12/06/2010

நன்கறியப்பட்ட ஒருவர் சுட்டுக் கொல்லப்படலாம்.

ஆய்வு என்பதா? ஆலோசனை என்பதா?  டி .பி .எஸ் . ஜெயராஜ் டெய்லி மிரோர் பத்திரிகையில் எழுதியுள்ள கட்டுரையில் இருந்து ஒரு பகுதி ..........

புலிகளின் எச்சசொச்சங்களுக்கு புலம்பெயர்ந்தோரிடையே தம்மை நிலைநிறுத்திகொள்ள தேவையாக இருப்பது இலங்கையில் பாரிய வன்முறை சம்பவம் ஒன்றை அரங்கேற்றுவதே. இது நடந்தால், வெளிநாட்டில் உள்ள தமது ஆட்களுடன் வரிந்துக்கட்டிக் கொண்டு பெரும் நிதிசேகரிப்பு இயக்கத்தை தொடக்க முடியும். கரடியானாறு வெடிப்பு நடந்தபோது புலிகள் வட்டாரத்தின் சந்தோஷப்பரபரப்பைக் காண வேடிக்கையாக இருந்தது.

இப்படியிருக்கும்போது விநாயகம் இலங்கையில் ஒரு 'நிகழ்வை'  நடத்தமுடியும். பாதுகாப்பு அமைப்பின் தயார்நிலை என்பவற்றை பார்க்கும்போது எந்தவொரு பெரிய தாக்குதலும் எவ்வகையிலும் சாத்தியமற்றது.

ஒரு அரசியல்வாதியின் கொலை அல்லது குண்டுவெடிப்பு போன்ற ஒப்பீட்டளவில் சிறிதான ஒரு நிகழ்ச்சி சாத்தியமாகலாம்.

கருதுகோள் ரீதியாக, வெளிநாட்டு புலிகளால் அவர்கள் வசமுள்ள பணத்தின் வலுவால், இலங்கையில் உள்ள ஒருவருக்கு பணம் கொடுத்து ஒரு கைக்குண்டொன்றை வீசவைக்கவோ அல்லது குண்டொன்றை வெடிக்கவைக்க முடியும். நன்கறியப்பட்ட ஒருவர் சுட்டுக் கொல்லப்படலாம்.

இவர்களின் பணபலத்துடன், வெளிநாட்டு புலிகள் வறுமைப்பட்ட முன்னாள் புலிபோராளியை அல்லது எல்லைப்படையை சேர்ந்த ஒருவரை இவ்வாறான வன்முறைக்கு பயன்படுத்தலாம். கருதுகோள் ரிதீயாக முன்னாள் படைவீரரை அல்லது ஊர்காவற் படையை சேர்ந்த ஒருவரை கூட பயன்படுத்துவது சாத்தியமே பாதாள உலக கோஷ்டியில் ஒருவரையும் பயன்படுத்தலாம்.

எல்.ரீ.ரீ.ஈ.க்கு தேவையானது ஒரு கைக்குண்டு, ஒரு குண்டு அல்லது ஒரு துப்பாக்கி மட்டுமே.

0 commentaires :

Post a Comment