12/15/2009

அடைய முடியாத இலக்குகளை எம்மக்கள் மத்தியில் கொண்டு சென்று தோற்றுப்போன வரலாறுகளை நாம் கண்கூடாகவே கண்டுகொண்டோம்

தமிழ் மக்கள் மத்தியில் பல்வேறு உணர்வு ரீதியான கருத்துக்களை முன்வைத்து அதற்கான எந்தவித பலன்களையும் அடையாது தோற்றுப்போன வரலாறுகள் நாம் அனைவரும் அறிந்த ஓர் விடயமாகும், என கிழக்கு மாகாண முதலமைச்சரும் தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சியின் தலைவருமான சிவநேசதுரை சந்திரகாந்தன் தெரிவித்தார் இன்று (13/12/2009) வந்தாறுமூலை ஆயுர்வேத வைத்தியசாலையினைத் திறந்து வைத்து உரையாற்றுகையிலேயே மேற்கண்டவாறு தெரிவித்தார்.img_9273

அவர் மேலும் குறிப்பிடுகையில் நடைபெறவுள்ள ஜனாதிபதித் தேர்தலில் யாரை ஆதரிப்பது என்பது தொடர்பில் த.ம.வி.பு கட்சியின் நிலைப்பாடு உறுதியாக உள்ளபோதிலும், சில ஊடகங்கள் பல வாந்திகளையும், குழப்பகரமான செய்திகளையும் வெளியிடுகின்றன. இதனால் மக்கள் யாரும் குழம்பத் தேவையில்லை. எமது கட்சியானது ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்களை ஆதரிப்பது என உறுதியாக முடிவெடுத்துள்ளது. எனவே எமது கிழக்கு மாகாண மக்கள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்களையே ஆதரிக்க வேண்டும். இதற்கு எமது த.ம.வி.பு கட்சி தனது பூரண ஆதரவினை வழங்கி வருகின்றது. குறிப்பாக மட்டக்களப்பு மாவட்டத்தில் பிரச்சாரப்பணிகள் ஆரம்பிக்கப்பட்டும் விட்டன எனவும் குறிப்பிட்டார்.

தொடர்ந்து பேசுகையில் எமது தமிழ் மக்கள் இச்சூழலில் மிகவும் சிந்தித்து செயற்பட வேண்டும் ஏனெனில் நாம் கடந்த காலங்களில் பலராலும் ஏமாற்றப்பட்டிருக்கின்றோம். இருந்த போதும் எமது சமூகம் அடைய முடியாத இலக்குகளை அடைய முயற்சித்து தோல்வியும் கண்டுள்ளோம் இதனாலேயேதான் நாம் தற்போதைய சூழலை எமக்கு சாதகமானதாக ஆக்கிக்கொள்ளவேண்டும். அதாவது நாம் இழந்தவைகளை அபிவிருத்தி செய்வதற்கு பொருத்தமான அரசு எது? அத்தோடு சிறுபான்மை மக்களினது அபிலாசைகள் எமது மாகாண அபிவிருத்தி என்பன தொடர்பில் அதிகம் அக்கறை கொள்ளக்கூடியவர்களும் அத்தோடு எமக்கு எஞ்சியிருக்கின்ற ஓர் சொத்தான கிழக்கு மாகாண சபையில் இருப்புக்களைப் பயன்படுத்துவதற்கான வழிமுறைகளை எமக்கு ஏற்படுத்தித் தரக்கூடியவற்றையே நாம் ஆதரிக்க வேண்டும்.

எனவேதான் இது தொடர்பில் எமது கட்சியின் உயர்மட்டக்குழு ஆராய்ந்து பார்த்ததன் அடிப்படையிலும் எமது ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவுடனான நம்பிக்கையின் வெளிப்பாட்டிலும் அவரை ஏகமனதாக ஆதரிக்க முடிவு செய்துள்ளோம் எனவும் குறிப்பிட்டார்.

இந்நிகழ்வானது மட்/ஸ்ரீ மகா விஷ்ணு வித்தியாலயத்தில் அதிபர் சிவநாதன் தலைமையில் இடம்பெற்றது. புலமைப்பரீட்சையில் சித்தியடைந்த மாணவர்களுக்கான பரிசில்களும். வந்தாறுமூலை விளையாட்டுக் கழகங்களுக்கான உபகரணங்களும் மாகாண சபை உறுப்பினரும் த.ம.வி.பு கட்சியின் தேசிய அமைப்பாளரமான எட்வின் சில்வா கிருஸ்ணானந்தராஜா( பிரதீப் மாஷ்டர்) அவர்களினால் வழங்கி வைக்கப்பட்டது. இந்நிகழ்வில் த.ம.வி.பு கட்சியின் பொதுச் செயலாளர் எ.சி கைலேஸ்வரராஜா ஏறாவூர் பற்று பிரதேச சபைத் தவிசாளரும் கடசியின் தேசிய பொருளாளருமான ஜீவரங்கன் (உருத்திரா) மற்றும் கட்சியின் முக்கிய பிரதிநிதிகளும் கலந்து கொண்டார்கள்.

img_9105

img_9105

img_9236img_9273img_9284


0 commentaires :

Post a Comment