12/09/2009

ஆயுத விற்பனை, அணு விவகாரங்களில் ரஷ்ய, இந்தியத் தலைவர்கள் ஒப்பந்தம்

இந்தியா, ரஷ்யாவிடையே முக்கியத்துவம் வாய்ந்த ஒப்பந்தங்கள் கைச்சாத்தாகியுள்ளன. இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங், ரஷ்ய ஜனாதிபதி மெத்விடிவ் ஆகியோர் கடந்த திங்கட்கிழமை இவ்வொப்பந்தத்தில் கைச்சாத்திட்டனர்.

அணு, எரிசக்தி மற்றும் ஆயுத விற்பனை உள்ளிட்ட ஏழு ஒப்பந்தங்கள் ரஷ்யாவின் பாதுகாப்புத் தலைமையகமான கிரம்ளினில் கைச் சாத்தாகின. இதன்பின்னர் இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங் ஊடகவியலாளர்களிடம் இதுபற்றித் தெரிவித்ததாவது, இவரின் உரை ரஷ்ய மொழியிலும் மொழி மாற்றம் செய் யப்பட்டது.


இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங் ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டினை
மொஸ்கோவில் சந்தித்தார்.

ரஷ்யாவுடன் செய்துகொள்ளப்பட்ட உடன்படிக்கைகள் வெற்றிகரமாக நிறை வடைந்ததை நாங்கள் வரவேற்கின்றோம்.

இவை இரண்டு நாடுகளினதும் தேவைகளைப் பூர்த்திசெய்ய நல்ல சந் தர்ப்பங்களைத் தோற்றுவிக்கும் அணுசக்தியை அமைதியான நோக்கத்திற்காகப் பயன் படுத்தவுள்ள இந்த ஒப்பந்தம் பாரிய முன்னேற்றப் பாதையை நோக்கிய அடி எடுத்து வைப்பு, நாங்கள் இருவரும் ஒரு கருத்திலுள்ளோம்.

இது எமது நாடுகளின் பரஸ்பர உறவைக் காட்டுவதாகவும் இந்தியப் பபரதமர் ஊடகவியலாளர்களிடம் சொன்னார்.

ரஷ்யா, இந்திய அணுசக்தி கூட் டுத்தாபனங்களிடையே செய்துகொள்ளப்பட்ட உடன்படிக்கைகளின் விவரங்களைப் பிரதமர் வெளியிடவில்லை. ரஷ்யாவின் அணு ஆயுத அபிவிருத்தி முயற்சிகளை அமெரிக்கா உள்ளிட்ட மேற்குலக நாடுகள் முட்டுக்கட்டை போட முனையும் வேளையில் இந்தியாவின் உதவிகளை ரஷ்யா எதிர்பார்க்கின்றது.

அமெரிக்காவின் தயவிலன்றி பல நாடுகளின் உத்தரவு ஒழுங்குகளுக்கமைய உலக நாடு களிடையிலான ஆயுத போட்டிகள் கட் டுப்படுத்தப்பட வேண்டுமென ரஷ்யா முயற்சிக்கின்றது. இம்முயற்சிக்கு இந்தியாவின் ஆதரவை எதிர்பார்க்கின்றது.

அணு ஆயுதம் சம்பந்தமாக இரண்டு நாடுகளும் ஒப்பந்தம் கைச்சாத்திட முன்னர் இந்திய வெளிவிவகார அமைச்சின் செயலாளர் நிருபமாராவ் கூறியதாவது இந்தியாவுக்கான யுரேனியத்தைத் தடையின்றி இறக்குமதி செய்வதற்கான உடன்படிக்கையில் இந்தியப் பிரதமர் கை எழுத்திடுவார் என தெரிவித்தார்.

ரஷ்யா ஏற்கனவே இந்தியாவின் தமிழ் மாநிலத்தில் இரண்டு யுரேனியம் செறிவூட்டல் மையங்களை நிறுவியுள்ளது. மேலும் இருபது நிலையங்களை ஏனைய மாநிலங்களில் நிறுவுமென உறுதி யளித்துள்ளது. இந்தியப் பிரதமர் மன் மோகன் சிங் ரஷ்யப் பிரதமர் விளாதிமிர் புட்டினையும் இவ்விஜயத்தின் போது சந்தித்தார். அடுத்த வருடம் மார்ச் மாதம் விளாதிமிர் புட்டின் இந்தியா வரவுள்ளார்
0 commentaires :

Post a Comment