5/31/2010

யுத்தக்குற்றங்களின் பெயரில் எரிக்சோல்கைம்மும் விசாரிக்கப்பட வேண்டும்.******கு.சாமித்தம்பி.

                                                           
 யுத்த தர்மம் பற்றியும் யுத்தகாலத்திலும் மனிதஉரிமைகள் கவனத்தில் கொள்ளப்பட வேண்டியதன் அவசியம் பற்றியும் இலங்கை நோக்கிய உரையாடலில் சர்வதேசம் ஈடுபட்டிருக்கின்றது. இது தமிழ் சமூகத்தின் மத்தியிலும், மனித உரிமைகள் பற்றிய கவனத்தை அதிகரித்துள்ளது. புலிகள் செய்துவந்த ஒவ்வொரு கொலைகளுக்கும் மட்டும் அல்ல அடுத்தடுத்து செய்விருந்த எதிர்காலக் கொலைகளுக்கம்கூட காரணங்களை கையில் வைத்துக்கொண்டிருந்த சமூகம் இப்போதாவது யுத்ததர்மம் பற்றியும், மனித உரிமைகள் பற்றியும் கவனம் கொள்ளத்தொடங்கியிருப்பது ஒரு நல்ல சகுனமே. இறுதி யுத்தத்தின் போது அப்பாவி மக்கள் குண்டுவீச்சுக்களில் கொல்லப்பட்ட கொடுமைகளுக்கு அரசாங்கம்
பொறுப்புச் சொல்லியே ஆகவேண்டும். ஆனால் இந்த குற்றச்சாட்டுக்களை எழுப்புபவர்கள் யார்? எதற்காக? எப்போது? இந்த குற்றச்சாட்டுக்கள் எழுப்பப்படுகின்றன என்பது பற்றியும் நாம் கேள்வியெழுப்ப வேண்டியுள்ளது. பாசிசப் புலிகளின் தலைமைப்பீடம் அழிக்கப்பட்ட மே மாதம் 18 ம் திகதியுடன் முடிவடைந்த ஓராண்டு நினைவையொட்டி இலங்கை அரசுக்கெதிரான யுத்த குற்றச்சாட்டுக்கள் சர்வதேசம் எங்கும் வி~;வரூபம் எடுத்துவருகின்றன. இதில் சர்வதேச மனித உரிமைகள் அமைப்புக்கள், ஜக்கிய நாடுகள்சபை, அமெரிக்க, ஐரோப்பிய உலக வல்லரசு நாடுகள், மற்றும் புகலிடத்து புலிப்பினாமிகள் என்போர் முன்னிலையில் நிற்கின்றனர்.
    இவையனைத்துக்கும் மத்தியில்தான் ஐனாதிபதி ஒரு விசாரணைக் குழுவை நியமித்துள்ளார். இராணுவத்தினர் மீதான குற்றச்சாட்டுக்களை முழுமையாக மறுக்கமுடியாத நிலையும், சர்வதேச ராஜதந்திர நெருக்கடிகளுக்கு பதிலிறுக்கும் அவசியமும் இதில் கலந்திருந்தாலும் முன்கூட்டியே நம்பிக்கையீனமாக விசாரணைக்குழுவை யாரும் புறந்தள்ளிவிட முடியாது. சர்வதேச மனிவுரிமை அமைப்புக்களும், ஐ.நா.செயலர் பாஹிமூன்னும் கூறியது போலன்றி முழுக்க முழுக்க உள்நாட்டு பிரசைகளைக் கொண்ட ஒன்றாகவே இக்குழு அமைந்துள்ளது. மக்களால் தெரிவுசெய்யப்பட்ட ஒரு அரசுக்கு மனிதஉரிமை வேசத்தில் வரும் தனது இறைமைக்கு எதிரான சவால்களை எதிர்கொள்ள வேண்டியதன் அவசியம் உள்ளதென்பதை இந்த உள்நாட்டுக் குழு நியமனம் சொல்லிநிற்கின்றது.
    அத்தோடு இக்குழுவானது யுத்தத்தில் ஈடுபட்ட புலிகள் இல்லாதொழிக்கப்பட்ட நிலையில் அரச இராணுவத்தினரை மட்டுமே விசாரிக்கப்போகின்றது அல்லது விசாரிக்க முடியும் என்று எண்ணிக்கொண்டிருப்பவர்களுக்கு இலங்கை அரசு சரியான ஒரு ஆப்பு வைத்துள்ளது. இறுதி யுத்தத்தின் போதான யுத்தக்குற்றங்கள் மட்டுமல்ல 2002 ஆண்டு உருவாக்கப்பட்ட யுத்தநிறுத்த ஒப்பந்தம் தொடங்கிய நாளில் இருந்து மே.18-2010 வரையான காலஎல்லையை இவ்விசாரணைக் குழுவின் வேலைத்திட்டம் கொண்டுள்ளது. இதில் முக்கியவிடயம் என்னவென்றால் யுத்தகாலத்தில் மீறப்பட்ட மனிதவுரிமைகளைக் போலவே யுத்த நிறுத்தகாலத்தில் இடம்பெற்ற மனிதவுரிமை மீறல்களும் விசாரிக்கப்படப் போகின்றன.
    இறுதியுத்தத்தின் போது அப்பாவி மக்கள் அழிக்கப்பட்டது பற்றி குரல் எழுப்புவதன் ஊடாக புலிகளது தலைமைப்பீடங்கள் தகர்தெறியப்பட்ட விதம் பற்றி கேள்வியெழுப்ப முனையும் கூட்டத்தினருக்கு யுத்தநிறுத்த காலத்தில் இடம்பெற்ற மனிதவுரிமைகள் பற்றி கிஞ்சித்தேனும் கவலையில்லை. ஆனால் அந்த கடமையின் அவசியத்தை ஜனாதிபதியினால் நியமிக்கப்பட்ட நல்லிணக்க ஆணைக்குழு கொண்டுள்ளமை வரவேற்கத்தக்க விடயமாகும்.
    2002 ஆண்டு பெப்ரவரி மாதம் 2 ஆம் திகதி ரணில் - பிரபா கைத்சாத்திட்டு செய்துகொள்ளப்பட்ட போலி சமாதான ஒப்பந்தத்தின் பெயரில் காட்டுக்குள் இருந்து நாட்டுக்குள் வந்த புலிகளது கைங்கரியத்தினால் இலங்கையில் இடம்பெற்ற மனிதவுரிமை மீறல்கள்  எண்ணற்றவையாகும். யாழ்ப்பாணத்தில் ஈ.பி.ஆர்.எல்.எவ். இன் மூத்த தலைவர்களில் ஒருவரான சுபத்திரன், அதிபர் இராஜதுரை முதல் மட்டக்களப்பு இராஜன் சத்தியமூர்த்தி வரையிலான அனைத்துகொலைகளும் விசாரிக்கப்பட வேண்டும். மட்டக்களப்பு சிறைக்குள்ளும்,  அக்கரைப்பற்று நீதிமன்றம் மற்றும் பள்ளிவாசலுக்குள்ளும் புகுந்து கொலைகளை நடாத்திய புலிகளது அட்டூழியங்களுக்கு எந்த சர்வதேச சமூகமும் இதுவரை வாய்திறக்கவில்லை. கருணா குழு, பிள்ளையான் குழு என்ற குற்றச்சாட்டின் பெயரில் மட்டக்களிப்பின் ஒவ்வொரு குச்சொழுங்கைகளிலும் இளைஞர்களும், யுவதிகளும் புலிகளால் கொண்டு வீசப்பட்ட பொழுதுகளில் எல்லாம் சமாதான ஒப்பந்தமே அமூலில் இருந்தது. இவற்றுக்காகவெல்லாம் எந்த மனிதவுரிமைவாதிகள் இதுவரை குரல் கொடுத்தார்கள்? 2004 மார்ச் கிழக்குப் பிளவின் பின்னர் ஐனநாயக வழிக்குத் திரும்பிய போராளிகளை  வெருகல் ஆற்றுப் படையெடுப்பில் நூற்றுக்கணக்கில் கொண்டு குவித்தவர்கள் புலிகள். அங்கு நிகழ்த்தப்பட்ட முன்னாள் பெண் போராளிகள் மீதான பாலியல் வன்கொடுமைகள் பற்றி பாஹிமூனுக்கு இதுவரை யாரும் எடுத்துச் சொல்லவிலை.
    யுத்தநிறுத்தம் அமூலில் இருந்தபோதுதானே வன்னிப்புலிகளின் ஆயுதக் கும்பல் ஓமந்தை சாவடியை கடந்துவந்து வெருகல் படுகொலையை நிறைவேற்றியது. இதற்கு வசதியேற்படுத்திக் கொடுத்தவர்கள் யார்? இவற்றுக்கெல்லாம் பதிலிறுக்க இன்று புலிகள் இல்லாதிருக்கலாம். ஆனால் அன்றைய ஜனாதிபதி சந்திரிகா இதற்கு பொறுப்புச் சொல்லியே ஆகவேண்டும். வன்னிப்புலிகளின் ஓமந்தை தாண்டும் படலத்திற்கு சந்திரிகாவிடம் தூது சென்ற சம்பந்தனும் விசாரணைக் கூண்டில் ஏற்றப்பட வேண்டும். இவையனைத்துக்கும் மேலாக யுத்த நிறுத்த ஒப்பந்தத்தின் மூன்றாம் தரப்பு மத்தியத்துவர்களாக இருந்த நோர்வே அரசும், அதனது விசேட தூதுவர் எரிக்சோல்கைமும் தங்களது பொறுப்புச் சொல்லும் கடமையில் இருந்து தப்பிக்க முடியாது.
    2004 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 8 ஆம் திகதி வன்னிப் புலிகளின் படையெடுப்பு மு~;தீபுகள் தீவிரமடைய கண்காணிப்புக் குழு கிழக்கு மாகாணத்தைவிட்டு தற்காலிகமாக வெளியேறியது. யுத்த நிறுத்தத்தை பேண வேண்டியவர்கள், கண்காணிப்பை மேற்கொள்ள வேண்டியவர்கள் வெருகல் படுகொலைக்கு வழிவிட்டு தமது கடமையில் இருந்து திட்டமிட்டே விலகி நின்றனர். கிழக்கு மாகாணத்தை விட்டு வெளியேறியதின் ஊடாக வெருகல் படுகொலைக்கு  துணைபுரிந்த எரிக்சோல்கைம் ஜனாதிபதியின் நல்லிணக்க ஆணைக்குழுவால் விசாரிக்கப்பட வேண்டிய முக்கிய குற்றவாளி ஆவார்.

கு.சாமித்தம்பி.      
»»  (மேலும்)

5/30/2010

சட்டவிரோதப் பயண எச்சரிக்கை  
ஆஸ்திரேலிய அரசு வெளியிட்டுள்ள பத்திரிகை அறிவித்தல் ஒன்று
ஆஸ்திரேலிய அரசு வெளியிட்டுள்ள பத்திரிகை அறிவித்தல் ஒன்று
இலங்கையிலிருந்து ஆஸ்திரேலியாவிற்கு கடல் வழியாய் சட்டவிரோதப் பயணம் செய்வதற்கு எதிராக இலங்கை பத்திரிகைகளில் ஆஸ்திரேலிய அரசாங்கம் அறிவித்தல்களை வெளியிட்டு வருகின்றது.
சட்டவிரோதக் குடியேற்றத்துக்கு எதிராக எச்சரிக்கை விடுக்கும் விதமாகவும், மக்களுக்கு இது தொடர்பில் விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையிலும் இந்த பத்திரிகை அறிவித்தல்கள் அமைந்துள்ளன.
இலங்கையர்களின் புகலிடக் கோரிக்கைகள் பரிசீலிக்கப்படுவதை ஆஸ்திரேலியா இடைநிறுத்தியுள்ளது இந்த அறிவித்தல்களில் விளக்கப்பட்டுள்ளது.
"முறையற்ற விதத்தில் படகு மூலம் ஆஸ்திரேலியாவிற்கு செல்ல முயற்சித்து உயிரைப் பணயம் வைக்க வேண்டாம், மனிதர்களைக் கடத்துபவர்களினால் தப்பான பாதையில் செல்ல வேண்டாம்." என்றும் இதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
"பயனற்ற பயணத்திற்காக பணத்தை வீணாக்க வேண்டாம்" என்றும் இந்த அறிவித்தல்களில் ஆஸ்திரேலிய அரசாங்கம் குறிப்பிட்டுள்ளது.
பொருளாதார இழப்பு, உயிரிழப்பு, பிற நாடொன்றில் தடுத்துவைப்பு, பிற நாடொன்றில் நிர்க்கதியாகுதல், நாடு கடத்தப்படுதல் போன்ற நிலைகளை மக்களுக்கு எடுத்துரைக்கும் வகையில் அறிவித்தல்கள் வெளியாகி வருகின்றன.
»»  (மேலும்)

வடக்கும் கிழக்கும் இணைய வேண்டும் .,பிரிந்த கிழக்கு மாகாண சபையை ஏற்றுகொள்ளவும் மாட்டோம் ஆனால் தனித்த வடக்கில் போட்டி போடுவோம் -அரியநேத்திரன் _

வடக்கும் கிழக்கும் இணைய வேண்டும் .,பிரிந்த கிழக்கு மாகாண சபையை 
ஏற்றுகொள்ளவும் மாட்டோம்  ஆனால்    தனித்த வடக்கில் போட்டி போடுவோம்  எனும் சந்தர்ப்பவாத அரசியலின்பிறப்பிடம் கூட்டமைப்பு என்பதை ஒப்புக்கொண்டிருக்கிறார்     அரியநேத்திரன்     


தமது கயமைத்தனங்களை மறைக்க வன்னி மக்களை விலை பேச முயலும் கூ ட்டமைப்பினரை வன்னி மக்கள் துரத்தியடிக்க வேண் டும்
  முகாம்களில் தங்கி அவதிப்படும் அனைத்து வன்னிப் பகுதி மக்களையும் மீளக்குடியமர்த்தி, அவர்களுக்கு நிம்மதியான, நிரந்தரமான வாழ்வை விடிவை ஏற்படுத்திக்கொடுப்பதை வலியுறுத்தி வடக்கு மாகாண சபைத் தேர்தலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு போட்டியிடும். என கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் பி.அரியநேத்திரன் தெரிவித்துள்ளார்.

வடக்கு மாகாண சபைக்கு அண்மையில் தேர்தல் நடைபெற இருப்பதாக பொருளாதார அபிவிருத்தி அமைச்சரான பசில் ராஐபக்ஷ நேற்று தெரிவித்திருந்தார். இதையொட்டி வெளியிட்டுள்ள ஓர் அறிக்கையிலேயே அரியநேத்திரன் மேற்கண்டவாறு தெரிவித்திருக்கின்றார்.
»»  (மேலும்)

மட்டக்களப்பு மாவட்டத்தின் முருக்கன் தீவு, பொண்டுகல் சேனை பிரதேசங்களுக்கு முதலமைச்சர் விஜயம்

img_3901
மட்டக்களப்பு மாவட்டத்தின் கிரான் பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட பொண்டுகல் சேனை, முருக்கன் தீவு பிரதேசத்திற்கு அக்கிராமங்களின் அபிவிருத்தி குறித்து ஆராய கிழக்கு மாகாண முதலமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன்  நேரில் சென்று அம்மக்களிடம் ஆராய்வதையும் முதல்வருடன் கோரளைப்பற்று பிரதேச சபை தவிசாளர் உதய ஜீவதாஸ் மற்றும் மாகாண சபை உறுப்பினர் பூ.பிரசாந்தன் ஆகியோர் உடன் சென்றிருப்பதை படங்களில் காணலாம்.
»»  (மேலும்)

முப்பது வருடங்களின் பின்னர் யாழ் - கதிர்காமம் பஸ் சேவை ஆரம்பம்
  யாழ் - கதிர்காமம் பஸ் சேவை ஆரம்பிக்க அரசாங்கம் விரைவில் நடவடிக்கை , யாழ் குடா நாடு முதல் கதிர்காமம் வரையிலான பஸ் சேவையை முப்பது வருடங்களின் பின்னர் ஆரம்பிப்பதற்கு இலங்கை போக்குவரத்துச் சபை தீர்மானித்துள்ளது.

எதிர்வரும் ஜுலை 1ஆம் வாரம் முதல் இவ் இரு பகுதிகளுக்கான பஸ் சேவை இயங்கும் என தெரிவிக்கப்படுகிறது. ___
»»  (மேலும்)

கொழும்பு விழா: நடிகர்களுக்கு எச்சரிக்கை

சர்வதேச இந்திய திரைப்பட கழக சின்னம்

கொழும்பில் நடத்தப்படக்கூடிய IIFA விருது வழங்கும் விழாவில் கலந்துகொள்ளும் நட்சத்திரங்களுக்கு எதிராக தென்னிந்திய திரைத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.
அடுத்த மாதம் கொழும்பில் நடத்தப்படுவதாகத் திட்டமிடப்பட்டுள்ள சர்வதேச இந்திய திரைப்பட கழகத்தின் விருது வழங்கும் விழாவை 'இரத்தக் கறை படிந்துள்ள' இலங்கையில் நடத்தக்கூடாது என்று தென்னிந்திய திரைத்துறை சங்கங்கள் கோரிக்கை விடுத்துள்ளன.
தமது கோரிக்கையை மீறி கொழும்பில் விழா நடக்கும் பட்சத்தில், அதில் கலந்துகொள்ளும் நட்சத்திரங்களின் படங்களை திரையிடாமல் புறக்கணிக்கப்போவதாக தென்னிந்திய திரைத்துறையைச் சேர்ந்த பல்வேறு அமைப்புகள் வெள்ளியன்று சென்னையில் நடத்திய கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டுள்ளது.
தென்னிந்தியத் திரைப்படக் கலைஞர்கள், தொழில்நுட்ப வல்லுநர்கள், ஊழியர்கள், தயாரிப்பாளர்கள், விநியோகஸ்தர்கள் மற்றும் திரைப்பட உரிமையாளர்கள் ஆகியோர் இணைந்து இந்த முடிவை எடுத்துள்ளதாக இந்தக் கூட்டத்தின் முடிவில் எடுக்கப்பட்ட தீர்மானம் கூறுகிறது.
"இந்த விருது வழங்கும் விழாவை வேறு எங்கு வேண்டுமானாலும் நடத்திக்கொள்ளுங்கள். ஆனால் இரத்தக் கறை படிந்த இலங்கையில் நடத்தப்படுவதைத்தான் தாங்கள் எதிர்ப்பதாக" அத்தீர்மானம் கூறுகிறது.
ஆனால் திட்டமிட்டபடி ஜூன் 3-5 தேதிகளில் கொழும்பில் இந்த விழா நடக்கும் என்று இதன் ஏற்பாட்டாளர்கள் அறிவித்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
 
»»  (மேலும்)

"நல்லிணக்க ஆணையத்துக்கு ஆதரவு"

 
செய்தியாளர் சந்திப்பில் ஹில்லாரி கிளிண்டனுடன் ஜி.எல்.பீரிஸ்
அமெரிக்க ராஜாங்க அமைச்சருடன் இலங்கை வெளியுறவு அமைச்சர்
இலங்கயில் யுத்தத்துக்கு பின்னர் நல்லிணக்கத்தைக் கொண்டுவருவது தொடர்பில் அரசாங்கம் தன்னளவில் ஏற்படுத்தியுள்ள ஆணையத்துக்கு அமெரிக்காவின் ஆதரவு கிடைத்துள்ளது.
இலங்கையில் உள்நாட்டளவில் ஆணையம் அமைக்கப்படுதற்கு தான் ஆதரவு தருவதாகக் கூறியுள்ள அமெரிக்க ராஜாங்க அமைச்சர் ஹில்லாரி கிளிண்டன் அம்மையார், இந்த ஆணையத்துக்கு போர்க்குற்ற குற்றச்சாட்டுகளை விசாரிப்பதற்கான அதிகாரமும் வழங்கப்பட வேண்டுமென கேட்டுக்கொண்டார்.
போர்க் குற்ற குற்றச்சாட்டுகள் தொடர்பில் சுயாதீன சர்வதேச விசாரணை நடத்தப்பட வேண்டும் என உள்நாட்டளவிலும் சர்வதேச அளவிலும் விமர்சகர்கள் விரும்புகின்றனர்.
ஆனால் இலங்கையில் யுத்தத்தின் கடைசி ஏழு ஆண்டுகள் காலப் பகுதியில் இருந்து படிப்பினைகளைப் பெற்று, இன நல்லிணக்கத்துக்கான வழிவகைகளையும் ஆராய்வதற்காக எட்டு பேர் கொண்ட ஆணையத்தையே இலங்கை அரசாங்கம் அண்மையில் அமைத்துள்ளது.
பீரிஸ்- கிளிண்டன் சந்திப்பு
இந்நிலையில் வாஷிங்டனில் இலங்கை அமைச்சர் ஜி.எல்.பீரிஸுடன் உரையாடிவிட்டு செய்தியாளர்களிடம் கருத்து வெளியிட்ட கிளிண்டன் அம்மையார் இந்த ஆணையத்துக்கு தான் ஆதரவு தெரிவிப்பதாகக் கூறினார்.
"இலங்கையில் அரசியல் ரீதியிலும் இன ரீதியிலும் நல்லிணக்கம் ஏற்படுவதை அமெரிக்கா வலுவாக ஆதரிக்கிறது. உள்நாட்டளவில் நெருக்கடி மிக்க காலகட்டங்களில் இருந்து வெளிவந்திருந்த மற்ற நாடுகளில் இப்படியான விசாரணை ஆணையங்கள், நடந்த தவறுகளுக்கு பதில் தருவதிலும், நடந்த சம்பவங்களுக்கு காரணமானவர்கள் அவற்றுக்கு பொறுப்பேற்கவைப்பது என்பதிலும் முன்னேற்றத்தை ஏற்படுத்தியிருந்தன. மற்ற இடங்களில் அமைக்கப்பட்டிருந்த இப்படியான ஆணையங்கள் பயன்படுத்தியிருந்த சிறந்த வழிகளை எல்லாம் இலங்கையில் தற்போது அமைக்கப்பட்டுள்ள ஆணையம் கைகொள்ள வேண்டும்." என்றார் அவர்.
'நடந்த சம்பவங்கள்' என்று குறிப்பிட்டு அந்த சம்பவங்களுக்கு தனிப்பட்ட ரீதியில் யார் பொறுப்பேற்க வேண்டும் என்பதை ஆராய்கின்ற அதிகாரம் இலங்கை நல்லிணக்க ஆணையத்துக்கு வழங்கப்பட்டுள்ளது. ஆனால் 'போர்க் குற்றங்கள்' என்பது இந்த ஆணையத்துக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரத்தில் எந்த ஒரு இடத்திலும் குறிப்பிடப்பட்டிருக்கவில்லை.
இலங்கை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்களும் இந்த வாரம் அல்ஜசீரா தொலைக்காட்சிக்கு அளித்திருந்த ஒரு செவ்வியில், "குற்றம் இழைத்தவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படலாம். ஆனால் பயங்கரவாதத்தை தோற்கடித்தமைக்காக எவர் ஒருவரும் தண்டிக்கப்பட மாட்டார்கள்" என்று குறிப்பிட்டிருந்தார்.
விமர்சனங்கள்
இலங்கை அரசாங்கத்தால் அமைக்கப்பட்டுள்ள ஆணையம் தொடர்ந்து சர்வதேச அளவிலும் உள்நாட்டு அளவிலும் விமர்சனங்களை எதிர்கொண்டு வருகிறது.
புதிய ஆணையத்துக்கு எதிராக எழுந்துள்ள சமீபத்திய விமர்சனம் என்பது, இலங்கை அரசாங்கத்தில் முந்தைய விசாரணைக் குழுக்களின் உறுப்பினராகவும் இலங்கை அரசாங்கத்தின் ஆலோகராகவும் இருந்த எம்.சி.எம். இக்பால் என்பவரிடமிருந்து வந்துள்ளது.
"இப்படியான விசாரணை ஆணையங்கள் நீதியை நிலைநாட்டுவதில் அடுத்ததுடுத்து ஆட்சியில் இருந்தவர்களும் தொடர்ந்தும் தவறிவந்துள்ளனர் . தவிர தற்போது நியமிக்கப்பட்டுள்ள ஆணையத்தின் உறுப்பினர்கள் பக்கச்சார்பின்றி செயல்படக்கூடியவர்கள் அல்ல." என்றும் இவர் தெரிவித்துள்ளார்.
 
»»  (மேலும்)

5/29/2010

பாகிஸ்தான் பள்ளிவாசல்களில் தாக்குதல்

சம்பவ இடங்களைக் காட்டும் வரைபடங்கள்
சம்பவ இடங்களைக் காட்டும் வரைபடங்கள்
பாகிஸ்தானின் லாகூர் நகரில் சிறுபான்மை மதப்பிரிவு ஒன்றின் இரு மசூதிகளை ஆயுதபாணிகள் ஏக காலத்தில் தாக்கியுள்ளனர். இதில் எழுபதுக்கும் அதிகமானோர் கொல்லப்பட்டதுடன், எண்பதுக்கும் அதிகமானோர் காயமடைந்துள்ளனர்.
தொழுகையில் கலந்துகொண்ட சிலர் பணயமாக பிடித்து வைக்கப்பட்டிருந்தனர், ஆனால், தாம் அந்த இடங்களை தமது கட்டுப்பாட்டில் மீண்டும் கொண்டுவந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
லாகூர் நகரில் சிறுபான்மையின முஸ்லிம் மதப் பிரிவான அஹமதி இஸ்லாமியர்களின் பள்ளிவாசல்களில் தாக்குதல்கள் நடந்துள்ளன.
மொடல் டவுண் என்னும் இடத்தில் உள்ள பள்ளிவாசலிலும், கர்ஹி சாகூ என்னும் இடத்தில் உள்ள பள்ளிவாசலிலுமே இந்த தாக்குதல்கள் வெள்ளிக்கிழமை தொழுகை வேளையில் நடந்துள்ளன.
தாக்குதல்காரர்கள் சுமார் 40 பேரை பணயமாக பிடித்து வைத்திருப்பதாகவும், தாக்குதலாளிகளில் சிலரும் காயமடைந்துள்ளதாகவும் செய்திகள் கூறுகின்றன.
இரண்டு மணிநேரம் நடந்த மோதல்களை அடுத்து மொடல் டவுண் பகுதியில் உள்ள மசூதியை தாம் தமது கட்டுப்பாட்டில் கொண்டுவந்துவிட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
முன்னதாக தமது நடவடிக்கைகள் குறித்து பேசிய பொலிஸ் அதிகாரி ஒருவர் தீவிரவாதிகளால் தாக்கப்பட்ட பள்ளிவாசலில் இருந்து ஆட்களை மீட்கும் பணியில் கமாண்டோ படையினர் ஈடுபடுத்தப்பட்டதாக கூறினார்.
அஹமதி பிரிவு இஸ்லாமியர்கள் லாகூரில் பல தடவைகள் சுனி இன குழுக்களால் பல தடவைகள் இலக்கு வைக்கப்பட்டுள்ளர்கள்.
அஹமதி மதப்பிரிவினர் தாம் இஸ்லாமியர்கள் என்று உரிமை கோருகின்ற போதிலும், அவர்களை முஸ்லிம் அல்லாதவர்கள் என்று பாகிஸ்தான் 1973ல் அறிவித்துள்ளதுடன், 1984ல் அவர்கள் தம்மை முஸ்லிமாக பிரகடனப்படுத்தவோ அல்லது அடையாளப்படுத்தவோ முடியாது என்றும் பிரகடனப்படுத்தப்பட்டுள்ளனர்.
தாக்குதலின் தீவிரம் காரணமாக பலியானவர்களின் எண்ணிக்கை அதிகரிக்கலாம் என்றும் அஞ்சப்படுகின்றது.
 
»»  (மேலும்)

இந்தியா: ரயில் விபத்தில் 78 பேர் பலி


இந்தியாவின் மேற்கு வங்க மாநிலத்தில் இரண்டு ரயில்கள் மோதிக் கொண்டதில் குறைந்தபட்சம் 78 பேர் உயிரிழந்திருப்பதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மாவோயிஸ்ட் கிளர்ச்சிக்காரர்கள் ரயில் பாதையை சேதப்படுத்தியதால்தான் இந்த விபத்து நடந்திருப்பதாக மாநில காவல்துறையினர் கூறுகிறார்கள்.
ரயில் விபத்து
கோரமான ரயில் விபத்து

கொல்கத்தாவில் இருந்து மும்பை சென்றுகொண்டிருந்த ஞானேஸ்வரி எக்ஸ்பிரஸ் ரயில் இன்று அதிகாலை சுமார் 1.30 மணியளவில் ஸர்திகா ரயில் நிலையம் அருகே சென்றுகொண்டிருந்தபோது விபத்து ஏற்பட்டது.
ரயில் பாதையில் தண்டவாளங்களை இணைக்கப் பயன்படுத்தப்படும் பிஷ்பிளேட் எனப்படும் இணைப்புத் துண்டுகள் அகற்றப்பட்டிருந்ததால், மிக வேகமாகச் சென்றுகொண்டிருந்த ரயில் அடுத்துள்ள ரயில் பாதையில் கவிழ்ந்தது. அடுத்த சில நிமிடங்களில் இரண்டாவது ரயில் பாதையில் வந்துகொண்டிருந்த சரக்கு ரயில் கவிழந்து கிடந்த எக்ஸ்பிரஸ் ரயில் பெட்டிகளின் மீது படுவேகமாக மோதியது.
அதில், எக்ஸ்பிரஸ் ரயிலின் குறைந்தபட்சம் நான்கு பெட்டிகள் மோசமாக சேதமடைந்திருப்பதாக செய்தியாளர்கள் கூறுகிறார்கள். 78 பேர் உயிரிழந்திருப்பதாகவும், சுமார் 140 பேர் காயமடைந்திருப்பதாகவும் அதிகாரிகள் கூறுகிறார்கள்.
அங்கு மீட்பு நடவடிக்கைகள் நடைபெற்று வருகின்றன. இன்னும் பலர் மிகமோசமாக சேதமடைந்த ரயில் பெட்டிகளுக்குள் சிக்கிக் கொண்டிருப்பதாகவும், உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை இன்னும் தெளிவாகத் தெரியவில்லை என்றும் செய்தியாளர்கள் கூறுகிறார்கள்.
மீட்பு மற்றும் நிவாரண நடவடிக்கைகளில் இந்திய விமானப்படை ஹெலிகாப்டர்களும் பயன்படுத்தப்பட்டுள்ளன.
இந்த விபத்துக்கு மாவோயிஸ்டுகளின் சதிவேலைதான் காரணம் என்று மேற்கு வங்க மாநில காவல்துறைத் தலைவர் புபிந்தர் சிங் தெரிவித்துள்ளார்.
ரயில்கள் மோதிக்கொண்ட இடத்தைக் காட்டும் வரைபடம்
»»  (மேலும்)

இன மத பேதமின்றி அனைவர் மீதும் கருணை கொள்வதற்கான சந்தர்ப்பங்களை இந்நாள் ஏற்படுத்துகின்றது-அம்பாறை வெசாக் பண்டிகை நிகழ்வில் முதலமைச்சர்

img_3722
மாகாண கல்வி கலாச்சார பண்பாட்டலுவல்கள் அமைச்சினால் அம்பாறை உகண பிரதேச சபையில் நடாத்தப்பட்ட வெசாக் பண்டிகை நிகழ்வில் கிழக்கு மாகாண முதலமைச்சர் கலந்து சிறப்பித்தார். இந்நிகழ்வில் கலந்து உரையாற்றிய கிழக்கு மாகண முதலமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் இன்று இலங்கையில் வாழ்கின்ற பௌத்த மக்கள் அனைவரும் அன்போடு அனைவரையும் இரட்சிக்கின்ற ஒரு நாளாக இதை நான் பார்க்கின்றேன். அது மட்டும் அல்லாமல் கௌதம புத்த பகவான் அவதரித்து ஞானம்பெற்று முத்தியடைந்த நாளான இந்நாள் அனைவருக்கும் ஒரு விசேட நாளாகும் இந்நாளில் இலங்கையில் வாழ்கின்ற அனைத்து இன மக்களும் இன மத பேதமின்றி சகோதரத்துவ உணர்வோடு அனைவர் மீதும் கருணை கொள்வதற்கான சந்தர்ப்பங்களை இந்நாள் ஏற்படுத்துகின்றது. எனவே இந்நாளில் அனைவரும் ஒற்றுமையாகவும் சகோதரத்துவத்துடனும் பரஸ்ப்பர புரிந்துணர்வோடும் வாழ வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டார். இந்நிகழ்வில் மாகாண கல்ல்வி அமைச்சர் திஸ்ஸாநாயக்க, மாகாண அமைச்சர் உதுமாலெஃப்பை, மாகாண சபை உறுப்பினர் பூ.பிரசாந்தன், தேவப்பெரும உகண பிரதேச சபை தவிசாளர் உட்பட பலரும் கலந்து கொண்டனர்.
»»  (மேலும்)

யாழ். பெரிய பள்ளி ஜும்ஆவில் நேற்று 5000 பேர் பங்கேற்பு

யாழ்ப்பாணம்-பெரிய ஜும்ஆப் பள்ளிவாயல் 20 வருடங்களின் பின்பு நேற்று வைபவரீ தியாக திறந்து வைக்கப்பட்டு முதலாவது ‘குத்பா’ பேருரையும் நிகழ்த்தப்பட்டது.
யாழ்ப்பாணம் முஸ்லிம் அபிவிருத்தி ஒன்றியத்தின் ஏற்பாட்டில் கடந்த 3 மாதகாலமாக புனரமைக்கப்பட்டு வந்த இப்பள்ளிவாயல் நேற்று இடம்பெற்ற குத்பா பேருரையை அஷ்ஷெய்க் அப்துல் ஹாலித் நிகழ்த்தினார். நாட்டின் நாலாபாகங்களிலிருந்து வருகைதந்த சுமார் ஐயாயிரம் முஸ்லிம்கள் இங்கு குத்பாப் பேருரையிலும் ஜும்ஆத் தொழுகையிலும் கலந்துகொண்டதுடன் ‘கந்தூரி’யிலும் பங்கு கொண்டனர்.
பெரும் எண்ணி க்கையிலான முஸ் லிம் பெண்களும் ஜும்ஆத் தொழுகையில் ஈடுபட்டதுடன் குத்பாப் பேருரையையும் செவிமடுத்தனர். பெண்களுக்கென பிரத்தியேகமாக இட ஒதுக்கீடு செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
 
»»  (மேலும்)

கல்குடா பொலிஸ் நிலைய வெசாக் பண்டிகை நிகழ்வில்- கிழக்கு மாகாண முதலமைச்சர்

வாழைச்சேனை கல்குடா பொலிஸ் நிலையத்தில் ஏற்பாடு செய்யப்பட்ட வெசாக் பண்டிகை நிகழ்வில் கலந்து கொண்ட கிழக்கு மாகாண முதலமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் அங்கு வந்திருந்த ஏழைகளுக்கு தானம் வழங்குவதை படங்களில் காணலாம்.
img_3362

»»  (மேலும்)

வடக்குக்கு விரைவில் மாகாணசபை தேர்தல்


நாட்டின் ஏனைய பிரதேச மக்கள் அனுபவிக்கும் சகல ஜனநாயக உரிமைகளையும் வடக்கு மக்களும் அனுபவிக்கும் வகையில் வடக்கில் மாகாண சபை மற்றும் உள்ளூராட்சி சபை தேர்தல்களை விரைவில் நடத்துவதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுக்குமென வடக்கு அபிவிருத்திச் செயலணியின் தலைவரும் பொருளாதார அபிவிருத்தி அமைச்சருமான பசில் ராஜபக்ஷ கிளிநொச்சியில் தெரிவித்தார்.
மன்னார் கிளிநொச்சி மாவட்டங்களுக்கு நேற்று முன்தினம் விஜயம் செய்த அமைச்சர் பசில் ராஜபக்ஷ மன்னாரிலும் கிளிநொச்சியிலும் பல்வேறு அபிவிருத்தித் திட்டங்களை உத்தியோகபூர்வமாக ஆரம்பித்துவைத்ததுடன் கிளிநொச்சி, சுன்னாகம், வவுனியா கிளிநொச்சிக்கான மின்சார இணைப்புத் திட்டத்தை ஆரம்பித்து வைத்து உரையாற்றுகையிலேயே இவ்வாறு தெரிவித்தார்.
நேற்று முன்தினம் கிளிநொச்சிக்கு விஜயம் செய்த அமைச்சர் பசில் ராஜ பக்ஷ, கிளிநொச்சி மின் இணைப்புத் திட்டத்தின் பூர்வாங்க நடவடிக்கைகளை ஆரம்பித்துவைத்ததுடன் கிளிநொச்சி அரசாங்க வைத்தியசாலையில் சத்திரசிகிச்சைப் பிரிவையும் உத்தியோகபூர்வமாக ஆரம்பித்து வைத்தார்.
பயங்கரவாத சூழல் நிலவிய இருபது வருட காலத்திற்குப் பின்னர் கிளிநொச்சி அரசாங்க வைத்தியசாலையில் நேற்று முதல் சத்திர சிகிச்சைப்பிரிவு செயற்பட ஆரம்பித்துள்ளதுடன் முதலாவது நோயாளியும் சத்திர சிகிச்சைப் பிரிவில் சத்திரசிகிச்சைக்கு உட்படுத்தப்பட்டுள்ளார். இதனையடுத்து கிளிநொச்சி வைத்திய சாலையில் இடம்பெற்ற மாவட்ட சுகாதார அத்தியட்சகர் கெப் வாகனம் வழங்கும் வைபவத் திலும் அமைச்சர் கலந்து கொண்டார்.
ஆசிய அபிவிருத்தி வங்கி மற்றும் ‘ஜய்க்கா’ நிறுவனங்கள் வடக்கின் சகல மாவட்டங்களிலு முள்ள சுகாதார அத்தியட்சகர்களுக்கு ‘கெப்’ வாகனங்களையும் ‘குரூஷர்’ வாகனங்களையும் வழங்கியது டன் பிரதேச சுகாதார அதிகாரிகளுக்கென 20 மோட்டார் சைக்கிள்களையும் பகிர்ந்தளித்தார்.
இந்நிகழ்வில் ஆசிய அபிவிருத்தி வங்கியின் தலைவர் ஜப்பானிய ‘ஜய்க்கா’ நிறுவனப் பிரதிநிதிகளுடன் அமைச்சர் சரத் அமுனுகமவும் கலந்து கொண்டார்.
தொடர்ந்து உரையாற்றிய அமைச்சர் பசில், வடக்கு மக்களின் சகல தேவைகளையும் பெற்றுக்கொடுப்பதில் அரசு மிகுந்த கவனம் செலுத்தியுள்ளது. அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, ரிசாட் பதியுதீன் ஆகியோரின் பங்களிப்போடு இதற்கான திட்டங்கள் முன்னெடுக்கப்படும்.
வடக்கில் மின்சாரம், குடிநீர், வீதி அபிவிருத்தி உட்பட சகல அடிப்படை வசதிகளும் உட்கட்டமைப்பு நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படவுள்ளன. அதற்காக சம்பந்தப்பட்ட நிறுவனங்கள் தயாராக வுள்ளன.
 
»»  (மேலும்)

பெரிய கோராவெளியில் கண்ணகி அம்மன் ஆலய திருக்குழித்தி நிகழ்வில் கிழக்கு மாகாண முதலமைச்சர்

கிழக்கிலங்கையின் பிரசித்தி பெற்ற கிரான் பெரிய கோராவெளியில் அமையப்பெற்றுள்ள கண்ணகி அம்மன் ஆலய திருக்குழித்தி நிகழ்வில் கிழக்கு மாகாண முதலமைச்சர் கலந்து ஆலய வழிபாடுகளில் ஈடுபட்டுள்ளதை படங்களில் காணலாம்.
img_3468
img_3470
img_3516
img_3500
»»  (மேலும்)

5/28/2010

திருகோணமலை பெண்கள் உயர்பாடசாலை திறப்பு விழா.

நேற்று திருகோணமலை மகளீர் உயர்தர பாடசாலை திறப்பு விழாவில் கிழக்கு மாகாண முதலமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் பிரதம அதிதியாக கலந்து சிறப்பித்தார், அமைச்சர் பறந்துல குணவர்த்தன தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் கிழக்கு மாகாண ஆளுனர் மற்றும் மாகாண சபை உறுப்பினர்கள் என பலரும் கலந்து கொண்டதுடன் மாணவிகளின் கலை நிகழ்வுகளும் இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது.
img_2984
»»  (மேலும்)

சுவிஸ் இரா.துரைரெட்ணம் ஓநாய், ஈழநாடு குமுறுகிறது.

புகலிடத்து புலிகளுக்குள் ஏற்பட்டுள்ள பிளவுகள் சபைக்கு வரத்தொடங்கியுள்ளன. வட்டுக்கோட்டைத் தீர்மானத்துக் கோஷ்டி, நாடுகடந்த தமிழீழ கோஷ்டி என்று அடிபாடுகள் முற்றுகின்றன. இதன் எதிரொலியாக  பரிஸ் ஈழநாட்டில் புலிப்பினாமி எழுத்தாளர் துரைரெட்ணத்திற்கு எதிராக வெளிவந்துள்ள கட்டுரை இது. 

நாடு கடந்த தமிழீழ அரசும், இரா. துரைரத்தினமும்! ஒற்றுமை குறித்து காகங்கள் பேசலாம், ஓநாய்கள் பேசலாமா?-ஈழநாடு

முள்ளிவாய்க்கால் வரை முழங்கி நீட்டினார்கள். முடிவுக்கு வந்ததும் முடங்கிப்போய் இருந்தார்கள். கூட்டமைப்புத் தேர்தல் வந்ததும் குதித்து எழுந்தார்கள். இப்போது அவர்களுக்கு இரை போடுவது நாடு கடந்த தமிழீழ அரசு என்ற யுத்த களம். இலங்கைத் தமிழ் ஊதிய ஊடகவியலாளர்களின் இன்றைய நிலவரம் இதுதான்.
சிங்கள தேசத்தின் இருதுருவக் கோட்பாட்டுக்குள் விலை போயுள்ள எத்தனையோ மனிதப் பிறவிகள் இப்போது எம் மத்தியில் தத்துவம் பேசிக்கொண்டு வருகின்றார்கள். பாவம், அவர்கள் கூறி விற்க முணலும் சிங்கள யுக்திகளை புலம்பெயர் தமிழர்கள் கொள்வதற்கு முன் வருகின்றார்கள் இல்லை. சிங்கள தேசம் அறிவித்தது போலவே, நாடு கடந்த தமிழீழ அரசை வேரோடு பிடுங்க நியமித்த இவர்களால், இதைத் தவிர என்னதான் செய்துவிட முடியும்?
நாடு கடந்த தமிழீழ அரசுக்கான தேர்தல்களில் தமிழ் மக்களால் தெரிவு செய்யப்பட்ட உறுப்பினர்கள் பற்றிய சந்தேகங்களை இந்தச் சதிகாரர்கள் எப்படித் துல்லியமாகத் தெரிந்து கொண்டார்களோ அறியேன். நாடு கடந்த தமிழீழ அரசுக்கான பிரான்ஸ் – பாரிஸ் நகரில் தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர் என்ற வகையில் எழுப்பப்படும் கேள்விகளுக்கான பதில்களை இரா. துரைரத்தினம் போன்ற குழப்பவாதிகளுக்கு வழங்குவது கடமை எனக்கு உண்டு.
முள்ளிவாய்க்காலுக்குப் பிந்திய காலங்கள் ஈழத் தமிழர்களின் வேதனைக் காலம் மட்டுமல்ல, சோதனைக் காலமும் கூடத்தான். விடுதலைப் புலிகள் கள முனையில் தோற்கடிக்கப்பட்டு, ஆயுத போராட்டம் முடிவுக்கு வந்த பின்னர், விடுதலைப் புலிகளின் தலைமையில் ஏற்பட்ட வெற்றிடத்தைக் கைப்பற்றும் தீவிர நடவடிக்கைகள் இலங்கைக்கு வெளியே தீவிரம் பெற்றது. யேசுநாதர் உயிர்த்தெழுந்தார் என்று கிறிஸ்தவர்கள் நம்புவது போல், சுபாஸ் சந்திரபோஸ் விமான விபத்தில் இறக்கவில்லை என்று இந்தியர்கள் நம்புவது போல், தேசியத் தலைவர் குறித்த சிங்களத் தகவல்களை நிராகரித்த ஈழத் தமிழர்கள் அவரது மீள் வரவுக்காகக் காத்திருக்கிறார்கள். அதுவரை, தேசியத் தலைவர் அவர்களால் புலம்பெயர் தேசத்து மக்களிடம் வழங்கப்பட்ட தமிழீழ மீட்புக்கான போராட்டத்தை ஒவ்வொரு தமிழரும் சுமக்க முன்வந்துள்ளனர். அதற்காகக் களம் இறங்கியுள்ளார்கள்.
நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் என்பது யாருடைய பரம்பரைச் சொத்தல்ல. அதைப் பிரேரிதத்தவர் யாராக இருந்தாலும், அந்தப் போர்க்களத்தை புலம்பெயர் தமிழர்கள் முற்றாக நம்புகின்றார்கள். அந்தப் போர்க் களத்தில் தாமும் போராளிகளாகப் பங்கேற்க வேண்டும் என்ற எதிர்பார்ப்போடு காத்திருக்கிறார்கள். அதனால்தான், எந்த வேறுபாடுகளுமின்றி ஈழத் தமிழர்களின் அத்தனை அமைப்புக்கள் சார்ந்தவர்களும் அதில் போட்டியிட்டார்கள். பலர் தெரிவு செய்யப்பட்டுள்ளார்கள். இது மக்கள் வழங்கிய ஆணை. இந்த மக்கள் ஆணையை விமர்சிக்கும் உரிமை யாருக்கும் கிடையாது. தமிழீழ மக்களில் மிகச் சிறுபான்மையினரின் வாக்குக்கள் மூலம் நாடாளுமன்ற உறுப்பினர்களாகத் தெரிவாகியுள்ள தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினரை ஏற்றுக்கொண்டு துதி பாடும் திரு. இரா. துரைரத்தினம் அவர்கள் நாடு கடந்த தமிழீழ அரசுக்கான தேர்தலில் போட்டியிட்டு, தெரிவான உறுப்பினர்கள் மீது சந்தேகங்களைத் தெரிவிப்பது அவர் சார்ந்த ஊடகத் துறைக்கு உகந்தது அல்ல.
நாடு கடந்த தமிழீழ அரசுக்கான தேர்தலில் மக்கள் பேரவைகளைச் சார்ந்த பலர் வென்றிருக்கிறார்கள். அவர்கள் அவ்வாறு தேர்வு செய்யப்பட்டுள்ளதால், நாடு கடந்த தமிழீழ அரசைக் கைப்பற்றி, அதன் செயற்பாடுகளை முடக்கி விடுவார்கள் என்ற தகவல்களை மக்களிடம் எடுத்துச் சொல்ல முற்படுபவர்களது நோக்கம் சந்தேகத்திற்கிடமானது. மக்கள் பேரவை பற்றியும். அதன் உருவாக்கம், செயற்பாடுகள், நோக்கங்கள் பற்றியும் அறியாத முட்டாள்களின் கூற்றாகவே இது கணக்கிடப்பட வேண்டும். இரா. துரைரத்தினம் போன்றவர்கள் வேண்டாத கேள்விகளையும், நியாயங்களையும் எழுப்பி நாடு கடந்த தமிழீழ அரசுக்காகத் தெரிவு செய்யப்பட்ட உறுப்பினர்களிடையே பிளவுகளையும், மோதல்களையும் உருவாக்க முயற்சிக்கின்றனர்.
நாடு கடந்த தமிழீழ அரசின் முதலாவது அமர்வே நடைபெறாத நிலையில், அது இப்படித்தான் நடக்கும், அது இப்படித்தான் முடியும் என்று எதிர்வு கூறுவது முடிவு செய்யப்பட்ட ஒரு நிகழ்ச்சி நிரலுக்குள் உருவாகிவரும் நாடு கடந்த தமிழீழ அரசை அழைத்துச் செல்லும் முயற்சியாகவே கருதப்படுகின்றது. நாடு கடந்த தமிழீழ அரசுக்கான இணைப்பாளர் திரு உருத்திரகுமாரன் அவர்களை ஓரங்கட்டும் முயற்சியில் சிலர் ஈடுபட்டுள்ளார்கள் என்ற கருத்துருவாக்கம் மூலம் திரு. உருத்திரகுமாரன் அவர்களுக்கும், நாடு கடந்த தமிழீழ அரசுக்கான பிரதிநிதிகளுக்கும் இடையே சந்தேகங்களையும், முரண்பாடுகளையும் உருவாக்குவதே திரு. இரா. துரைரெத்தினம் போன்றவர்களது எண்ணமாக உள்ளது.
நாங்கள் அனைவருமே விடுதலைப் புலிகளது தியாகங்கள் ஊடாக வளர்ந்தவர்கள். அவர்களது வேள்வித் தீயின்வெப்பத்தினால் மாசு அகற்றப்பட்டவர்கள். தேசியத் தலைவர் அவர்களது பாதையில் பயணிப்பவர்கள். தமிழீழ விடுதலைக்காக எதையுமே இழக்கத் தயாரானவர்கள். அந்த இலட்சியப் பாதையில் எங்களது அணிவகுப்பு இரா. துரைரெத்தினம் போன்றவர்களுக்கு கசப்பாகவே இருக்கும். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஊடாக தமிழ்த் தேசியத்தை மாகாணங்களுக்குள் முடக்கும் சிங்களச் சதிக்கு நாம் தடைக் கல்லாக மாறிவிடுவோம் என்ற அச்சத்தில் திரு. இரா. துரைரெத்தினம் மட்டுமல்ல மேலும் சில ஊதிய ஊடகவியலாளர்கள் எழுதவேதான் செய்வார்கள். அதனை, தேசிய ஊடகவியலாளர்கள் முறியடிக்கவே செய்வார்கள்.
நாடு கடந்த தமிழீழ அரசின் இணைப்பாளர் உருத்திரகுமாரன் அவர்களது தமிழ்த் தேசிய விடுதலைக்கான உறுதியிலும், நேர்மையிலும், தியாகத்திலும் நம்பிக்கை வைத்தே அனைத்து வேட்பாளர்களும் களத்தில் இறங்கினார்கள். மண்ணிலும், கடலிலும் வீழ்ந்த மாவீரர்களின் கனவான தாயக மீட்பு இலட்சியப் பாதையிலிருந்து விலகாத வரைக்கும் திரு. உருத்திரகுமாரனின் தலைமை மீது யாரும் எதிர்க் கருத்து வைக்கப் பேவதில்லை. அவரை ஓரங்கட்டப் போவதுமில்லை.
திரு. உருத்திரகுமாரன் அவர்கள் தேசியத் தலைவர் அவர்களுடன் நெருங்கிப் பழகியவர். தாயக விடுதலை குறித்த ஆழமான பற்று உள்ளவர். தமிழ் மக்களின் அரசியல் அபிலாசைகளை நன்றாக உணர்ந்தவர். அவர் மீது அனைத்துத் தமிழர்களும் அளவு கடந்த நம்பிக்கை வைத்துள்ளார்கள். நாமும் அந்த அடிப்படையிலேயே நாடு கடந்த தமிழீழ அரசில் இணைந்து பணியாற்ற முன் வந்துள்ளோம். இந்தப் போர்க் களத்தில் எங்கள் ஒற்றுமையைச் சிதைக்க முடியும் என்று யாரும் கனவு கூடக் கண்டு விடாதீர்கள்.
ஒற்றுமை குறித்து காகங்கள் பேசலாம், ஓநாய்கள் பேசலாமா?
»»  (மேலும்)

தமிழீழம் தொடர்பாக பிரசாரம் செய்த இருவர் கைது* புகலிடத் தமிழர்களின் ஆசை இதுதான்.

நாடு கடந்த தமிழீழம் தொடர்பாக கிழக்கு மாகாணத்தில் பிரசாரம் செய்ததாகக் குற்றம் சாட்டப்பட்டு இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

பாண்டிருப்பு மற்றும் எருவில் பகுதிகளைச் சேர்ந்த இவர்கள் கல்முனை மற்றும் களுவாஞ்சிக்குடிப் பகுதிகளைச் சேர்ந்தவர்கள் எனவும், இவர்கள் இருவரும் நாடு கடந்த அரசாங்கத்திற்கு ஆதரவளிக்கும்படி மக்களிடம் பிரசாரம் செய்து வந்ததாகத் தெரிவிக்கப்படுகிறது.

இந்நிலையில் பொலிஸாருக்கு கிடைத்த தகவலையடுத்து மேற்படி இருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்டவர்களிடம் இருந்து கைப்பற்றப்பட்ட கையடக்கத் தொலைபேசிகளில் விடுதலைப் புலிகளின் பிரசார வீடியோக்கள் காணப்பட்டதாகவும் இவர்கள் அடிக்கடி வெளிநாடுகளுடன் தொலைபேசி உரையாடல்களை மேற்கொண்டிருப்பதாகவும் பொலிசார் தெரிவித்துள்ளனர்
»»  (மேலும்)

பௌத்த மதத்தில் முக்கியத்துவம் பெறும் வெசாக்

பௌத்த மதத்தில் முக்கியத்துவம் பெறும் வெசாக்

வெசாக் பண்டிகையை இலங்கை உட்பட உலகின் பல்வேறு நாடுகளிலும் உள்ள மக்கள் கொண்டாடி மகிழ்கின்றனர். ஏனைய பெளர்ணமி தினங்களுடன் ஒப்பிடுகையில் வெசாக் பெளர்ணமி தினம் பல்வேறு வகைகளிலும் மிக முக்கியத்துவம் பெறுகிறது. புத்த பிரானின் பிறப்பு, பெளத்தத்துவம் பெறுதல், பரிநிர்வாணமடைந்தது, போன்ற முக்கிய நிகழ்வுகள் இது போன்ற ஒரு வெசாக் பெளர்ணமி தினத்திலே இடம்பெற்றன.
இது மட்டுமன்றி இளவரசன் விஜயன் தனது படைபட்டாளத்துடன் இலங்கை வந்ததினூடாக சிங்கள இனத்தின் ஆரம்பமும் இதே போன்ற தினத்திலே வரலாறுகளில் பதியப்பட்டுள்ளது.
பெளத்தர்களின் மிகவும் புனிதமான தினமாக வெசாக் பெளர்ணமி தினம் கருதப்படுகிறது. புத்தபிரான் பரிநிர்வாணமடைந்து 2550 வருடங்கள் கடந்துள்ள நிலையில் இலங்கை மட்டுமன்றி கம்போஜியா (கம்போடியா), லாவோஸ், வியட்நாம், புருணை, நேபாளம், திபெட், சீனா, இந்துனேசியா, இந்தியா போன்ற நாடுகளிலும் வெசாக் மிக விமர்சையாக கொண்டாடப் படுகிறது.
கபிலவஸ்து மன்னன் சுத்தோனனின் அருமைப்புதல்வனாக சித்தார்த குமரன் வைகாசிப் பெளர்ணமி தினமொன்றில் அவதரித்தார். மாடமாளிகையில் ஆடம்பரமாக வாழ்ந்த அவர் உலக வாழ்க்கையை கைவிட்டு புத்தரானதும், பின்னர் போதிமரத்தடியில் நிர்வாண மடைந்ததும் வைகாசிப் பெளர்ணமி முக்கியத்துவம் பெறுகிறது.
ஒரு வார காலம் அரச மரத்தடியிலே எதுவித மனித சஞ்சாரமும் இன்றி புத்தர் காலங்கடத்தினார். 62 பேருடன் தொடங்கிய அவரின் போதனைகள் 236 வருடங்களின் பின்னர் அசோக மன்னனின் ஆட்சியிலே உலகம் முழுவதும் பரவியது. புத்தபிரான் மூன்று தடவைகள் இலங்கைக்கு வருகை தந்துள்ளதாக மகாவம்சம் கூறுகிறது. தமது தாய்நாட்டுக்கு வெளியில் இலங்கைக்கு மட்டுமே புத்தர் சென்றுள்ளதாக வரலாறு கூறுகிறது.
பகவான் புத்தர் வட இந்தியாவிலுள்ள கபில வஸ்து எனும் நகரில் பிறந்ததும், மனிதர்கள் ஏன் அல்லற்படுகிறார்கள், அவர்களின் துன்பங்கள் எங்கிருந்து வருகின்றன என்ற கேள்விகளுக்கு தனது ஞானத்தின் மூலமாக விடை கண்டுபிடித்ததும், உலகுக்கு சிறந்த வாழ்க்கை நெறியொன்றை காட்டிக் கொடுத்ததும் பெளர்ணமி தினத்தின் மகிமையை உணர்த் துகிறது.
இதன் காரணமாக வெசாக் தினத்தை உலகெங்கிலுமுள்ள மக்கள் முக்கிய விழாவாக கொண்டாடுகின்றனர்.
மனிதனை வெறும் ஆசாபாசங்கள் நிறைந்த உயிராக மட்டும் காணாது, அவனுள் மறைந்து கிடக்கும் சக்தியை வெளிக்கொண்டு வருவதற்கும், அதனூடாக நிரந்தரமான நிம்மதியை தரும் நிர்வாணத்தை அடைவதற்கும் புத்தர் வழிகாட்டிச் சென்றார்.
மனிதனின் பிறப்புக்குக் காரணம் பற்று என்றே கருதிய அவர், பற்றினால் மனிதனின் வாழ்க்கை நிம்மதியற்று துயரத்தில் அவனை புதைப்பதாக அவர் போதித்தார். அனைத்தும் நிரந்தரமானவை என்ற தவறான கருத்தே மனிதனின் துக்கத்திற்கு மூல காரணம் என்று கூறிய அவர், மனிதன் வாழ வேண்டிய வழிமுறைகளையும் காட்டிச் சென்றார்.
புத்த பகவான் மனித நிலையில் இருந்து கொண்டே தர்மத்தை மக்களுக்குப் போதித்தார். அவர் தன்னை தெய்வ அவதாரமாகவோ இறைவனின் அருள்பெற்ற ஞானியாகவோ தம்மை காட்டிக்கொள்ளவில்லை. மனிதனிடமுள்ள விவேகமும் திடசங்கற்பமும் முயற்சியும் அவனை புத்த நிலைக்கு உயர்த்தும் என்பதே அவரின் சித்தாந்தமாக இருந்தது. இதனால் அவர் தனது போதனைகளை மக்கள் வெறுமனே ஏற்றுக்கொள்வதையும் விரும்ப வில்லை.
அவரின் போதனைகள் மிகவும் உயர்ந்ததாக இருந்தன. “மற்றவர்கள் சொல்வதைக் கேட்டோ மரபுவழியாக வந்தது என்பதாலோ, மக்கள் சொல்கிறார்கள் என்பதாலோ எதையும் ஏற்றுக்கொள்ளாதீர்கள்.
தர்க்கத்திற்காகவோ, அனுமானத் திற்காகவோ, சமய நூல்கள் சொல்வதாலோ எதனையும் ஏற்றுக்கொள்ள வேண்டாம். உயர்ந்த கருத்தாகக் காணப்படு கின்றதென்பதற்காகவும், அதனை ஏற்றுக்கொள்ள தயாராகாதீர்கள். ஒரு விஷயம் தீமை தருவதாக இருப்பதாக நீங்கள் உணர்ந்தால் அதனை கைவிடுங்கள். சில விசயங்கள் நன்மை பயப்பனவாக நீங்கள் உணர்ந்தால் அவற்றை ஏற்றுக்கொள்ளுங்கள் என புத்தர் போதித்துள்ளார்.
மனிதனுக்கு சமாதானத்தையும் அமைதியையும் கொடுக்கக் கூடியவற்றையே அவர் போதித்தார். இதனூடாக மனிதனை நிர்வா ணத்துக்கிட்டுச் செல்வதே அவரின் நோக்கமாக இருந்தது.
அவரின் போதனைகள் ஒரு மாதத்திற்கு மட்டும் வழிகாட்டியாக அமைய வில்லை.
 
»»  (மேலும்)

20 ஆண்டுகளின் பின்னர் இன்று யாழ். பெரிய பள்ளியில் தொழுகை

* 297 ஆண்டுகள் பழமையானது
* 3 ஆயிரம் பேர் தொழுகையில் ஈடுபட வசதி
* தமிழ் முஸ்லிம் பிரமுகர்களால் பள்ளி நிர்மாணம்யாழ்ப்பாணம் பெரிய பள்ளிவாசல் 20 வருடங்களுக்குப் பின்னர் இன்று வெள்ளிக்கிழமை மீண்டும் உத்தியோக பூர்கமாகத் திறந்து வைக்கப்படவுள் ளதுடன் முதலாவது ஜும்ஆப் பிரசங்கமும் இடம்பெறவுள்ளது.
ஒற்றுமையையும், சமாதானத்தையும் வலியுறுத்தி முதலாவது ஜும்ஆப் பிரசங்கத்தை கொழும்பு பெரிய மர்க்கஸ், ரஷாதிய்யா அரபுக் கல்லூரியின் சிரேஷ்ட விரிவுரையாளரும், இப்னு உமர் ஹதீஸ் கற்கை நிலையத்தின் பணிப்பாளருமான மெளலவி எம். ஜே. அப்துல் காலிக் தேவ்பந்தி நிகழ்த்தவுள்ளார்.


காட்டுப்பள்ளி என அழைக்கப்படும் இந்தப் பள்ளிவாசல் 1713ல் நிர்மாணிக்கப்பட்டுள்ளது. பல்லவர் கால சிற்பத்தை ஒத்ததாக அமைக்கப்பட்டுள்ள இந்தப் பள்ளி 297 ஆண்டுகள் பழைமை வாய்ந்ததும் மிகப்பெரியதுமாகும்.
இந்தப் பள்ளிவாசல் தற்பொழுது முழுமையாக புனர்நிர்மாணம் செய்யப்பட்டுள்ளதுடன் சுமார் மூவாயிரத்திற்கும் அதிகமானவர்கள் தொழக்கூடிய வசதியைக் கொண்டுள்ளது.
யாழ்ப்பாணத்தைப் பிறப்பிடமாகக் கொண்டு தற்பொழுது நாட்டின் பல பாகங்களிலும் இஸ் லாமியப் பணியில் ஈடு பட்டுள்ள 46 உலமாக்களும் இன்றைய நிகழ்வில் கலந்துகொள்ளவுள்ளனர்.
இன்று பெண்களு க்கான விசேட பயான் ஒழுங்கு செய்யப்பட்டுள் ளது. அஸர் தொழு கையைத் தொடர்ந்து உலமாக்களுடனான ஆலோசனைக் கூட்டமும் மஃரிப் தொழுகையைத் தொடர்ந்து இஸ்மாயில் மெளலவியால் விஷேட பிரார்த்தனையும் நடை பெறவுள்ளதாக ஏற்பா ட்டாளர்களில் ஒருவரான மெளலவி அப்துல்லாஹ் பாயிஸ் தெரிவித்தார்.
முஸ்லிம் கல்லூரி வீதியில் அமைய ப்பட்டு ள்ள இந்தப் பள்ளிவாச லுக்குட்பட்ட பகுதியில் முஸ்லிம்கள் மீண்டும் மீளக்குடியமர்ந்ததைய டுத்தே பள்ளிவாசல் புனரமைக்கப்பட்டு அழகிய தோற்றத்து டன் காணப்படுவதாக அவர் மேலும் தெரிவித்தார். ஒல்லாந்தர் காலத்தில் பெரியளவில் இந்தப் பள்ளிவாசல் கட்டப்பட்டுள்ளது. அப்போது அந்தப் பிரதேசத்தில் செல்வந்தராக இருந்த முகம்மது தம்பி மரைக்காயரும், வண்ணார் பண்ணை வைத்தியலிங்க செட்டியார் என்பவரும் இணைந்தே இப்பள்ளியைக் கட்டியதாக வரலாற்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

»»  (மேலும்)

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ நாற்பதாண்டு அரசியல் நினைவுத் தடங்கள்

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அரசியல் வாழ்வில் பிரவேசித்து நேற்று (27ம் திகதியுடன்) நாற்பது வருடங்கள் பூர்த்தியாகின்றன.
1970ம் ஆண்டு மே மாதம் 27ம் திகதி பாராளுமன்ற உறுப்பினரானதுடன் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் அரசியல் வாழ்வு ஆரம்பமானது. தனது 24வது வயதில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி, லங்கா சமசமாஜக் கட்சி, இலங்கைக் கம்யூனிஸ்ட் கட்சி ஆகியவற்றை உள்ளடக்கிய ஐக்கிய முன்னணி வேட்பாளராக பெலியத்த தேர்தல் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார்.
அதனைத் தொடர்ந்து அரசியல் வாழ்வில் கட்டம் கட்டமாக வளர்ச்சிப் படிகளில் காலடி பதித்தார்.
ஸ்ரீல.சு. கட்சி தலைமையிலான பொதுஜன ஐக்கிய முன்னணி 1994ம் ஆண்டில் ஆட்சி பீடமேறிய போது அந்த ஆட்சியில் தொழிலமைச்சராகவும் அதன் பின்னர் கடற்றொழில் நீரியல் வளத் துறை அமைச்சராகவும் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ பதவி வகித்தார். இக்காலப் பகுதியில் தொழிலாளர்களதும் மீனவ சமூகத்தினதும் மேம்பாட்டுக்காக அளப்பரிய பல வேலைத் திட்டங்களை அவர் மேற்கொண்டார்.
இதனைத் தொடர்ந்து 2002-2004ம் ஆண்டு காலப் பகுதியில் அவர் எதிர்க்கட்சித் தலைவராகப் பதவி வகித்தார். இந்த சந்தர்ப்பத்தில் நாட்டு மக்களின் விமோசனத்திற்காகத் தொடராகக் குரல் கொடுத்தார்.
அதனைத் தொடர்ந்து 2004ம் ஆண்டு நடைபெற்ற பொதுத் தேர்தலில் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியில் போட்டியிட்டு வெற்றி பெற்றுப் பிரதமராக நியமிக்கப்பட்டார். இக்காலப்பகுதியில் கமநெகும, மகநெகும திட்டங்களை அவர் நாட்டுக்கு அறிமுகப்படுத்தினார். வீதிகளை கொங்கிaட் போட்டு செப்பனிடும் முறை நாட்டுக்கு அறிமுகப்படுத்தப்பட்டதும் இந்தக் காலகட்டத்தில்தான்.
அதன் பின்னர் 2005ம் ஆண்டு நவம்பர் மாதம் நடைபெற்ற ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிட்டு இலங்கையின் ஐந்தாவது நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியாகப் பதவியேற்றார்.
ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ நாட்டுக்கும், நாட்டு மக்களுக்கும் அளித்த சிறந்த தலைமைத்துவத்தின் பயனாக இரண்டாவது தடவையாகவும் ஜனாதிபதியாக மக்களால் தெரிவு செய்யப்பட்டிருக்கின்றார்.
ஐ.நா. சபையில் தமிழில் உரையாற்றியமை, சார்க் அமைப்பின் தலைமைப் பொறுப்பை ஏற்றமை, முப்பது வருட பயங்கர வாதத்தை முடிவுக்குக் கொண்டு வந்தமை, ஜீ.15 அமைப்பின் தலைமை என்பன ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் பதவிக் காலத்தில் குறிப்பிடக் கூடிய சிறப்பம்சமாக உள்ளன.
»»  (மேலும்)

5/26/2010

ஐ. தே.கட்சியிலிருந்து ரணில் விலகவேண்டும் : அப்துல் காதர் _
  அதிபர் மற்றும் நாடாளுமன்றத் தேர்தலில் ஐக்கியத் தேசியக் கட்சியின் தோல்விக்குத் தார்மீகப் பொறுப்பேற்று, தலைவர் பொறுப்பிலிருந்து ரணில் விக்ரமசிங்க பதவி விலகவேண்டும் என்று அக்கட்சியின் கண்டி நாடாளுமன்ற உறுப்பினர் ஏ.ஆர்.எம். அப்துல் காதர் கேட்டுக் கொண்டிருக்கிறார்.

வழக்கமான மருத்துவ பரிசோதனைக்காகக் கொழும்பிலிருந்து சென்னைக்கு வந்த இவர், சென்னையிலுள்ள அபுபேலஸ் ஹோட்டலில் ஊடகவியலாளர்களைச் சந்தித்து உரையாற்றினார்.

அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில்,

"நடந்து முடிந்த அதிபர் மற்றும் நாடாளுமன்றத் தேர்தலில் ஐக்கிய தேசிய கட்சிக்குக் கிடைத்த தோல்விக்கு அதன் தலைவர் ரணில் விக்ரமசிங்கவின் தவறான அணுகுமுறையே காரணம். இதற்கான தார்மீக பொறுப்பையேற்று தலைவர் பதவியிலிருந்து அவர் விலகவேண்டும்.

அதிபர் மஹிந்த ராஜபக்ஷ மிக சிறந்த நிர்வாகி. அத்துடன் எம்முடைய இருபதாண்டு அரசியல் அனுபவத்தில் ராஜபக்ஷவைப் போல் மிகச் சிறந்த பண்பாளரை நான் சந்தித்ததில்லை. அவருடைய கவனத்திற்கு எடுத்துச் செல்லப்படும் அனைத்து விடயங்களுக்கும் மிக துல்லியமான தீர்வினை அவர் எடுத்து வருகிறார்.

அவர் எப்போதும் இஸ்லாமியர்களுக்குரிய சலுகைகளை வழங்குவதில் விசேட கவனம் செலுத்தி வருகிறார். இதற்குக் கடந்த அமைச்சரவையில் பதினைந்து இஸ்லாமியர்களுக்குத் தமது அமைச்சரவையில் இடமளித்திருந்தமையே சான்றாகும்.

அவருடைய நிர்வாகத்தில் இலங்கை, புது பொலிவுடன் வலிமையாகவும், வளமாகவும் மாறி வருகிறது. யாழில் மக்கள் எவ்வித அச்சுறுத்தலுமின்றி வர்த்தகத்துறையில் ஈடுபட்டு வருகிறார்கள்.

தமிழகத்தில் நடைபெறும் உலக செம்மொழி மாநாட்டுக்கு அழைப்பு விடுக்கப்பட்டால், நிச்சயமாக நான் பங்குபற்றுவேன். இந்தியாவுக்கும் இலங்கைக்கும் இடையே தடைப்பட்டிருந்த கப்பல் போக்குவரத்து மீண்டும் தொடங்கப்பட வேண்டும் என்ற எம்முடைய விருப்பத்தினை நாடாளுமன்றத்தில் எடுத்துரைப்பேன்" என்றார்.

முன்னதாக அவர் தமிழக அரசியல் கட்சித் தலைவர் அப்துல் சமதைச் சந்தித்து உரையாடியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
»»  (மேலும்)

பிலிப்பைன்ஸில் கெரில்லாக்கள் தாக்குதல்; ஐந்து படையினர் பலி

பிலிப்பைன்ஸில் கம்யூனிஸ்ட் போரா ளிகள் நடத்திய தாக்குதலில் ஐந்து இரா ணுவத்தினர் கொல்லப்பட்டனர். வீதியோ ரத்தில் நின்று கொண்டிருந்த படையினரை நோக்கி கெரில்லாக்கள் தாக்குதலை நடத்தினர்.
பிலிப்பைன்ஸின் மீண்டானோ மாகா ணத்தில் இத் தாக்குதல் செவ்வாய்க்கிழமை நடந்தது.
பின்னர் மேலதிக படையினர் வரவழைக் கப்பட்டு தேடுதல் நடத்தப்பட்டபோது கைவிடப்பட்ட லொறிக்குப் பின்னால் இருவரின் சடலங்கள் காணப்பட்டன. இவை கம்யூனிஸிட் போராளிகளின் சடலங்களாக இருக்கலாமெனச் சந்தேகிக் கப்படுகிறது. பிலிப்பைன்ஸ் ஜனாதிபதி அரோயா இது பற்றிக் கூறுகையில் ஜூன் 20 ம் திகதி தனது பதவிக் காலம் முடிவடைய முன்னர் கம்யூனிஸ்ட் போராளிகளைத் தோற்கடிக்கப்போவதாகத் தெரிவித்தார்.
நாற்பது வருடங்களாக கம்யூனிஸ்ட் போராளிகள் பிலிப்பைன்ஸின் மீண்டானோ மாகாணத்தில் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
»»  (மேலும்)

சங்குப்பிட்டி - யாழ் குருநகர்: ஜூன் முதலாம் திகதி முதல் படகுச் சேவை ஆரம்பம்


சங்குப்பிட்டிக்கும், யாழ். குருநகருக்கும் இடையிலான படகுச் சேவை எதிர்வரும் ஜூன் முதலாம் திகதி ஆரம்பித்து வைக்கப்படவுள்ளதாக வட மாகாண ஆளுநர் மேஜர் ஜெனரல் ஜி. ஏ. சந்திரசிறி தெரிவித்தார்.
வட பகுதிக்கு அண்மையில் விஜயம் செய்த பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ பூநகரி - சங்குப்பிட்டி பிரதேசத்திற்கு சென்று பார்வையிட்ட பின்னர் இந்தப் படகுச் சேவையை வெகு விரைவில் ஆரம்பிப்பதற்கான பொறுப்பை எடுத்துக்கொண்டதாக தெரிவித்த ஆளுநர் இதற்காக பாதுகாப்பு அமைச்சின் அனுமதியையும் பெற்றுத் தந்துள்ளதாகவும் குறிப்பிட்டார். முதற்கட்டமாக இரண்டு படகுகள் சேவையில் ஈடுபடுத்தப்படவுள்ளன.
சுமார் ஆறு கிலோ மீற்றர் தூரத்திற்கு இந்த படகுச் சேவை நடத்தப்படவுள்ளது. இதன் மூலம் 2 1/2 மணி நேரப் பயணத்தை சுமார் 45 நிமிடங்களுக்குள் மேற்கொள்ள முடியும். கட்டணமாக பயணமொன்றுக்கு 40 ரூபா அறவிடப்படவுள்ளது
»»  (மேலும்)

யுனிசெஃப் பிரதிநிதிகளுடன் முதல்வர் சினேகபூர்வ சந்திப்பு.

img_2961
கிழக்கு மாகாண முதலமைச்சரும் தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சியின் தலைவருமான சிவநேசதுரை சந்திரகாந்தனுக்கும் யுனிசெஃப் பிரதிநிதிகளுக்கும் இடையில் சிநேகபூர்வ சந்திப்பு ஒன்று இன்று (24.05.2010) திருகோணமலை முதலமைச்சர் செயலகத்தில் இடம்பெற்றது. இக்கலந்துரையாடலில் விசேடமாக சிறுவர் கல்வி தொடர்பாக பேசப்பட்டது. அதாவது கிழக்கு மாகாணத்தில் ஆரம்பப்பிரிவு மாணவர்கள் மத்தியில் சமூக நல்லிணக்கத்தை ஏற்படுத்தும் நோக்கில்  பாலர் பாடசாலைகளை அமைப்பது தொடர்பான சட்டமூலம் கிழக்கு மாகாண முதலமைச்சரால் கொண்டுவரப்பட்டு அது நடைமுறைப்படுத்தப்பவும் இருப்பது குறிப்பிடத்தக்கது. இதனடிப்படையில் சிறுவர்களின் நலனில் அதிக அக்கறை செலுத்தும் யுனிசெஃப் அமைப்பானது பாலர் பாடசாலை தொடர்பிலும் அதிக கவனம் செலுத்த வேண்டும் எனவும் முதலமைச்சர் கேட்டுக்கொண்டார்.
இது தொடர்பில் கருத்து தெரிவித்த இலங்கை நாட்டிற்கான யுனிசெப் அமைப்பின் பிரதிநிதி பிலிப்பி டோமெலே தாம் நிச்சயமாக சிறுவர் கல்வி தொடர்பில் அதிக அக்கறை கொண்டு செயற்பட்டு வருவதாகவும், முதலமைச்சரின் இத்திட்டத்திற்கு தாம் தொடர்ந்து உதவி அளிப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.

»»  (மேலும்)

5/24/2010

இராணுவப் பலத்தை விடுத்து ஈரான் மீது பொருளாதாரத் தடை விதிக்க அமெரி. முஸ்தீபு


ஈரான் மீது பொருளாதாரத் தடைகளை விதிக்கத் தீர்மானித்துள்ள அமெரிக்க ஜனாதிபதி பராக் ஒபாமா தலைமையிலான நிர்வாகம் படைப்பலம் கொண்டு ஈரானை வழிக்குக் கொண்டு வர வாஷிங்டன் விரும்பவில்லையென அவதானிகள் தெரிவித்தனர்.
நீண்டகாலமாக இழுபறியிலுள்ள ஈரான் மீதான நடை தற்போது ஐந்து நாடுகளிலும் (ரஷ்யா, சீனா, பிரிட்டன், பிரான்ஸ், அமெரிக்கா) ஒற்றுமைப்பட்டுள்ளதால் சாத்தியமாகியுள்ள தென்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஈரான் மீது தடை கொண்டுவர ஐ. நா. மேற்கொண்ட முயற்சிகள் சீனா, ரஷ்யாவின் நழுவல் போக்குகளால் விரிசலடைந்தன. ஈரானுக்கெதிரான ஐ. நா. வின் தீர்மானம் பிளவுபடவும் இந் நிலைமை வழியேற்படுத்தியது.
ஆனால் ஐ. நா. பாதுகாப்புச் சபையின் நிரந்தர உறுப்பு நாடுகள் ஐந்தும் தற்போது இவ்விடயத்தில் இணக்கம் கண்டுள்ளதால் ஈரானின் பிடிவாதப் போக்கிலிருந்து அதன் தலைவர்களை மாற்றியமைக்க இப் புதிய தடைகள் உதவுமென எதிர்பார்க்கப்படுகிறது.
யுரேனியம் செறிவூட்டல் தொடர்பாக ஐ. நா. உடன் நீண்ட காலமாக ஈரான் முரண்பட்டு வருகின்றது. செறிவூட்டப்பட்ட யுரேனியத்தை சோதனையிட ரஷ்யா பிரான்ஸ¤க்கு அனுப்ப வேண்டுமென்ற ஐ. நா. வின் வேண்டுகோளை நிராகரித்த ஈரான் துருக்கியல் வைத்து இதைச் சோதனையிட முடியுமெனத் தெரிவித்துள்ளது.
பிரேஸில் ஜனாதிபதி லூஸா டிசில்வா அண்மையில் ஈரான் சென்று இவ்விடயத்தில் வழிக்கு வருமாறு கேட்டுக் கொண்டதற்கிணங்கவே துருக்கிக்கு யுரேனியத்தை சோதனைக்காக அனுப்ப ஈரான் இணங்கியது. இதை ஏற்றுக் கொள்ள மறுத்த மேற்கு நாடுகள் இம்முடிவை எழுந்துள்ளன.
இது தொடர்பாக கருத்து வெளியிட்ட அமெரிக்கப் பாதுகாப்பு அமைச்சர் பொபேர்ட் கோமஸ் விதிக்கப்படவுள்ள பொருளாதாரத் தடைகளால் ஈரான் மக்கள் கடுமையாகப் பாதிக்கப்படுவர்.
இப்பொருளாதாரத் தடை பொருத்த மில்லையென்பதால் தான் நாங்கள் இவ்வளவு காலம் பொறுமையாக யோசனை செய்து கொண்டிருந்தோம். ஐ. நா. பாதுகாப்புச் சபை நாடுகளை ஒன்றிணைக்கும் முயற்சிகளை வழிகெடுக்க ஈரான் கடுமையாக முயற்சி செய்தது. ஆனால் ஐ. நா. பாதுகாப்புச் சபையின் நிரந்தர, சுழற்சி முறை நாடுகள் 15 ந்தினதும் ஆதரவைப் பெற்றுள் ளோம் என ரொபேர்ட் கேட்ஸ் சொன் னார்.
 
»»  (மேலும்)

அபுதாபி கடலில் மூழ்கி வாழைச்சேனை இளைஞன் மரணம்


வாழைச்சேனையைச் சேர்ந்த இளைஞன் துபாய் நாட்டில் அபுதாபியில் மரணமடைந் துள்ளார். கோழிக்கடை வீதி வாழைச் சேனையைச் சேர்ந்த கலந்தர் லெப்பை நியாஸ் (28) என்ற இளைஞனே கடந்த வெள்ளியன்று மரணமடைந்துள்ளார்.
நண்பர்களுடன் அபுதாபிக் கடலில் குளிக்கச் சென்றபோது கடல் அலையினால் அடித்துச் செல்லப்பட்டு உயிர் இழந்துள்ள தாக உறவினர்கள் தெரிவித்தனர்.
இவர் கடந்த ஆறு வருடங்களாக அபுதாபியில் உள்ள தனியார் வங்கி ஒன்றில் சிற்றூழிய ராக கடமை புரிந்து வந்தார். ஜனாஸாவை சொந்த இடத்திற்கு கொண்டு வருவதற்கு உறவினர்கள் துபாய் தூதரகம் ஊடாக நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர்.
 
»»  (மேலும்)

அமைச்சர்கள் மில்ரோய், றிசாட், முரளி இன்று வவுனியா விஜயம்


மீள்குடியேற்ற அமைச்சர் மில்றோய் பெர்ணான்டோ, வர்த்தக கைத்தொழில் அமைச்சர் றிசாட் பதிவூதீன், மீள்குடியேற்ற பிரதி அமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரன் ஆகியோர் இன்று வவுனியாவுக்கு விஜயம் செய்கின்றனர்.
இடம்பெயர்ந்த மக்களுடைய மீள்குடியேற்றம் தொடர்பான கலந்துரை யாடல் வவுனியா மாவட்ட செயலகத்தில் காலை 10 மணிக்கு நடைபெறவுள்ளது. இதற்கு வவுனியா, முல்லைத்தீவு, கிளிநொச்சி, மன்னார் மாவட்ட அரச அதிபர்கள் மீள்குடியேற்றத்துடன் தொடர்புடைய சிரேஷ்ட உயர் அதிகாரிகளும் மாவட்டத்தில் உள்ள சகல திணைக்கள உயர் அதிகாரிகளும் அழைக்கப்பட்டுள்ளனர்.
இடம்பெயர்ந்த மக்களை துரிதமாக அவர்களுடைய பழைய இடங்களுக்கு அனுப்பிவைக்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ள நிலையில் இன்னமும் எஞ்சியுள்ள மக்களையும் விரைவில் அனுப்பிவைப்பதற்குரிய ஏற்பாடுகளை செய்யவே இந்த கலந்துரையாடல் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள தாக தெரிவிக்கப்படுகின்றது. மாவட்டத்தில் உள்ள சகல திணைக்கள தலைவர்களையும் அமைச்சர்கள் இன்று முதன்முறையாகச் சந்திக்கவுள்ளனர்
»»  (மேலும்)

செட்டிக்குளம் நிவாரணக் கிராம விவகாரம்: முறையாக முன் அனுமதி பெறாததனாலேயே கூட்டமைப்பு எம்.பிக்களுக்கு அனுமதி மறுப்பு


செட்டிக்குளம் நிவாரணக் கிராமங் களுக்குள் செல்வதற்காக தமிழ் தேசியக் கூட்டமைப்பு எம்.பிக்கள் பாதுகாப்பு அமைச்சில் முறையாக முன்அனுமதி பெறாததன் காரணமாகவே அவர்க ளுக்கான அனுமதி மறுக்கப்பட்டதாக இராணுவப் பேச்சாளர் மேஜர் ஜென ரல் பிரசாத் சமரசிங்க தெரிவித்தார்.
“நிவாரணக் கிராமங்களுக்குள் செல் வதற்கென ஒரு நடைமுறையிருக்கிறது. அதன்படி, பாதுகாப்புத் தரப்பில் அனுமதி பெற்றால் எவ்வித சிரமமுமின்றி முகாமுக்குள் உட்செல்லமுடியும்” எனவும் இராணுவ பேச்சாளர் கூறினார்.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர், பாதுகாப்பு அமைச்சிடம் உரிய முறையில் முன்அனுமதியை பெற்றுக்கொள்வார் களாயின் அவர்கள் நிவாரணக் கிரா மங்களுக்குச்சென்றுவர அனுமதிக் கப்படுவார்கள். அதற்கான அனுமதியை வழங்குவதில் வேறு எவ்வித பிரச்சி னைகளும் இல்லையெனவும் அவர் சுட்டிக் காட்டினார்.
‘அவர்கள் மீண்டும் உரிய முறையில் விண்ணப்பித்தால் நிவாரணக் கிராமங்கள் செல்வதற்கு அனுமதி வழங்கப்படும்’ என்கிறார் இராணுவப் பேச்சாளர்.
கூட்டமைப்பைச் சேர்ந்த 12 பேர் கொண்ட எம்.பிக்கள் குழு கடந்த வெள்ளிக்கிழமை முதல் வன்னியில் இடம்பெயர்ந்த மக்கள் மீள்குடியேற்ற ப்பட்ட பகுதிகளுக்கு விஜயம் செய்து நிலைமைகள் தொடர்பாக ஆராய்ந்தனர்.
கிளிநொச்சி மாவட்டத்துக்கு விஜயம் செய்த இந்தக் குழுவினர் அங்கிருந்து ஒட்டுசுட்டான், தண்ணீர் ஊற்று, முல்லைத்தீவு போன்ற பகுதி களுக்கும் சென் றனர்.
வவுனியா வடக்கு நெடுங் கேணி பிரதேச செயலகப் பிரிவு க்குச் சென்றிருந்த இவர்கள், அங்கே மீளக்குடியமர்த்தப்பட்ட மக்களின் குறை, நிறைகளை கேட்டறிந்து கொண் டனர்.
அதனைத் தொடர்ந்து செட்டிக்குளம் நிவாரணக் கிராமங்களை பார்வையிடு வதற்காக சென்றிருந்தபோது நிவாரணக் கிராமத்துக்குள் செல்வதற்கான அனுமதி அவர்களுக்கு மறுக்கப்பட்டது.
அது தொடர்பாக இராணுவப் பேச்சாளரைத் தொடர்புகொண்டு கேட்டபோதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.
பாதுகாப்பு அமைச்சிடம் உரிய முறையில் முன் அனுமதி பெறாமை மாத்திரமே இவர்களுக்கான அனுமதி மறுக்கப்பட்டமைக்கான காரண மென குறிப்பிட்ட இராணுவப் பேச் சாளர், இவர்களது வருகை குறித்து ஏற்கனவே அமைச்சுக்கு அறிவித்தி ருப்பார்களாயின் இதில் எவ்வித சிக் கல்களும் எழுந்திருக்காது எனவும் தெரிவித்தார்.
»»  (மேலும்)

5/23/2010

மட்டக்களப்பில் அதிநவீன வசதிகளுடன் கூடிய பஸ் நிலையம்.

மட்டக்களப்பு பஸ் நிலையம் முதலமைச்சரின் அயராத முயற்சியினால் தற்போது அமைக்கப்பட்டு வருகின்றது. சுமார் ஏழரைக் கோடி ரூபாய் செலவில் நிர்மானிக்கப்பட்டு வரும் பஸ் நிலையத்தின் வேலைப் பணிகளைக் கிழக்கு மாகாண முதலமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் பார்வையிடுவதனைப் படத்தில் காணலாம் .இவ் வேலைத்திட்டமானது மே மாதம் முதலாந் திகதி ஆரம்பிக்கப்பட்டது. வருகின்ற நொவம்பர் மாதத்திற்குள் இவ் வேலை முடிவடையும் என ஒப்பந்தக்காரர் குறிபிடுகின்றார். img_27902
img_2791
»»  (மேலும்)

மறுசீரமைப்பு யோசனையால் ஐ.தே.கவில் புதிய குழப்பம் ரணிலின் தலைமையைப் பாதுகாக்க மேற்கத்திய நாடுகள் காய்நகர்த்தல்


ஐக்கிய தேசிய கட்சி மறுசீரமை ப்புக் குழுவின் பரிந்துரைகளை, செயற்குழு அங்கீகரித்துள்ள போதி லும் அதனை முழுமையாக நடை முறைப்படுத்துவதற்கான சாதகமான சூழல் ஏற்படும் வாய்ப்பு குறை வாகவே காணப்படுவதாக கட்சி வட்டாரங்கள் மூலம் தெரியவருகி ன்றது.
செயற்குழுவின் தீர்மானங்களை முழுமையாக நடைமுறைப்படுத்தும் போது அக்குழுவிலுள்ள சில உறுப்பினர்கள் மாறுபட்ட நிலைப் பாட்டை எடுக்கக்கூடிய சாத்தியம் உள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டு ள்ளது. இதனால் குழுக்கள் உரு வாகி பகைமை ஏற்பட்டு கட்சியின் வளர்ச்சி பாதிக்கப்படாலாமென சிரேஷ்ட உறுப்பினர்கள் விசனம் தெரிவித்துள்ளனர்.
கட்சியின் செய லாளர், பொருளாளர் தவிர்ந்த (தலைவர் உட்பட) அனைத்துப் பதவிகளையும் ரகசிய வாக்கெடுப் பின் மூலம் தெரிவு செய்ய வேண்டு மென்ற பரிந்துரையை செயற்குழு அங்கீகரித்துள்ளது.
அவ்வாறு தலைவர் பதவிக்குத் தேர்தல் நடத்துவதாயின் கட்சியின் யாப்பினை மாற்றியாகவேண்டும். அதற்கும் செயற்குழு இணக்கம் கண்டிருந்தாலும் யாப்பை மாற்று வதற்கு 75% ஆதரவு அவசியம் எனக் கட்சியின் தற்போதைய தலைவரான ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள் ளார்.
1995ம் ஆண்டு கட்சியின் யாப்பில் ரணில் விக்கிரமசிங்க மேற்கொண்ட திருத்தத்தின்படி, தலைவராக இருப் பவர் இராஜினாமா செய்வதன் மூலம் வெற்றிடம் ஏற்படாலொழிய தேர்தல் நடத்த முடியாது.
இந் நிலையில் யாப்பினை மாற்றுவதற்கு 75% ஆதரவு கிடைக்கும் என்பது அந்தளவு சாத்தியமாகுமா என்பது சந்தேகமாகவே உள்ளதாக கட்சியின் சிரேஷ்ட உறுப்பினர் ஒருவர் ‘வார மஞ்சரி’க்குத் தெரிவித்தார். ஆகவே, கட்சியை மறுசீரமைப்பதென்பது வெறும் சலசலப்பாகவே முடியும் என்றும் அவர் குறிப்பிட்டார்.
இதனிடையே, சில மேற்குல நாடுகளின் இராஜதந்திரிகள், ஐ.தே.க. தலைமைப் பதவியிலிருந்து விலகு வதை விரும்பவில்லையெனத் தெரியவருகிறது. எனவே, ரணில் விக்கிரமசிங்கவுக்கு ஆதரவாக செயற்குழுவின் மூலம் வெளிநாட்டு இராஜதந்திரிகளும் காய்நகர்த்தல்களை மேற்கொள்ளும் வாய்ப்பு உள்ளதாகவும் அறிய முடிகிறது.
»»  (மேலும்)

இந்தியா: விமான விபத்தில் 158 பேர் பலி

கோர விமான விபத்து
கருகிக் கிடக்கும் ஏர் இந்தியா விமானம்
இந்தியாவின் மங்களூர் விமான நிலையத்தில் சனிக்கிழமை அதிகாலை ஏற்பட்ட விமான விபத்தில் குறைந்தது 158 பேர் உயிரிழந்துவிட்டார்கள். 8 பேர் உயிர் தப்பியிருக்கிறார்கள்
துபையில் இருந்து வந்த ஏர் இந்தியா ஏக்ஸ்பிரஸ் போயிங் 737-800 விமானம், கர்நாடக மாநிலம் மங்களூரில் உள்ள விமான நிலையத்தில் காலை சுமார் 6.30 மணியளவில் இறங்கியபோது அந்த விபத்து ஏற்பட்டது.
விமானம் ஓடுபாதையில் இறங்கியதும், திடீரென்று டயர் வெடித்ததாகக் கூறப்படுகிறது. அதன் பிறகு விமானம் ஓடுபாதையில் இருந்து விலகி, அருகில் இருந்த 200 அடி பள்ளத்தாக்கில் விழுந்து வெடித்தது. அப்போது, விமானத்தில் தீப் பிடித்து, பல பாகங்களாக சிதறியது.
விமான ஓடுபாதை, மலைப் பகுதியில் அமைக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
விபத்து ஏற்பட்ட நேரத்தில், சிலர் விமானத்தில் இருந்து கீழே குதித்து தப்ப முயன்றார்கள். அதில் 8 பேர் தப்பியிருக்கிறார்கள். அவர்கள் அனைவரும் மங்களூர் மருத்துமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கிறார்கள்.
accident site
மீட்புப் பணி நடைபெறுகிறது
அந்த விமானத்தில் மொத்தம் 160 பயணிகள் இருந்தனர். அதில், 4 கைக்குழந்தைகளும் அடங்குவர். அது தவிர பைலட், துணைப் பைலட் மற்றும் நான்கு விமானப் பணியாளர்கள் இருந்தனர். விமானம் தரையிறங்கிய நேரத்தில் பைலட்டிடமிருந்து எந்தவித எச்சரிக்கையும் வரவில்லை என்று கூறப்படுகிறது.
விபத்து ஏற்பட்டதும், விமான நிலையத்தில் இருந்தும் மங்களூரில் இருந்தும் ஆம்புலன்ஸ் மற்றும் தீயணைப்புப்படை வாகனங்கள் அங்கு விரைந்தன.
அதற்குள் பலர் தீயில் கருதி இறந்துவிட்டனர்.
பெரும்பாலானவர்கள் இருக்கையில் அமர்ந்து பெல்ட் கட்டிய நிலையிலேயே கருகிக் கிடந்ததாக நேரில் பார்த்தவர்கள் கூறுகிறார்கள்.
பல உடல்கள் அடையாளம் தெரியாத அளவுக்குக் கருகிவிட்டன.
விமானத்தில் இருந்து கீழே குதித்து தப்பிய ஒருவர் கூறும்போது, விமானம் தரையிறங்கியதும், பலத்த அதிர்வு ஏற்பட்டதாகவும், அதன்பிறகு அருகே இருந்த பள்ளத்தில் கவிழ்ந்து வெடித்ததாகவும் தெரிவித்தார். விமானம் வெடித்ததும், வெளியே மரங்கள் தெரிந்ததைப் பார்த்த தான், அங்கிருந்து கீழே குதித்து தப்பியதாகவும் தெரிவித்தார். அப்போது தீயினால் ஏற்பட்ட பாதிப்பில் அவரது முகம், கை உள்ளிட்ட பாகங்களில் தீ விபத்து ஏற்பட்தாதகவும் தெரிவித்தார். தனக்கு உடனடி உதவி கிடைக்காத நிலையில், அந்தப் பகுதியைச் சேர்ந்த ஒருவரது உதவியுடன் மோட்டார் சைக்கிளிலேயே மருத்துவமனைக்கு வந்ததாகவும் அவர் தெரிவித்தார்.
relatives
உறவுகளைத் தேடும் இளம் பெண்
விமானம் வெடித்து விபத்து ஏற்பட்டபோது, பல பாகங்களாக சிதறிய நேரத்தில், அந்த விமானத்திலிருந்து தான் தூக்கியெறியப்பட்டதாக உயிர் தப்பிய இன்னொருவர் தெரிவித்தார். அவர் கேரள மாநிலத்தைச் சேர்ந்தவர்.
விமான நிலையம் அமைந்துள்ள பாஜ்பே என்ற இடம் மங்களூரில் இருந்து 30 கி.மீ. தொலைவில் உளளது. அது கர்நாடக கேரள மாநில எல்லையில் உள்ளது. அந்த விமானத்தில் வந்தவர்களில் பெரும்பாலானவர்கள், கேரள மாநிலத்தைச் சேர்ந்தவர்கள் என்று கூறப்படுகிறது.
விபத்து ஏற்பட்ட நேரத்தில், அங்கு லேசாக மழை பெய்துகொண்டிருந்தது. ஆனால், விமான ஓடுபாதை தெளிவாகவே இருந்ததாக அதிகாரிகள் கூறுகிறார்கள். அங்கு மீட்பு நடவடிக்கை நடைபெற்று வருகிறது. மலைப் பகுதியாக இருப்பதாலும், பெருமளவில் உள்ளூர் மக்கள் கூடிவிட்டதாலும் மீட்பு நடவடிக்கைகளில் இடையூறு ஏற்படுவதாக அதிகாரிகள் தெரிவிக்கிறார்கள்.
காயமடைந்தவர்களும், உயிரிழந்தவர்களும் மங்களூர் மருத்துவமனைக்குக் கொண்டுவரப்பட்டுள்ளனர். அங்கு உறவினர்கள் பெருமளவில் கூடியுள்ளனர்.
 
»»  (மேலும்)

5/22/2010

மீள் குடியேற்றத்தில் ஏனைய நாடுகளுடன் ஒப்பிடுகையில் முன்னணியில் நிற்கிறோம்: அமைச்சர் கெஹலிய _  நாம் எதிர்பார்த்ததை விடவும் கூடுதலான மக்கள் பாதுகாப்பான பிரதேசங்களுக்கு இடம்பெயர்ந்தமையினால் நாம் பல்வேறு பிரச்சினைகளுக்கு முகம்கொடுக்கவேண்டிய நிலைமை ஏற்பட்டது. இவ்வாறானதொரு நிலையில் இடம் பெயர்ந்த மக்களின் மீள் குடியேற்றும் செயற்பாடுகளில் ஏனைய நாடுகளுடன் ஒப்பிடுகையில் முன்னணியிலேயே இருக்கின்றோம் என ஊடகத்துறை அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல தெரிவித்தார்.

பல்வேறு பிரச்சினைகளுடன் 72 மணிநேரத்திற்குள் மூன்றரை இலட்ச மக்கள் இடம்பெயர்ந்தமையினால் பெரும் நெருக்கடிக்கு முகம்கொடுத்தோம். எனினும் குறுகிய காலத்திற்குள் அவர்களின் அடிப்படை பிரச்சினைக்கு தீர்வு காணப்பட்டுள்ளது. இதனை பல நாடுகள் ஏற்றுக்கொள்ளவில்லை என்பதனால் உரிமைகள் குழு தருணம் பார்த்து செயற்படுகின்றது என்றும் அவர் சொன்னார்.

தேசியப்பாதுகாப்பிற்கான ஊடக மத்திய நிலையத்தில் இன்று வெள்ளிக்கிழமை நடைபெற்ற விசேட ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். இந்த மாநாட்டில் நிறுவனத்தின் பணிப்பாளர் லக்ஷ்மன் {ஹலுகல்ல இராணுவப்பேச்சாளர் மேஜர் ஜெனரல் பிரசாத் சமரசிங்க உள்ளிட்டோரும் கலந்து கொண்டனர்.

ஊடகவியலாளர் மாநாட்டில் கலந்து கொண்ட ஊடகவியலாளர் ஒருவர் யுத்தம் நிறைவடைந்து ஒருவருடமாகியுள்ள நிலையில் 65 ஆயிரம் மக்கள் இன்றும் மீள் குடியமர்த்தப்படாத நிலையில் இருக்கின்றனர். மீள் குடியமர்த்தப்பட்ட மக்களின் நிலைமையும் சொல்லக்கூடிய வகையில் இல்லை. இது தொடர்பில் அரசாங்கத்தின் நிலைப்பாடு என்ன? என கேள்வி எழுப்பினார்.

அந்த கேள்விக்கு பதிலளித்து தொடர்ந்தும் அவர் கருத்து தெரிவிக்கையில், மீள் குடியேற்ற நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கு 365 நாட்கள் மட்டுமே நிறைவடைந்துள்ளன. மூன்று இலட்சத்திற்கு அதிகமானோர் இடம்பெயர்ந்திருந்தனர். ஒருவருக்கு ஒருநாள் என எடுத்துக்கொண்டாலும் எத்தனை நாட்கள் தேவை என்பதை உணர்ந்துகொள்ள முடியும்.

பாதுகாப்பான பிரதேசங்களுக்குள் நாம் ஒரு இலட்சம் மக்களையே எதிர்பார்த்திருந்தோம், எனினும் 72 மணித்தியாலங்களுக்குள் சுமார் மூன்று இலட்சம் பேர் வருகைதந்தனர். இதனால் எதிர்பார்த்ததை விடவும் அதிகளவான பிரச்சினைக்கு நாம் முகம்கொடுக்க நேர்ந்தது.

அப்பாவி மக்களும் பல்வேறு பிரச்சினைகளுக்கு முகம்கொடுக்க நேர்ந்தது. அவர்களின் அடிப்படை பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பதற்கே எங்களுக்கு நான்கு ஐந்து மாதங்கள் சென்றன. குழந்தைகள்,பெண்கள் முதியவர்கள் அடங்கலாக மூன்று இலட்சத்துக்கும் அதிகமான மக்கள் 72 மணி நேரத்திற்குள் தமது வாழ்விடத்திலிருந்து பாதுகாப்பு தேடிவந்தனர்.

பாதுகாப்பு வழங்கும் போது அரசாங்கம் பல்வேறு பிரச்சினைகளுக்கு முகம்கொடுத்தது. இவ்வாறான நடைமுறை ரீதியிலான அசௌகரியங்கள் ஏற்படும் என்பதனை சகலரும் முதலில் புரிந்துக்கொள்ள வேண்டும். குறுகிய காலத்திற்குள் அவர்களுடைய அடிப்படை பிரச்சினைகளுக்கு தீர்வு காணப்பட்டதை இட்டு அரசாங்கம் பெருமை கொள்கின்றது.

கல்வியை எடுத்துக்கொண்டால் குறுகிய காலத்திற்குள் முகாம்களில் பாடசாலைகள் நடத்தப்பட்டன. அவர்களின் அடிப்படை பிரச்சினைகளுக்கு தீர்வு காணப்பட்டன. மீளக்குடியேற்றப்படாமல் இன்னும் 65 ஆயிரம் மக்கள் இருக்கின்றனர். மறுபக்கத்தில் இரண்டரை இலட்சம் மக்கள் மீளக்குடியமர்த்தப்பட்டு விட்டனர்.

யுத்தம் இல்லாத பிரதேசங்களில் கூட சட்டவிரோத கட்டிடங்கள் தொடர்பாகவும் சட்டவிரோத குடியேற்றங்கள், உள்ளிட்ட விடயங்கள் தொடர்பிலும் ஆண்டாண்டு காலமாக பேசி வருகின்றோம். அவ்வாறானதொரு நிலைமையில் யுத்தம் இடம்பெற்ற பிரதேசத்தில் இன்னமும் கண்ணிவெடிகள் அகற்றப்படவேண்டியிருக்கின்றது.

யுத்தம் இடம்பெற்ற பிரதேசங்களிலிருந்து நாளாந்தம் ஆயுதங்களும் வெடிப்பொருட்களும் மீட்கப்பட்டு வருகின்றன. இவற்றுக்கு மத்தியிலேயே சர்வதேச ரீதியில் பல்வேறு குற்றச்சாட்டுகளை முன்வைத்து எமக்கு எதிராக பெரும் நெருக்கடிகளை கொடுத்து வருகின்றனர்.

இடம்பெயர்ந்த மக்களின் பிரச்சினைக்கு இலங்கை அரசாங்கம் தீர்வு கண்டுகொண்டிருப்பது தொடர்பில் பலர் மகிழ்ச்சியடைய வில்லை. அதனால் தான் அவர்கள் தேவையில்லாத பிரச்சினைகளை எழுப்பி வருகின்றனர். அவற்றுக்கும் பதிலளிக்க வேண்டும்.

மீள் குடியேற்ற விடயத்தில் முடிந்தளவு அதிகபட்சமான பலத்தை பிரயோகித்து உலகில் வேறெந்த நாட்டிலும் முன்னெடுக்கப்படாத வகையில் மீள்குடியேற்றத்தை மேற்கொண்டு முன்னிலையில் நிற்கின்றோம் என்பதனை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக்கொள்கின்றோம் சொந்த விடயத்தை அரசாங்கமே மேற்கொள்வதை விரும்பாத உரிமைகள் குழுக்கள் தருணம் பார்த்து செயற்படுகின்றன என்றார். _
»»  (மேலும்)

கல்முனை மேயர் மசூர் மெளலானா

கல்முனை மா நகர சபை முதல்வ ராக எஸ். இஸட். எம். மசூர் மெளலானா நியமிக்கப்பட்டுள் ளார். மு.கா. அரசி யல் உர்பீடம் கடந்த செவ்வாய்க்கிழமை கூடியபோது மசூர் மெளலானாவை, கல்முனை மாநகர முதல்வரக நியமிப்பதென்ற தீர்மானத்தை எடுத்ததாக கட்சி வட் டாரங்கள் தெரிவித்தன.
மசூர் மெளலானா, கல்முனை மாநகர சபையின் பிரதி முதல்வராக இதுகாலவரை கடமையாற்றி வந்தமை குறிப்பிடத்தக்கது.
 
»»  (மேலும்)