12/09/2010

புலம்பெயர் தமிழர்களுக்கு எதிராக நாளை மட்டக்களப்பில் ஆர்ப்பாட்டம் _

  ஜனாதிபதியின் பிரித்தானிய விஜயத்தின்போது புலம்பெயர் தமிழர்களால் மேற்கொள்ளப்பட்ட ஆர்ப்பாட்டத்தைக் கண்டித்தும் ஜனாதிபதிக்கு ஆதரவு தெரிவித்தும் நாளை வியாழக்கிழமை மட்டக்களப்பு நகரில் பாரிய ஆர்ப்பாட்டம் ஒன்றை நடத்துவதற்கு தீர்மானிக்கப்பட்பட்டுள்ளது.

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் அமைப்பாளர்கள் ஆதரவாளர்கள் இணைந்து மட்டக்களப்பு நகரில்கூடி சற்றுமுன் இத்தீர்மானம் எடுக்கப்பட்டதாக எமது செய்தியாளர் தெரிவிக்கிறார்.

ஜனாதிபதிக்கு ஆதரவு தெரிவித்து யாழ்ப்பாணத்தில் நேற்று செவ்வாய்க்கிழமை காலை ஆர்ப்பாட்டம் நடைபெற்றமை குறிப்பிடத்தக்கது. 

0 commentaires :

Post a Comment