12/14/2010

ரஷ்யா - பின்லாந்து ரயில் சேவை ஆரம்பம்

ரஷ்யா - பின்லாந்துக்கிடையி லான முதலாவது அதிவேக ரயில் சேவை நேற்று ஆரம்பமானது. ரஷ்யப் பிரதமர் விளாதிமீர் புட்டின், பின்லாந்து ஜனாதிபதி ஆகியோர் இந்த ரயில் சேவையை ஆரம் பித்தனர்.
மொஸ்கோவுக்கும் பின் லாந்தின் தலைநகருக்குமிடையி லான தூரம் 280 கி.மீற்றராகும் இந்த ரயில் மணித்தியாலத்துக்கு 220 கி.மீற்றர் செல்லும் ஒரு மணிநேரப் பயணத்தின் பின்னர் இரண்டு தலைவர்களும் சந்தித்துக் கொண் டனர். ஆசியாவையும், ஐரோப்பா வையும் இணைக்கும் மிகப் பெரிய ரயில் சேவை இதுவாகும். நாளொ ன்றுக்கு இரண்டு தடவைகள் இந்த ரயில்கள் சேவையிலீடுபடவுள்ளன.
இந்தச் சேவை ஆரம்பிக்கப்பட்ட மைக்கு இரு நாடுகளின் பிரயாணி களும் மகிழ்ச்சி தெரிவித்தனர். ஆசிய ஐரோப்பிய உறவை மேம் படுத்த இந்தச் சேவைகள் உதவு மென நம்பிக்கை தெரிவிக்கப்படு கின்றது.

0 commentaires :

Post a Comment