12/11/2009

மாணவர்கள் அனைவரும் தொழிநுட்ப கல்வியில் அதிக அக்கறை செலுத்த வேண்டும்.

மாணவர்கள் கல்வி கற்பதற்கு சிறந்த ஓர் கூடமாக பாடசாலை விளங்க வேண்டும். அத்தோடு சிறந்த சூழலும் அமையப்பெற்றிருக்க வேண்டும். குறிப்பாக நூலகம், விளையாட்டு மைதானம், ஒன்றுகூடல் மண்டபம், ஆய்வு கூடங்கள் மற்றும் அமைதியான சூழல், மனஅமைதி, செயற்றிறன் மிக்க ஆசிரியர்கள், அதிபர், மற்றும் உயர்வான சிந்தனை கொண்ட மாணவர் குழாம், இவ்வாறான சகல வளங்களும் அமையப்பெறுகின்ற போது ஓர் மாணவன் தனது கல்வியினை திறம்பட கற்பதற்கான வாய்ப்பு உண்டாகின்றது என கிழக்கு மாகாண முதலமைச்சரும், த.ம.வி.பு. கட்சியின் தலைவருமான சிவநேசதுரை சந்திரகாந்தன் தெரிவித்தார்.
மட்ஃகிண்ணையடி சரஸ்வதி வித்தியாலயத்தல் கணணி ஆய்வு கூடப் பணிமனையினைத் திறந்து வைத்து உரையாற்றும் போதே மேற்கண்டவாறு தெரிவித்தார். அவர் தொடர்ந்து பேசுகையில், மாணவர்கள் அனைவரும் பரீட்சையினை இலக்காக கொண்டு கல்வி கற்பதனை விடுத்து ஏனைய தொழில்துறை சார்ந்த பாடப்பரப்புரைகளையும் தாம் தெரிவு செய்து கற்க வேண்டும். அதிலும் குறிப்பாக தகவல் தொழிநுட்பம், கணணி போன்ற பாடநெறிகளை அவசியம் கற்க வேண்டும். அப்போதுதான் நாம் தொழில் வாய்ப்புக்களைப் பெறுவதற்கு மிகவும் துணையாக அமையும் எனவும் குறிப்பிட்டார்.
பாடசாலையின் அதிபர் தலைமையில் நடைபெற்ற இவ் நிகழ்விற்கு கல்குடா கல்வி பணிப்பாளர் திருமதி சுபா சக்ரவர்த்தி அவர்களும், பாடசாலை ஆசிரியர்கள், மாணவர்கள் பெற்றோர்ககள் நலன்விரும்பிகள் ஆகியோர் கலந்து சிறப்பித்தனர்.

picture-053
0 commentaires :

Post a comment