1/26/2011

சென்னை -புத்தமதக் கோயிலில் தாக்குதல்


தாக்கப்பட்ட புத்தமதத் துறவிசென்னை -புத்தமதக் கோயிலில் தாக்குதல்
தாக்கப்பட்ட புத்தமதத் துறவி
த‌மிழக ‌மீனவ‌ர்க‌ள் ‌மீது இனி வரு‌ங்கால‌‌த்த‌ி‌ல் ‌நி‌ச்ச‌ய‌ம் தா‌க்குத‌ல் நடைபெறாது எ‌ன்று இ‌ல‌ங்கை தூத‌‌ர் ‌பிரசா‌த் க‌ாரியவச‌ம் உறு‌தி அ‌ளி‌த்து‌ள்ளா‌ர்.
செ‌ன்னை‌யி‌ல் தமிழக அரசின் தலைமை‌ச் செயல‌ர் மால‌தியுட‌ன் நடத்திய ஆலோசனை‌க்கு ‌பி‌ன்ன‌ர் செ‌ய்‌தியாள‌ர்க‌ளிட‌ம் அவர் இதைக் கூறினார்.
தாக்குதல்
எழும்பூர் பகுதியில் உள்ள மகாபோதி சங்க அலுவலகத்தின் மீது திங்கள் கிழமை இரவு சில விஷமிகள் நட்த்திய தாக்குதலில் புத்த பிக்குகள் உள்பட ஐவர் காயமடைந்துள்ள பின்னணியில் இலங்கைத் தூதர் சென்னை வந்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. காயமடைந்தவர்கள் சிகிச்சைக்குப் பின் சங்கத்திற்குத் திரும்பினர். தாக்குதலில் சங்கக்கட்டிடமும் ஓரளவு சேதமடைந்த்து.
கடந்த பத்து நாட்களில் இலங்கைக் கடற்படையினரால் 2 தமிழக மீனவர்கள் கொல்லப்பட்டதாக செய்திகள் வெளியானதால் மாநிலத்தில் பதட்டமானதொரு சூழல் நிலவுகிறது. ஆங்காங்கே கண்டன ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்றுவருகின்றன.
இந்நிலையில் சென்ன வந்துள்ள இலங்கைத் தூதர் காரியவசம், இந்தியாவைப் போலவே தனது நாடும் மீனவர்கள் கொல்லப்படுவது குறித்து கவலையடைந்துள்ளதாகத் தெரிவித்தார். ச‌ர்வதேச கட‌ல் எ‌ல்லையை இ‌ந்‌திய ‌மீனவ‌ர்க‌ள் தா‌ண்டினாலு‌ம் அவர்கள் கொல்லப்படக்கூடாது - தாக்கக் கூடாது என்றே இலங்கை விரும்புவதாக அவர் கூறினார்
மகாபோதி சங்கம் தாக்குதலுக்குள்ளானது குறித்து இலங்கைத் தூதர் கண்டனம் தெரிவித்துள்ளார்.
சம்பவம் குறித்து போலீஸ் விசாரணை நடைபெற்றுவருவதாகவும் ஓரிரு நாட்களில் குற்றவாளிகள் பிடிபட்டுவிடுவார்கள் என்றும் அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். இலங்கைத் துணைத்தூதுவரகம், மஹாபோதி சங்கம் உள்ளிட்ட பகுதிகளில் பாதுகாப்பு பலப்ப்டுத்தப்பட்டுள்ளது.

0 commentaires :

Post a comment