11/05/2010

உலக உடற் கட்டழகர் போட்டி; இலங்கை வீரருடன் பிரதியமைச்சர் முரளிதரன் அஸர்பைஜான் பயணம்

இலங்கைக்கு பதக்கம் ஒன்றை வென்று தரும் நோக்கில் உலக கட்டழகர் போட்டியில் கலந்து கொள்வதற்காக அஸர் பைஜான் செல்லும் பிரசன்ன பீரிஸ¤டன் மீள்குடியேற்ற பிரதி அமைச்சர் விநாயகமூர்த்தி முரதளிதரன் சென்றுள்ளார்.
4 ஆம் திகதி முதல் 8 ஆம் திகதி வரை நடைபெறும் இந்த உலக உடற் கட்டழகர் போட்டிகளில் கலந்து கொள்ள இலங்கை யின் பிரசன்ன பீரிஸ் தெரிவாகியுள்ளார். பார்வையாளராக செல்லும் பிரதியமைச்சர் முரளிதரன், அஸர் பைஜானில் நடைபெறும் உலக உடற் கட்டழகர் போட்டியில் இலங்கைக்கு பதக்கம் ஒன்றை வெல்லு வதற்கான வாய்ப்பு அதிகளவில் உள்ளதாக தெரிவித்தார்.

0 commentaires :

Post a comment