11/06/2010

அமெரிக்க ஜனாதிபதி ஒபாமா இன்று இந்தியா வருகை முக்கிய ஒப்பந்தங்களில் கைச்சாத்து

இந்தியாவில் 4 நாள் சுற்றுப்பயணம் மேற்கொண்டு அமெரிக்க ஜனாதிபதி பராக் ஒபாமா இன்று மும்பை வருகிறார். ஒபாமாவின் இந்த சுற்றுப் பயணத்தின் போது இந்தியாவுக்கும் அமெரிக்காவுக்கும் இடையே முக்கிய ஒப்பந்தங்கள் கையெழுத்து ஆகின்றன. ஒபாமாவின் வருகையையொட்டி வரலாறு காணாத பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
அமெரிக்க ஜனாதிபதியாக ஒபாமா பதவி ஏற்ற பின், இந்தியாவுடனான உறவை மேம்படுத்துவதில் மிகுந்த ஆர்வம் காட்டி வருகிறார்.
முதன் முதலாக அவர் இந்தியாவுக்கு வரவுள்ளார். இந்தியாவில் 4 நாட்கள் சுற்றுப் பயணம் செய்வதற்காக ஒபாமா இன்று காலை மும்பை வருகிறார். அவருடன் அவரது மனைவி மெச்செல், மகள்கள் ஷாஷா, மலியா ஆகியோரும் வருகின்றனர்.
ஒபாமாவுடன் அமெரிக்க புலனாய்வு அதகாரிகள், வெள்ளை மாளிகை அதிகாரிகள், அரசு உயர் அதிகாரிகள், பத்திரிகையாளர்கள் என மூவாயிரம் பேர் வருகிறார்கள்.
மும்பையில் ஒபாமா 2 நாட்கள் தங்கி இருப்பார். அங்குள்ள தாஜ் ஓட்டலில் அவர் தங்குகிறார். ஒபாமாவும் அவருடன் வருபவர்களும் தங்குவதற்காக தாஜ் மற்றும் ஹயாத் ஆகிய ஓட்டல்களில் உள்ள 800 அறைகள் ஒதுக்கப்பட்டுள்ளன.
ஒபாமா இன்று மாலையில் வர்த்தக அமைப்பினரின் கூட்டத்தில் பேசுகிறார். இதைத் தொடர்ந்து அமெரிக்கா - இந்தியா இடையே பல்வேறு ஒப்பந்தங்கள் கையெழுத்து ஆகின்றன.
மறுநாள் 7ஆம் திகதி ஒரு பள்ளிக்கூடத்துக்குச் சென்று அங்குள்ள மாணவ – மாணவிகளுடன் தீபாவளி பண்டிகையைக் கொண்டாடும் ஒபாமா, பின்னர் புனித சேவியர் கல்லூரியில் நடைபெறும் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு விட்டு டெல்லிக்கு செல்கிறார். அங்கு மவுர்யா ஓட்டலில் அவர் தங்குகிறார்.
டெல்லியில் மொகலாய மன்னர் ஹ¥மாயூன் கல்லறையை ஒபாமா பார்வையிடுகிறார்.
பின்னர் பிரதமர் மன்மோகன் சிங் தனிப்பட்ட முறையில் அவருக்கு அளிக்கும் விருந்தில் குடும்பத்தினருடன் கலந்து கொள்கிறார்.
3ம் நாளான 8ம் திகதி மகாத்மா காந்தியின் சமாதிக்கு சென்று மலர் வளையம் வைத்து ஒபாமா அஞ்சலி செலுத்துகிறார்.
பின்னர் ஜனாதிபதி மாளிகையில் அரசு சார்பில் அளிக்கப்படும் வரவேற்பை ஒபாமா ஏற்றுக் கொள்கிறார். இதைத் தொடர்ந்து பிரதமர் மன்மோகன் சிங்குடன் அவர் பேச்சுவார்த்தை நடத்துகிறார். பின்னர் இருவரும் கூட்டாக பேட்டி அளிக்கவுள்ளனர்.
அதன் பின்னர் பாராளுமன்றத்தின் கூட்டு கூட்டத்தில் ஒபாமா உரையாற்றுகிறார். பின்னர் ஜனாதிபதி மாளிகைக்குச் சென்று ஜனாதிபதி பிரதீபா பட்டீலைச் சந்தித்து பேசுகிறார். இதைத் தொடர்ந்து ஒபாமாவுக்கும், அவரது குடும்பத்தினருக்கும் அரசு சார்பில் அங்கு விருந்து அளிக்கப்படுகிறது.
அன்று இரவு டெல்லியில் தங்கும் ஒபாமா, தனது 4 நாள் இந்திய சுற்றுப் பயணத்தை முடித்துக் கொண்டு மறுநாள் காலையில் அமெரிக்கா புறப்பட்டுச் செல்கிறார்.
இந்தியா வரும் அமெரிக்க ஜனாதிபதி ஒபாமாவுக்கு வரலாறு காணாத அளவுக்கு 5 அடுக்கு பாதுகாப்பு அளிக்கப்படுகிறது. தேசிய பாதுகாப்பு படை, துணை இராணுவ படை வீரர்கள் மற்றும் உள்ளூர் பொலிசாருடன் அமெரிக்க ஜனாதிபதியின் பாதுகாப்பு பொறுப்பை கவனிக்கும் சிறப்பு படையினரும் ஒபாமாவின் பாதுகாப்பு பணியில் ஈடுபடுவார்கள். ஒபாமாவின் பாது காப்புக்காக 6 கனரக கவச வாகனங் களும், அதி நவீன தொலைத் தொடர்பு வசதி கொண்ட பிரத்தி யேக வாகனமும் வருகின்றன. அமெரிக்காவில் இருந்து 30 துப்பறியும் நாய்களும் அமெரிக்க பாதுகாப்பு குழுவினருடன் இந்தியா வருகின்றன.
மும்பையில் ஒபாமா தங்கி இருக்கும் 2 நாட்களும் அமெரிக்கா வின் விமானம் தாங்கி போர்க் கப்பல் உட்பட 34 போர் கப்பல்கள் கடற் பகுதியில் நிறுத்தப்பட்டு கண் காணிப்பில் ஈடுபட உள்ளன. ஒபாமா வருகையையொட்டி, அமெ ரிக்க விமானப் படைக்கு சொந்த மான 2 பிரமாண்ட விமானங்களும், 4 ஹெலிகொப்டர்களும் மும்பை சத்ரபதி சிவாஜி சர்வதேச விமான நிலையத்துக்கு ஏற்கனவே வந்து விட்டன.


0 commentaires :

Post a comment