1/26/2011

சரணடையும் புலிகளின் தலைவர்களை கொன்று விடுமாறு உத்தரவிடவில்லை

சட்டரீதியாக பொறுப்பேற்று பராமரிக்குமாறே இராணுவத்துக்கு அறிவுறுத்தல்
வெள்ளைக் கொடி விவகார வழக்கில் பாதுகாப்பு செயலாளர் சாட்சியம்


வெள்ளைக்கொடியுடன் சரணடைய வந்த புலிகள் இயக்கத் தலைவர்களைக் கொன்றுவிடுமாறு தாம் உத்தரவிட்டதாக ‘சண்டே லீடர்’ பத்திரிகையில் வெளியாகி யிருந்த சரத் பொன்சேகாவின் கூற்று முற்றிலும் உண்மைக்குப் புறம்பானது என்று பாதுகாப்பு செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ நேற்று (25) வெள்ளைக்கொடி விவகார வழக்கில் சாட்சியமளி க்கும் போது தெரிவித்தார்.

சரணடையவரும் புலிகளின் தலைவர்களையும் ஏனைய உறுப் பினர்களையும் சட்டத்தின் பிரகாரம் பொறுப்பேற்று, அவர்களை நன்றாகப் பராமரிக்குமாறு இராணு வத்திற்கு அறிவுறுத்தல் வழங்க ப்பட்டிருந்ததாகவும் பாதுகாப்பு செயலாளர் தெரிவித்தார்.
புலிகள் இயக்கத்தின் 11 ஆயிரத்து 968 பேர் இராணுவத்தினரிடம் சரணடைந்ததாகவும், அவர்களுள் ஐயாயிரம் பேர் புனர்வாழ்வு அளிக் கப்பட்டு சமூகமயப்படுத்தப்பட்டுள் ளதாகவும் பாதுகாப்பு செயலாளர் கூறினார்.
2009ம் ஆண்டு டிசம்பர் மாதம் 8ம் திகதி ‘சண்டே லீடர்’ பத்திரிகை யின் பிரதம ஆசிரியர் திருமதி பெட்ரிக்கா ஜான்ஸ¤க்கு வழங்கிய பேட்டியில், இனவாதத்தைத் தூண்டும் கருத்துக்களை வழங்கி யமை மற்றும் அதனூடாக அரசாங் கத்தின் மீது மக்கள் மத்தியில் எதிர் ப்பலையை உருவாக்க முயற்சிப்பதற்காக வெள்ளைக் கொடி கதையைக் கூறியமை குறித்து சட்ட மா அதிபர் மூன்று குற்றச்சாட்டுகளின் கீழ் சரத் பொன் சேகாவுக்கு எதிராக வழக்குத் தாக்கல் செய்துள்ளார்.
நேற்று இந்த வழக்கு மேல் நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக் கொள் ளப்பட்டது. இங்கு மேலும் சாட்சிய மளித்த பாதுகாப்புச் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ, புலிகளின் தலைவர்களான தயா மாஸ்டர், ஜோர்ஜ் மாஸ்டர் போன்றோர் இராணுவத்தினரிடம் சரணடைந்த துடன் அவர்கள் இன்னமும் பாது காப்பாக உள்ளதாகவும் கூறினார்.
சண்டே லீடர் பத்திரிகையில் வெளியான சரத் பொன்சேகாவின் பேட்டியினால் கனடா, இங்கிலாந்து, அமெரிக்கா போன்ற நாடுகளில் வாழும் சுமார் 10 இலட்சம் புலம் பெயர் தமிழர்க ளின் எதிர்ப்பு இலங்கை அரசுக்கும், தமக்கும் ஏற்பட்டதாகவும் பாது காப்புச் செயலாளர் கூறினார்

0 commentaires :

Post a comment