12/08/2010

ஜனாதிபதி வேட்பாளரை கிரம்ளின் முடிவு செய்யும்

ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடும் முடிவை தற்போது எடுக்க முடியாதெனத் தெரிவித்த ரஷ்ய ஜனாதிபதி மெத்விடிவ் 2012ல் நிலவும் அரசியல் சூழலைப் பொறுத்து கிரம்ளின் இந்த முடிவை எடுக்க வேண்டும் என்றார்.
புட்டினா, மெத்விடிவா அடுத்த வேட்பாளர் என்ற எதிர்பார்ப்பு ரஷ்யாவிலே சூடுபிடித்துள்ளது.
இரண்டு தவணைகள் தொடர்ந்து பதவி வகித்த விளாதிமிர் புட்டின் 2008ல் பதவியை மெத்விடிவிடம் கையளித்தார். ரஷ்ய அரசியலமைப்பின்படி மூன்றாவது தவணையில் தொடர்ந்து பதவி வகிக்க முடியாது என்பதால் புட்டின் அதிகாரத்தைக் கையளித்தார். 2012ல் அடுத்த ஜனாதிபதித் தேர்தல் நடைபெறவுள்ளதால் மீண்டும் புட்டின் போட்டியிடுவதா அல்லது மெத்விடிவ் போட்டியிடுவதா என்ற கேள்வி எழுந்துள்ளது.
இது தொடர்பாக போலந்து புறப்பட முன்னர் ரஷ்ய ஜனாதிபதி நிருபர்களிடம் பதிலளித்தார். யார் வேட்பாளர் என்ற முடிவை தற்போது எடுக்க முடியாது இன்னும் இரண்டு வருடங்களில் நிலவவுள்ள அரசியல் சூழலைப் பொறுத்து இம்முடிவுகள் மேற்கொள்ளப்படும் என்றார்.

0 commentaires :

Post a Comment