12/25/2010

மட்டக்களப்பில் தொடர் மழை. வெள்ளத்தினால் பல பிரதேசங்கள் பாதிப்பு

_mg_81001நாட்டில் பெய்து வரும் தொடர் மழையினால் நாட்டின் பல பாகங்கள் வெள்ள அபாயத்தை எதிர்கொண்டுள்ளது. கிழக்கு மாகாணத்திலே மட்டக்களப்பு மாவட்டம் வெகுவாகப் பாதிக்கப்பட்டுள்ளது. மட்டக்களப்பு மாவட்டத்தின் ஏறாவூர்பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட பல பிரதேசங்கள் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ளதாக ஏறாவூர் பற்று பிரதேச சபை தவிசாளர் எஸ். ஜீவரங்கன்(உருத்திரா) தெரிவித்துள்ளார். பிரதேச சபையின் ஊடாக வெள்ள நீர் அகற்றப்பட்டு வருவதாகவும் அவர் தெரிவித்தார். சித்தாண்டிஇவந்தாறுமூலைஇ கொம்மாதுறைஇஏறாவூர்இசெங்கலடிஇ ஐயன்கேணி வெகுவாக பாதிக்கப்பட் பிரதேசங்களாக தெரிவிக்கப்படுகிறது. வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பிரதேசங்களில் முதற்கட்டமாக வெள்ள நீரை அகற்றுவதற்கான பல நடவடிக்கைகளை பிரதேச சபை மெற்கொண்டுவருவதாக பிரதேச சபை தவிசாளர் தெரிவித்தார்.
_mg_81351
_mg_81451

0 commentaires :

Post a Comment