1/14/2011

பிரேசில் நிலச்சரிவில் 260 பேர் பலி

பிரேசிலில் ஏற்பட்ட நிலச்சரிவில் 260 பேர் பலியாகியுள்ளனர். 100 க்கும் மேற்பட்டோரை காணவில்லை.
சில நாட்களாக பிரேசில் நாட்டில் பலத்த மழை கொட்டி வருகிறது. இதனால் ரியோடி ஜெனீரோ மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகளில் வெள்ளம் ஏற்பட்டுள்ளது.
இதில் டெரசோ போலில் நகரத்தின் அருகே உள்ள ஆறு உடைந்து நகர பகுதிகளுக்குள் வெள்ளம் புகுந்தது.
இதனால் பல இடங்கள் வெள்ளத்தில் மூழ்கியதுடன் நிலச் சரிவும் ஏற்பட்டது. இதில் சிக்கி 260 பேர் பலியானார்கள். 100 க்கும் மேற்பட்டோரை காணவில்லை.
நிலச்சரிவில் சிக்கியவர்களை மீட்கும் பணி நடந்து வருகிறது. நிலச் சரிவில் சிக்கி உயிரிழந்தோரின் எண்ணிக்கை அதிகரிக்கும் என்று அஞ்சப்படுகிறது.
கடந்த இரு தினங்களுக்கு முன்னர் பிரேஸிலின் மலைப்பகுதியான தெற்கு பிரேசில் மற்றும் ரியோ நகருக்கு அருகே உள்ள செர்னா மலைப் பகுதிகளில் கனத்த மழை பெய்தது. இதில் செவ்வாய் மற்றும் புதன்கிழமைகளில் சுமார் 71 பேர் பலியானதாக மீட்புக் குழுவினர் தெரிவித்தனர்.
மேலும் தொடர்ந்து மீட்பு பணி நடைபெற்று வந்த நிலையில் வியாழக்கிழமை நோவா பிரிபர்கோ நகரில் மீட்பு பணியில் ஈடுபட்டு கொண்டிருந்த தீயணைப்பு வீரர்கள் மூன்று பேர் நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தனர்.
தொடர் மழை காரணமாக மின் இணைப்பு, தொலைதொடர்பு பாதிக்கப்பட்டுள்ளது. பலி எண்ணிக்கை தொடர்ந்து உயர்ந்து வருவதால் மக்களிடையே கடும் பீதி.

0 commentaires :

Post a Comment