11/05/2010

பிரதமர் மட்டக்களப்பு விஜயம்

 
 
  இன்று மட்டக்களப்புக்கு பிரதமர் தி.மு.ஜயரட்ன விஜயம் செய்து மட்டக்களப்பிலுள்ள சர்வமத வழிபாட்டுத்தளங்களுக்கும் சென்று வழிபாடுகளில் ஈடுபட்டதுடன் சர்வமத பிரமுகர்களையும் சந்தித்தார்.

மட்டக்களப்பு மாவட்ட செயலகத்திற்கு சென்ற பிரதமரை மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் சுந்தரம் அருமை நாயகம் வரவேற்றார்.

இதையடுத்து மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தில் நடைபெற்ற திணைக்களத் தலைவர்களுடன் சந்திப்பில் பிரதமர் கலந்து கொண்டார்.

மட்டக்களப்பு மாமங்கேஸ்வரர் இந்து ஆலயம் காத்தான்குடி முகைதீன் மெத்தை ஜும் ஆப்பள்ளிவாயல் மட்டக்களப்பு மங்கள ராமய விகாரை மட்டக்களப்பு புனித மரியாள் தேவாலயம் ஆகியவற்றுக்கும் விஜயம் செய்து மதத் தலைவர்களை சந்தித்ததுடன் மத வழிபாடுகளிலும் பிரதமர் ஈடுபட்டார்.

இதன் போது இந்து ஆலயங்களின் புனரமைப்புக்கான நிதியுதவிகளையும் பிரதமர் வழங்கி வைத்தார். இவ் வைபவங்களில் பிரதியமைச்சர் ஹிஸ்புல்லா மற்றும் குணவர்த்தன கிழக்கு மாகாண முதலமைச்சர் கிழக்கு மாகாண ஆளுனர் உட்பட பலரும் கலந்து கொண்டனர். ___

0 commentaires :

Post a comment