11/14/2010

மியான்மரில் 8 ஆண்டாக வீட்டுக் காவலில் இருந்த ஆங் சான் சூகி விடுதலை


Tamil news paper, Tamil daily news paper, Tamil news, Tamil movie news, Tamil news paper online, political news, business news, financial news, sports news, today news, India news, world news, daily news update

யாங்கூன் : மியான்மரில் ஜனநாயகத்தை ஏற்படுத்த போராடும் எதிர்க்கட்சி தலைவர் ஆங் சான் சூகியை சர்வதேச மற்றும் உள்நாட்டில் மக்கள் கொடுத்த நெருக்கடியால் ராணுவ அரசு நேற்று விடுதலை செய்தது. உலகில் ஜனநாயகத்துக்காக போராடி சிறை சென்ற பிரபலமான அரசியல் கைதியான 65 வயதான சூகி, அமைதிக்கான நோபல் பரிசு பெற்றவர். மியான்மரில் ராணுவ ஆட்சி நடைபெறுகிறது. அங்கு ஜனநாயகத்தை ஏற்ப டுத்த கடந்த 20 ஆண்டுகளுக்கும் மேலாக போராடி வருபவர் ஆங் சான் சூகி. ஜனநாயகத்துக்கான தேசிய லீக் (என்எல்டி) என்ற கட்சியின் தலைவர்.  ராணுவ ஆட்சிக்கு எதிராக போராடிய அவருக்கு மக்கள் அமோக ஆத ரவு அளித்தனர். 1990ல் நடந்த தேர்தலில் அவரது கட்சி அமோக வெற்றி பெற்றது. 80 சதவீதத்துக்கு மேல் ஓட்டு பெற்றதாக தெரிய வந்தும், அந்த தேர்தலை ஏற்க மறுத்தது ராணுவ அரசு. சூகியை கைது செய்து சிறையில் அடைத்தது. அதன் பிறகு, குறிப்பிட்ட ஆண்டுகள் கழித்து அவரை விடுதலை செய்வதும், வெளியே வந்ததும் ஜனநாயக ஆதரவு போராட்டத்தில் அவர் குதித்ததும் மீண்டும் வீட்டுக் காவல் அல்லது சிறையில் வைப்பதும் தொடர் கதையானது. கடந்த 21 ஆண்டுகளில் சூகி, 15 ஆண்டுகள் சிறைவாசம் அனுபவித்தவர். கடந்த முறை அவரது தண்டனைக் காலம் 2002ல் முடிந்தது. சில மாதங்களில் அவர் உள்நாட்டு கலகம் செய்ய முயன்றதாக குற்றம்சாட்டி மீண்டும் 8 ஆண்டு வீட்டு காவலில் அடைத்தது ராணுவ அரசு. இந்நிலையில், அவரது சிறை காலம் நேற்று முன்தினம் முடிந்தது. நேற்று அவரது வீட்டுக்கு சென்ற அரசு அதிகாரிகள் சிலர், சூகி விடுதலை செய்யப்படும் உத்தரவை படித்தனர். பிறகு அவரை விடுவித்து விட்டு காவலர்கள் வெளியேறினர். 65 வயதான சூகி, பிறகு வீட்டுக்கு வெளியே வந்து 8 ஆண்டுகளுக்கு பிறகு சுதந்திர காற்றை சுவாசித்தார். அவரை வரவேற்க வீட்டுக்கு வெளியே ஆயிரக்கணக்கான ஆதரவாளர்கள் கூடியிருந்தனர்.‘தி லேடி’ (உலகின் உறுதியான பெண்) என்று ஆனந்தக் கண்ணீருடன் கோஷமிட்டனர். சிலர் பூங்கொத்துகளை சூ கிக்கு அளித்து வரவேற்றனர். அவர்களிடையே பேசிய சூ கி, ‘‘நாளை கட்சி அலுவலகம் வாருங்கள். அங்கு பேசுவோம். உங்களை ஆவலு டன் நாளை எதிர்பார்க்கிறேன்’’ என்று கூறினார். இன்று அடுத்த கட்ட போராட்டம் பற்றி ஆங் சான் சூ கி, தனது என்எல்டி கட்சி தலைவர்களுடன் ஆலோசித்து அறிவிப்பார் என தெரிகிறது.

0 commentaires :

Post a comment