11/05/2010

துர்குணங்களை நமக்குள் நாமே வதம் செய்யும்போது இத்தீபத்திருநாளின் மகிமையை எமக்குள்ளே உணர முடியும்.கிழக்கு மாகாண முதலமைச்சரின் தீபாவளி வாழத்துச் செய்தி.

 

உலகெங்கும் தீபத்திருநாளாம் தீபாவளியை கொண்டாடுகின்ற அனைத்து மக்களுக்கும் எனது தீபத்திருநாள் வாழ்த்துக்களை பரிமாறிக்கொள்வதில் மகிழ்ச்சியடைகின்றேன்.
தீபாவளிப்பண்டிகையானது உலக மக்கள் யாவருக்கும் மிகவும் வேண்டுதற்குரிய அருமையான தத்துவம் ஒன்றை எடுத்தியம்புகின்றது கிருஸ்ண பரமாத்மா தீமையின் முழு உருவமான நரகாசூரனை வதம் செய்து மக்களின் வாழ்வில் ஒளியேற்றினார் என்பது இதிகாசங்கள் கூறும் நிகழ்வாகும். கிருஸ்ண பரமாத்மா நரகாசூரனை வதம் செய்யும்போது அழிக்கப்பட்டது நரகாசூரன் மாத்திரமல்ல மாறாக வஞ்சகம், பொறாமை, தீயநோக்கு, வன்முறை போன்ற மனித குலத்தின் சமாதானத்திற்கும், சமநிலைக்கும், பாதிப்பை ஏற்படுத்தும் பாதகங்களையும் அழித்தார் என்பதே உண்மையாகும்.
இன்றைய காலகட்டத்தில் எமது நாட்டிற்கும் உலகமெங்கும் இம்மாபெரும் தத்துவம் மிகவும் வேண்டப்பட்ட ஒன்றாகவே உள்ளது. ஒவ்வொரு மனிதனிலும் காணபவ்படுகின்ற துர்குணங்களை நமக்குள் நாமே வதம் செய்யும்போது இத்தீபத்திருநாளின் மகிமையை எமக்குள்ளே உணர முடியும்.
எமது நாட்டில் கடந்த பல தசாப்தங்களாக அச்சுறுத்திக் கொண்டிருந்த கொடும் போர் முடிவுக்கு கொண்டுவரப்பட்டபின் இக் கொடிய யுத்தத்தினால் பாதிக்கப்பட்டு அல்லுற்ற மக்களின் வாழ்வில் ஒளியேற்ற வேண்டியது உரியவர்களின் பெரும் கடமையாக உள்ளது.  அவ்வாறு பாதிக்கப்பட்ட மக்கள் கடந்த கால கசப்புணர்வுகளை மறந்து நிம்மதியான வாழ்விற்கு வழிவகுக்கும் போதுதான் இத்தீபத்திருநாளின் யதார்த்த பூர்வமான தத்துவம் உயிர்வாழும் என்பதில் ஐயமில்லை.
எனவே இவ்வரிய தத்துவங்களை தன்னகத்தே கொண்ட தீபத்திருநாளை கொண்டாடும் அனைவரும் இதன் யதார்த்தத்தை உணர்ந்து கொண்டவர்களாகவும், இதனை ஒரு பட்டாசு வெடிக்கும் பண்டிகையாக கருதாமல் இதன் உள் தத்துவத்தினை தமது வாழ்வில் கடைப்பிடிப்பதன் ஊடாக முழு நாட்டிலும் நிலையான சமாதானமும் சகவாழ்வும் ஏற்படும் என திடமாக நம்பலாம்.
எனவே இதனை எம் வாழ்வில் கடைப்பிடிக்க அனைவரும் இப்புனித நாளில் திடசங்கர்ப்பம் பூணுவதோடு இத்தீபத்திருநாளை கொண்டாடும் அனைவருக்கும் மீண்டும் எனது வாழ்த்துக்களை தெரிவிப்பதில் மகிழ்ச்சியடைகின்றேன்.
முதலமைச்சர்,
கிழக்கு மாகாணம்.

0 commentaires :

Post a comment