11/13/2010

அரசுடன் இணைந்து செயற்பாடு மு. காவின் தீர்மானத்திற்கு அதியுயர் பீடம் அங்கீகாரம்

ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் அரசாங்கத்துடன் முழுமையாக இணைந்து செயற்படவுள்ளதாக அக்கட்சியின் தவிசாளர் பாராளுமன்ற உறுப்பினர் பiர் சேகு தாவூத் தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் அழைப்பை ஏற்று நடத்தப்பட்ட பேச்சுவார்த்தையினையடுத்து அரசாங்கத்துடன் இணைந்து செயற்படுவதற்கு எடுத்த தீர்மானத்தினை கட்சியின் அதியுயர் பீடம் அங்கீகரித்துள்ளதாகவும் அவர் கூறினார்.
கடந்த 10 ஆம் திகதி ஜனாதிபதியுடன் கட்சியின் தலைவர் றவூப் ஹக்கீம் தலைமையில் இது தொடர்பான பேச்சுவார்த்தை இடம் பெற்றது. இதையடுத்து 11 ஆம் திகதி கட்சியின் அதியுயர் பீடம் கூடியது. இதன் போது இவ் விடயம் விரிவாக ஆராயப்பட்டது. எதிர்வரும் 16 ஆம் திகதி பாராளுமன்றத்தில் தலைவர் றவூப் ஹக்கீம் தனது உரையின் போது இதனை அறிவிக்கவுள்ளார் என்றார்.

0 commentaires :

Post a comment