1/14/2011

வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ரூ.22லட்சம் வழங்கிய லண்டன் சைவ ஆலயங்கள்—பயங்கரவாதிகளான புலிக்கூட்டமைப்பிற்கு தேர்தல் விளம்பரம் தேடும் ஊடகங்கள்

கடந்த சுனாமி அனர்த்தத்தின்போது (26-12-2004) பல்லாயிரம் கோடி ரூபாய்களை பலம்பெயர் மக்களிடமிருந்து சேகரித்த புலியின் புலம்பெயர் மாபியாக்கள் ஒரு ரூபாயினைக்கூட கிழக்கு மக்களின் தேவைகளுக்காக செலவிடாதநிலையில் இன்று லண்டனில் வசிக்கும் எஸ் கருணைலிங்கம் என்பவர் (10 ஆயிரம் )ஸ்ரேலிங் பவுண்களை மட்டக்களப்பில் பாதிப்புற்று அல்லலுறும் மக்களின் நலனுக்காக அனுப்பிவைக்கப்பட்டுள்ளதாக (குளக்கோட்டன்.கொம்) என்னும் இணையத்தளத்தில் செய்தி ஒன்று வெளியிடப்பட்டுள்ளது. அத்துடன் லண்டன் விம்பில்டன் பிள்ளையார் ஆலயம் ஆயிரம் பவுண்களையும் லூசியம் சிவன் கோவில் இரண்டாயிரம் பவுண்களையும் வழங்கியிருப்பதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன. வன்னியில் பல லட்சம் வடமாகாண மக்கள் அகதிகளாக்கப்பட்டு அல்லலுற்றபோது ஐந்து சதத்தினைக்கூட அனுப்பாத மேற்படி புலி மாபியாக்கள் இன்று கிழக்கு மக்களுக்கு உதவ முன்வந்துள்ளார்களாம்.( நனைகின்ற ஆடுகளின் நலன்காக்கும் ஓநாய்களான) இவர்கள் எதிர்வரும் உள்ளுராட்சித் தேர்தலில் புலிக்கூட்டமைப்பிற்கு விளம்பரம் தேடும் கைங்கரியங்களை கிழக்கு மக்களின் அவலைக் கண்ணீரிலிருந்து தேட முற்படுகின்றனர்.

கருணைலிங்கம் என்பவர் ஒரு பயங்கரவாதி மட்டுமன்றி புலிப்பயங்கரவாதிகளுக்கு லண்டனில் பணம் அறவிடும் மாபியாவாக பல வருடகாலமாக செயற்பட்டுவரும் ஒரு கொள்ளைக்கூட்டத்தின் பிரதான நபர் என்பதும் இங்கு முக்கியமானதாகும். மேற்படி செய்தியினை வெளியிட்ட ( குளக்கோட்டன்.கொம்) அனுப்பப்பட்ட பணம் எங்கு செலவிடப்பட்டது, எந்த மக்களின் தேவைக்காக பயன்படுத்தப்பட்டது என்கின்ற விபரங்களையும் திரட்டி அதனை அவர்களது இணையத்தளத்தில் வெளியிட வேண்டுமென்பதே எமது வேண்டுகோளாகும்.

ஆசிரியர் மஹாவலி.கொம்

0 commentaires :

Post a comment