1/20/2011

திடீர் அனர்த்தங்களின் போது அதிகாரிகள் ஒரு சில விட்டுக் கொடுப்புக்களைச் செய்ய வேண்டும். –முதலமைச்சர் சந்திரகாந்தன்

மட்டக்களப்பு மாவட்டத்திலே வெள்ளத்தினால் பாதிக்கப்படட் மக்களுக்கு நிவாரணப் பொருட்களை கிழக்கு மாகாண முதலமைச்சர் சி.சந்திரகாந்தன் வழங்கி வருகின்றார். இன்று (19.01.2011) மட்டக்களப்பு திருப்பெருந்துறை  கிராம மக்களுக்கு நிவாரணப் பொருட்களை கிழக்கு மாகாண முதலமைச்சரும் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் தலைவருமான சிவநேசதுரை சந்திரகாந்தன் வழங்கி வைத்தார்.
இம் மக்களுக்கான நிவாரணப் பொருட்களை வழங்கி வைத்து உரையாற்றிய முதல்வர் சந்திரகாந்தன். தனது உரையில் குறிப்பிடுகையில்: கிழக்கு மாகாணம் மிகவும் பாரிய வளர்ச்சியினை அடைந்து கொண்டு வந்த ஓர் மாகாணமாகும். ஆனால் கண்பட்டதைப் போன்று திடீரென ஏற்பட்ட இப் பாரிய வெள்ள அனர்த்தம் காரணமாக எமது மாகாணம் பாரிய பின்னடைவை சந்திதித்திருக்கிறது. விவசாயம்இகால்நடை பொருளாதாரம்இ உற்பத்தி பாதைகள் கல்வி சுகாதாரம் ஜீவனோபாயம் இதொழில் போன்ற பலவேறு துறைகளிலும் பின்னடைவையே சந்தித்திருக்கிறது.இவற்றை கட்டியெழுப்புவதற்கு அனைவருமே பாடுபட வேண்டிய தருணத்தில் நாம் தற்போது தள்ளப்பட்டிருக்கிறோம்.
அது ஒரு புறம் இருக்க தற்போது மட்டக்களப்பு மாவட்டத்திலே பாதிக்கப்பட்ட மக்களுக்கான நிவாரணப் பொருட்களை பகிர்ந்தளிப்பதில் பல பிரச்சினைகள் தென்படுவதாகவே நான் கருதுகிறேன். அதாவது கடந்த 17 18ம் திகதிகளில் ஆரயம்பதி பிரதேசத்தில் மக்களுக்கு வழங்கப்படுவதற்காக வரவழைக்கப்பட்ட நிவாரணப் பொருட்களை கிராம சேவை உத்தியோகஸ்த்தர் பதுக்கி வைத்தாக மக்கள் ஆர்பாட்டத்தில் இறங்கியுள்ளார்கள். அதே போல் நேற்று (18.01.2011) மட்டக்களப்பு மாநகரிலே பாரிய கண்டனப் போராட்டம் இடம் பெற்றது. இதுவும் மக்களுக்கான நிவாரணப் பொருட்களை அதிகாரிகள் வழங்காமையைக் கண்டித்தே மேற்படி ஆர்பாட்டமும் இடம் பெற்றது.
இவ்வாறு மக்களுக்காக எமது அரசினால் வழங்கப்பட்ட பொருட்களை வழங்காது இருந்தால் அது உண்மையில் தவறான விடயம்தான். ஆனால் அவ்வாறு ஏதும் சம்பவங்கள் இடம்பெற்றிருந்தால் அரசியல் வாதிகள் பொலிஸ் மற்றும் மேல் அதிகாரிகளிடம் தெரியப்படுத்த வேண்டும். மாறாக வன்முறைகளிலோ அல்லது போராட்டங்களிலோ மக்கள் ஈடுபடக் கூடாது என தான் கேட்டுக் கொள்வதாகவும் அவர் தெரிவித்தார்.
தொடர்ந்து அவர் பேசுகையில் உண்மையான அதிகாரிகள் மத்தியில் ஒருசில தப்பான எண்ணங் கொண்ட அதிகாரிகளும் இருக்கத்தான் செய்கின்றார்கள். அதற்காக அனைத்து அதிகாரிகளும் குற்றமிழைத்தவர்களாக நாம் கருதமுடியாது. எனவே மக்களாகிய உங்களுக்கு அரசினால் வழங்கப்பட்ட நிவாரணங்கள் நிச்சயம் கிடைத்தே ஆகவேண்டும். அவ்வாறு கிடைக்காவிட்டால் உங்களது ஆதங்கத்தை நீங்கள் தெரிவிப்பது நியாயம். ஆனால் அது வன்முறையாக மாறக் கூடாது. உண்மையில் மக்கள் தற்போது விளிப்டைந்திருக்கிறார்கள் என்றே கூற வேண்டும். தங்களுக்குரிய பொருட்கள் கிடைக்கவில்லை என்பதற்காக தாங்கள் தட்டிக் கேட்கின்ற ஜனநாகச் சூழல் ஏற்பட்டிருப்பது வரவேற்கத்தக்கது. எது எவ்வாறாயினும் பாதிக்கப்பட்ட மக்களுக்கான நிவாரணங்கள் சரியான முறையில் பகிர்நதளிக்கப்படாத பட்சத்தில் மக்கள் ஆர்பாட்டங்களில் இறங்குவார்களாக இருந்தால் அதனைக் கட்டுப்படுத்துவதும் தவறு என்றே எண்ணத் தோன்றுகின்றது. காரணம் அம்மக்கள் உண்மையில் பாதிக்கபட்டவர்கள் ஆகவே அவர்களக்கு அரசினால் வழங்கப்பட்டதனையே அவர்கள் கேட்கின்றார்கள். மேலும் இவ்வாறான சந்தர்ப்பங்களில் அதிகாரிகளும் ஒருசில விட்டுக் கொடுப்புக்களைச் செய்தால் இவ்வாறான நிலைகள் ஏற்படாது என தான் கருதுவதாகவும் அவர் தனதுரையில் குறிப்பிட்டிருந்தார்.
இந் நிகழ்வில் கிழக்கு மாகாண சபை ஊறப்பினர் பூ.பிரசாந்தன் மட்டக்களப் மாநகர பிரதி மேயர் ஜோர்ச பிள்ளை ஆகியோர் கலந்து கொண்டு நிவாரணப் பொருட்களை வழங்கி வைத்தார்கள்.
thiru1

thirup-21
_mg_0921
_mg_0938
_mg_0950
_mg_0940
_mg_0945

   
     _mg_0945

0 commentaires :

Post a comment