11/29/2010

யாழ்ப்பாணப் பல்கலைக்கழக புதிய துணைவேந்தருக்காக மூவர் தெரிவு _

  யாழ்ப்பாணப் பல்கலைக்கழக புதிய துணைவேந்தருக்காக மூவர் தெரிவுசெய்யப்பட்டு ஜனாதிபதிக்கு பிரேரணை அனுப்பிவைக்கப்பட்டுள்ளது.

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்திற்கு புதிய துணைவேந்தரை தேர்வு செய்வதற்கான தேர்தல் நேற்று சனிக்கிழமை நடைபெற்றது. தற்போதைய துணைவேந்தர் என்.சண்முகலிங்கன் உள்ளிட்ட 12 பேர் துணைவேந்தர் பதவிக்கு விண்ணப்பித்தனர்.

தெரிவு சபையில் இருந்து 21 பேர் தலா 3 வாக்குகள் மூலம் வாக்களித்தனர். இவர்களில் தற்போதைய துணைவேந்தர் பேராசிரியர் என்.சண்முகலிங்கன், பேராசிரியர் வசந்தி அரசரத்தினம், பேராசிரியர் ரட்ணஜீவன் ஹோல் ஆகிய மூவரும் தெரிவு செய்யப்பட்டு பதிவாளரால் ஜனாதிபதிக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

இவர்களில் ஒருவரை ஜனாதிபதி புதிய துணைவேந்தராக தெரிவு செய்வார்

0 commentaires :

Post a comment