11/09/2010

பிரிட்டன் பிரதமர் சீனா விஜயம் வர்த்தக உடன்படிக்கையில் கைச்சாத்து

பிரிட்டன் பிரதமர் டேவிட் கெமரோன் இரண்டு நாள் விஜயத்தை மேற்கொண்டு நேற்று சீனா பயணமானார். பிரிட்டன் நிதியமைச்சர் ஜோர்ஜ் ஒஸ்போன் வர்த்தக அமைச்சின் செயலாளர் மற்றும் வர்த்தக தலைவர்களும் பிரிட்டன் பிரதமருடன் சென்றனர். சீனாவின் ஜனாதிபதி பிரதமர் உள்ளிட்ட முக்கிய தலைவர்களுடன் பிரிட்டன் பிரதமர் பேச்சுவார்த்தையிலீடுபடவுள்ளார்.
வியாபாரம், கல்வி, பொருளாதாரம், எரிவாயு உள்ளிட்ட மிக முக்கியமான விடயங்கள் பற்றி இங்கு பேசப்படவுள்ளன. சென்ற வருடம் இவ்விரு நாடுகளிடையேயும் 51.8 பிலிலியன் டொலர் பெறுமதியான கொடுக்கல் வாங்கல்கள் இடம்பெற்றன. பிரிட்டன் மாத்திரம் 12.4 பில்லியன் டொலர் பெறுமதியான பொருட்கள் சேவைகளை சீனாவுக்கு ஏற்றுமதி செய்தது இதுபோன்று சீனாவும் ஏராளமான எரிவாயு, பொருட்களை பிரிட்டனுக்கு சென்ற வருடம் ஏற்றுமதி செய்தது. இந்த வர்த்தகம் சம்பந்தமான விரிவான ஒப்பந்தம் ஒன்றும் பிரிட்டன், சீனாவிடையே கைச்சாத்தாகவுள்ளது.
சீனாவுக்குப் புறப்பட முன்னர் ஊடகவியலாளர்களிடம் பேசிய பிரிட்டன் பிரதமர் டேவிட் கெமரோன் சீனாவுடன் நெருக்கமான வர்த்தக உறவுகளை வைத்துக்கொள்ள விரும்புகின்றோம். ஏற்கனவே உள்ள உறவை மேலும் நெருக்கமாகக்வுள்ளோம். இது ஒரு மிக முக்கியமான வியாபார உறவு எனத் தெரிவித்தார். சீனாவிலிருந்து பன்றி இறைச்சியை பிரிட்டனுக்கு ஏற்றுமதி செய்யவும் ஏற்பாடாகியுள்ளது. 72.8 மில்லியன் டொலர் பெறுமதியான பன்றி இறைச்சிகள் பிரிட்டன் பண்ணைகளுக்கு அனுப்பப்படவுள்ளன.

0 commentaires :

Post a comment