12/11/2009

ஹீரோ டு ஜீரோ . (FROM HERO TO ZERO) ?

s.m.m.bazeer(பகுதி மூன்று ) பிரித்தானிய தென்னாசிய கொள்கை வகுப்பாளர்கள் இலங்கை ஜப்பான் சீனாவின் பக்கம் சார்ர்ந்திருப்பதனையும் தாம் அதனால் சில ராஜரீய நடவடிக்கைகளை எடுக்கமுடியாதுள்ளதனையும் சிலேடையாக எம்மிடம் குறிப்பிட்டனர். இவர்கள் ஜே.வி பி இனது எதிர்காலம் குறித்தும் கேள்வி எழுப்பினர். பிரித்தானியா இலங்கையால் அரசியல் ரீதியில் ஒரங்கட்டப்படுகின்றதனை தமது ஆளுமைக்கு அதிகாரத்து சவால்விடுவதனை சகிக்கமுடியவில்லை என்பதனை இவர்களுடனான சந்திப்புக்கள் தெளிவாக புலப்படுத்தியது. . ஆனால் பிரித்தானியாவின் மத்தியகிழக்கு நாடுகள் , தென்னாசிய நாடுகள் தொடர்பான கொள்கைகள், அரசியல் காய்நகர்த்தல்கள் ; அவற்றிலுள்ள கயமைத்தனங்கள் பற்றி அண்மையில் பல உதாரணங்கள் உண்டு.அதிலும் ஈராக் மீதான ஆக்கிரமிப்பு யுத்தமும் , பாலஸ்தீனத்தின் மீதான கபடத்தனங்களும் குறித்து சில அண்மைச்சம்பவங்கள் இங்கு குறிப்பிடப்படுவதன் மூலம் ஏகாதிபத்தியங்களின் சதிகள் குறித்து பார்வை ஒன்றினை ஏற்படுத்துவதே எனது நோக்கமாகும். ஈராக் மீது புஷ்ஷுடன் (George Bush) டோனி பிளையர் (Tony Blair) தொடுத்த ஆக்கிரமிப்பு சட்டமுரணான யுத்தம் பற்றி பிரித்தானியாவின் அன்றைய சட்டமா அதிபர் பீட்டர் கோல்ட்ஸ்மித் (Peter Goldsmith) சட்டரீதியான முரண்பாடுகளை சுட்டிக்காட்டி தனது கருத்தை காட்டமாக தெரிவித்ததாகவும் ஆனால் டோனி பிளயரின் உதவியாளர்கள் சட்டமா அதிபர் மீது அவரை யுத்ததிற்கு ஆதரவாக சட்டநிலைப்பட்டை நியாயப்படுத்தலை செய்யுமாறு மிகுந்த அழுத்தங்களை பிரயோகித்ததாகவும் இப்போது செய்தி வெளியாகிஉள்ளது. ஆனால் சட்ட மா அதிபரோ, டோனி பிளயரோ இன்று பதவில் இல்லை , மேலும் இவர்களுக்கு ஒன்றும் நடந்துவிடப் போவதுமில்லை. ஆனால் ஈராக் இன்று இலட்சக்கணக்கான உயிர்களை உடமைகளை இழந்து ஆட்சி மாற்றம் ஏற்பட்டு அழிந்து போயிருக்கிறது. மேற்குலகின் கபடத்தனத்துக்கு இன்னுமொரு கிட்டிய உதாரணம் இந்த வருடம் அக்டோபரில் ஐ .நா. சபையில் இஸ்ரேல காசா மீது நடத்திய போச்பெராஸ் ( phosperous ) ஏவுகனை தாக்குதலில் கொல்லப்பட்ட ஆயிரம் பாலஸ்தீனியர்களின் கொலைக்காக கண்டனம் செய்யும் தீர்மானத்தினை வாக்கெடுப்புக்கு கொண்டுவந்தபோது பிரித்தானியாவும் பிரான்சும் கலந்துகொள்ளவில்லை. நான் இதன் இரண்டாவது பகுதி தொடரில் குறிப்பிட்ட முன்னாள் இஸ்ரேலிய பிரதமர் ஏரியல் ஷரோன் (Aerial Sharon) இருபதாம் நூற்றாண்டின் மிக அதிர்சி ஊட்டும் யுத்தக் குற்றங்களை 1982 செப்டெம்பரில் லெபனானிலிருந்த சப்ரா (sabra) சட்டிலா (Chatila) பாலஸ்தீனிய அகதி முகாம்களில் மேற்ட்கொண்டு ஆயிரமாயிரம் பாலஸ்தீனிய மக்களை கொன்றழித்த ஒரு ராணுவ தளபதி , இவரைத்தான் ஜார்ஜ் புஷ் "சமாதான மானுடன் " (Man of Peace ) என்று விதந்துரைத்ததும் டோனி பிளேயர் தனது நாட்டுக்கு வருமாறு அழைத்ததும் ஏகாதிபத்தியங்களின் இரட்டை முகத்தினை காட்டும் சிறிய உதாரணங்களாகும். இந்த மனிதனின் ( ஏரியல் ஷரோன்) போர குற்றங்கள் பற்றி கருத்துரைத்த -எழுதிய- த இண்திபெண்டேன்ட் (The Independent ) பத்திரிகையின் மத்திய கிழக்கு பத்தி எழுத்தாளர் ராபர்ட் பிஷ்க் (Robert Fisk) கின் பகிரங்க விமர்சனங்களுக்காக இம்முகாம்களின்மீதான் தாக்குதல்களுக்கு அமெரிக்க பச்சைக்கொடி காட்டியதென்றும் எழுதியமைக்காக அமெரிக்காவில் உள்ளேற தடுக்கப்பட்டார் , திருப்பி அனுப்பப்பட்டார்.. பிரித்தானிய அரசு ஈராக் மீதான யுத்தம் பற்றிய சர்ச்சை குரிய கருத்துக்களை பி பி. சி வானொலியில் தெரிவித்த டாக்டர் டேவிட் கெல்லி (Dr. David Kelly) எவ்வாறு கொல்லப்பட்டார் ( ஆட்சியாளர் சொல்வதுபோல் தற்கொலை அல்ல) என்ற சந்தேகம் இன்று வரை உலாவுகிறது. அமெரிக்காவின் ஈராக் மீதான யுத்தம் எவ்வாறு முன்னரே கருக்கொண்டது என்று ஐ நா. சபையின் ஆயுத பரிசோதகர் ஹான்ஸ் ப்ளிட்ஸ் (Hans Blitz) தனது பதவியை விட்டு விலகியதும் எழுதிய நூலில் குறிப்பிட்டுள்ளதுடன் அமெரிக்காவின் முகமூடியை விளக்கி அதன் சுயரூபத்தை காட்டவும் முயற்சித்துள்ளார். இதிலிருந்து நீங்கள் அதிகம் புரிந்து கொள்ளலாம். ஜனநாயகம் அரசியல் கபடத்தனங்கள் எவ்வாறு இங்கும் வாழ்கிறது என்பதனை உணர்ந்து கொள்ள முடியும், இவர்களிடமிருந்து எதனை இறக்குமதி செய்யமுடியும் . சென்ற ஐரோப்பிய தேர்தலில் தமிழர் ஆதரவினை திரட்டும் முயற்சியில் தெற்கு இலண்டனில் தமிழர்கள் ஒழுங்குசெய்த ஒரு மூடப்பட்ட தனிப்பட்ட சந்திப்பொன்றில் அத்தேர்தலில் தொழில் கட்சி சார்பில் (Labour Party) போட்டியிட்ட புலிகளுக்கு ஆதரவாக ஐரோப்பிய பாராளுமன்றத்திற்குள்ளும் வெளியேயும் குரல் கொடுப்பதில் இலங்கையின் இன்றைய அரசுக்கெதிராக கருத்துரைப்பதில் பிரசித்தி பெற்ற முன்னால் ஐரோப்பிய பாராளுமன்ற உறுப்பினர் ரோபர்ட் இவான்ஸ் (Robert evans) தாம் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவை உத்தியோகமாக சந்தித்ததைப்பற்றி அக்கூட்டத்தில் மஹிந்த ராஜபக்சவின் மெய்மொழி (Body language) பற்றியும் தனது அவதானத்தை அங்கததொனியுடன் குறிப்பிடுகையில் " எனக்கு ஞாபகமிருக்கிறது; அவர் (மஹிந்த ராஜபக்ச ) தனது விரல்களில் மோதிரங்கள் அணிந்திருந்தார்; அவர் மேசையில் தொடர்ந்து அடித்துக்கொண்டிருந்தார் ..........நாங்கள் அறிவோம் இலங்கை இராணுவம் யுத்த குற்றங்களை புரிந்திருக்கிறது என்று, ... அவரது (மஹிந்த ராஜபக்ச ) மறுப்புக்களில் உண்மை இல்லையென்று” என்று பல முஸ்தீபுகளை மேற்கொண்டும் அந்த தேர்தலில் தமிழர்கள் இனவாத அடிப்படையில் தேசிய ரீதியில் வாக்களித்ததால் தோல்வியுற்றார். யுத்த வெற்றி என்பது சரத் போன்செகாவினது வெற்றி மட்டுமல்ல லட்சக்கணக்கான படையினரின் உயிரிழப்புக்களுடன் மட்டுமல்ல , கடந்தகாலங்கள் போலல்லாது இராணுவத்திற்கும் அரசின் தலைமைக்ளுக்குமிடயிலான நெருங்கிய செயற்திட்டத்தின் மூலமே செய்து முடிக்கப்பட்டது. ஓன்று சேர்ந்த திட்டமிடல் கருத்துபரிமாறல் என்பன முக்கியத்துவம் வகித்ததாக இராணுவ ஆய்வாளர்கள் கருத்து தெரிவித்திருந்தனர். இது பற்றி சற்று பின் நோக்கி பார்த்தால் ஏப்ரல் முப்பதாம் திகதி சண்டே ஐலன்ட் பத்திரிகையின் ஆசிரியர் தலையங்கம் எனது நினைவுக்கு வருகிறது. "இராணுவத்தினதும் அரசியலினதும் குறிக்கோள்கள் என்ன? “what are the Military and Political Objectives?’); "Sunday April 30, 1995 – இது பற்றி நான் ஏற்கனவே ஆங்கிலத்தில் எழுதிய கட்டுரையில் விரிவாக குறிப்பிட்டு இருந்தேன் அவ்வாசிரிய தலையங்கம் அன்று சந்திரிகா அரசுக்கும் இரானுவத்திட்குமிடையில் காணப்பட்ட பாரிய இடைவெளியை உதாரனங்காட்டி அரச நிர்வாகத்தினதும் இராணுவத்தினதும் குறிக்கோள் (Objectives) , செயற்திட்டம் (plan of action) குறித்து அரசுக்கு தெளிவான கண்ணோட்டம் இருக்கவேண்டும். அப்போதுதான் யுத்த வெற்றிகானமுடியும், அரசியல் தீர்வும் காணமுடியும் என்று சுட்டிகாட்டி இருந்தது. அதுவே சுமார் ஒரு தசாப்தத்தின் பின்னர் நடைபெற்றது; அந்த வெற்றியில் அரசுத்தலைவருக்கு அதிக பங்குண்டு. ஏனெனில் தீர்க்கமான முடிவுகள் அரசுத்தலைவரிடமிருந்து வரவேண்டி இருந்தது. உலகின் அழுத்தங்களுக்கு அசையாத உறுதி வேன்டி இருந்தது. இலங்கை அரசின் ஏனைய அரசுத்தலைவர் போலல்லாது ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச எவ்வாறு அடிக்கடி தாநே சரத் பொன்சேகாவின் வீட்டுககே சென்று யுத்த காலத்தின் போது யுத்தம் பற்றி கலந்துரையாடினார் என்று எனக்கு அரசிலுள்ள முக்கிய பிரமுகர் ஒருவர் அண்மையில் என்னிடம் கூறினார். ஏகாதிபத்திய ராஜரீய அணுகுமுறைகளை இன்று தென்னாசிய நாடுகள் அணுகும் முறை பொருளாதார மாற்றங்களினூடாக மாறி வருகிறது. இனிவரும் காலங்கள் புதிய பல் பரிமாண சமுதாய மாற்றங்களுக்கு விழுமியங்களுக்கு வழிகோலும், தென்னாசியா புதிய உலக ஒழுங்கினை வகுக்கும் திராணியை பெறுவதில் தான் அந்த சமுதாய மாற்றங்களும் சாத்தியமாகும். மேற்குலகின் சதிவலைகளை அடையாளம் கண்டு இலங்கை தேசத்தின் இறைமையை காப்பற்றவேண்டிய அவசியமும் இலங்கை மக்கள் மீது இன்றுள்ள பாரிய தேவையாகும்

0 commentaires :

Post a Comment