12/14/2010

வறுமைக் கோட்டிற்கு கீழ் வாழ்கின்ற மக்களுக்கு வீடு மற்றும் கிணறு

_mg_7929
கிழக்கு மாகாண வீதிஅபிவிருத்தி நீர்ப்பாசன, கிராமிய மின்சார அமைச்சின் நிதி ஒதுக்கீட்டின் மூலம் கிழக்கு மாகாணத்தில் மிகவும் வறுமைக் கோட்டிற்கு கீழ் வாழ்கின்ற மக்களுக்கு வீடு மற்றும் கிணறு என்பன அமைத்துக் கொடுக்கப்பட்டு வருகின்றன.
வீட்டிற்கு தலா மூன்றரை இலட்சம் ரூபாயும் கிணற்றிற்கு தலா ஐம்பது ஆயிரம் ரூபாயும் மூன்று கட்டங்களாக வழங்கப்பட இருக்கின்றது. முதற்கட்டமாக வீட்டிற்கு தலா ஒரு இலட்சம் ரூபாயும் கிணற்றிற்கு தலா இருபத்தைந்தாயிரம் ரூபாயும் வழங்கப்பட்டது. இரண்டாங் கட்டநிதி கிழக்கு மாகாண முதலமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் அவர்களினால் வழங்கி வைக்கப்பட்டது. மேற்படி நிகழ்வானது மட்டக்களப்பு முதலமைச்சர் பணிமணையில் இடம்பெற்றது. இந் நிகழ்வில் கிழக்கு மாகாண வீதி அபிவிருத்தி அமைச்சின் பிரதிச் செயலாளர் ஸலாகுதீன் மற்றும் நிகழ்ச்சித்திட்டப் பணிப்பாளர் ஹில்மி ஆகியோர் கலந்து கொண்டார்கள்._mg_79041
_mg_7919

0 commentaires :

Post a Comment