12/26/2009

சுனாமி இலங்கையை தாக்கி இன்றுடன் ஐந்தாண்டு பூர்த்தி


சுனாமி பேரலை இலங்கையைத் தாக்கி இன்றோடு ஐந்தாண்டுகள் நிறைவடைகின்றன.

இந்தப் பேரலைகள் இலங்கை யின் 11 கரையோர மாவட்டங்களில் வாழ்ந்த சுமார் 39 ஆயிரம் பேர்க ளின் உயிர்களைக் காவு கொண்ட துடன், கோடிக் கணக்கான ரூபாய் பெறும தியான சொத்துக்களையும் அழித்தன.

இந்தப் பேரழிவை வருடா வருடம் நினைவு கூரும் வகையில் இத்தினத்தை தேசியப் பாதுகாப்பு தினமாக அரசாங்கம் பிரகடனப் படுத்தியுள்ளது.

அந்த வகையில் இவ்வருட தேசிய பாதுகாப்பு தினத்தின் பிரதான வைபவம் குருநாகல் நகரில் பிரதமர்

ரத்னசிறி விக்கிரமநாயக்கா தலைமையில் நடைபெறுகின்றது. இதேவேளை சுனாமி அனர்த்தம் காரணமாக மிக மோசமாக பாதிக்கப்பட்ட அம்பாறை மாவட்டம் உட்பட சுனாமி பேரலை அனர்த்தத்திற்கு முகம் கொடுத்த சகல மாவட்டங்களிலும் இன்று மத வழிபாடுகளும், ஆராதனைகளும் விசேட துஆ பிரார்த்தனைகளும் நடை பெறுகின்றன. அன்னதானங்களும் வழங் கப்பட ஏற்பாடாகியுள்ளன.

இதேநேரம் சுனாமி பேரலை அனர்த்தம் உட்பட அனர்த்தங்களால் உயிரிழந்தவர்களுக்கு அஞ்சலி தெரிவிக்கும் வகையில் இன்று காலை 9.25 மணி முதல் காலை 9.27 வரையும் மெளனமாக இருக்குமாறு அரசாங்கம் நாட்டு மக்களைக் கேட்டுள்ளது.

கல்லடி நாவலடியில் நiசுனாமி பேரலை தாக்கியதில் உலகு முழுவதும் உயிர் நீத்தவர்களுக்காக செலுத்தப்பட இருக்கும் அஞ்சலி நிகழ்வில் கிழக்கு மாகாண முதலமைச்சரும் தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சியின் தலைவருமான சிவநேசதுரை சந்திரகாந்தன் கலந்து அஞ்சலி செலுத்த உள்ளமை குறிப்பிடத்தக்கது.

கிழக்கு மாகாணசபையில் நேற்று நினைவஞ்சலி செலுத்தபடப்டது.

கிழக்கு மாகாண சபையில் கடந்த வியாளன்(நேற்று) அன்று மௌன அஞ்சலி செலுத்தப்பட்டது, பிரதம செயலாளர் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் கிழக்கு மாகாண சபையின் முதலமைச்சர் செயலக செயலாளர்கள், ஊழியர்கள் மற்றும் ஏனைய அமைச்சுக்கான சேயலாளர்கள் ஊழியர்களும் கலந்து இத்தினத்தை நினைவுகூர்ந்து அஞ்சலி செலுத்தினர்.0 commentaires :

Post a comment