்பார். இதுதான் ஜனநாயகத்துக்கு அச்சுறுத்தலான வளர்ச்சிப் போக்குக்கு வழிவகுக்கும் விடயம். ஜனாதிபதி ஆட்சிமுறை கட்சி அரசியலுடன் சம்பந்தப்பட்டது. ஜனாதிபதி தனது அமைச்சர்களைப் பாராளுமன்ற உறுப்பினர்கள் மத்தியிலிருந்தே நியமிக்க வேண்டும். பாராளுமன்றத்துக்கு வெளியிலிருந்து நியமிக்க முடியாது. எனவே அரசியல் கட்சிக்கு அல்லது கட்சிகளுக்கு முற்றிலும் புறம்பானவராக ஜனாதிபதி செயற்படுவது சாத்தியமில்லை ஜனாதிபதியாக யார் தெரிவு செய்யப்பட் டாலும் ஏப்ரல் மாதத்துக்கு முன் பாராளுமன்றம் கலைக்கப்பட வேண்டும். பாராளுமன்றத்தின் ஆயுட்காலம் ஏப்ரல் மாதத்தில் முடிவடைகின்றது. பாராளுமன்றத் தேர்தலில் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி அறுதிப் பெரும்பான்மை பெறும் என்பதாகவே இன்றைய கள நிலைமை உள்ளது. இந்த நிலையில் பொன்சேகா ஜனாதிபதியாக இருப்பாரேயானால் குழப்பகரமான நிலை உருவாகுவதைத் தவிர்க்க முடியாது மறுபுறத்தில், பொன்சேகாவை இப் போது ஆதரிக்கும் கட்சிகளான ஐக்கிய தேசியக் கட்சியும் மக்கள் விடுதலை முன்னணியும் பெரும்பான்மை பெறுவதாக வைத்துக்கொண்டாலும் கூட குழப்ப நிலையைத் தவிர்க்க முடியாது. ஐக்கிய தேசியக் கட்சியும் மக்கள் விடுதலை முன்னணியும் நிறைவேற்று ஜனாதிபதி முறையை நீக்குவதைத் தவிர மற்றைய எல்லா விடயங்களிலும் எதிரும் புதிருமானவை. இவ்விரு கட்சிகளிலுமிருந்து அமைச்சர்களை நியமித்தால் அந்த அமைச்சரவையின் செயற்பாடு இழுபறி நிலையிலேயே இருக்கும். ஒரு கட்சியின் திட்டங்களை நடைமுறைப்படுத்துவதற்கு மற்றைய கட்சி தடையாகவே இருக்கும். ஐக்கிய தேசியக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்களை மாத்திரம் அமைச்சரவையில் சேர்த்துக் கொண்டாலும் நிம்மதியான ஆட்சி அமையாது. ஐக்கிய தேசியக் கட்சியின் வேலைத் திட்டங்களை மக்கள் விடுதலை முன்னணி ஏற்றுக்கொள்ளப் போவதில்லை. அது அதன் வழமையான பாணியில் குழப்பகரமான நிலையைத் தோற்றுவிக்கும். பொன்சேகா ஜனாதிபதியாகத் தெரிவு செய்யப்படுவாரேயானால், பாராளுமன்றத்தில் எந்தக் கட்சி பெரும்பான்மை பெற்றாலும் நிம்மதியான ஆட்சிக்கு இடமில்லை. பொது வேலைத்திட்டமொன்றின் அடிப் படையில் அரசியல் கட்சிகளுக்கிடையிலான உடன்பாட்டுக்கூடாகப் போட்டியிடாமல் நிறைவேற்று ஜனாதிபதி முறையை நீக்குதல் என்ற ஒற்றைவரிக் கொள்கையின் அடிப் படையில் போட்டியிடுவதே இந்த நிலை ஏற்படுவதற்குக் கார ணம். இராணுவ அதிகாரி. பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கு இராணுவ ரீதியாகவே சிந்தி த்துப் பழக்கப்பட்டவர். நெருக்கடி ஏற் படும் போது இராணுவத்தையே நாடுவார். அது இராணுவ ஆட்சியாகவும் இருக்கலாம். இராணுவத்தின் கட்டுப்பாடுகளுக்கு உட்பட்ட ஆட்சியாகவும் இருக்கலாம். சதிப்புரட்சி மூலம் ஆட்சியைக் கைப்ப ற்ற நினைத்திருந்தால் இலகுவில் செய்திருப்பேன் என்று இவர் கூறியது சாதாரணமாகக் கருதப்படக்கூடிய கூற்றல்ல.

0 commentaires :

Post a Comment