1/27/2011

துனிசியா கலவரத்தில் பலியானோருக்கு ரூ. 3 ஆயிரம் கோடி உதவி

துனிசியாவில் கடந்த ஒரு மாத காலமாக அரசியல் கலவரம் வெடித்தது. ஜனாதிபதியாக இருந்த ஜைன் அல் ஆபிதீன் பதவியில் இருந்து விரட்டப்பட்டு புதிய இடைக்கால அரசு அமைந்துள்ளது.
இந்த நிலையில் கலவரத்தில் பலியானோர் குடும்பங்களுக்கு மொத்தம் ரூ. 3 ஆயிரம் கோடி நிதி உதவியை துனிசிய அரசு அறிவித்துள்ளது. இந்த தகவலை ஊரக மேம்பாடு அமைச்சர் நெஜிப் தெரிவித்தார்.
இதுபோல வேலை இல்லாதவர்களுக்கு மாதந்தோறும் 150 தினார் உதவித் தொகை வழங்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளது. இது தவிர ஊழல் புகார் காரணமான பல்வேறு மகாணங்களிலுள்ள கவர்னர்களும் மாற்றப்பட்டுள்ளனர்

0 commentaires :

Post a comment