11/09/2010

ஆசிய பசுபிக் பொருளாதார மாநாடு ஜப்பானில் புதன்கிழமை ஆரம்பம் 21 நாடுகள் பங்கேற்பு: பொருளாதாரத்தை மேம்படுத்த உறுதி

ஆசிய, பசுபிக் நாடுகளின் பொருளாதார ஒத்துழைப்பு மாநாடு இந்த வாரம் ஜப்பானில் இடம்பெறவுள்ளது. 21 நாடுகளின் அமைச்சர்கள் பங்கேற்கும் இந்த மாநாட்டில் உலக பொருளாதாரத்தைப் பாதுகாப்பதற்கான முக்கிய உபாயங்களை எடுக்கவுள்ளனர்.
பொருளாதார நெருக்கடியை மேலும் பாதிக்கும் தீர்மானங்களை எடுப்பதில்லை யென்றும் மோசமடைந்து செல்லும் உலக பொருளாதாரத்தைப் பாதுகாக்க அனைத்து நாடுகளும் ஒன்றுபட்டுச் செயற்படுவது எனத் தீர்மானிக்கவுள்ளதாகவும் தெரியவருகிறது.
ஜப்பானுக்கு பொருட்களை ஏற்றுமதி செய்வதில்லையென அண்மையில் சீனா எடுத்திருந்த முடிவுகளும் மாற்றம் செய்யப்படவுள்ளன. இதை சீனா கொள்கையளவில் ஏற்றுள்ளது. மாநாட்டில் சீனா இதை அறிவிக்கும் ஆசிய பசுபிக் பொருளாதார ஒத்துழைப்பு மாநாட்டில் மேற்கொள்ளப்படும் தீர்மானங்களை ஜப்பான் அமைச்சர் உத்தியோகபூர்வமாக அறிவிக்கவுள்ளார்.
மாநாட்டில் அங்கம் பெறும் நாடுகளின் நாணயப் பெறுமானங்களைப் பாதிக்கும் வகையில் எந்தவொரு நாடும் நடந்து கொள்வதில்லை. பிராந்திய நாடுகளிடையிலான வியாபார உறவை வலுப்படுத்தல் பசுபிக் பிராந்திய சுதந்திர வர்த்தகம் (இதை அமெரிக்காவே முன்னின்று நடத்துகின்றது) உள்ளிட்ட முக்கிய அம்சங்கள் பேசப்படவுள்ளன.
நாளை மறுதினம் (புதன்கிழமை) இம் மாநாடு ஆரம்பமாகவுள்ளது. இதற்கு முன்னர் சென்ற ஞாயிற்றுக்கிழமை ஒன்று கூடிய (திஜிரிவி)அமைப்பு அமைச்சர்கள் பொருளாதார மேம்பாட்டுக்கு ஒன்று பட்டுழைத்தல் நலிவடையும் பொருளாதாரத்தைப் பாதுகாத்தல் என்பவற்றுக்காக ஒற்றுமையுடன் செயற்படவுள்ளதாக அறிவித்தனர்.

0 commentaires :

Post a comment