11/22/2010

பாகிஸ்தான் மீதான வான் தாக்குதல்களால் வா'pங்டன், இஸ்லாமாபாத்திடையே முறுகல்

பாகிஸ்தான் எல்லைக்குள் அமெரிக்க விமானங்கள் வான் தாக்குதல் நடத்துவதை இனிமேல் அனுமதிக்கப் போவதில்லையென அந்நாட்டு அரசாங்கம் சென்ற சனிக்கிழமை அறிவித்தது.
வஸிரிஸ்தான், பஜலுஸ்தான் மாகாணங்களில் ஆளில்லா விமான தாக்குதல்களை விஸ்தரிக்க வெள்ளை மாளிகை தீர்மானித்துள்ளதென கடந்த வெள்ளிக்கிழமை அமெரிக்கப் பத்திரிகைகள் செய்தி வெளியிட்டன.
இச் செய்தியை பாகிஸ்தான் அரசாங்கம் சென்ற சனிக்கிழமை நிராகரித்தது. இது தொடர்பாக கருத்துவெளியிட்ட பாகிஸ்தான் அரசாங்கம், எங்களுடைய நிலைப்பாட்டில் தெளிவாக உள்ளோம்.
பாகிஸ்தான் மண்ணில் அமெரிக்க விமானங்கள் தாக்குதல் நடத்துவதை இனிமேல் அனுமதிக்கப் போவதில்லை. எமது உத்தரவின்றி இவ்வகையான தாக்குதல்கள் நடைபெறுவதை நாங்கள் ஆக்கிரமிப்பாகவே கருதுகின்றோம்.
இவ்வாறு பாகிஸ்தான் வெளிநாட்டு அமைச்சர் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. வஸிரிஸ்தான், பஜலுஸ்தான் மாகாணங்களில் செப்டெம்பர் மூன்றிலிருந்து 45 வான் தாக்குதல்கள் நடத்தப்பட்டுள்ளன.
இதில் 240 பொதுமக்கள் கொல்லப்பட்டுள்ளனர். இதனால் பொதுமக்கள் அமெரிக்காவையும், பாகிஸ்தானையும் கடுமையாக வெறுக்கின்றனர். பாகிஸ்தானில் ஆட்சியை மாற்றுமளவுக்கு இந்நிலைமை பெரிதாக வளர்ந்தது. இதையடுத்து பாகிஸ்தான் அரசு இவ்விடயத்தில் விளித்துக்கொண்டது.
ஆப்கானிஸ்தான், பாகிஸ்தான் எல்லைகளில் நேட்டோ படைகளைக் குவித்து பாதுகாப்பை விஸ்தரிப்பதற்கும் அமெரிக்கா எண்ணியுள்ளது. இதையும் பாகிஸ்தான் கடுமையாக எதிர்த்துள்ளது. விமானத் தாக்குதல்களால் அல் கைதா தலிபான்களின் முக்கிய தளபதிகளைக் கொன்றுள்ளதாக அமெரிக்கா கூறுகின்றது.
பைதுல்லா மெசூத், ஹகானி போன்ற தலிபான்களின் பல தலைவர்கள் வான் தாக்குதல் மூலமே கொல்லப்பட்டனர். தோல்வியின் விளிம்பிலுள்ள தலிபான்களை மேலும் பலவீனமடையச் செய்ய வான் தாக்குதல்களே உதவுவதாகவும் நேட்டோப் படைகள் தெரிவிக்கின்றன.
நேட்டோ படைகளின் வான் தாக்குதல்கள் தொடருமானால் ஐரோப்பிய நாடுகளில் மிக மோசமான தாக்குதல்களை நடத்தப் போவதாக அல் கைதா எச்சரித்துள்ளது.
நவீன குண்டுகளின் இரசாயனப் பதார்த்தங்களால் பொதுமக்கள் வேறு வகையான உடல் உபாதைகளை எதிர் கொள்வதாகவும் சில ஆய்வுகள் தெரிவித்துள்ளன. இதனால் இவ்விடயம் பாகிஸ்தான் அமெரிக்காவிடையே கருத்து மோதல்களை ஏற்படுத்தியுள்ளன.

0 commentaires :

Post a comment