11/01/2010

தேர்தல் முடிந்து பத்து நாட்களின் பின்னர் ஆங்சாங்சுயி விடுதலை செய்யப்படுவார் - இராணுவ அரசு

மியன்மார் எதிர்க் கட்சித் தலைவர் ஆங்சாங்சுயி தேர்தலுக்குப் பின்னர் விடுதலை செய்யப்படுவார் என இராணுவ ஜுண்டாக்களின் அரசு அறிவித்துள்ளது. நவம்பர் 07ல் மியன்மாரில் பொதுத் தேர்தல் நடைபெறவுள்ளது.
இத் தேர்தலில் போட்டியிடவும் வாக் களிக்கவும் ஆங்சாங்சுயிக்கு இராணுவ அரசு தடை விதித்துள்ளது. மற்றும் இவரின் ஜனநாயக தேசிய முன்னணி கட்சியும் தேர்தலில் போட்டியிட முடியாத கையில் இராணுவ அரசு தடை விதித்துள்ளது. இதனால் ஆங்சாங்சுயி ஆதரவாளர்கள் வேறு ஒரு கட்சியை ஆரம்பித்து தேர்தலில் குதிக்கின்றனர்.
1989ம் ஆண்டு மியன்மார் பொதுத் தேர்தலில் பெரும் வெற்றியீட்டிய ஜனநாயக தேசிய முன்னணி ஆங்சாங்சுயியை பிரதமராக்கியது. ஆனால் இராணுவ ஜுண்டாக்கள் இவரை 1990ல் கைது செய்து சிறையிலடைத்தனர். இதுவரைக்கும் இவரது வாழ்க்கை சிறை, வீட்டுக் காவல் எனச் செல்கின்றது.
வெளிநாடுகளின் தொடர்ச்சியான அழுத்தங்களுக்கு முகம் கொடுக்க முடியாத இராணுவ அரசு இம்மாதம் 07ல் பொதுத் தேர்தலை நடத்தவும் பின்னர் ஆங்சாங் சுயியை விடுதலை செய்யவும் எண்ணியுள்ளது. தேர்தல் முடிவடைந்து பத்து நாட்களின் பின்னர் இவர் அவரது பூரண சிறைக்காலத்தை முடித்திருப்பார். ஆகையால் இதற்கு மேல் ஆங்சாங்சுயியை தடுத்து வைக்கும் எண்ணமில்லை என இராணுவ ஜுண்டாக்கள் அறிவித்தனர்.
 

0 commentaires :

Post a comment