Election 2018

12/31/2010

தமிழ் மக்கள் விடுதலைப் புலிகளும், டென்மார்க்கில் வாழும் புலன் பெயர்ந்த எலிகளும்


Children  6
கிழக்கு மாகாண முதலமைச்சரும், தமிழ் மக்கள் விடுதலைப் புலிகளின் தலைவருமான சிவநேசதுரை சந்திரகாந்தன் அவர்கள் கடந்த (21.12.2010)ந் திகதியன்று டென்மார்க் வந்திருந்தார். அவரின் வருகைபற்றி அறிந்திருந்த டென்மார்கில் வாழும் புலன் பெயர் எலிகள் கூட்டமொன்று அவர் (சந்திரகாந்தன்) ஒரு பயங்கரவாதியெனவும் அவரை கைதுசெய்து சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தில் நிறுத்த வேண்டுமெனவும் தமது வழமையான நடவடிக்கைகளில் இறங்கினர். அதற்கமைய டென்மார்க்கின் உள்துறை அமைச்சு, வெளியுறவு அமைச்சு போன்ற நிர்வாகத்தினருக்கு நூற்றுக்கணக்கான மின்னஞ்சல்களையும், (E,Mail) மற்றும் (Fax) போன்றவற்றினையும் தொடர்ச்சியாக மூன்று நாட்களாக அனுப்பிக்கொண்டிருந்தனர். கடந்த மாதம் இலங்கை ஜனாதிபதி திரு மஹிந்த ராஜபக்ஸ அவர்கள் பிரித்தானியாவில் அமைந்துள்ள பிரபலம்வாய்ந்த பல்கலைக்கழகமான ஒக்ஸ்போட் பல்கலைக்கழகத்தில் விசேட உரைநிகழ்த்துவதற்காக அங்கு கல்விபயிலும் மாணவர்களின் அழைப்பின்பேரில் வருகைதந்தபோது அவருக்கு எதிரான ஆர்ப்பாட்டங்களை லண்டனில் வசிக்கும் பெருச்சாளிகள் சில மேற்கொண்டமையினால் பல்கலையில் உரையாற்றும் நிகழ்வு இடம்பெறாது நிறுத்தப்பட்டது.
PeruchshliElikal
அதே பாணியில் டென்மார்க்கிலும் தங்களது அடாவடித்தனத்தினை அரங்கேற்ற முடியுமென கனவு கண்ட டென்மார்க்கில் வசிக்கும் புலன் பெயர்ந்த எலிகள் மேற்கொண்ட நடவடிக்கைகள் அனைத்தும் புஸ்வாணமாகியது. முதலமைச்சர் திரு சந்திரகாந்தன் அவர்களும், அவருடன் இணைந்து செயற்படும் மனிதநேயவாதிகளும் திட்டமிட்டபடி அவரது விஜயம் திருப்திகரமான முறையில் நிறைவேற்றப்பட்டது.
டென்மார்க்கை தளமாகக்கொண்ட குளோபல் மெடிக்கல் எயிட் என்னும் நிறுவனத்துடன் இலங்கைக்கு (விசேடமாக கிழக்கு, மற்றும் வடக்கு) மாகாணங்களில் யுத்தத்தினால் பாதிக்கப்பட்டு அல்லலுறும் மக்களின் வைத்திய தேவைகளை (மருந்துப் பொருட்கள் பூர்த்தி ) செய்வதற்கான உடன்படிக்கை ஒன்று கைச்சாத்திடப்பட்டது. அதற்கமைய மேற்படி பிரதேச மக்களினதும் இலங்கையில் வாழும் ஏனைய மக்களினதும் தேவைகளை முடிந்தவரை நிறைவு செய்வதற்கான வாய்ப்பும் ஏற்படுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில் உடன்படிக்கை கைச்சாத்தாவதற்கு முன்னர் கடந்த நவம்பர் மாதம் இலங்கை ரூபா (66.மில்லியன்) பெறுமதியான மருந்துப்பொருட்கள் அனுப்பப்பட்டு அவற்றினை கிழக்கு மாகாண நிர்வாகத்தினர் பொறுப்பேற்றுள்ளனர்.
தொடர்ந்து அனுப்பப்படும் மருந்துப் பொருட்களை கிழக்கு மாகாண நிர்வாகம் பொறுப்பேற்று மேற்குறிப்பிட்ட பிரதேசங்களில் வாழும் மக்களின் தேவைகளை நேரடியாக கண்காணிப்புச்செய்து பகிர்ந்தளிப்பதற்கான இணக்கப்பாடும் ஏற்படுத்தப்பட்டுள்ளது.அதற்கமைய டென்மார்க்கில் ஒரு வாரகாலமாக தங்கியிருந்த முதலமைச்சர் நேற்று முன்தினம் (28.12.2010) தாயகம் திரும்பினார்.
குமாரதுரை –ஆசிரியர் மஹாவலி.கொம்

0 commentaires :

Post a Comment