1/17/2011

போரதீவுப் பற்று பிரதேச மக்களுக்கு நிவாரணங்கள் கையளிப்பு

போரதீவுப் பற்று பிரதேச மக்களுக்கு நிவாரணங்கள் கையளிப்பு.

_mg_07863கிழக்கு மாகாண முதலமைச்சரும் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் தலைவருமான சி. சந்திரகாந்தன் இன்று போரதீவுப் பற்று பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட கிராமங்களுக்குச் சென்று நிவாரணப் பொருட்களை வழங்கி வைத்தார்.
வெள்ள அனர்த்தம் காரணமாக இடம்பெயர்ந்து முகாம்களில் வாழ்கின்ற மக்களுடன் கலந்துரையாடி அவர்களது தேவைகள் குறித்து கேட்டறிந்து அவர்களுக்கான நிவாரணப் பொருட்களையும் வழங்கி வைத்தார். பழுகாமம் கண்டுமணி வித்தியாலயம், விவேகானந்தபுரம் தளவாய் கிராமம்,கண்ணபுரம் கண்ணன் வித்தியாலயம், கோயில் போரதீவு விவேகானந்த வித்தியாலயம் மற்றும் பெரிய போரதீவு பத்திர காளியம்மன் கோயில் போன்ற இடங்களில் தங்கியிருந்த மக்களுக்கு முதலமைச்சர் சந்திரகாந்தன் உணவுப் பண்டங்கள் மற்றும் உலர் உணவுப் பொதிகளையும் வழங்கி வைத்தார். இந் நிகழ்வில் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் பூ.பிரசாந்தன்இ போரதீவுப்பற்று பிரதேச சபைத் தவிசாளர் சிறிதரன் ஆகியோரும் இணைந்து கொண்டார்கள்.
_mg_0620
_mg_0573
_mg_0614
_mg_0574
_mg_0730
_mg_0775
_mg_0599
_mg_0706

0 commentaires :

Post a comment