11/29/2010

ஐ. நா சபையினால் பிரகடனப்படுத்தப்பட்டுள்ள பலஸ்தீன ஒத்துழைப்பு தினம் இன்று

ஐக்கிய நாடுகள் சபையினால் பிரகடனப்படுத்தப்பட்ட பலஸ்தீன ஒத்துழைப்பு தினம் (29) இன்றாகும். இதனையொட்டி பலஸ்தீனம் பற்றிய தகவல்கள் அடங்கிய புகைப்படக் கண்காட்சியொன்று இன்று (29) மு. ப. 9.30 மணி முதல் கொழும்பு ஜே. ஆர். ஜயவர்தன நிலையத்தில் நடைபெறுகிறது. கடந்த ஆண்டு நடைபெற்ற கண்காட்சியில் கலந்து கொண்ட, பலஸ்தீன ஒத்துழைப்பு அமைப்பின் இலங்கைக் கிளைத் தலைவர் இம்தியாஸ் பாக்கீர் மாக்கார், பாராளுமன்ற உறுப்பினர் ஏ. எச். எம். அஸ்வர் மற்றும் பலஸ்தீன், எகிப்து, ஐக்கிய அரபு இராச்சியம் குவைத் நாட்டுத் தூதுவர்கள் படத்தில் காணப்படுகின்றனர்.
பலஸ்தீனம் என்ற வரலாற்றுச் சிறப்புமிக்க தேசத்தை உலக வரைபடத்தில் இருந்து அழித்தொழித்து இற்றைக்கு சுமார் ஆறு தசாப்தங்களுக்கும் மேலாகின்றன. இவ்வாறான சிதைவினை ஏற்படுத்திய ஏகாதிபத்திய பேரரசர்களின் தலைவர்கள் அந்தப் புனித பூமியில் இஸ்ரேல் எனும் நாட்டினை செயற்கையாக வளர்ந்தது, அந்த பூமியைத் தாயகமாகக் கொண்ட அதிகமான மக்களை அங்கிருந்து வெளி யேற்றினர்.
இதன்போதும் அதன் பின்ன ரும் இஸ்ரேலை விஸ்தரிப்பதற்காக மேற் கொண்ட மனித படுகொலைகள் மற்றும் கொடூரமான சித்திரவதைகள் என்பன தொடர் பான புகைப்படங்கள் பலஸ்தீன ஒத்துழைப் புத் தினமான இன்று கொழும்பு ஜயவர்தன நிலையத்தில் நடைபெறும் புகைப்படக் கண்காட்சியில் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.
பலஸ்தீன தாயக பூமியிலிருந்து வெளி யேற்றப்பட்ட தாய்மார்கள், தந்தையர்கள், குழந்தைகள் தமது மூல வாசஸ்தலங்களுக்குச் செல்வதற்கு இன்னமும் ஆவலாய் இருக்கின்றனர்.
பலவந்தமான முறையில் கைப்பற்றியுள்ள நிலப் பிரதேசங்களிலிருந்து இஸ்ரேலுக்கு வெளியேறுமாறு கூறப்பட்டுள்ள வற்புறுத்தலும் ஐக்கிய நாடுகள் சபையினால் நிறைவேற்றப்பட்டுள்ள வெறும் வார்த்தை களுக்கு மாத்திரம் வரையறுக்கப்பட்டுள்ளன.
உலக மக்களின் அபிப்பிராயம், ஐக்கிய நாடுகள் சபையின் தீர்மானம் என்ற வடிவில் அனுமதிக்கப்பட்டுள்ள போதிலும் அந்தத் தீர்மானங்கள் அனைத்தும், உலக வல்லரசுகள் என்று கூறிக்கொள்வோரின் வீட்டோ அதிகாரங்களுக்கு முன்னால் வெறும் வார்த்தைகளாக மாத்திரமே காட்சியளிக்கின்றன.
‘ஜனநாயகம், நியாயத்தன்மை, மனித உரிமைகள் என்றெல்லாம் போற்றிப் பேசப்படும் இன்றைய யுகத்திலே, பலஸ்தீனமானது இன்னமும் காலனித்துவ நாடொன்றாகக் காணப்படுவது கவலைக் குரிய விடயமல்லவா?
பேர்லின் பெரும் சுவர் பூமியுடன் தரைமட்டமாக்கப்பட்டுள்ள இவ்வாறான தொரு யுகத்திலே, பலஸ்தீன பூமியைச் சுற்றி இனவாத மதிலொன்று கட்டப்பட்டு பாலஸ்தீன மக்கள், இன்று திறந்த சிறைச்சாலை ஒன்றில் அடைக்கப்பட்டுள் ளனர்.
இதற்குள் உணவுப் பொருட்கள், மருந்து வகைகள், அத்தியாவசியப் பொருட்கள் என்பவற்றினைக் கொண்டு செல்ல முடியாதவாறு தடைவிதிக்கப்பட் டுள்ளது.
இந்தத் தடைக்கு மத்தியில் பலஸ்தீனர்கள் நாளாந்தம் இனப்படுகொலை செய்யப்பட்டு வருவதனை நாம் காணுகின் றோம். குண்டுத் தாக்குதல்கள் தடைசெய்யப் பட்ட வாயுக்களினை பயன்படுத்தி மேற்கொள்ளும் பயங்கரத் தாக்குதல்கள் என்பவற்றினையும் நாம் காணக்கூடியதாக உள்ளன.
பலஸ்தீன மக்களுக்கு உணவுவகைகள், மருந்து வகைகள் மற்றும் அத்தியாவசியப் பொருட்கள் என்பவற்றினைக் கொண்டு செல்வதற்காக மனிதாபிமான நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ள மனித உரிமை செயற்பாட்டாளர்களையும் இன்று பல்வேறு சித்திரவதைகளுக்கு உட்படுத்தி படுகொலை செய்வதையும் நாம் பார்க்கிறோம்.
இவற்றினைக் கண்டித்து வெளியிடப்பட்டுள்ள ஐக்கிய நாடுகள் சபையின் கோல்ட் ஸ்வின் அறிக்கை பற்றியும் நாம் அறிவோம். எனினும் இவை அனைத்திற்கும் முன்னால், பலஸ்தீனத்தில் சுதந்திரம் மற்றும் சனநாயகம் என்பவற்றைத் தோற்றுவிப்பது பாரிய சவாலாக உள்ளது.
இவ்வாறான சவால்மிக்க சூழ்நிலையிலும் கூட, தாய் நாட்டின் சுதந்திரத்திற்கு போராட்டத்தினை பலமிக்க முறையில் ஆறு தசாப்தங்களுக்கும் மேலாக மேற்கொண்டுவரும் பலஸ்தீன மக்களுக்கு, இலங்கை மக்களாகிய நாம் பாராட்டினைத் தெரிவித்துக்கொள்கிறோம்.
சுதந்திரம், ஜனநாயகம் என்பவற்றினை அடைவதற்காக அவர்கள் கொண்டு செல்லும் போராட்டத்திற்கு எமது ஒத்துழைப்பினைத் தெரிவித்துக்கொள்ள விரும்புகிறோம். எனவே அவர்களின் விடுதலைக்காக நாம் பிரார்த்திக்கின்றோம்.

0 commentaires :

Post a comment