12/30/2009

ஐ. நா. தொழிற்பாட்டு குழுவின் இணைத்தலைவராக பாலித கொஹொன


தேசிய நியாயாதிக்கத்திற்கு அப்பாற்பட்ட கடல் சார்ந்த உயிரியல் வேறுபாடுகளின் பாதுகாப்பு மற்றும் தொடர்ச்சியான பாவிப்பு என்பது சம்பந்தப்பட்ட விடயங்களை ஆய்வதற்கான ஐ.நா. தொழில்பாட்டு குழுவின் இணைத் தலைவராக நியூயோர்க்கில் ஐ.நா.விற்கான இலங்கையின் நிரந்தரப் பிரதிநிதியாகிய தூதுவர் பாலித கொஹொன ஐ.நா. பொதுச் சபையின் தலைவரால் நியமிக்கப்பட்டுள்ளார்.

மற்றைய இணைத் தலைவர் நெதர்லாந்தின் வெளிநாட்டலுவல்கள் அமைச்சின் சட்டமதியுரைஞரான கலாநிதி லைஸ்டெத் லிஜின்சாட் ஆவார்.

இவர் நியமனமானது 2010 ஆம் ஆண்டில் நடைபெறவுள்ள ஐ.நா. தொழிற்பாட்டு குழுவினது மூன்றாவது கூட்டத்திற்காகவாகும். தேசிய நியாயாதிக்கத் திற்கு அப்பாற்பட்ட கடல் சார்ந்த உயிரியல் வேறுபாடுகளின் பாதுகாப்பு மற்றும் தொடர்ச்சியான பாவிப்பு என்பது சம்பந்தப்பட்ட விடயங்களை ஆய்வதற்கான ஐ.நா. தொழில்பாட்டு குழுவானது கடல்கள் மற்றும் கடல்சார் சட்டம் என்பதான ஐ.நா.வின் தீர்மானத்தைத் தொடர்ந்து ஐ.நா. செயலாளர் நாயகத்தினால் தாபிக்கப்பட்டது.

இத்தொழிற்பாட்டுக் குழுவானது உலகளாவிய ரீதியில் கடல் சார்ந்த உயிரியல் வேறுபாடுகளின் பாதுகாப்பு மற்றும் தொடர்ச்சியான பாவிப்பு என்பது சம்பந்தப்பட்ட விடயங்களை ஆய்வு செய்து அதன் சிபார்சுகளை ஐ.நா. பொதுச் சபைக்குச் சமர்ப்பிப்பதற்கு ஆணைப்படுத்தப்பட்டுள்ளது.
0 commentaires :

Post a Comment