1/20/2011

அமெரிக்கா சென்ற சீன ஜனாதிபதிக்கு அமெரிக்க ஜனாதிபதி விருந்துபசாரம்

அமெரிக்காவுக்கு விஜயம் மேற்கொண்டிருக்கும் சீன ஜனாதிபதி ஹ¥ ஜிந்தாவோக்கு அமெரிக்க ஜனாதிபதி பராக் ஒபாமா தனிப்பட்ட இரவு விருந்துபசாரமொன்றை வழங்கியுள்ளார்.
வடகொரியா விவகாரம் மற்றும் இரு நாடுகளுக்கும் இடையிலான வர்த்தக மற்றும் நிதி உள்ளிட்ட முக்கிய விடயங்கள் குறித்து அமெரிக்க ஜனாதிபதி பராக் ஒபாமாவுடன் பேச்சுவார்த்தை நடத்துவதற்காக சீன ஜனாதிபதி ஜு ஜிந்தாவோ நேற்று முன்தினம் வொஷிங்டன் சென்றடைந்தார்.
ஆசியப் பிராந்தியத்தில் ஸ்திரத் தன்மையை ஏற்படுத்துவதில் வொஷிங்டனுக்கும், பீஜிங்கிற்குமிடையில் காணப்படும் வேறுபாடுகள் குறித்து இவ்விஜயத்தில் விரிவாக ஆராயப்படும் என சீன அரசாங்க ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.
அமெரிக்க ஜனாதிபதி பராக் ஒபாமாவுடன் பேச்சுவார்த்தை நடத்துவதற்கு மேலதிகமாக, அமெரிக்காவின் முக்கிய நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் பிரதான வர்த்தகப் பிரமுகர்களையும் ஜிந்தாவோ சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்தவுள்ளார்.
வொஷிங்டனில் பேச்சுவார்த்தைகளை முடித்துக்கொண்டு சிக்காக்கோ செல்லவிருக்கும் சீன ஜனாதிபதி, முக்கிய பொருளாதார நிபுணர்களைச் சந்திக்கவுள்ளார். சீனாவின் ஏற்றுமதிகளுக்கு ஏற்படும் செலவினங்களைக் குறைப்பதற்காக சீன அரசாங்கத்தின் கட்டுப்பாட்டிலுள்ள சீன மக்கள் வங்கி சீனாவின் நாணயமான ஜென்னின் பெறுமதியைக் குறைத்திருப்பதாக முன்வைக்கப்படும் குற்றச்சாட்டுக்கள் குறித்தும் இவ்விஜயத்தில் தெளிவுபடுத்தப்படும் எனவும் செய்திகள் வெளியாகியுள்ளன.
இவ்விடயத்தில் சீனாவின் நாணயப் பெறுமதியைக் குறைப்பதற்கு மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகளுக்கு உரிய மாற்று நடவடிக்கை எடுக்கப்பட வேண்டுமென அமெரிக்க திறைசேரிச் செயலாளர் திமோதி கெய்த்னர் கோரியிருந்தார்

0 commentaires :

Post a comment